இரு நண்பர்கள் எனக்கு பக்கத்து இருக்கைகளில் இருந்து வருகின்றனர். அவர்கள் தங்களுக்குள்ளே பேசிக்கொண்ட விடயம்.
முதல் நண்பன் -: டேய் இப்ப சுதன் குடிக்கிறதே இல்லையாம்டா...
இரண்டாம் நண்பன் -: உண்மைதான்டா. எப்படிடா அவனால இருக்க முடியிது. அவன். குடிக்காம இருக்கமாட்டானேடா.
முதல் நண்பன் -: உண்மைதான்டா அவன் நிருத்தல்லடா. அவன்ட அண்ணன் சாராயத்துக்குள்ள ஏதோ குளிசயப் போட்டு (மாத்திரை) கொடுத்ததாம். அந்த குளிசை சுதனுக்கு தெரியாமல் போட்டதாம். அந்த குளிசை போட்டு கொடுத்தால் அன்று முழுதும் சத்தியா இருக்குமாம் பிறகு ஒரு நாளும் சாராயப் பக்கமே எட்டியும் பார்க்கமாட்டானுகலாம்.
இரண்டாம் நண்பன் -; இந்த குடியால ஒவ்வொரு நாளும் எவ்வளவு காசடா குடிச்சு தொலைக்கிரம். விடியத்தில எழும்பினா இனி குடிக்கப்போடா என்று நினைக்கிற. ஆனா பொழுதுபோக,போக குடிக்கிற எண்ணம்தானே வருகுது. நம்மளும் இந்த குளிசயத்தான் சாராயத்தில போட்டு குடிக்கணும்.
முதலாம் நண்பன் -; நீ எனக்கு தெரியாமல் எனக்கு போட்டுத்தா. நான் உனக்கு தெரியாமல் போட்டுத்தாரன்....
இப்படியே தொடர்கிறது...
என்னுடைய நண்பர் என்று சொல்லலாம் ஒவ்வொரு இரவிலும் குடிப்பார். குடிக்கவேண்டாம் என்று பல முறை சொல்லிப்பார்த்தேன் எவர் கதையும் கேட்பதாகவும் இல்லை.
எதற்காக குடிக்கின்றாய் என்று கேட்டால் கவலைகளை மறக்க குடிக்கிறேன் என்று சொல்வார் என்ன கவலை என்று கேட்டால் தினம் ஒரு காரணம் சொல்வார்.
அவர் சொல்லும் காரணங்களை கேட்டால் கோபம்தான் வரும். அப்பா இறந்த கவலை. அவரின் அப்பா இறந்து பல வருடம். கைல காசு இல்லை என்ற கவலை. அப்போ குடிப்பதற்கு மட்டும் காசு இருக்கும். தங்கட்சுக்கு வீடு கட்டவில்லை என்ற கவலை. இவ்வாறு தினமும் ஒரு காரணம் சொல்வார்.
என் இவாறு குடித்துக் குடித்து தான் மட்டுமல்ல, தன்னை சார்ந்த சமுகத்தையும் சீரழிக்கின்றனரோ தெரியவில்லை.
நாகரீகம் எனும் போர்வையில் இன்றைய இளம் சமூகத்தினர் சீரழிந்து கொண்டிருக்கின்றனர். குடிக்கவில்லை என்றால் தன்னை கீழ் தரமாக நினைப்பவர்களும் இருக்கின்றனர்.
இன்று குடும்பத்தை கொண்டு நடாத்தவேண்டிய பொறுப்பில் உள்ளவர்கள் குடித்துக் ,குடித்தே தன்னை சார்ந்தவர்களும் தன் பிள்ளைகளும் சீரழிகின்ற நிலைக்கு இட்டு செல்கின்றனர்.
குடித்துவிட்டு வந்து மனைவி, பிள்ளைகளுடன் சண்டை பிடிக்கின்ற, சித்திரவதை செய்கின்ற எத்தனையோ குடும்பத் தலைவர்களை பார்த்திருக்கின்றோம்.
தன் பிள்ளைகள் உணவின்றி, பாடசாலைக்கு செல்ல முடியாத நிலையில் இருக்கும் ஆனால் சில தந்தையர்கள் தினம் குடித்துவிட்டு வருவர். தன் மனைவி பற்றியோ, பிள்ளைகள் பற்றியோ இவர்களுக்கு அக்கறை இருக்காது.
தினமும் குடித்துவிட்டு வீட்டிலேயே தந்தை சண்டை பிடிப்பதால் பாடசாலையில் வகுப்பு மாணவர்கள் கிண்டல் செய்கிறார்கள் என்பத்தனால் எத்தனையோ பிள்ளைகள் பாடசாலை செல்வதை விட்டிருக்கின்றன.
அண்மையில் வீதியால் காலை ஒன்பது மணியளவில் வந்துகொண்டிருந்தேன். ஒரு மீன் வியாபாரி மோட்டார் சைக்கிளில் வந்துகொண்டிருந்தார். வீதியின் இரு மருங்கிலும் மோட்டார் சைக்கிள்தான் தண்ணிபோட்டதுபோல் தள்ளாடி வந்துகொண்டிருந்தது.
அவர் மாத்திரமல்ல 7 , 8 வயதிருக்கும் ஒரு சிறுவனும் (அவர் மகன்) அந்த மோட்டார் சைக்கிளில் இருக்கிறான். பார்க்கும்போது அவருக்கு அடி கொடுக்கவேண்டும் போல் இருந்தது.
பாடசாலை செல்லவேண்டிய அந்த பிள்ளையைக் கொண்டு குடித்தித் திரிகிறான் அந்த திருந்தாத ஜென்மம். இப்படி உழைத்து உழைத்தே குடித்து, குடித்து குடியாலே இறந்த எத்தனையோ பேரைப் பார்த்திருக்கின்றோம்.
சிலர் ஓடி, ஓடி உடலை வருத்தி வேலை செய்வார்கள். பார்த்தாலே பாவமாக இருக்கும். அவர்கள் உழைப்பது எதுவுமே வீடு சென்று சேராது. குடிப்பதற்கு என்றே உழைப்பவர்கள் இருக்கின்றனர்.
சிலரைப் பார்த்திருக்கின்றேன். குடிக்கவில்லை என்றால் உடல் நடுங்குகின்றது என்று சொல்லிக் கொண்டிருப்பார்கள்.
இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.
ஏன்தான் குடித்துக், குடித்தே தானும் சீரழிந்து. சமுகத்தையும் சீரழிக்கின்றார்களோ தெரியவில்லை. இவர்களை திருத்தவே முடியாது.
9 comments: on "ஏன் இப்படி தானும் சீரழிந்து சமுகத்தையும் சீரழிக்கிறார்களோ தெரியவில்லை."
குடி குடியைக் கெடுக்கும். நல்ல மெசேஜ்.
குடிப்பது அவரது சுதந்திரம் அதை தடுக்கும் உரிமை எவருக்கும் இல்லை
//ஸ்ரீராம். கூறியது...
குடி குடியைக் கெடுக்கும். நல்ல மெசேஜ்.//
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.
//பெயரில்லா கூறியது...
குடிப்பது அவரது சுதந்திரம் அதை தடுக்கும் உரிமை எவருக்கும் இல்லை//
குடிப்பது அவரது சுதந்திரமாக இருக்கலாம். தன்னைச் சார்ந்தவர்களையும் சமூகத்தையும் பாதிக்காமல் இருக்கும்வரை.
அருமையான பதிவு.இன்றைய நிலையில் குடிக்காதவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம் .அந்த அளவிற்கு இது மக்களை பெரிதும் பாதித்துள்ளது.இனி வரும் காலத்தை நினைத்தால் மிகவும் பயமாக உள்ளது.
நீங்கள் எழுதியுள்ளதைப் படித்தால் வருத்தமாக உள்ளது. வோட்கா ஒன்றேனும் அடித்து கவலையை மறக்க வேண்டும்.
சமூக அக்கறையுடன் எழுதப்பட்ட பதிவு.வரவேற்கிறேன்.
உண்மைச் சம்பவம்-
எனக்கு தெரிந்த ஒரு வீட்டில்
அவரது மகள் மிகவும் மெல்லிய உடல்வாகு.திருமண வயது. வெளிநாட்டு மாப்பிள்ளைக்குதான் கட்டிக்கொடுப்பதென்ற முடிவில் தாயும் தகப்பனும்.
இந்த நிலையில் அங்கு ஒரு நாள் நடந்த சம்பவம் என்னவென்றால்-
தகப்பன் சொல்கிறார் மகளுக்கு : உனக்கு உடம்பு காணாது,உடம்பு வச்சாதான் வெளிநாட்டு மாப்பிளயள் ஓமெண்டுவாங்கள்.ஒவ்வொருநாளும் நான் குடிக்கிறதில நீயும் கொஞ்சம் குடி சொல்லிப்போட்டன்.அப்பதான் உடம்பு வைக்கும்.
என்று.
அதற்கு மகள் சம்மதிக்காமல் எதிர்த்து ஏதோ பேச, தாய் சொல்கிறார் : சொல்வழி கேள்.குடிச்சா நல்ல உடம்பு வைக்கும்,பளபள எண்டிருக்கும் உடம்பு.அப்பதான் பாக்கிறவனுக்கு புடிக்கும், ஒமெண்டுவான்.குடி.
என்று.
மகள் சம்மதிக்கவுமில்லை, குடிக்கவுமில்லை.
போதாக்குறைக்கு எனக்கும் புத்தி சொல்கிறார்கள்- நீரும் மெல்லிஸ்சா இருக்கிறீர்.குடிச்சா உடம்பு வைக்கும்.குடியும். என்று.
நாய்வாலை நிமிர்த்த முடியாதென்று தெரியுமல்லவா.அதனால் நான் எதுவும் கூறுவதில்லை.என்பாட்டில் விலகிக்கொள்வேன்.
Post a Comment