Showing posts with label சமூகம். Show all posts
Showing posts with label சமூகம். Show all posts

Wednesday, 22 June 2011

காம லீலைகள் அரங்கேறும் களம்



இணையத்தினைப் பொறுத்தவரை நல்ல பல விடயங்களுக்காக பயன்பட்டாலும் தீயபல விடயங்களும் இடம்பெறாமலும் இல்லை. இது ஒவ்வொருவரும் இணையத்தினைப் பயன் படுத்தும் நோக்கத்தினைப் பொறுத்தது.

 இன்று சமூகத்தளங்களின் பயன்பாடு அதிகரித்தவிட்ட இந்த நிலையில். நல்ல பல விடயங்கள் இந்த சமூகத்தளங்கள் மூலமாக நடந்தேறி இருக்கின்றன. பல நல்ல நட்புக்கள் கிடைத்திருக்கின்றன. பல திருமணங்கள் நடந்திருக்கின்றன. பல குடும்பங்கள் பிரிந்திருக்கின்றன.

இது ஒரு புறமிருக்க நல்ல விடயங்களுக்கு இந்த சமூகத்தளங்களை பயன்படுத்துவோர் ஒரு புறமிருக்க இன்னொரு புறத்தில் பல காம லீலைகள் அரங்கேறிக்கொண்டு இருக்கின்றன.

இந்த சமூக இணையத்தளங்களில் சிலர் தமது காம வக்கிரங்களை தீர்த்துக் கொள்ளும் ஒரு தளமாக பயன் படுத்திக் கொள்கின்றனர். இதில் சாதாரண ஒரு மனிதனில் இருந்து பெரிய அந்தஸ்தில் இருப்பவர்கள் மக்கள் மத்தியிலே நன்மதிப்பைப் பெற்றவர்களும் இல்லாமல் இல்லை.

இந்த சமூகத்தளங்களிலே அரட்டைகளில் ஈடுபடுபவர்கள் தமது காம வேட்கைகளை தீர்த்துக் கொள்ள குரல் வீடியோ அரட்டைகளை நாடுகின்றனர்.

ஒரு நண்பியை இணைத்துக் கொண்டால் அவரோடு சில நாட்கள் சாதாரணமாக உரையாடுவதும் பின்னர் அவர்களை தம் வசப்படத்தி வீடியோ மற்றும் குரல் அரட்டைகளை செய்து வருகின்றனர்.

அதனோடு பலர் நின்று விடுவதில்லை நேரடியாகக்கூட அவர்கள் சந்தித்து தமது காமத்தை தீர்த்துக் கொள்கின்றனர்.

காம உணர்ச்சி என்பது அனைவருக்கும் இருக்கின்றது அவற்றை கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். ஆனால் பலர் கட்டுப்படுத்த முடியாமல் வரம்பு மீறுபவர்களும் இருக்கின்றனர்.

பெண்களைப் பொறுத்தவரை கட்டுப்படுத்தும் தன்மை அதிகம் என்று நினைக்கின்றேன். இணைய அரட்டையிலே நண்பர்களாக இருக்கின்ற ஒரு ஆணும் பெண்ணும்  பேசுக்கொள்கின்றபோது அந்த அண் பெண்ணிடம் செக்ஸ் கதைகளை கதைக்க முற்படும்போது. அந்தப் பெண் நல்ல நடத்தை உள்ள ஒரு பெண்ணாக இருப்பினும் சந்தர்ப்ப சூழ்நிலையில் அவளும் அதற்கு சம்மதிக்கின்றாள்.

அரட்டையிலே அவள் இருக்கின்ற சூழ்நிலையைப் பொறுத்து அது அமைகின்றது. எப்படிப்பட்ட ஒருவராக இருந்தாலும் ஆசை என்பது வந்துதானாகும். நல்ல நெருங்கிய நண்பர்களாக இருக்கின்றபோது நண்பர் கேட்கின்றபோது மறுத்துக் கொள்ள முடியாமல் சம்மதித்தவர்களும் இல்லாமல் இல்லை.

நானும் பல சமூகத்தளங்களிலே பெண் பெயரிலே இருக்கின்றேன். ஏன் என்று கேட்கின்றிங்களா? புலனாய்வு வேலைகள் செய்வதென்றால் நமக்கு றொம்ப பிடிக்குமே அதுதான்.

பல முக்கியமானவர்களை நண்பர்களாக இணைத்திருக்கின்றேன். சமூகத்துக்கு நலலதைச் செய்கின்றேன். நல்லதை எழுதுகின்றேன். என்று சொல்பவர்கள் பலர் என்னுடன் (பெண் பெயருடைய என்னுடன்) நண்பர்களாக இருக்கின்றனர்.

அவர்களா இவர்கள் என்று பல தடவை நான் யோசித்ததுண்டு. அவர்கள் மீதிருந்த நல்லலெண்ணம் இல்லாமல் போய்விட்டது. உனக்கில்லடி உபதேசம் ஊருக்குத்தாண்டி என்பது போன்று இருக்கின்றது அவர்களின் செயல்.

சில வேளைகளில் அவர்கள் பற்றிய விடயங்களை வெளியிடலாம் என்று நினைப்பதுண்டு.

அரட்டைக்கென்று இருக்கின்ற சில இணையத்தளங்களிலே நான் அவ்வப்போது வலம் வருவதுண்டு அதுவும் பெண் பெயரிலே. அங்கே நடை பெறுகின்ற விடயங்களை அறியவேண்டும் என்பதற்காக. அந்த அரட்டை இணையத்தளங்களிலே செக்ஸ் அரட்டைக்கு மட்டுமே அதிகமானவர்கள் வருகின்றனர்.

அந்த இணையத்தளங்களில் பெண் பெயரில் சென்றதுமே அங்கே அரட்டையில் இருக்கின்ற எல்லோரும் எங்களுடன் அரட்டைக்கு வருவார்கள் எவரும் நல்ல விடயம் பேசமாட்டார்கள். அவர்கள் போடுகின்ற முதல் வசனம் செக்ஸ் பேச முடியுமா? என்னை பார்க்கப் போறிங்களா? உங்களைப் பார்க்கலாமா?

இந்த அரட்டை இணையத்தளங்களிலே பல ஆண்களும் பெண்களும் செக்ஸ் அரட்டை செய்வதற்கென்றே வருகின்றனர்.

எப்படியெல்லாம் சமூகம் சீரழிகின்றது. சீரளிக்கப்படகின்றது. சமூகத்தை திருத்தவதாக. சமூகத்துக்காக செயற்படுவதாக இருந்து திரைமறைவில் காம லீலைகளில் ஈடுபடுபவர்களே திருந்துங்கள். எமது சமூகம் சீரழிகிறது.

நீ நல்லவனா என்று கேட்க வேண்டாம்.

எம்மை நாமே சுயபரிசோதனை செய்துகொள்வோம் 


இதனையும் பார்க்கலாம்.

இணையத்தில் காதலித்துச் சம்பாதிக்கலாம்

read more...

தோழியை காதலியாக்குவது எப்படி? சில ஆலோசனைகள்

நல்ல நட்புக்கள் கிடைப்பதென்பது அரிது அதனையும் மீறி கிடைத்துவிட்டால். அந்த நட்பை பிரிவதென்பது மிகவும் கடினமான விடயம். அதிலும் ஆண்பெண்  நட்பென்பது எப்டித்தான் இணைபிரியாத நண்பர்களாக இருந்தாலும் சந்தர்ப்ப சூம்நிலைகள் அவர்களைப் பிரித்துவிடும்.


சில ஆண் நண்பர்கள் தனது நெருங்கிய நண்பி தன் வாழக்கைத் துணையாக வர வேண்டுமென்று நினைப்பார்கள். அந்த நண்பியை காதலிக்க தொடங்கிவிடுவார்கள். ஆனால் அந்த நண்பி தனது நண்பரை ஒரு நெருங்கிய நண்பராகத்தான் பார்ப்பார். இதனால் அந்த நண்பிக்கும் தன்மீது காதல்  வர வைக்க வேண்டும் அதற்கு என்ன செய்வது என்று நாம் பலர் திண்டாடிக்கொண்டிருப்போம்.

அந்த நண்பியிடம் நேரடியாக உடனே காதலைச் சொன்னால் சில வேளைகளில் அந்த நண்பியை இழக்க வேண்டியும் வரலாம். இதற்காக அந்த நண்பியை நம் பக்கம் காதல் வர வைக்க வெண்டியதுதான்.

எப்படி காதல்  நம்மீது காதல்வர வைப்பது என்று கேட்கின்றீர்களா. அவசரப்படாதிங்க ஒவ்வொன்றா சொல்கின்றேன்.


01. உங்கள் நம்பிக்கு தேவைப்படும் உதவிகளை அவர் உங்களிடம் கேட்காமலே செய்து கொடுங்கள்.

       நீங்கள் கணவனாக வந்தால் தன்னை நன்றாக பார்த்துக்கொள்வார் என்று உங்கள்மீது ஓர் ஈர்பு அவளுக்கு உண்டாகும்.


02. உங்கள் நண்பிக்கு பிடிக்காத வி்யங்களை விட்டுவிடுங்கள். உங்கள் நண்பிக்கு எது பிடிக்குமோ அதனை அடிக்கடி செய்யுங்கள்.


03.  உங்கள் நண்பியோடு மட்டுமே நட்பாக இருங்கள் வேறு பெண்களோடு நட்பாக இருக்க வேண்டாம். அல்லது பெண்களோடு பழகுவதை நிறுத்திக் கொள்ளுங்கள். அல்லது உங்கள் நண்பிக்கு தெரியாமல் பெண்களோடு நட்பை வைத்துக் கொள்ளுங்கள்.


         தனது நெருங்கிய நண்பனோ அல்லது காதலனோ வேறு பெண்களோடு பேசக்கூடாது எனும் மனநிலை பெண்களுக்கிருக்கின்றது.


04.  நண்பியின் இன்ப துண்பங்களில் பங்கெடுத்துக் கொள்ளுங்கள். எந்தவொரு நல்ல விடயமோ கெட்ட விடயமோ நண்பிக்கோ அவரது குடும்பத்துக்கோ நடந்துவிட்டால் அங்கே முதலில் நிட்பவர் நீங்களாக இருங்கள்.


05.  உங்கள் உடல் நலன் பேணுவதனை விட உங்கள் நண்பியின் உடல் நலத்தில் அக்கறை காட்டுங்கள். நண்பிக்கு தலைவலிதான் வந்தாலும் அது உங்களுக்கு ஏற்பட்டதுபோல் உணர்ந்துகொள்ளுங்கள்.


    அப்போது அவர் நினைப்பார் நிங்கள் தனது எதிர்கால துணையாக வந்தால் தன்னில் அதிக அக்கறை காட்டுவீர்கள் என்று உங்கள் மீது காதல் எற்படும்.


06.  உங்கள் நண்பியை உங்கள் குடும்பத்தில் ஒருவர்போல் பார்த்துக் கொள்ளுங்கள். உங்கள் குடும்பத்தவர்களுக்கு நீங்கள் என்ன வாங்கினாலும் நண்பிக்கும் வாங்குங்கள் ( என்ன குடும்பத்தவர்கள்தான் உங்களுக்கு வாங்கித்தருகிறார்களா)  புதுவருடத்துக்கு உடுப்பு எடுப்பதாக இருந்தால்கூட நண்பிக்கும் எடுங்கள்.


07.  உங்கள் நண்பியை அவளின் விட்டில் அவளது குடும்பத்தினர் கவனிப்பதனைவிட நீங்கள் அதிகம் கவனியுங்கள். அப்போது உங்கள் மீது அதிக அன்பு உண்டாகும்.

08. உங்கள் வீட்டவர்களுடன் சகஜமாக பழக விடுவதுடன். உங்கள் குடும்பத்தாருடன் வெளியிடங்களுக்கு சென்றுவர அனுமதியுங்கள். அப்போது உங்கள் வீட்டவர்களை நண்பி கவர்வதோடு நண்பிக்கும் உங்கள் வீட்டவர்கள்மீது நல்லெண்ணம் உண்டாகும்.


09. உங்கள் நண்பியின் வீட்டவர்களுடன் மிகவும் நெருக்கமாகப் பழகுங்கள். அவர்களுக்கு உங்கள்மீது அதிக நம்பிக்கை வரவேண்டும் அதனோடு உங்கள்மீது நல்லபிப்பிராயமும் இருக்க வேண்டும். 


   அப்போதுதான் உங்கள் காதல் அவர்களுக்கு தெரிய வந்தாலும் அவர்கள் முட்டுக்கட்டையாக இருக்காமல் பச்சைக்கொடி காட்டுமளவுக்கு அவர்களோடு பழகிக் கொள்ளுங்கள்.


10. நண்பியும் நீங்களும் அடிக்கடி வெளி இடங்களுக்கு சென்று வாருங்கள்.


       அப்போதுதான் சமூகம் உங்களையும் உங்கள் நண்பியையும் தொடர்பு படுத்தி கட்டுக்கதைகள் கட்டும். அது உங்களுக்கு இலகுவாக இருக்கும்.


இது மட்டுமல்ல இன்னும் இருக்கின்றது சந்தர்ப்பம் வரும்போது சொல்லின்றேன்.



என் அனுபவமா என்று மட்டும் கேட்கவேண்டாம்.







read more...

Tuesday, 21 June 2011

தமிழ் மொழி தமிழ் மொழியாகவே இருக்கிறதா? தமிழா நீ பேசுவது தமிழா?

இது என்னுடைய முந்திய இடுகை ஒன்று நேற்று நண்பர் சதிஸின் இடுகை ஒன்றை பார்த்ததுமே இந்த இடுகையை மீண்டும் இடுகையிடவேண்டும் என்ற எண்ணம் உதித்தது.  


பல சிறப்புக்களை கொண்ட தமிழ் மொழி இன்று பல மொழிக் கலப்பினால் பாதிக்கப்பட்டு வருவதாக இன்று பலரும் குற்றம் சுமத்திக்கொண்டு இருக்கின்றனர். தமிழ் மொழியை வளர்ப்பதிலே ஊடகங்களின் பங்கு இன்றியமையாத ஒன்றாகும் ஊடகங்களால் பாரிய மாற்றங்களை ஏற்படுத்த முடியும்.

தமிழ் மொழியோடு பிற மொழி கலப்பதை தடுப்பதிலும், தமிழ் மொழியை வளர்ப்பதிலும் ஊடகங்களின் பங்கு அளப்பெரியது. தமிழ் ஊடகங்கள் தமிழ் மொழியை வளர்ப்பதனையும் தமது நோக்கங்களிலே ஒன்றாக கடைப்பிடிக்க வேண்டும். இன்று பல ஊடகங்களும் ஊடகவியலாளரும் தமிழ் மொழியை வளர்ப்பதிலே ஆர்வம் காட்டிவரும் நேரம் சில ஊடகங்களிலே தமிழ் பயன்பாட்டைப் பார்க்கின்றபோது எல்லோருமே கவலைப்பட வேண்டிய விடயமாக இருக்கின்றது.

நாகரிக உலகில், நாமும் மாற வேண்டும் என்பதற்காக எமது தமிழ் மொழியினை மாற்றி அமைக்க முடியுமா. இன்று தமிழோடு ஆங்கில சொற்களை பயன்படுத்துவது ஒரு நாகரிகமாக மாறிவிட்டது. ஏன் தமிழ் மொழியில் பேசுவதிலே என்ன இருக்கிறது எமது மொழியை நாமே பயன்படுத்த வெறுக்கிறோம். இதற்கு சொல்லும் குற்றச்சாட்டு உண்மையான தமிழ் சொற்கள் எல்லோருக்கும் தெரியாது என்று சொல்லி விடுவார்கள். நான் வேற்று மொழிகளை குற்றம் சாட்டவில்லை ஆங்கிலம் முக்கிய மொழியாக இருக்கலாம் எமது மொழியை மறப்பதா ஆங்கிலம் பேசவேண்டிய இடங்களில் பேசுவது தப்பு இல்லை. ஆனால் சிலர் பேசுவார்கள் தமிழ் வார்த்தைகள் 25 வீதமே கூட இருக்காது. இவர்கள் பேசுவது ஆங்கிலம் தெரியாத பாமர மக்களாக இருந்தாலும் அவர்களது பேச்சிலே மாற்றம் இருக்காது.

தந்தை பெரியார் அவர்களின் அச்சு எழுத்துக்களில் சிக்கனம் காரணமாக உருவானதுதான் தமிழ் சீர்திருத்த எழுத்துகள். னா, ணா, னை, ணை, லை, ளை போன்ற எழுத்துகள் சீர்திருத்தப்பட்டது. இவற்றை மறைந்த தமிழக முதல்வர் டாக்டர் MGR அவர்களால் அரசில் பரிந்துரை செய்யப்பட்டது. இன்று இவைகள் பயன்பாட்டில் இருக்கின்றது. நேற்று என் நண்பர்களிடம் பழைய னா, ணா, னை, ணை, லை, ளை எழுதிக்காட்டுங்கள் என்றேன். அவர்களால் ஞாபகத்திற்கு கொண்டு வரமுடியவில்லை அந்த அளவிற்கு மறக்கடிக்கபட்டுள்ளது.

மாற்றத்தை கொண்டு வர முடியும் என்பது உண்மையே. இதனை 100 வீதம் ஊடகங்களினால் சாத்தியப் படுத்த முடியும். பல ஊடகங்கள் இதில் வெற்றியும் கண்டன பல ஊடகவியலாளர்கள் தமிழை வளர்ப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றனர். வெதுப்பகம், தொடருந்து, மகிழுந்து போன்ற பல தமிழ் சொற்களை இப்பொழுது ஊடகங்களில் பாவிப்பதனை பார்க்கும்போது சந்தோசமாக இருக்கின்றது. இதனை மக்கள் மத்தியிலே பிரபல்யப் படுத்தியது ஊடகங்களே. அப்படி இருக்கும் போது ஏனைய சொற்களையும் நாம் பயந்படுத்தும்போது மக்களும் பயன்படுத்த ஆரம்பித்து விடுவார்கள் என்பதே உண்மை.

இன்று பலரது குற்றச் சாட்டாகவும் இருப்பது சில இலத்திரனியல் ஊடகங்களிலே தமிழ் கொலை செய்யப்படுகின்றன என்பதே. உண்மையும் அதுதான் தமிழை வளர்க்க வேண்டியவர்கள். நேயர்களோடு பேசும்போது அதிகமாக ஆங்கில சொற்களை பிரயோகிப்பது ஏன். நான் அதிகம் அவதானித்த விடயம் சாதாரண ஆங்கிலம் தெரியாத மக்களோடும் ஆங்கிலத்தில் பேசுவது. இன்று தொலைபேசி பாவனை அதிகரித்து விட்டதனால் கிராமப்புற மக்கள் இலத்திரனியல் ஊடகங்களுக்கு தொலைபேசி அழைப்பினை எடுப்பது அதிகரித்து விட்டது. ஆனால் அவர்களை புரிந்து கொண்டு தமிழிலே பேசுவதை தவிர்த்து ஆங்கில வார்த்தைகளோடு சில அறிவிப்பாளர்கள் விளையாடுவதுதான் ஏன்.

சிலர் தாங்கள் ஆங்கில வார்த்தைகள் பயன்படுத்தவில்லை என்றால் மற்றவர்கள்தன்னை கீழ்த்தரமாக நினைப்பார்கள் என்று நினைக்கின்றனர். நவின உலகுக்கு ஊடகங்களும் மாறத்தான் வேண்டும். அதற்காக நாம் தமிழை சாகடிப்பதா. இன்று சில ஊடகங்களிலே சில அறிவிப்பாளர்கள் லகர, ழகர வேறுபாடு தெரியாமலே தமிழை கொலை செய்கின்றனர். இவர்கள் தமிழை வளர்ப்பவர்களா. எத்தனையோ திறமையானவர்கள் இருக்கும்போது ஏன் இவர்கள் உள் வாங்கப்பட்டனர். தமிழை வளர்க்க தமிழ் ஊடகங்கள் முன்வர வேண்டும்.

ஒரு போட்டி ஒரு தொலைக்காட்சியிலே நடந்தது அதிலே நடுவர் போட்டியாளரிடம் சொன்னார் உங்கள் தமிழ் உச்சரிப்பில் "பிலைகள்" இருக்கிறது திருத்துங்கள்என்று இவர் பிழை திருத்துகிறாரா. அல்லது தமிழ் கொலை செய்கிறாரா. அவரே தமிழ் கொலை செய்யும் போது எப்படி மற்றவரை திருத்துவது.

ஊடகங்களால் முடியாதது எதுவும் இல்லை வெதுப்பகம், தொடருந்து, உந்துருளி, மகிழுந்து போன்ற சொற்கள் மக்கள் மத்தியிலே பிரபல்யமாக்கப் பட்டது ஊடகங்களால்தான் ஏனைய சொற்களையும் மக்கள் மத்தியிலே பிரபல்யப்படுத்துவதொடு தமிழ் மொழியினை ஊடங்களால் வளர்க்க முடியும் என்பதே உண்மை.

ஒரு சிலர் செய்கின்ற தவறுக்காக எல்லோரையும் குற்றம் சொல்வது சரியல்ல. தமிழ் கொலை செய்கின்ற ஊடகங்களும் ஊடகவியலாளரும் திருந்த வேண்டும். என்பதோடு நாகரிக மோகத்தில் தமிழ் மொழியோடு வேற்று மொழிகளை கலப்பதனையுமே நான் தவறு என்று சொல்கிறேன்.

வானொலி, தொலைக்காட்ட்சி போன்றவற்றிலே அறிவிப்பாளர்கள் விடுகின்ற மொழி உச்சரிப்பு, வேற்றுமொழிக் கலப்பு தொடர்பாகவே பலரும் பேசி இருந்தனர். இந்த இடத்திலே ஒன்றைக் குறிப்பிட வேண்டும் நானும் ஒரு ஊடகவியலாளன்தான், ஒரு அறிவிப்பாளன். நான் தமிழ் மொழி தவறாக உச்சரிப்பதனையும், ஆங்கில வார்த்தைகள் தேவையற்று அதிகம் பயன் படுத்துவதனையும் முற்றாக வெறுப்பவன். தமிழை தமிழாக பயன் படுத்த நினைப்பவன்

ஒரு சிலர் குறிப்பிட்டிருந்தார்கள் நாமும் நாகரிகத்துக்கு ஏற்றாற்போல் மாற வேண்டுமென்று. நான் மாற வேண்டும் என்பதனை ஏற்றுக் கொள்கின்றேன். ஆனால் எமது தமிழ் பாரம்பரியங்களையும், தமிழ் மொழியின் சிறப்பினையும் நாகரிகமென்ற போர்வையில் சாகடிப்பதா.

நான் வேற்று மொழிகளை முற்றாக புறக்கணிக்க வேண்டுமென்று சொல்லவில்லை. ஆங்கில மொழியினை பயன் படுத்த வேண்டிய இடங்களுக்கு பயன்படுத்தத்தான் வேண்டும். அதற்காக தேவையற்ற விதத்தில் அதிகமாக பயன்படுத்தலாமா. இன்று ஆங்கில மொழியினை தமிழ் மொழியோடு பயன் படுத்துவது அதிகரித்து வருகின்றது. அன்று ஒரு பத்து வீதமாக இருந்தது என்று வைத்துக் கொள்வோம் இன்று இருபது வீதமாக அதிகரித்து விட்டது என்றால் எதிர் காலத்தில் தமிழோடு ஆங்கில மொழி பயன்பாடு அறுபது வீதமாக அதிகரித்து விட்டது என்று வைத்துக் கொள்வோம் அந்த மொழியினை தமிழ் மொழி என்பதா அல்லது வேறு ஒரு மொழி என்பதா? போகிற போக்கில் நடக்காமல் விடலாம் என்று சொல்ல முடியாது. தமிழ் மொழி மறைகின்ற நிலைக்கு தமிழர்களாகிய நாம் பங்காளிகளாக இருக்கலாமா.

சில ஆங்கில சொற்களை நாங்கள் பயன்படுத்தியே ஆகவேண்டும். இருந்தாலும் எமது தமிழ் மொழியிலே பல இனிய சொற்கள் இருக்கின்றன. ஒரு சிலரின் குற்றச் சாட்டு சில தமிழ் சொற்கள் எல்லோருக்கும் தெரியாது அதனால் ஆங்கில சொற்களை பயன்படுத்துகிறோம் என்று. இக் கருத்தினை முற்று முழுதாக ஏற்றுக்கொள்ள முடியாது.

இன்று இலங்கையின் ஊடகங்களிலே தொடருந்து, சிற்றுந்து, உலங்குவானூர்தி, துவிச்சக்கர வண்டி, மிதி வண்டி, காலுந்து, வெதுப்பி, குளிர்களி.. இன்னும் பல.. இனிய தமிழ் சொற்கள் பாவிக்கப்படுகின்றன. (வெளிநாட்டை பொறுத்தவரை எப்படி என்பது தெரியவில்லை) இந்த சொற்களை பாமர மக்கள் முதல் படித்தவர்கள் வரை எல்லோரும் இன்று ஏற்றுக் கொள்கின்றனர். இந்த சொற்களின் அறிமுகம் எப்போது வந்தது?. ஆரம்பகாலத்தில் இருந்து ஊடகங்களிலே அடிக்கடி  பயன்படுத்தப்பட்டு வந்ததா என்றால் இல்லை. அதிகமானவர்களுக்கு அன்று இந்த சொற்கள் தமிழிலே இருக்கின்றது என்பதே தெரியாது. என்னையும் சேர்த்து.

ஊடகங்களால் முடியாதது எதுவும் இல்லை. தமிழை வளர்ப்பதிலே பல ஊடகவியலாளர்கள் பாடுபட்டிருக்கின்றார்கள். அதன் பயனாகவே இன்று இந்தச் சொற்கள் மக்களால் பயன்படுத்தப் படுகின்றன.

ஊடகங்களிலே இது போன்ற பாவனையில் இல்லாத சொற்களை அறிமுகம் செய்கின்றபோது காலப்போக்கில் பாவனைக்கு கொண்டு வர முடியும். அதற்காக எல்லாச் சொற்களையும் வேற்று மொழிச் சொற்களையும் தமிழ் படுத்த முடியாது என்பதனையும் ஏற்றுக் கொள்கிறேன். அவற்றை ஒரு பக்கம் வைத்துவிட்டு தேவையற்ற வேற்றுமொழி கலப்பை தவிர்க்க வேண்டும் என்பதே எனது கருத்து.

என் நாம் இன்று வலைப்பதிவுகளிலே இடுகை, அமுக்கவும் போன்ற இனிய சொற்களை பாவிக்கின்றோமே. இன்று இணையமும் கூட ஒரு வகையில் தமிழை வளர்க்கின்றது என்று சொல்லலாம்.

அடுத்து வானொலி, தொலைக்காட்சிகளிலே தமிழ் கொலை செய்யப்படுகின்றன என்ற விடயத்துக்கு வருகின்றேன். நவின உலகத்துக்கு ஏற்றாற்போல் இன்று எல்லாமே மாறி வருகின்றன இதற்கு வானொலி தொலைக்காட்சிகளும் விதிவிலக்கல்ல. கடுமையான போட்டித்தன்மைகளுக்கு மத்தியிலே தாம் நிலைத்திருக்க வேண்டுமானால். காலத்துக்கேற்ற சில மாற்றங்களையும் இன் நிறுவனங்கள் செய்ய வேண்டிய தேவை இருக்கின்றது.

இதற்காக இவர்கள் நினைத்த எதனையும் செய்யலாமா இன்று சிலர் தாம் நினைத்தபடி மாறுதல் என்ற பெயரில் தமிழ் கொலை செய்து கொண்டு இருக்கின்றனர். வானொலி, தொலைக்காட்சிகளின் போட்டித்தன்மை காரணமாக நிலைத்திருக்க வேண்டுமானால் சில ஊடக நிறுவனங்கள் மாற்றங்களை செய்யத்தான் வேண்டும். இன்று பல ஊடக நிறுவனங்கள் பேச்சுத்தமிழை பயன்படுத்துகின்றன. பேச்சுத்தமிழில் பேசுகின்றபோது எல்லோருக்கும் இலகுவாக விளங்கிக் கொள்ளமுடியும். இது ஒரு புறமிருக்க இதனை ஒரு சாட்டாக வைத்து வேற்று மொழி கலந்து பேசுவதை சில அறிவிப்பாளர்கள் கடைப்பிடிப்பதுதான் கவலைக்குரிய விடயம்.

சில அறிவிப்பாளர்கள் விடுகின்ற தவறுகளை சொல்வதென்றால் அதற்கென ஒரு வலைப்பதிவு தொடக்கி எழுதிக்கொண்டே போகலாம். அறிவிப்பாளர்கள் எல்லோரும் பிழை விடுவதில்லை, தமிழை கொலை செய்வதில்லை சில அறிவிப்பாளர்கள் இருக்கின்றார்கள் லகர ழகர ளகர தெரியாமல் திண்டாடுகின்றனர். அது மட்டுமல்ல சில தமிழ் சொற்கள் அவர்களின் வாயில் இருந்து வருவதற்கு கஸ்ரப்படுகிறது.

சில அறிவிப்பாளர்கள் இனிய தமிழை மறந்து அளவுக்கு அதிகமாக ஆங்கில வார்த்தைகளை பயன் படுத்துவது என். இவர்களுக்கு தமிழ் தெரியாதா. தமிழ் தெரியவில்லை என்றால் ஏன் தமிழ் அறிவிப்பாளராக வந்தார்கள். ஆங்கில அறிவிப்பாளராக போயிருக்கலாம்தானே. இவர்கள் விடுகின்ற தவறுகளும் ஓட்டு மொத்த அறிவிப்பாளர்களையும் பாதிக்கும் என்பதை இவர்கள் உணர்ந்து திருந்துவதே நல்லது (திருந்துவார்களா?)

தமிழ் மொழியின் சிறப்புக்கள் பற்றி எழுதிக்கொண்டே போகலாம். அத்தனை சிறப்பு வாய்ந்தது தமிழ் மொழி. வேற்று மொழிகளை தமிழோடு தேவையற்ற முறையிலே அதிகமாகப் பிரயோகிக்கப்படுகிறது ஏன் என்பதுதான் எனது கேள்வி.

வேற்று மொழி பேசுபவர்கள் எமது தமிழ் மொழியினை தங்கள் மொழியோடு கலந்து பயன் படுத்துகிறார்களா. இல்லையே சில தமிழ் சொற்களை எல்லாராலும் புரிந்து கொள்ள முடியாது என்று சொல்கின்றார்கள். அப்படி என்றால் தமிழ் மொழிக்கு சொற் பஞ்சம் இருக்கிறதா?

எமது தமிழ் அறிஞர்கள் எல்லோரும் ஏனைய மொழிகளையும் படிக்கவேண்டும் என்று சொன்னார்களே தவிர தமிழ் மொழியோடு கலந்து பயன் படுத்தும் படி சொல்லி இருக்கின்றார்களா.

இன்று பல சிறப்புக்கள் மிக்க எமது தமிழ் மொழியின் சில சொற்களை புரிந்து கொள்ள முடியவில்லை என்றால் அதற்கு யார் காரணம். நாம்தான் காரணம். நாகரிகமென்ற போர்வையில் வேற்று மொழிகளின்பால் நாம் ஈர்க்கப்பட்டதே முக்கிய காரணம்.

இன்று நாம் தமிழ் இலக்கியங்களை வெறுப்பதற்கு என்ன காரணம் அதிலே பயன்படுத்தப்பட்டிருக்கின்ற சொற்களுக்கு விளக்கம் தெரியாமையே முக்கிய காரணம். நான் கேட்கின்றேன் அன்று தமிழ் அறிஞர்கள் மக்களிடம் பாவனையில் இல்லாத சொற்களை ஏன் பயன்படுத்தவேண்டும். அன்று அந்தச் சொற்கள் பயன் பாட்டில் இருந்ததே காரணம். அன்று இலக்கியங்களிலே வேற்று மொழி கலப்பு இருந்ததா?. இல்லையே.

ஆனாலும் இன்று கிராமப் புறங்களிலே அந்தச் சொற்களை எமது முன்னோர்கள் பயன் படுத்துவதை கானக்கூடியதாக இருக்கின்றது. இன்றைய நாகரிகம்தான் எம்மை மாற்றிவிட்டது.

சில சொற்களுக்கு தமிழ் படுத்த முடியாது என்பதனை ஏற்றுக் கொள்கின்றேன். வளர்ச்சி அடைந்து வருகின்ற நாடுகளின் விஞ்ஞான கண்டு பிடிப்பு, அவர்களின் பொருட்களுக்கு எங்களால் தமிழ் சொல்லை தேடிக்கொண்டு இருக்கமுடியாதுதான். ஆனால் காலப்போக்கில் அதற்கும் தமிழ் சொற்களை அறிமுகப் படுத்த முடியுமல்லவா. computer என்பது தமிழ் வார்த்தை இல்லை அது காலப்போக்கில் கணணி அல்லது கணினி என்று நாம் தமிழ் படுத்தவில்லையா.

சில தமிழ் சொற்களுக்கு அகராதிகளைத்தான் தேடி பொருள் கண்டுபிடிக்க வேண்டும் என்று சொல்கிரிஇர்கள். அப்படி என்றால் அன்று இலக்கியங்களை எல்லோரும் படித்தார்கள். அன்று குருகுல முறையிலே ஒரு குருவின் வழிகாட்டலுக்கமைய படித்தவர்களே எமது தமிழ் அறிஞர்கள் பலர்.

அன்று அவர்கள் அகராதியும் கையுமாகவா திரிந்தார்கள். இல்லையே இந்தச் சொற்கள் பாவனையில் இருந்தது என்பதே உண்மை. சரி அவர்கள் அகராதி கொண்டுதான் படித்தார்கள் என்றால் இன்று ஏன் எங்களால் அந்த அகராதிகளை எங்களால் பயன்படுத்த முடியாது.

அன்று எமது தமிழ் மொழிச் சொற்கள் பயன்பாட்டில் இருந்தது என்பது புலனாகின்றது. இதற்கும் காரணம் நாமேதான்.

சரி புத்தகங்கள் தமிழில் இல்லை என்றால் அது யாரில் தவறு இருக்கிறது. தமிழிலே புத்தகங்களை எழுதுவதற்கு தமிழிலே நல்ல பொறியியலாளர்கள் இல்லையா. இருக்கிறார்கள் ஆனால் அவர்கள் தமிழ் மொழியை விட்டு விலகி ஆங்கில மொழியின்பால் சென்றதே காரணம்.

எனது கேள்வி இன்று கணணி மென் பொருட்கள் கூட தமிழிலே அதுவும் அற்புதமான தமிழ் சொகளைக்கொண்டு வடிவமைக்கப் படுகின்ற போது தமிழிலே சில துறைகளுக்கு புத்தகங்கள் இல்லை என்பது ஏன். உலகத்துக்கே நல்லா கருத்துக்களை சொல்லக்குகூடிய எத்தனையோ புத்தகங்களுக்கு சொந்தம் கொண்டாடுகிறது தமிழ் மொழி. ஆனால் நாமே இன்று தமிழ் மொழியினை கொலை செய்து கொண்டு இருக்கின்றோம்.


தமிழ் மொழியினை வளர்க்க வேண்டும். தமிழ் மொழி தமிழ் மொழியாக பயன்படுத்த வேண்டும் என்பதே எனது அவா.
read more...

Thursday, 16 June 2011

ஒரு பெண் வேசியாகிறாள். 18 +

காட்சிப் பொருளாக்கப்பட்ட பெண்கள்



எனும் பதிவின் தொடராகவே இடம் பெறுகின்றது. ஒரு பெண் ஒரு பெண் தன் கணவனைத் தவிர வேறு ஓருத்தருடன் பாலியல் ரீதியில் தொடர்பு வைத்திருந்தால் அவளை வேசி என்று சமூகம் சொல்கின்றது. ஆனால் ஒரு ஆண் எத்தனை பேருடன் தொடர்பு வைத்திருந்தாலும் அவனைப்பற்றி எவரும் கணக்கெடுப்பதில்லை.

 ஒரு பெண் பலருடன் தொடர்பு வைத்துக் கொள்ள பல காரணங்கள் இருக்கின்றன. பலர் இதனை ஒரு தொழிலாக செய்து வருகின்றனர். பண்டைய தமிழ்ச்சமூகத்தில் "தாசித் தொழில்" என்று அழைக்கப்பட்டு வந்தது

 பாலியல் தொழில் செய்யும் பெண்ணைத் தமிழில் விலைமகள், வேசி, பொதுமகள், கணிகை, அல்லது விபச்சாரி என அழைக்கப்படுகின்றனர். 




பெண்களைப் பொறுத்தவரையில். தான் விபச்சாரத்துக்கோ அல்லது பல ஆண்களுடனோ பாலியல் தொடர்பு வைத்துக் கொள்வதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. பலர் இதனை ஒரு தொழிலாகச் செய்கின்றனர். இதற்கும் பல காரணங்கள் இருக்கின்றன. வறுமை வேலையில்லாப் பிரச்சினை என்று
சொல்லிக் கொண்டே போகலாம்.

இதனை தொழிலாகச் செய்கின்ற விலை மாதர்களை நாடி பல பணம் படைத்தவர்கள் வருகின்றனர். இதன்,முலம் விலை மாதர்கள் அதிகமான வருமானத்தை
ஈட்டுவதோடு அதிக வருமானம் பெறும் ஒர தொழிலாகவும் இத் தொழில் இருக்கின்றது.இத் தொழிலைச் செய்பவர்கள் விலை மாதுகள் என்றால் இவர்களை
நாடிச் செல்கின்ற ஆண்களை என்னவென்று சொல்வது.

இன்று இலங்கையைப் பொறுத்தவரையில் எல்லோராலும் சொல்லப்படுகின்ற விடயம் சமுக சீர்கேடு அதிகரித்திருக்கின்றன என்ற குற்றச்சாட்டாகும்;. இக்
இக் குற்றச்சாட்டு முற்றிலும் உண்மையானது. நான் பல இடங்களுக்கு சென்று வருகின்ற ஒருவன் பல விடயங்களையும் பல சமுக சீர் கேடுகளையும் கண்முன்னே கண்டிருக்கின்றேன். இந்த சமுக சீர் கேடுக்கான காரணம். உள்நாட்டு யுத்தமும் வேலையின்மையும். வறுமையுமாகும்.

இவை தொடர்பிலே சில விடயங்களையும் சம்பவங்களையும் குறிப்பிட விரும்புகின்றேன். என்னால் நேரடியாக அவதானிக்கப்பட்ட அறியப்பட்ட விடயங்கள் 

 
இவை ஒரு 20 வயதுடைய பெண் தன்னுடைய கணவனை யுத்தத்தின் போது பறிகொடுத்து விட்டார். அந்த பெண்ணுக்கு 3 வயதில் ஒரு குழந்தையும் இருக்கின்றது. கணவனை இழந்ததும் தனிமைப் படுத்தப்பட்டுவிட்டாள்இ

இவளுக்கு தொழிலும் இல்லை. இன்னொருவனை திருமணம் செய்வதற்கும் சமுகம் இடம் கொடுக்கவில்லை. இவள் வாழ்ககையை எவ்வாறு கொண்டு
நடாத்துவது. தன் பிள்ளையை நல்ல நிலைக்கு கொண்டு வருவது. அவள் இன்னொரு திருமணம் செய்ய எத்தணித்தபோது அவளது சமுகம் அதனை
ஏற்றுக் கொள்ளவில்லை.

அவள் வாழ வேண்டிய வயது அவள் திருமணம் செய்து இரண்டு வருடங்கள்தான் கணவனோடு வாழ்ந்திருப்பாள். தான் தனிமைப் படுத்தப் பட்டமை ஒருபுறம்
பொருளாதார நிலை ஒருபுறமிருக்க. அவளுக்கு இப்போது வயது 20. காம உணர்ச்சிகள் என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்கின்றது. கணவனோடு இரண்டுவருடங்கள் மட்டுமே வாழ்ந்த இந்த இளம் பெண்ணுக்கு கணவணை இளந்த பின் காம உணர்ச்சி இல்லாமல் போய் விடுமா?

இந்தப் பெண்ணின் வாழ்க்கை கணவனை இழந்ததோடு முடிந்துவிட்டதா? ஏன் இந்த சமுகம் இவைகளைப்பற்றி சிந்திப்பதாக இல்லை. இவளை சமுகம் இன்னொரு
திருமணம் செய்யவேண்டாம் என்று கட்டப்படுத்தியதன் எதிரொலி இன்று தனிமையில் இருக்கும் அவளது வீட்டுக்கு தினம் ஒரு ஆண் சென்று வருகின்றான்.
இவள் இவ்வாறு செல்லக் காரணம் அவளது சமுகமே.

இவள் மட்டுமல்ல யுத்தத்தின்போது கணவனை இளந்த பல இளம் பெண்களின் நிலை இதுதான். இவர்கள் விலை மாதுகள் அல்ல தன் இளம் வயதிலே கணவனை

இழந்துவிட்டார்கள். தன் காம உணர்வுகளை கட்டுப்படுத்த முடியாமல் பல ஆண்களை நாடுகின்றனர். இது சமுக சீரளிவு என்று சொல்லமுடியுமா. கணவன் இறந்ததோடு அவளுக்கு ஆசாபாசங்கள் இருக்கக்கூடாதா?

கணவனை இழந்ததும் பெண்கள் திருமணம் செய்யக்கூடாது என்று சொல்லும் சமுகம். ஒரு ஆணின் மனைவி இறந்துவிட்டால் உடனடியாக அவனுக்கு
மறுமணம் செய்து வைக்கின்றனரே இது எந்த வகையில் நியாயமானது. ஆண்களுக்கு மட்டும்தான் ஆசாபாசங்கள் இருக்கின்றதா?

இது ஒரு புறமிருக்க சமுக சீர்கேடு தொடர்பிலே நான் அதிகம் அவதானித்த விடயம் கணவன் வெளிநாட்டிலே இருக்கின்ற பெண்கள் வேறு ஆணுடன்

அல்லது பல ஆண்களுடன் தொடர்பு வைத்திருக்கின்றனர். எல்லா பெண்களும் அவ்வாற இல்லை ஒரு சிலர் இருக்கின்றனர்.

இவர்கள் இவ்வாறு தொடர்பு வைத்திருக்க காரணம் என்ன. பணத்தக்காக இவர்கள் மற்றவர்களுடன் செக்ஸ் தொடர்பு வைத்துக் கொள்ளவில்லை.

தமது காம உணர்ச்சிகளை திர்த்துக் கொள்வதற்காகவே வேறு ஆண்களை நாடுகின்றனர். இங்கே யார் தவறு செய்கின்றனர். தமது மனைவியின்
உணர்வுகளை புரிந்து கொள்ளக்கூடிய அவளது கணவன் விடுகின்ற தவறுதான் காரணம்.

நாங்கள் ஒரு பிரதேசத்திலே இரவு 9 மணிக்குப் பின்னர் வீதியில் நிற்பதற்கு பயப்படுவதுண்டு. நிற்பதே இல்லை நின்ற பலர் இராணுவத்தினரால் அடி வாங்கிய சம்பவங்களும்

இடம் பெற்றிருக்கின்றன.

 

அந்த வீதியிலே இருக்கின்ற ஒரு பெண்ணின் கணவன் வெளிநாட்டில் இருக்கின்றார். அவள் இப்போது பலருடன் தொடர்பு. இரவு 9 மணிக்குப்பின்
இராணுவத்தினரின் ஆட்சி அவளது வீட்டில் நடக்கும். அவள் அவ் வீட்டில் தனிமையில் இருப்பவள். இவள் வேசியானதற்கு யார் காரணம்? இதே நிலை பல பெண்களுக்கு இது ஒருபுறமிருக்க ஒரு இளம் பெண் அவளுக்கு பொருளாதார சிக்கல் இல்லை குடுப்பநிலை அப்படி. திருமணம் செய்ய வேண்டிய வயது ஆனால் திருமணம் செய்யவில்லை
தினம் ஒருத்தனுடன் உல்லாசமாக இருக்கின்றாள். இது இவள் செய்யும் தவறுதான். தன் கணவன் தன்னை திரப்திப் படுத்தவில்லை என்பதற்காக வேறு ஆண்களை நாடுகின்ற பெண்களும் இருக்கின்றனர்.

இவை எல்லாம் ஒரு புறமிருக்கட்டும் ஒரு பெண் இன்னொருவனுடன் தொடர்பு வைத்திரந்தால் அவளை வேசியாகக் காட்டும் சமுதாயம் ஒரு ஆண் எத்தனை பெண்களுடன்



தொடர்பு வைத்திருந்தாலும் அவனைப்பறிறி பேசாதது ஏன்? ஒரு ஆண் பல பெண்களுடன் தொடர்பு வைத்திருந்தால் அதனை அவனது வீரத்துக்கு ஒப்பிடுபவர்களும் அல்லாமல் இல்லை.


யாவும் உண்மை  சம்பவங்கள்...
தொடரும்...


read more...

Saturday, 10 July 2010

ஏன் இப்படி தானும் சீரழிந்து சமுகத்தையும் சீரழிக்கிறார்களோ தெரியவில்லை.

நேற்று நான் பேருந்தில் சென்றுகொண்டிருக்கும்போது நடந்த சம்பவம் ஒன்று....

இரு நண்பர்கள் எனக்கு பக்கத்து இருக்கைகளில் இருந்து வருகின்றனர். அவர்கள் தங்களுக்குள்ளே பேசிக்கொண்ட விடயம்.

முதல் நண்பன் -: டேய் இப்ப சுதன் குடிக்கிறதே இல்லையாம்டா...

இரண்டாம் நண்பன் -: உண்மைதான்டா. எப்படிடா அவனால இருக்க முடியிது. அவன்.  குடிக்காம இருக்கமாட்டானேடா.

முதல் நண்பன் -: உண்மைதான்டா அவன் நிருத்தல்லடா. அவன்ட அண்ணன் சாராயத்துக்குள்ள ஏதோ குளிசயப் போட்டு  (மாத்திரை) கொடுத்ததாம். அந்த குளிசை சுதனுக்கு தெரியாமல் போட்டதாம். அந்த குளிசை போட்டு கொடுத்தால் அன்று முழுதும் சத்தியா இருக்குமாம் பிறகு ஒரு நாளும் சாராயப் பக்கமே எட்டியும் பார்க்கமாட்டானுகலாம்.

இரண்டாம் நண்பன் -; இந்த குடியால ஒவ்வொரு நாளும் எவ்வளவு காசடா குடிச்சு தொலைக்கிரம். விடியத்தில எழும்பினா இனி குடிக்கப்போடா என்று நினைக்கிற. ஆனா பொழுதுபோக,போக குடிக்கிற எண்ணம்தானே  வருகுது. நம்மளும் இந்த குளிசயத்தான் சாராயத்தில போட்டு குடிக்கணும்.

முதலாம் நண்பன் -; நீ எனக்கு தெரியாமல் எனக்கு போட்டுத்தா. நான் உனக்கு தெரியாமல் போட்டுத்தாரன்....
 இப்படியே தொடர்கிறது...

என்னுடைய நண்பர் என்று சொல்லலாம் ஒவ்வொரு இரவிலும் குடிப்பார். குடிக்கவேண்டாம் என்று பல முறை சொல்லிப்பார்த்தேன் எவர் கதையும் கேட்பதாகவும் இல்லை.

எதற்காக குடிக்கின்றாய் என்று கேட்டால் கவலைகளை மறக்க குடிக்கிறேன் என்று சொல்வார் என்ன கவலை என்று கேட்டால் தினம் ஒரு காரணம் சொல்வார்.

அவர் சொல்லும் காரணங்களை கேட்டால் கோபம்தான் வரும். அப்பா இறந்த கவலை. அவரின் அப்பா இறந்து பல வருடம். கைல காசு இல்லை என்ற கவலை. அப்போ குடிப்பதற்கு மட்டும் காசு இருக்கும்.  தங்கட்சுக்கு வீடு கட்டவில்லை என்ற கவலை. இவ்வாறு தினமும் ஒரு காரணம் சொல்வார்.

என் இவாறு குடித்துக் குடித்து தான் மட்டுமல்ல, தன்னை சார்ந்த சமுகத்தையும் சீரழிக்கின்றனரோ  தெரியவில்லை. 

நாகரீகம் எனும் போர்வையில் இன்றைய இளம் சமூகத்தினர் சீரழிந்து கொண்டிருக்கின்றனர். குடிக்கவில்லை என்றால் தன்னை கீழ் தரமாக நினைப்பவர்களும் இருக்கின்றனர்.

இன்று குடும்பத்தை கொண்டு நடாத்தவேண்டிய பொறுப்பில் உள்ளவர்கள் குடித்துக் ,குடித்தே தன்னை சார்ந்தவர்களும் தன் பிள்ளைகளும் சீரழிகின்ற நிலைக்கு இட்டு செல்கின்றனர்.

குடித்துவிட்டு வந்து மனைவி, பிள்ளைகளுடன் சண்டை பிடிக்கின்ற, சித்திரவதை செய்கின்ற எத்தனையோ குடும்பத் தலைவர்களை பார்த்திருக்கின்றோம்.

தன் பிள்ளைகள் உணவின்றி, பாடசாலைக்கு செல்ல முடியாத நிலையில் இருக்கும் ஆனால் சில தந்தையர்கள் தினம் குடித்துவிட்டு வருவர். தன் மனைவி பற்றியோ, பிள்ளைகள் பற்றியோ இவர்களுக்கு அக்கறை இருக்காது.

தினமும் குடித்துவிட்டு வீட்டிலேயே தந்தை சண்டை பிடிப்பதால் பாடசாலையில் வகுப்பு மாணவர்கள் கிண்டல் செய்கிறார்கள் என்பத்தனால் எத்தனையோ பிள்ளைகள் பாடசாலை செல்வதை விட்டிருக்கின்றன.

அண்மையில் வீதியால் காலை ஒன்பது மணியளவில் வந்துகொண்டிருந்தேன். ஒரு மீன் வியாபாரி மோட்டார் சைக்கிளில் வந்துகொண்டிருந்தார். வீதியின் இரு மருங்கிலும் மோட்டார் சைக்கிள்தான் தண்ணிபோட்டதுபோல் தள்ளாடி வந்துகொண்டிருந்தது.

அவர் மாத்திரமல்ல 7 , 8 வயதிருக்கும் ஒரு சிறுவனும் (அவர் மகன்) அந்த மோட்டார் சைக்கிளில் இருக்கிறான். பார்க்கும்போது அவருக்கு அடி கொடுக்கவேண்டும் போல் இருந்தது.

பாடசாலை செல்லவேண்டிய அந்த பிள்ளையைக் கொண்டு குடித்தித் திரிகிறான் அந்த திருந்தாத ஜென்மம். இப்படி உழைத்து உழைத்தே குடித்து, குடித்து குடியாலே இறந்த எத்தனையோ பேரைப் பார்த்திருக்கின்றோம்.

சிலர் ஓடி, ஓடி உடலை வருத்தி வேலை செய்வார்கள். பார்த்தாலே பாவமாக இருக்கும். அவர்கள் உழைப்பது எதுவுமே வீடு சென்று சேராது. குடிப்பதற்கு என்றே உழைப்பவர்கள் இருக்கின்றனர்.

சிலரைப் பார்த்திருக்கின்றேன். குடிக்கவில்லை என்றால் உடல் நடுங்குகின்றது என்று சொல்லிக் கொண்டிருப்பார்கள்.

இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.

ஏன்தான் குடித்துக், குடித்தே தானும் சீரழிந்து. சமுகத்தையும் சீரழிக்கின்றார்களோ தெரியவில்லை. இவர்களை திருத்தவே முடியாது.
read more...

Monday, 5 July 2010

சமூகத்திலிருந்து புறக்கணிக்கப்படும் விதவைகள்

இது என்னுடைய 250 வது பதிவு. இதுவரை எனக்கு ஆதரவு வழங்கிய வலையுலக நண்பர்கள், வாசகர்கள், திரட்டிகளான தமிழிஷ் ,  தமிழ்10 , ஏனைய திரட்டிகள் மற்றும் இப்போது என் பதிவுகளை இணைத்து அதிக வாசகர்களை என் வலைப்பதிவுக்கு வருகைதர வைக்கின்ற தினமணி நாளிதழுக்கும் எனது நன்றிகள்.

இலங்கையைப் பொறுத்தவரை யுத்தத்தினால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் பெண்களே ஆகும்.  இந்த உள்நாட்டு யுத்தத்தின் மூலம் பல ஆயிரக்கணக்கான பெண்கள் விதவைகளாக்கப்பட்டிருக்கின்றனர்.

அவர்களின் நிலை படு மோசமான நிலையிலே இருக்கின்றது. இவர்களிலே அதிகமானவர்கள் இளம் பெண்கள் என்பது குறிப்பிடத் தக்கது. இவர்கள் சிறு வயதிலேயே குடும்ப சுமையினை தாங்கிக் கொள்ளவேண்டிய நிலைக்கு ஆளாகிவிட்டனர்.

இதில் அதிகமானவர்கள் பின்தங்கிய கிராமப் புரங்களை சேர்ந்தவர்கள் கல்வி அறிவேன்பதும் அவர்களிடம் சரியான முறையில் இல்லை. இதனால் தன்னையும் தனது குடும்பத்தையும் காப்பாற்றவேண்டிய? கொண்டு நடாத்த வேண்டிய பொறுப்பு இவர்களிடமே இருக்கின்றது.

இதற்காக இவர்கள் கூலி வேலை செய்தல், சுய தொழில்களை மேற்கொள்ளல் போன்றவற்றில் ஈடுபடுகின்றனர். சுய தொழிலைப் பொறுத்தவர். எல்லோராலும் செய்ய முடியாத காரியமாக இருக்கின்றது. போதிய பணவசதி உதவிகளை பெறுவதிலே சிக்கல்களை எதிர் நோக்குகின்றனர்.

கூலி வேலைக்கு செல்பவர்களைப் பொறுத்தவரை தனது பிள்ளைகளை கவனிக்கவேண்டும், வீட்டுவேலைகளை செய்யவேண்டும், கூலி  வேலைக்கு செல்லவேண்டும் என்று பாரிய சிக்கல்களை எதிர் நோக்குகின்றனர். அவர்களின் உழைப்புக்கேற்ற கூலி  வழங்கப்படுகின்றதா என்பது வேறு விடயம்.

சிலர் இவ்வாறு கஷ்டப்படுகின்றவர்களை வைத்து அதிகவேளைகளைக் கொடுக்கின்றனர். ஆனால் வேலைக்கேற்ற கூலி வழங்கப் படுவதில்லை. இதை விட்டாள் வேறு வழியில்லை என்று கஷ்டப்பட்டு உழைத்து  வருகின்றனர் பலர்.

இது ஒரு புறமிருக்க இந்த விதவைகளைப் பொறுத்தவரை பலர் இளம் வயதை சேர்ந்தவர்கள்.  வாழ வேண்டிய வயதில் வாழ்க்கையை இழந்து நிக்கின்றனர். இவர்களின் வாழ்க்கையை வளமானதாக மாற்ற எமது சமுகத்தால் முடியும்.

ஆனால் அவர்களளின் எதிர் காலத்தைப் பற்றி சிந்திக்காத சமூகமாக எமது சமூகம் இருப்பதுதான் கவலைப்படவேண்டிய விடயம். விதவைகளை ஒதுக்கி வைக்கின்ற சமுகமாக எமது சமூகம் இருக்கின்றது.

விதவைகள் திருமணம் போன்ற முக்கிய நிகழ்வுகளிலே கலந்து கொள்ள கூடாது, இந்த விதவைகளின் கண்களிலே விழிக்கக் கூடாது என்று நினைப்பவர்களும் இருக்கின்றனர்.

பெண்களை மறுமணம் செய்தால் கேலி செய்து தேவையற்ற கதைகளைக் கட்டி விடுகின்ற சமூகம். ஆண்கள் எத்தனை திருமணம் செய்தாலும் போசாதிருப்பது ஏன்?  சில ஆண்களைப் பொறுத்தவரை ஒரு மனைவி இருக்கும்போதே இன்னொரு திருமணம் செய்வார். இதனை வீரமாக பேசிக்கொள்பவர்களும்  இல்லாமல் இல்லை.

பெண்களோ தன் குடும்பத்தின் கஸ்ர நிலையின் காரணமாகவும், தனது பிள்ளைகளின் எதிர்காலத்துக்காகாகவும் மறுமணம் செய்தால் வேசி என்றும் இன்னும் பல கதைகளும் சொல்லி அந்த பெண்ணை ஒதுக்கி வைக்கின்றனர். விதவையான பெண் வாழக் கூடாதா?

எங்கள் ஒவ்வொருவருடைய மனங்களும் மாற வேண்டும் விதவைகளின், எமது சமூகத்தின்  எதிர்கால வளமான வாழ்வுக்காக ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும்.
read more...