Thursday 31 December 2009

வாழ்க பல்லாண்டு...



 அனைவருக்கும் இனிய புதுவருட வாழ்த்த்துக்கள்

  இந்த 2009 ஆனது பலருக்கு நல்ல ஆண்டாக அமைந்திருக்கலாம். சிலருக்கு மோசமான ஆண்டாக அமைந்திருக்கலாம். இது எப்படி இருப்பினும் பிறக்க இருக்கின்ற புதுவருடம் அனைவருக்கும் சந்தோசமான ஆண்டாக அமைய வேண்டும் என்று வாழ்த்துகின்றேன்.

2009 எனைப் பொறுத்தவரை எனது வாழ்க்கையில் அதிக, கவலைகளையும், வேதனைகளையும் ஏற்படுத்திய ஆண்டாக இருக்கின்றது. பொதுவாக சொல்லப்போனால் இந்த 2009 எனக்கு நல்ல ஒரு ஆண்டாக அமையவில்லை. என்னை அதிக சங்கடத்தில் ஆழ்த்திய வருடமாகவும் இருக்கின்றது. நான்
 இந்த ஆண்டிலேயே சந்தோசப்பட்ட  நாட்களைவிட கவலைப் பட்ட நாட்களே அதிகம்.

  பிறக்கின்ற புது வருடமானது நல்ல ஒரு ஆண்டாக அமையும் என்ற நம்பிக்கை இருக்கின்றது.  பிறக்கின்ற புதுவருடம் அனைவர் மனதிலும் சந்தோசத்தை ஏற்படுத்தும் ஒரு ஆண்டாக அமைவதோடு அனைவருக்கும் நல்லதே நடக்க வேண்டும் என்று வாழ்த்துகின்றேன்.

பூவுக்கு பிறந்த நாள்....
நான்காவது பிறந்த நாளை இன்று கொண்டாடும்  

செல்லக் குட்டி பிரபாகரன் அரிஷ்விஜா

 



எனக்கு மூஞ்சிப்  புத்தகம்  மூலம் முதன் முதலில் கிடைத்த ஒரு நண்பி டென்மார்க்கை சேர்ந்த திருமகள் பிரபா. இவர் எனக்கு ஒரு நண்பியாக என்பதனைவிட எனக்கு கிடைத்த ஒரு உடன் பிறவா அக்காவாக இருக்கின்றார். எனது வலைப்பதிவை தான் அறிந்த அனைவருக்கும் அறிமுகம் செய்தவர். இவரது அன்பு மகள் பிரபாகரன் அரிஷ்விஜா இன்று தனது நான்காவது பிறந்த தினத்தை டென்மார்க்கிலே இருக்கின்ற தனது வீட்டிலே மிக விமர்சையாகக் கொண்டாடுகின்றார்.


அரிஷ்விஜாவை சகல கலைகளும் பெற்று பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துவோம்.
read more...

Wednesday 30 December 2009

இப்படியும் மனிதர்கள்

நாங்கள் பலர் சேர்ந்து பத்து வருடங்களுக்கு முன்னர் ஆரம்பித்த சமுக சேவை அமைப்பான கல்வி அபிவிருத்தி சங்கமானது பல்வேறு சமூகப் பணிகளை செய்து வருகின்றது. இந்த அமைப்பானது சிறுவர்களின் நலன் தொடர்பிலே பல்வேறுபட்ட செயத் திட்டங்களை நடைமுறைப் படுத்தி வருகின்றது.

கல்வியை தொடர முடியாத வறிய மாணவர்களுக்கு கல்வியை தொடர்வதற்குரிய வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல். மாணவர்கள் பாடசாலையை விட்டு இடை விலகுவதை கட்டுப்படுத்தலும், இடைவிலகியவர்களை மீண்டும் பாடசாலையில் சேர்ப்பதற்குரிய  நடவடிக்கைகளை மேற்கொள்ளல், இலவச வகுப்புக்களை நடாத்துதல் என்று பல்வேறு செயத் திட்டங்களை நடை முறைப் படுத்தி வருகின்றது.

இதன் ஒரு செயற்பாடாக மாலை 5 மணி தொடக்கம் இரவு 8 மணிவரைக்கும் நாளாந்தம் 360 மாணவர்களுக்கு இலவச வகுப்புக்களை நடாத்தி வருவதோடு மாதாந்த பரிட்சைகளையும் நடாத்தி வருகின்றது.

இவை அனைத்துக்குமான செலவுகளையும் இந்த அமைப்பினுடைய உறுப்பினர்களும்  சில நலன் விரும்பிகளும் செய்து வருகின்றனர்.

இலவச வகுப்புக்களை நடாத்துவதற்கு என்று  ஒரு கல்வி நிலையத்தினையும் கொண்டுள்ளது இந்த அமைப்பு.

கடந்த இரு நாட்களுக்கு முன்னர் இந்த கல்வி நிலையத்திலே போடப்பட்டிருந்த பல பெறுமதி வாய்ந்த மின் குமிழ்கள் இரவோடு இரவாக திருடப்பட்டிருக்கின்றன. இதன் பெறுமதி 40 ஆயிரம் ருபாவுக்கும் அதிகமாகும். இதுபோல் முன்னர் ஒரு தடவையும் திருடப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.

இந்த அமைப்பினுடைய செயற்பாடுகள் அனைத்துக்காகவும் அமைப்பின் உறுப்பினர்கள் பல கஸ்ரங்களுக்கு மத்தியிலே தமது பங்களிப்பை செய்து வருகின்றனர். இதனை நன்கு அறிந்தவர்களே இப்பிரதேசத்தை சேர்ந்த அனைவரும். இப்படிப்பட்ட திருட்டுக்களை செய்கின்ற நாகரிகமற்ற, மனித நேயமற்ற  மனிதர்களும் இன்று இருக்கின்றார்களே.

இந்த அமைப்பானது உறுப்பினர்களின் நிதிப் பங்களிப்பிலே நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அண்மையில் ஒரு பாராளுமன்ற உறுப்பினரிடம் பலதடவை சென்றதன் பயனாக எமது தொல்லை தாங்க முடியாமல் ஒரு கணணி உபகரணத்தை வழங்கினார்.

பாராளுமன்ற உறுப்பினர் நிதி ஒதுக்கியும் பிரதேச செயலக அதிகாரிகள் இரண்டு மாதங்களின் பின்னே எமக்கு கணணி வழங்கினார்கள். இரண்டு மாதங்கள் பிரதேச செயலக அதிகாரிகள் எங்களை திங்கட் கிழமைவாருங்கள், செவ்வாய்க்கிழமை வாருங்கள் என்று ஏமாற்றி இருக்கின்றனர்.  அப்போதே நான் ஒரு பதிவிலே குறிப்பிட்டு இருந்தேன் ஏதோ சுத்து, மாத்து வேலைகள் இடம்பெரப்போவதாக தெரிகிறதென்று.

பிரதேச செயலகத்துக்கு பலநாள் அலைந்து திரிந்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் கணணி வழங்கப்பட்டது.  ஆனால் எந்த விதமான உத்தரவாதப் பத்திரமும் வழங்கப் படவில்லை. கணணியை கொண்டு வந்து  3 நாட்கள் மட்டுமே பாவிக்கப்பட்டது. 4 வது நாள் கணணி வேலை செய்யவில்லை.

இப்படி ஒரு கணணி பெயருக்கு வழங்கத்தான் வேண்டுமா? இந்த கணணிக்குரிய உத்தரவாதப் பத்திரம் எங்கே போனது. ஏன் இந்த அதிகாரிகள் இப்படிப்பட்ட வேலைகளை செய்கின்றனர்.

இது தொடர்பிலே குறிப்பிட்ட பாராளுமன்ற உறுப்பினரும், உரிய பிரதேச செயலக அதிகாரிகளும் கவனம் செலுத்துவார்களா?

திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது..
read more...

Friday 25 December 2009

இந்த நிலை மாறுமா? திருந்துவார்களா இவர்கள்?








காட்சிப் போருளாக்கப்பட்ட பெண்கள், பெண்களை குட்டி சுவராக்க நினைக்கும் தேசமிது எனும் இரு இடுகைகளின் தொடராகவே இந்தப் இடுகையும் வருகின்றது. இத்தொடரிலே பெண்கள் எதிர் நோக்கும் பிரட்சினைகள் பற்றி பேசுகின்றேன் என்றாலும் ஒவ்வொரு இடுகைக்கும் நான் தலைப்பை மாற்றக் காரணம் பெண்கள் பற்றி எழுதினாலே சிலர் அந்தப் பக்கமே தலை வைத்தே படுக்கமாட்டார்கள். அதற்குள் பெண்கள் பற்றிய தொடர் பதிவு என்றால் வருபவர்களும் வரமாட்டார்கள். 

இத் தொடர் பதிவு தொடர்பாக எனக்கு மின்னஞ்சலில் வந்த சில கேள்விகளும் அதற்குரிய என் கருத்துக்களும் உங்களுக்காக. மின்னஞ்சல் நீளமானதாகையால் முக்கியமான பகுதியை மட்டுமே தருகிறேன்.



//மனைவியை இழந்தால் கணவனுக்கு ஏதாவது பட்டம் உண்டா?...............................?
ஒரு பெண் கற்பழிக்கப் பட்டாள் ...என்றால் அது யாரால்?..................?
ஒரு பெண் மானபங்கம் படுத்தப்பட்டாள் அது யாரால்?......................?
தனக்குப் பிறந்த மகளுடன் தந்தை தகாத உறவு  இதற்கு காரணம் யார்?..............?


பெண்கள் விலைமாது ஆவதற்கு சில ஆண்களே காரணம்.அவர்கள் விலைமாதர்கள் என்று தெரிந்தும்,தேடிப்போவதும் ஆண்களே! அவர்கள் தேடிப்போவதால் தான் அத் தொழில் நடக்கின்றது எந்த ஒரு ஆண்மகனையும் போகமல் இருக்கச் சொல்லுங்கள் பார்க்கலாம்  முடியுமா?எந்த ஒரு ஆண் மகனும் போகாமல் இருந்தால் விபச்சாரி இல்லை,விபச்சாரம் இல்லை விலைமாது இல்லை .இதற்கு காரணம் யார்?.............?//

அவர் முதலாவதாக கேட்ட கேள்வி கணவனை இழந்தால் அந்த பெண்ணுக்கு கொடுக்கும் பட்டம் கைம்பெண், விதவை. மனைவியை இழந்தால் கணவனுக்கு ஏதாவது பட்டம் கொடுக்கிறார்களா என்று கேட்டு இருந்தார்.  மனைவியை இழந்த கணவனை தபுதாரன் என்று சொல்கிறோம் ஆனால் இப்படி ஒரு தமிழ் சொல் இருப்பது மட்டுமே ஆனால் பயன்படுத்துவது குறைவு.


இந்த சமுகத்திலே கணவனை இழந்த பெண்கள் வெகுவாகவே பாதிக்கப் படுகின்றனர். பொருளாதார நிலைமை சிக்கல்கள் ஒருபுறமிருக்க. சமூகம் இவர்களை ஓரம் கட்ட நினைக்கின்றது, அதிகமான விடயங்களிலே கட்டுப்பாடுகளை விதிக்கின்றது.




கணவனை இழந்த பெண் ஒரு நல்ல காரியத்துக்கு செல்ல முடியாது, நல்ல காரியம் நடைபெறும் இடத்திலிருந்து விலக்கி வைத்தல், நல்ல காரியத்துக்கு செல்கின்றபோது அந்த பெண் முன்னால் வந்தால் சகுனம் என்று சொல்வது. இது எல்லாம் எந்த வகையில் நியாயம்.








ஆனால் மனைவியை இழந்த ஒரு ஆணுக்கு இந்த கட்டுப்பாடுகள் இருக்கிறதா? இல்லையே மனைவியை இழந்த ஆண்கள் இந்த நிகழ்வுகளிலே முக்கியமானவர்களாக இருப்பார்கள் ஆனால் தனது சகோதரிக்கோ குடும்ப உறுப்பினர்களுக்கோதிருமணம் போன்ற  நல்ல விடயங்கள் நடை பெறும்போது இந்த பெண்கள் ஒதுக்கப் படுகின்றார்கள். அவர்களால் தான் பங்கு கொள்ளவில்லையே என்று அழுவதைத் தவிர வேறு வழியில்லை.




ஒரு பெண் கணவனை இழந்தால் பல கட்டுப்பாடுகள், குடும்பத்தில் பொருளாதார பிரச்சினைகள்,  பிள்ளைகளை வளர்த்து நல்ல வழிக்கு கொண்டு வரவேண்டும் என்று. ஒரு திருமணம் செய்ய நினைத்தால் எத்தனை கொடுமைகள் நடக்கின்றது. மறுமணம் செய்ய முடியாது என்று எத்தனை கட்டுப்பாடுகள். மீறியும் அந்தப் பெண் ஒருவரை திருமணம் செய்தால் நடத்தை கெட்டவள் என்ற பட்டத்துடன். அவளை ஒதுக்கியும் வைக்கின்றனர்.

ஆனால் ஒரு ஆண் மனைவியை இழந்தால் மனைவி இறந்து ஒரு மாதம் செல்ல முன்னரே அடுத்த திருமணம் செய்யவும் ஆதரிக்கின்றது இந்த சமூகம். மனைவியை இல்;அந்த ஒரு ஆண் எத்தனை திருமணம் செய்யவும் ஆதரிக்கும் சமூகம் ஏன் பெண்களை மட்டும் தனது குடும்ப நிலை காரணமாக மறுமணம் செய்ய நினைக்கும் போது மறுக்கிறது.




சில பெற்றோரோ ஒரு ஆணின் மனைவி இறந்துவிட்டால் உடனடியாக அந்த ஆணுக்கு வேறு பெண்ணை தேட ஆரம்பித்து விடுகின்றனர். ஆனால் இதே பெற்றோர் ஒரு பெண்ணின் கணவன் இறந்துவிட்டால் அவளை ஒதுக்கி வைப்பதுதான் ஏன்?




அவர் கேட்ட அடுத்த கேள்வி ஒரு பெண் மானபங்கப் படுத்தப் படுவது யாரால் என்று. ஒரு பெண் ஒரு ஆனால் மானபங்கப் படுத்தப் பட்டால், பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப் பட்டால். அந்தப் பெண் இந்த இடத்திலே தவறு செய்கிறாளா இல்லையே அப்பாவியான பெண் ஆனால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்துகிறான் ஆனால் எந்த தவறும் செய்யாத அந்தப் பெண்ணை வித்தியாசமான கண்ணோட்டத்துடன் பார்க்கிறது இந்த சமூகம். அதுமட்டுமல்ல பாலியல் வல்லுறவு செய்த அந்த ஆணின் செயலை மறுகணமே மறந்து அந்த ஆணை நல்ல மனிதனாக பார்ப்பவர்களும் இருக்கின்றனர்.




தனது பிள்ளையையே பாலியல் வல்லுரவுக்குத் படுத்தும் எத்தனை தந்தைகள் இருக்கின்றனர். எத்தனை சகோதரர்கள் இருக்கின்றனர். இப்படியோப்பட்ட தந்தை, சகோதரர்களால் எத்தனை பெண்கள் இறந்திருக்கின்றனர், வாழ்க்கையை தொலைத்து தவிக்கின்றனர்.




விபசாரிகள் பற்றி அவர் குறிப்பிட்ட விடயங்கள் உண்மைதான். சில தவிர்க்க முடியாத காரணங்களால்  பெண்கள் விலை மாதர்களாக வந்துவிட்டார்கள். முக்கிய காரணம் பணம் உழைக்க வேண்டும் என்பதுதான். அப்படித்தான் அவர்கள் வந்தாலும் ஆண்கள் அவர்களை நாடி செல்லாவிட்டால் விலை மாதர்கள் இருக்க முடியாதுதானே.




இன்று பணக்கார வர்க்கத்தை சேர்ந்த சில ஆண்கள் என்ன செய்கிறார்கள். சில நல்ல பெண்களை பணத்தைக் காட்டியே ஆசையை வளர்த்து தங்களது உடல் இச்சைகளை தீர்த்து கொள்வதற்காக பயன்படுத்துகின்றனர். தாங்கள் எந்தளவு வேண்டுமோ அந்த அளவுக்கு அனுபவித்துவிட்டு அந்த பெண்ணை கைவிடுகின்றனர். இந்தப் பெண் தனது உடல் இச்சைகளை அடக்கிக்கொள்ள முடியாமல் மற்றவர்களை நாடிச்செல்ல நினைக்கின்றாள். இதனால் இவள் விலை மாதராகின்றாள்




தொடர்ந்து வரும்...
read more...

Thursday 24 December 2009

இதயத்தின் வலியும் சிதறல்களும்

வலையுலகில் என்னை உச்சாகப் படுத்துகின்றவர்களுள் ஒருவரான   சிங்கபூரில்  இருக்கின்ற கலாவின் கவிதை இது. 





இதயத்தின் வலி 






விரல் இடுக்குகளில் பிடித்து
சில இளவயசுகள்
நொடிக்கொரு தரம்
இழுக்கும் புகை
இரு வழி வரும் போது
என் இருதயம் வலிக்கின்றது


மருத்துவராய் வருவாயென
மடி சுமந்த மங்கை ஏங்க...உன்
உடலில் ஊசி ஏற்றி
செயல்பாடு செயலிழக்க
போதைப் புளங்கியாய்_நீ
பொசுங்கிக் கருகையிலே..
என் கருவறையும் வலிக்கின்றது


குடிவழி வந்த மதியிருந்தும்
மதுக் கோப்பைப் புதைகுழியில்
வாழ்க்கைப் புதையலைத் தொலைத்து
மயானத்தில் கல் பதிக்கும் போது
என் கண்மணி வலிக்கின்றது


கட்டுப்பாடில்லாக் காளையர்கள்
கண்ணிருந்தும் குருடாய்
காவலில்லாத் தோட்டத்தில்
ஆட்கொல்லி எயிட்ஸ் மலரை
அள்ளி நுகர்கையிலே...
ஆட்டம் கண்டு
என் தண்டுவடம் வலிக்கின்றது


வேக வீதியிலே விவேகம் இல்லாமல்
விரைந்து நீ செல்ல_காலனும்
கவ்வி உன்னைக் குதறிக் கொல்ல...
உதிரிப் பாகங்களாய் உடல் சிதற
என் உடல் பாகம் பாகமாய்
வலிக்கிறது


தமிழ் பேசுவதுஅநாகரீகம்
என்று....
நாகரீகம் நவிலும் போது
என் செவிப்பறை செம்மையாய்
வலிக்கிறது.



வாரம் ஒரு வலைப்பதிவு உலா 2 


வாரம் ஒரு வலைப் பதிவினை அறிமுகம் செய்து வருகின்றேன். என் வலைப்பதிவுக்கு வருபவர்கள் அந்த வலைப்பதிவினை அறிந்து கொள்ளட்டுமே என்ற எண்ணமேதான் 


சிதறல்கள் வலைப்பதிவிலே பல்வேறு பட்ட விடயங்களை பதிவிடப்படுகின்றன. கவிதைகள், கட்டுரைகள், படங்கள், அழகிய காட்சிகள், செய்திகள் என்று நல்ல பல விடயங்கள் பதிவிடப்படுகின்றன. சிதறல்கள் வலைப்பதிவை நீங்களும் சென்று பார்க்கலாமே.


அண்மையில் சிதறல்களிலே வெளியான ஒரு கவிதை இது. 

அவனும் அவர்களும் 
புல்லாங்குழல், வயலின்
இவற்றை இவனிடம்
கொடுக்கத்தேவையில்லை
எஸ்.எம்.எஸ், தொலைபேசி போதும்
மனம் விரும்பும்
கானம் வரும்

இவன் ஒரு
அறிவிப்பாளன்
தமிழ்
வலைப்பதிவாளன்
தமிழ் சொல்லி
தமிழ் வளர்ப்பவன்

இவன் அடிக்கடி
அங்கிருந்தால்தான்
நமக்கு நல்ல
பாட்டுவரும்
காது குளிரும்

தொண்டு செய்பவன்
அனானிகள் கண்டு
தமிழ் முண்டி வருபவன்

ஒல்லிக்குச்சி உடம்புக்காரன்
சொல்லியடிக்கும் தமிழ்
'கில்லி'க்காரன்

ஒலிவாங்கி முன் இருப்பதால்
விவாதமேடைகள் இவனுக்கு
விபரீதமல்ல - நல்ல
வாதியும் இவனே
நாதியற்றவர்களுக்கு
நீதியும் இவனே....

நீங்கள்
கத்திகொண்டு கீறலாம்
இவன்
புத்தி மாறப்போதில்லை
வீரம் விளைந்த மண்ணில்
ஈரம் கொண்டு முளைத்தவன்
காரம் நிறைந்தவன்

ஆதலால்
இவன்
அவனேயாக
ஆனதால்
அனானிகளே!
சற்று அமரலாம்

பட்டுச்சேலைகளே...
வேட்டிகளே...
முட்களில் விழுந்தால்
உங்கள்
முகத்திரை கிழிவதுதான்

நிச்சயம். 



read more...

Wednesday 23 December 2009

பெண்களை குட்டி சுவராக்க நினைக்கும் தேசமிது


காட்சிப்  பொருளாக்கப் படும் பெண்கள் எனும் இடுகையின் தொடர்ச்சியாகவே இந்த இடுகையும் இடம்பெறுகின்றது.


சில விடயங்களைப் பேசுகின்றபோது சில எதிர்ப்புக்கள் வரலாம் என்பதனால் மேலோட்டமாக முந்திய இடுகையிலே  மேலோட்டமாக சில விடயங்களை குறிப்பிட்டு இருந்தேன். இருந்தாலும் இத்தொடருக்கு பாரிய ஆதரவு இருப்பது சந்தோசப்பட வேண்டிய விடயமாக இருக்கின்றது. இன்னும் விரிவாக ஆராயலாமே, தொடர்ந்து எழுதுங்கள் என்று பலரும் வேண்டிக்கொண்டதுக்கு இணங்க அனைத்து விடயங்களையும் சற்று விரிவாக ஆராயலாம் என்று இருக்கிறேன்.
அத்தோடு கடந்த இடுகையிலே கருத்துரைகளிலே சிலர் கேட்ட கேள்விகளுக்குரிய விளக்கங்களை. இங்கே கொடுக்கவும் இருக்கிறேன்.


பெண்ணடிமைத் தனமேன்பது எங்கிருந்து ஆரம்பிக்கின்றது? பெண்களுக்கு எதிரான  வன்முறைகள் எங்கே ஆரம்பிக்கின்றன என்று பார்த்தால் ஒரு பெண்ணுக்கு தன் வீட்டிலேயும் குடும்பத்திலேயும்தான் ஆரம்பிக்கின்றது. அதனையும் விட ஒரு படி மேலே சென்று பார்ப்போமானால். பெண்களுக்கு எதிரான  வன்முறைகள் பெண் பிறப்பதற்கு முன்னரே கருவிலேயே ஆரம்பித்து விடுகின்றன. எத்தனை பெண் பிள்ளைகள் கருவிலேயே அழிக்கப்பட்டிருக்கின்றன, அழிக்கப் பட்டுக்கொண்டிருக்கின்றன.


எதற்காக இந்த பெண் பிள்ளைகள் கருவிலேயே அழிக்கப்படவேண்டும். இதற்கு அந்த பெண்ணும் காரணமாக இருக்கின்றாளே எனும்போது நாம் வெட்கித்தலை குனிய வேண்டி இருக்கின்றது. கருவிலே இருப்பது ஆண் குழந்தை என்றால் சந்தோசப்படும் பெண் கருவிலிருப்பது பெண் குழந்தை என்றால் அதனை அளக்க நினைப்பது ஏன். தானும் ஒரு பெண்தான் என்பதனை மறந்து விடுகின்றாளா?


சரி ஒரு பெண்குழந்தை பிறந்து விட்டது என்றால். அவளை எந்தளவு அடக்கி ஒடுக்க முடியுமோ எந்தளவுக்கு  அடக்கி ஒடுக்க நினைக்கும் சமூகமும் இல்லாமல் இல்லை. ஆண்களுக்கும், பெண்களுக்கும் சில சமூகக் கட்டுப்பாடுகள் இருக்கின்றன. ஆனாலும் இங்கே நடப்பது என்ன பெண்களை பெண்களை வெளியில் செல்ல விடாமல் பெட்டிப்பாம்பாக வீட்டுக்குள்ளேயே அடக்கி வைக்கின்ற எத்தனை பெற்றோர் இருக்கின்றனர். 


பெண் என்றால் அடுப்படிக்கு மாத்திரமே என்று சொல்லுகின்ற எத்தனையோ பெற்றோர் இருக்கின்றனர். இவர்களின் இந்த மூட எண்ணங்களால் எத்தனையோ பெண்கள் கல்வி இழந்து, தனது வாழ்க்கையையே தொலைத்து நிக்கின்றனர். 


இத்தனையையும் தாண்டி ஒரு பெண் திருமணம் என்று ஒரு படி சென்றுவிட்டால். சில கணவன்மார்களால் படுகின்ற சித்திர  வதைகள்தான் எத்தனை?  போதாக்குறைக்கு மாமியாரும் வந்து சேர்ந்து விடுவார். தன் மனைவியை அடிமைபோல் நடாத்துகின்ற எத்தனை கணவன்மார்களை பார்த்திருக்கின்றோம், தனக்கு சமைத்துப் போடுவதற்கும், தனது உடல் சுகத்துக்குமே பெண் என்று பெண்ணை ஒரு போகப் பொருளாக பார்க்கின்றவர்கள் எத்தனை  பேர் இருக்கின்றனர். (மனைவியை தெய்வம்போல் போற்றுகின்ற கணவன்மாரும் இல்லாமல் இல்லை) மாமியார்கள் விட்டார்களா பெண்களை எத்தனை பாடுபடுத்துகின்றனர். இந்த மாமியார்கள் ஒன்றை புரிந்து கொள்கின்றார்களா தானும் ஒரு பெண்தான் என்பதனை. 


முந்திய இடுகையிலே நண்பர் ரோஸ்விக் தனது கருத்திலே ...


கூர்ந்து நோக்குங்கள் எல்லா இடங்களிலும் பணம் ஒழிந்திருப்பது தெரியும். பெண் பணத்திற்காக விபச்சாரம் செய்கிறாள். பெண்களை விபச்சாரி என்று எழுதும்போது தான் பத்திரிக்கைகள் அதிகம் விற்கிறது. அங்கும் பணம். மாடலிங் மற்றும் திரைத்துறையில் அதிக பணம் பெற வேண்டி இவர்கள் ஆடை அவில்பிற்கு தயாராகிறார்கள். அதன் மூலம் படமும் நிறைய பணம் ஈட்டும் என்பதால் தயாரிப்பாளர்களும் உடன் படுகிறார்கள்.


பெண்களை இது போன்ற காரியங்களில் இருந்து வெளி வர சொல்லுங்கள். கட்டாயப்படுத்தும் ஆண்களை கால்களுக்கிடையில் மிதிப்போம். 
பெண்களை இது போன்ற விஷயங்களில் ஈடு படக்கூடாது என்று தடை போட்டால்.... அதற்கும் ஒரு கூட்டம் வரும், எங்கள் சுதந்திரம் பறிக்கப்படுகிரதேன்று....


பெண்களின் அழகு ஆண்களை மட்டுமல்ல... பெண்களையும் கவரக்கூடியது என்று நீங்கள் கருதினால், சில பெண்களை விளம்பரத்தில் இருந்து மட்டுமல்ல... விபச்சாரத்தில் இருந்தும் வெளிக்கொணர முடியாது. 


என்று சொல்லி இருந்தார் உண்மைதான் இன்று பணத்துக்காக மனிதன் எதனையும் செய்யத்துணிந்து விட்டான். விளம்பரம் சினிமா போன்ற துறைகளிலே தனது கவர்ச்சியைக் காட்டி பிழைப்பு நடாத்துகின்ற , எல்லா பெண்களிலும் நாம் தவறு சொல்ல முடியாது. எத்தனை பெற்றோர் பணத்துக்கு ஆசைப்பட்டு தனது பிள்ளை விரும்பாமலே சினிமா துறைக்குள் நுளைத்திருக்கின்றார்கள். சரி ஒரு பெண் தவறான முறையில் செல்கின்றாள் என்றால் அதனை முடிந்தவரை பெற்றோரால் தடுக்க முடியும் ஆனால் சில பெற்றோரின் அசமந்த போக்கினாலே இன்று பல பெண்கள் இத்துறைகளை நாடிச்செல்ல வேண்டி இருக்கின்றது.


இன்று விபச்சாரிகளாக இருக்குமதிகமான பெண்கள் பணத்துக்காகவே இந்த தொழிலை செய்கின்றனர். பெற்றோரால் கைவிடப்பட்டு, கணவனால் கைவிடப்பட்டு, சொந்தங்களால் தூக்கி எறியப்பட்டு தான் வாழ வழியின்றி இத் தொழிலுக்கு வந்த பெண்களே அதிகம். இந்த இடத்திலே இப்படிப்பட்ட பெண்களை நாம் எந்த வகையில் குற்றம் சொல்ல முடியும். இவள் சார்ந்த சமுகத்தின் மீதுதான் குற்றம் இந்த சொல்லவேண்டும். 


சரி அந்தப் பெண் தெரிந்தோ தெரியாமலோ தவறு செய்துவிட்டாள். எல்லாவற்றையும் விட்டு தடைகளை எல்லாம் தகர்த்தெறிந்துவிட்டு வெளி உலகுக்கு வருகின்றாள். அப்போது இந்த சமுகம் அவளை ஏற்கின்றதா? இல்லையே நடத்தை கெட்டவள் என்று ஒதுக்கி வைக்க நினைக்கின்றது. அவள் மணம் திருந்தி வந்துவிட்டாள் அவளை சமுகத்தில் ஒருத்தியாக ஏற்றுக்கொள்கிறதா சமுகம்? இல்லையே.


ஆனால் ஒரு பெண் இவ்வாறான நடவடிக்கைகளினால் நடத்தை கெட்டவனாக இருந்தால் அடுத்த நிமிடமே மறந்து விடுகின்றோம் ஏன் இந்த நிலை. நண்பர் கோபி தனது கருத்துரையிலே  சொன்னதுபோல் பெண் செய்கின்றபோது விபச்சாரமாகவும் ஆண்கள் செய்கின்றபோது ஆண்மையாகவும் பார்க்கின்றது இந்த சமுகம்.
ஒரு ஆணுடன் அதிகமாகப் பேசினாலே கட்டுக்கதைகள் கட்டி கெட்டவள் என்று பட்டம் கொடுக்கும் சமுகம் ஒரு ஆண் வீரம் பேசுவான் நான் அவளோடு அப்படி நடந்தேன், இவளோடு இப்படி நடந்தேன் என்று. இதனை கேட்டு இரசிக்கிறது நம் சமுகம். இது எந்த விதத்தில் நியாயமானது. ஏன் நாம் பெண்களை இந்த அளவுக்கு பெண்களை பார்க்கின்றோம்.


மதுவதனன் மௌ. தனது கருத்திலே....


//பதிவுகளில் பெண்களின் கவர்ச்சிப் படத்தைப் போடுவதில் எனக்கு சிறிதும் உடன்பாடில்லை. என்ன செய்வது ஆண்கள் ரசிக்கிறார்கள் என்பதற்காக கவர்ச்சிப் படத்தைப் போடுகிறார்கள்.


ஒவ்வொரு முறையும் பதிவுகளில் போடப்படும் கவர்ச்சிப் படங்களைப் பார்க்கும்போதெல்லாம், அதைப் பார்க்கும் பெண்கள் என்ன சிந்திப்பார்கள் என்பதுதான் எனது மனதில் ஓடும்.//


என்று தனது ஆதங்கத்தை சொல்லி இருந்தார். ஒருவரை நாம் இதனைப் பதிவிட வேண்டாம் என்று சொல்ல முடியாது. இருந்தாலும் பெண்களின் அரை குறை ஆடைகளுடனான கவர்ச்சிப் படங்களை போட்டு பதிவிடும்போது இளைஜர்கள் வலைப்பதிவுக்கு வருவது அதிகம்தான். ஆனாலும் எல்லோரும் வர மாட்டார்கள். இந்த படங்களை பார்த்ததுமே சங்கடப்படுகின்றவர்கள் எத்தனையோ பேர் இருக்கின்றனர். 


வீதிகளிலே விளம்பரப் பலகைகளில் இருக்கும் படங்களைவிடவா நாங்கள் போடுவது அசிங்கம் என்று கேட்கலாம் ஆனாலும் வீதிகளிலே இருக்கின்ற அந்த படங்களைப் பார்த்து செய்வதறியாது மனதை சன்சலப்  படுத்திக்கொண்டு போகின்ற எத்தனையோ பெண்கள் இருக்கின்றனர். ஒரு பதிவர் நல்ல விடயங்களை பதிவிட்டிருந்தாலும் இந்த படங்களால் அந்த பதிவையே பார்க்காதவர்களும் இருக்கின்றனர். 


படம் பார்க்க வருபவர்களைவிட எங்கள் கருத்துக்களுக்காக வருபவர்களே எங்களுக்கு முக்கியம். இப்படிப்பட்ட படங்களை போடுகின்ற வலைப்பதிவுகளை குடும்பத்தோடு இருந்து பார்க்கின்றவர்கள் பார்ப்பதற்கு முன்வரமாட்டார்கள்.


இத்தொடர் நான் நினைத்ததனைவிட பலரும் பாராட்டி இருப்பதோடு தொடரும்படியும் கருத்துரைகளில் மாத்திரமல்ல சிலர் மின்னஞ்சல்களும் அனுப்பி இருந்தார்கள். அதிலே சிங்கப்பூரிலிருந்து வந்த ஒரு மின்னஞ்சலிலே இத்தொடரி  பாராட்டியிருப்பதோடுதொடு பல விடயங்களை கேள்விகளாக கேட்கப்பட்டிருக்கின்றன. அந்த கேள்விகளுக்கான ஏன் பார்வையிலான பதில்கள் அடுத்த பகுதியில் தருகின்றேன்.


நண்பனின் வருகை... 


என்னை வலைப்பதிவுக்கு அறிமுகப் படுத்திய நண்பர் பிரபா சில காலம் வலைப்பதிவுப்பக்கமே வரவில்லை. சில காலம் அவரால் பதிவுகளும் இட முடியவில்லை. காரணம் அவர் கணணி முன்னால் இருக்கின்றபோது கண்கள் வலிக்க ஆரம்பிக்கின்றன அந்த நிலை அதிகரித்ததனால் வைத்தியர்கள் கணணி   பக்கமே போகவேண்டாம் என்று ஆலோசனை வழங்கி இருக்கின்றனர். 


அதனால் கணணி பக்கமே  செல்ல முடியாது இருந்தார். தற்போது கண்ணிலே வேதனைகள் குறைந்திருப்பதால் மீண்டும் வலைப்பதிவு பக்கம் வந்திருக்கின்றார். இனி பதிவுகளை எதிர் பார்க்கலாம் என்று சொல்லி இருக்கிறார். இனி நாம் அவர் பக்கமும் சென்று வரலாம்.  
read more...

Monday 21 December 2009

காட்சிப் பொருளாக்கப்பட்ட பெண்கள்



இது ஒரு தொடர் பதிவாக அமைய இருக்கிறது. இத் தொடர் பதிவு ஆண்களையோ, பெண்களையோ குற்றம் சொல்வதற்காக அல்ல. என்னால் அறியப்பட்ட  சில சம்பவங்களும் நான் என்னக்குள்ளே கேட்டுக்கொண்ட கேள்விகளுமே தொடர் பதிவாக வர இருக்கின்றது. இப் பதிவுகளிலே நான் ஏதாவது தவறாக குறிப்பிட்டால் நேர்மையான முறையிலே சுட்டிக்காட்டுங்கள். நேர்மையான விமர்சனங்களை நான் என்றுமே ஏற்றுக்கொள்ள தயங்கியவனல்ல.

இன்று பெண்ணடிமை பற்றி பேசப்பட்டாலும். பெண்களுக்கு எதிரான  வன்முறைகளுக்கு எதிராகா பல்வேறுபட்ட அமைப்புக்கள் குரல்கொடுத்து வந்தாலும். இன்று பெண்ணடிமை இன்று இல்லையா என்று கேட்டால். பதில் கேள்விக்குரிஎதான்.

இன்று பெண்ணடிமை இல்லை, பெண்களுக்கு எதிரான வன்முறைகள் இல்லை என்று சொல்ல முடியாது. பெண்ணடிமை என்று சொன்னாலே எல்லோரும் பெண்களை ஆண்கள்தான் அடிமைப் படுத்துகின்றனர் என்று கருத்திலேடுத்துக் கொள்கின்றனர். ஆண்கள் மட்டுமல்ல இன்று பெண்களை பெண்களே அடிமைப் படுத்துகின்ற நிலை பரவலாக இருக்கின்றது. பெண்கள் பல்வேறு வழிகளிலே பல்வேறு காரணங்களுக்காக  அடிமைப் படுத்தப் படுவதோடு வன்முறைகளுக்கும் ஆளாக்கப் படுகின்றனர்.

 பெண்களை ஏன் நாம் இரண்டாம் நிலைக்கு தள்ளுகின்றோம். பெண்களும் எங்களைப் போன்ற மனிதர்களேதான்.  அவர்களுக்கும் எல்லோர்போலவும் சம உரிமை இருக்கின்றது. ஆனால் என்ன செய்கின்றோம் பெண்களை சிலர் (பெண்கள் உட்பட) அடக்கியாள நினைக்கின்றோம். இதனால் சில பெண்கள் தாங்களாகவே பெட்டிப்பாம்பாக வீட்டுக்குள்ளேயே அடங்கி விடுகின்றனர்.

இந்த அடக்கு முறைகளையும் மீறி ஒரு பெண் தலை நிமிர்ந்து வாழ நினைத்தால், அடக்கு முறைகளுக்கும், சவால்களுக்கும் முகம் கொடுத்து அவள் சம உரிமையோடு முன்னேற நினைத்தால் அவளை தவறான கண்ணோட்டத்தில் பார்க்கின்ற சமூகமும் இருக்கின்றது. இதனால் அந்தப் பெண்ணால்  தொடர்ந்துதான் முன்னேற முடியுமா?

பெண்களுக்கு சில சமுக கட்டுப்பாடுகள் இருக்கின்றன. அதேபோல் ஆண்களுக்கும் கட்டுப்பாடுகள் இருக்கின்றன. ஆனால் பெண்கள் அந்த கட்டுப்பாட்டை சிறிது மீறினாலே   அவளைப் பற்றி இலவச விளம்பரம் செய்கின்ற மனிதர்களும் ஊடகங்களும் சில ஆண்கள் செய்கின்ற காம லீலைகளை ஏன் அரங்கேற்ற மறுக்கின்றன.

இன்று எத்தனை போலிசாமியார்களுக்கு எத்தனை ஊடகங்கள் விலைபோய் இருக்கின்றன. அவர்களின் காம லீலைகளை அரங்கேற்றலாம்தானே. அதனை விடுத்து ஒரு பெண் தெரிந்தோ தெரியாமலோ ஒரு தவறை செய்தால் ஏன் அவளை மட்டும் நடத்தை கெட்டவள் என்ற பெயர் சூட்ட வேண்டும்.


ஒரு பெண் விபச்சாரத்தில் ஈடுபட்டால் என்றால் அவளை கைது செய்து விபச்சாரி எனும் பட்டத்தோடு. உலகிக்கே அவளை மானம் கெட்டவள் என்று வெளிச்சம் போட்டுக்காட்டும் இந்த ஊடகங்களும் நபர்களும் ஏன் அந்த பெண்ணுடன் விபச்சாரத்தில் ஈடுபட்ட ஆணை வெளிச்சத்துக்கு கொண்டுவர மறுக்கின்றது.

பெண் தவறு செய்தால் நடத்தை கெட்டவள். ஆண் தவறு செய்தால் நல்லவனா?  ஒரு ஆண் ஒரு விபச்சாரியிடம் போகவில்லை என்றால் அவள் எப்படி விபச்சாரி ஆகமுடியும். இங்கே பெண்ணில் மட்டும் தவறில்லை. ஆண்களிலும் தவறு இருக்கின்றது. அதனை விடுத்து பெண்களுக்கு மட்டும் விபச்சாரி பட்டம் வழங்குவது என்ன நியாயம் இருக்கிறது?

இன்று பெண்களை காட்சிப் பொருளாக பார்க்கின்ற நிலை இருக்கின்றது. இன்று பெண்கள் காட்சிப் பொருளாக பயன்படுத்தப் படாத இடம் இல்லை என்றேதான் சொல்லவேண்டும். கணவன் மட்டுமே கண் காணும் அழகை சில பெண்கள் காட்சிப் பொருளாக விற்றுக்கொண்டு இருக்கின்றனர்.

இன்று விளம்பரங்களிலே அரை குறை ஆடைகளோடு ஒரு பெண் வந்தால்தான் அந்த பொருளுக்கு நல்ல விற்பனை வாய்ப்புக்கள் கிடைக்கும் என்ற நிலைக்கு வந்துவிட்டது. எப்படிப்பட்ட ஒரு தரமற்ற பொருளையும் ஒரு பெண்ணை அரை குறை ஆடைகளோடு காட்டி அதிக கேள்வியை ஏற்படுத்தி பொருளை இலகுவாக விற்க முடியும் என்ற நிலை தோன்றிவிட்டது.

இன்று வெளிநாடுகளில் மட்டுமல்ல எமது நாட்டை எடுத்துப் பாருங்கள் வீதிகளிலே இருக்கின்ற விளம்பரப் பலகைகளில் அதிகமானவை எப்படி இருக்கின்றன. இந்த சமுக சீர்கேடு தேவைதானா? அது அவர்களின் சுதந்திரம் என்று சொல்ல வேண்டாம் ஒருவரின் சுதந்திரம் மற்றவரின் மூக்குவரை செல்லாதவரைக்கும்தான். சுதந்திரம் இருக்கலாம் ஆனால் ஒரு சமுகத்தின் கலாசாரத்தை பதிக்காத வகையில் அந்த சுதந்திரம் இருக்க வேண்டும்.

தொடர்ந்து வரும்......
read more...

Sunday 20 December 2009

நானும், என் சுய புராணமும்.

நான் வலைப்பதிவுக்கு வந்தது புகழ் தேட வேண்டும் என்பதற்காகவோ, பிரபல பதிவராக வேண்டும் என்பதற்காகவோ அல்ல,  தமிழர்களுக்கே தனித்துவமான, மறைந்து வருகின்ற எமது கலை, கலாசாரங்களை வெளி உலகுக்கு பகிர்ந்து கொள்ள வேண்டும், எமது மக்கள் படுகின்ற அவலங்களை என்னால் முடிந்தவரை வெளி உலகுக்கு கொண்டு செல்ல வேண்டும், என் கருத்துக்களையும் மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளவேண்டும் என்பதற்காகவே வலைப்பதிவை ஆரம்பித்தேன்.

வலைப்பதிவு மூலம் நிறையவே நண்பர்கள் கிடைத்திருக்கின்றனர், என் கருத்துக்களையும் மற்றவர்களோடு பகிர்ந்து கொள்கின்றேன் எனும்போது மட்டற்ற மகிழ்சியே.  அண்மைக் காலமாக ஏன் இந்த வலைப் பதிவுலகத்துக்கு வந்தேன் என்று எண்ணத் தோன்றுகின்றது.

நான் அதிகமாக பிரச்சினைகளைப் பற்றி பதிவிட்டு வருகின்றேன். எங்கு தவறு நடக்கின்றது, பிரச்சினைகள்  இருக்கின்றதோ அதனை நான் ஒரு போதும் சுட்டிக்காட்ட தயங்கப் போவதுமில்லை.  அது யார் செய்த தவறாக இருந்தாலும்.  என் பதிவுகளிலே தவறு இருந்தால் நேர்மையான முறையிலே யார் சுட்டிக் காட்டினாலும் நான் திருத்திக்கொள்ள தயாராக இருக்கின்றேன்.

அதனை விடுத்து அச்சுறுத்தல் விடுவது, தகாத வார்த்தைகளால் பின்னூட்டமிடுவது, என் பெயரிலே தவறான முறையிலே என் நண்பர்களது வலைப்பதிவுகளுக்கு பின்னூட்டமிடுவது   இவ்வாறு பல்வேறு இழிவான செயலிலே சிலர் ஈடுபடுவது மன வேதனையைத் தருகின்றது.

இச்செயற்பாடுகள் தொடர்பாக நான் சில இடுகைகளிலே சுட்டிக்காட்டிய போது நான் பிரபலமாவதட்காக சுய புராணம் பாடுவதாக இந்த  செயல்களிலே ஈடுபட்டவர்கள் சில வலைப்பதிவுகளிலே பின்னூட்டமிட்டு  இருந்தனர். என் வலைப்பதிவிலும் மோசமான வார்த்தைகளால் பின்னூட்டமிட்டு  இருந்தனர்.

இந்த மோசமான கிழ்த்தரமான வேலைகளை செய்கின்றவர்களுக்கு நான் சொல்லிக்கொள்கிறேன். துணிவும் தன்நம்பிக்கையும் என்னுடன் கூடப் பிறந்த ஒன்றாகும். எவரது மிரட்டல்களுக்கும் நான் பயப்படப் போவதில்லை. மரணத்துக்கு பயப்படுபவனுமல்ல மரணமென்பது ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. அது இன்று வந்தாலும் சரி, நாளை வந்தாலும் சரி அதுவரை நல்ல மனிதனாக வாழவேண்டும்.  என்பதுதான் என் எண்ணம்.

கடந்த சில நாட்களாக நாகரிகமற்ற சிலரின்  பின்நூட்டங்களால்   மனதிலே மிகவும் கவலையாக இருந்தது. வேண்டத்தகாத வார்த்தைகள் வேண்டுமென்றே என்னை சீண்டுவதாக அமைந்திருந்தன. நான் என்  கருத்தை சொல்லுகின்ற, வெளியிடுகின்றபோது போது தவறு இருந்தால் சுட்டிக்காட்டலாம். அதனை விடுத்து தேவையற்ற விடயங்களை சொல்லி மற்றவர்களது மனதை புண்படுத்தும் செயலானது மனிதத் தன்மையான ஒரு செயலல்ல.

ஒரு சிலர் செய்யும் தவறுக்காக எல்லோரையும் தகாத வார்த்தைகளால் திட்டித் தீர்ப்பதும்  மனிதத் தன்மையல்ல. நான் என் தாய் மொழி தமிழ்மொழியையும், என்னை வெளி உலகிற்கு அறிமுகப் படுத்திய அறிவிப்புத் துறையையும்  என் உயிரிலும் மேலாக மதிப்பவன். இவை இரண்டைப் பற்றியும் யார் தவறாக பேசினாலும் அவர்களுக்கு எதிராக நான் எதனை  செய்யவும் தயங்கமாட்டேன்.

தமிழ்மொழிப் பற்று என்பது ஒவ்வொரு தமிழனுக்கும் இருக்க வேண்டும். தமிழ் மொழிப் பற்று ஒரு பிரதேசம் சார்ந்தவனுக்குத்தான் இருக்க வேண்டுமென்று இல்லை. நான் மட்டக்களப்பை சேர்ந்தவன் ஆனாலும் வலைப்பதிவு மூலம் யாழ்ப்பாணத்தை சேர்ந்த நண்பர்களே எனக்கு அதிகம். இந்த நட்பை இல்லாமல் செய்ய வேண்டுமென்று சிலர் தேவையற்ற பிரதேச வாதத்தை துண்டுகின்ற பல பின்னூட்டங்களை   நாள்தோறும் என் வலைப் பதிவிலே இட்டு வருகின்றனர்.

நான் பிரதேச வாதத்தையும், பிரதேசவாத அரசியலையும் முற்றாக  வெறுப்பவன். ஒருசிலர் செய்யும் தவறுக்காக எல்லோரையும். விரோதிகளாக பார்க்க முடியாது.  பிரதேச வாத பின்னூட்டங்களை  தவிர்த்து விடுங்கள் நேர்மையான கருத்துக்களை சொல்லுங்கள் என்று அனானிகலிடம்  கேட்டுக் கொள்கிறேன்.

 எனது நண்பர்களின்   வலைப்பதிவுகளிலே எனது பெயரிலே தேவையற்ற பின்னூட்டங்கள் சில விசமிகளால் இடப்பட்டதனால் நான் சில காலம் வெளி நாட்டு நண்பர்களின் வலைப் பதிவுகளுக்கு பின்னூட்டமிடுவதை தவிர்த்து.  இலங்கையிலே இருக்கின்ற என்னோடு நெருங்கிய நண்பர்களுக்கு மட்டுமே பின்னூட்டமிட்டு வந்தேன்.

சில நாட்களாக அனானிகள்  என்னை மோசமான முறையிலே திட்டித் தீர்த்ததனால் நான் சில காலம் வலைப்பதிவுப் பக்கம் வருவதில்லை என்றும், எவருக்கும் பின்னூட்டமிடுவதில்லை என்றும் நினைத்திருந்தேன். ஆனால் சில நண்பர்கள் எனக்கு உச்சாகத்தை வழங்கினார்கள் தொடர்ந்து எழுதுங்கள் என்று. அவர்களுக்கு எனது நன்றிகள்.

இந்த சீண்டுதல்கள்   என்னை இன்னும் நிறையவே எழுதத் தூண்டுகின்றது என்பதுதான் உண்மை. இனிவரும் என் எழுத்துக்கள் இன்னும் புத்துணர்ச்சி பெறும்.

என்று முதல் நான் அனைத்து நண்பர்களது வலைப்பதிவுக்கும் பின்னூட்டமிட இருக்கின்றேன். நான் எனது பின்னூட்டத்தினால்   தனிப்பட்ட எவரையும் தாக்குவதில்லை, எதிர்க் கருத்துக்களை சொன்னாலும் தகாத வார்த்தைகளை பிரயோகிக்க மாட்டேன் அப்படி பின்னூட்டமிடப்பட்டால் அது நான் இட்ட பின்னூட்டமல்ல உடனடியாக எனக்கு தெரியப்படுத்துங்கள் நண்பர்களே.


நான் என்றும் தமிழனாக இருக்கவே ஆசைப்படுகிறேன்.
read more...

Saturday 19 December 2009

வேட்டைக்காரனும் பிரபலமாகும் பதிவர்களும்




வேட்டைக்காரன் விமர்சனம் மூலம் வேட்டையாடப்படும் பதிவர்கள்

வேட்டைக்காரன்  வெளிவருவதற்கு முன்னரே வேட்டைக்கரனுக்கு எதிராகவும், ஆதரவாகவும் வேமர்சனங்கள் அதிகமாக இருந்தது. இதனால் வேட்டைக்காரனை பார்க்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பலருக்கும் அதிகரித்து இருந்தன என்றுதான் சொல்ல வேண்டும்.
இன்று வேட்டைக்காரன் விமர்சனங்களை பதிவர்கள் வேக வேகமாக பதிவிட்டு வருகின்றனர். சிலரோ வேட்டைக்காரன் விமர்சனம் என்று சொல்லி தான் பிரபல்யம் அடைவதற்காகவும், பதிவர்களை வம்புக்கு இழுப்பதட்காகவும் வேட்டைக்காரன் விமர்சனம் என்ற பெயரில் ஏதோ விமர்சனம் செய்து பதிவர்களை வம்புக்கு இழுத்திருக்கின்றனர். இது எப்படி இருப்பினும் வேட்டைக் காரனைப் பாருங்கள் பார்த்துவிட்டு வேட்டைக்காரனை விமர்சனம் செய்யுங்கள். தாம் பிரபலமாவதட்கான விமர்சனமாக வேட்டைக்காரனை பயன்படுத்த வேண்டாம்.

 என் பெயர் சரியா? தவறா?

நான் பதிவெழுத வந்த காலம் தொடக்கம் இன்று வரைக்கும் என் பெயரிலே சிறு சர்ச்சை ஏற்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது. நான் எனது பெயரை எழுதும் முறை தவறானது என்று சிலர் வலியுறுத்தி வருகின்றனர்.

நான் எனது பெயர ஆரம்பம் முதல் சந்ரு என்றே பயன் படுத்தி வருகின்றேன் ஆனால் இது தவறானது. சந்த்ரு என்றுதான் வர வேண்டும் என்று சிலர் அடிக்கடி சொல்லி வருகின்றனர். சந்ரு என்று எழுதுவது தமிழிலே சற்று மயக்கத்தை ஏற்படுத்துவதாக சொல்கின்றனர்.

சந்ரு என்பது தவறானது என்றால் தமிழிலே எழுதுவதற்கே முடியாமல் இருக்கின்ற பெயர்கள் பல இருக்கின்றனவே என்று நண்பர் ஒருவரிடம் கேட்டேன் அவர் சொன்னார் அது தமிழ் பெயர் அல்ல ஆனால் சந்ரு என்பது தமிழ் பெயர் சந்ரு எனும் பெயரிலே தமிழ் இலக்கண மயக்கம் இருப்பது தவறு என்றார்.

அப்படியானால் ஜெயகிருஷ்ணா என்பது ஒரு தமிழ் பெயர் இங்கே நாம்  ஷ் போட்டு எழுதுகின்றோம். இவ்வாறு வடமொழி சொற்களை பயன் படுத்தி பல பெயர்களை எழுதுகிறோம் இது சரியா?

ஒருவரின் பெயரை இன்று என் ஜோதிடம் முக்கிய இடம் பெறுகின்றது. பலர் தங்களது பெயரை என் ஜோதிடப்படி வைத்திருப்பார்கள்.  அப்போது அவரது பெயரை மாற்ற சொல்ல முடியுமா? என் பெயர் ஒரு ஜோதிடப் படியும் நான் வைக்கவில்லை.

என் பெயரை சந்ரு என்று எழுதுவதையே நான் விரும்புகிறேன். பல நண்பர்கள் சந்த்ரு  என்று மாற்றும்படி சொல்கின்றனர். என் பெயர் சந்ரு என்று இருப்பது சரியா தவறா? சந்ரு என்று இருக்க வேண்டுமா? சந்த்ரு என்று வரவேண்டுமா உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்.


பிரபல பதிவராவது எப்படி...


இன்று பிரபல பதிவராவதட்கு இலகுவான பல வழிகள் இருக்கின்றன. அவற்றில் ஒரு சிலவற்றை தருகிறேன் நீங்களும் பின்பற்றி பிரபல பதிவராகுங்கள்.

1. பிரபல பதிவர்களை தாக்கி பதிவிடலாம்.
இதனால் பிரபல பதிவர் மட்டுமல்ல அவரை பின்தொடர்வோர் அவரது இரசிகர்கள் என்று எல்லோரும் உங்கள் பதிவுக்கு வருவார்கள் அப்போது உங்கள் வலைப்பதிவை பலர் அறிந்து கொள்வார்கள்.

2. பதிவுகளுக்கு எதிராக கருத்துரையிடலாம்.
இதனால் எல்லோரும் பதிவுக்கு ஆதரவாக கருத்து தெரிவிக்கும்போது நீங்கள் மட்டும் எதிராக கருத்துதெரிவிப்பதால் எல்லோர் பார்வையும் உங்கள் பக்கம் திரும்பும். அத்தோடு அந்தப் பதிவு ஒரு தேவையற்ற விவாதமாக மாற்றப்படும். எல்லோரும் உங்கள் பதிவுகளை பார்க்க ஆசைப் படுவார்கள். (என்ன எழுதுறிங்க என்றுதான் பார்க்க)

3. ஏனைய வலைப்பதிவர்களின் பதிவுகளுக்கு எதிர் பதிவு போடலாம் இதனாலும் குறிப்பிட்ட வலைப்பதிவர் சார்ந்த எல்லோரும் உங்கள் வலைப்பதிவுக்கு வருவர். இவ்வாறு பல எதிர் பதிவுகளை போடும்போது பலர் உங்கள் வலைப்பதிவை வந்து பார்ப்பார்கள்.

4. நீங்கள் வலைப்பதிவுகளுக்கு கருத்துரை இடும்போது சம்பந்தப் படாத ஒரு பதிவரை வம்புக்கு இழுத்து கருத்துரை இடலாம். அதனால் வம்புக்கு இழுக்கப்பட்ட பதிவரும், அவர் சார்ந்தோரும் உங்கள் பக்கம் பார்வையை திருப்புவார்.

இன்னும் இருக்கிறது சந்தர்ப்பம் வரும்போது மிகுதி வரும்.

சில பதிவர்கள் இவ்வாறுதான் பிரபல்யமாகிக் கொண்டு இருக்கின்றனர். நீங்களும் இதனை கடைப்பிடித்து பிரபல பதிவராக வாழ்த்துக்கள்.


வலைப்பதிவு அறிமுகம்

பங்குச்சந்தை - ஸ்ரீலங்கா எனும் வலைப்பதிவானது இலங்கையின் பங்குச் சந்தை தொடர்பாகவும், இப் பங்குச் சந்தையிலே நாளாந்தம் இடம் பெறுகின்ற மாற்றங்கள்.  பங்குச்சந்தை முதலிட்டு வாய்ப்புக்கள், பங்குச் சந்தையில் முதலிடுவது தொடர்பான பல்வேறு பட்ட ஆலோசனைகள். உலக பங்குச்சந்தை மாற்றங்கள் , உலக பொருளாதார, வர்த்தக நடவடிக்கைகள் போன்ற பல்வேறுபட்ட விடயங்களை தினமும் திரட்டித் தருகின்ற ஒரு வலைப் பதிவாகும்.

இந்த வலைப்பதிவின் மூலம் பங்குச் சந்தையில் முதலிட்டவர்களும், முதலிட நினைப்பவர்களும், இத் துறை சார்ந்தவர்களும், வணிகத்துறை சார்ந்த மாணவர்களும் நன்மையடைந்து வருகின்றனர்.

இந்த வலைப் பதிவுக்கு சென்று நீங்களும் நன்மையடையலாம்.
read more...

Friday 18 December 2009

காத்திருப்பும், கடவுளை கல்லாக்கிய மனிதர்களும்

கவிதை மாதிரி கிறுக்கல்கள்...
காத்திருந்து...  காத்திருந்து....


தினமும் கனவு கண்டேன்
 உன் இதயத்தில் இடம்
 கிடைக்குமென்று.  - இன்று
தூக்கத்தில் கனவொன்று
கண்டேன்  நீ - உன்
இதயத்தை என்னிடம்
தந்துவிட்டதாய்.
 சந்தோசத்தில் கண்விழிக்க
மனமின்றி கண்விழித்தேன் .
பின்புதான் அறிந்தேன் உன்
இதயம் தினம்
ஒருவரிடம் இடம் மாறுவதாக.



உன் வார்த்தைகள்
முத்துக்களை விட
பெறுமதியானவைதான்
முத்துக்களை இலகுவாக
பெற்றுவிடலாம் - உன்
உதட்டிலிருந்து வரும்
வார்த்தை முத்துக்களை
தவமிருந்தும் பெற முடியாதல்லவா...
உன் ஒரு வார்த்தைக்காய்
 தவமிருக்கிறது என்  இதயம்
 ஆனால் உன் வார்த்தைகள்
 என்னிடம்   வர மறுக்கின்றன
உன்னிடமிருந்து வரும்
வார்த்தைகளை   -என்
இதயம் தாங்காதென்றா
வர மறுக்கின்றன ...
 உன் ஒரு வார்த்தைக்காக
காத்திருந்து படும் வேதனையைவிட
அந்த வார்த்தைகள் -  என்
இதயத்தை ஒன்றும்
செய்துவிடப் போவதில்லை

கடவுளைக் கல்லாக்கிய மனிதர்கள்....


நான் இறைவனிடம் கேட்டேன் - உன்
மனமென்ன கல்லா என்று
கடவுள் சொன்னார் -நான்
கல்லாகவில்லை மனிதனே
என்னைக்  கல்லாக்கிவிட்டான்
என்றார். ஒன்றுமே
புரியவில்லை என்றேன்
கடவுள் மீண்டும் சொன்னார்.
என்னை கல்லாக்கிவிட்டு
மனிதன் - என்
தொழில்களை செயக்கின்றான்.
 தன்னையே கடவுள்
என்கின்றான்
 மானிடன் ஆடும்வரை
ஆடட்டுமே என்று
அமைதியாகப் பார்த்துக்
கொண்டிருக்கிறேன் என்றார்..
read more...

Thursday 17 December 2009

சந்தோசத்தில் வேட்டைக்காரன் விஜய்



அண்மைக் காலத்தில் வேட்டைக்காரன் மிதான எதிர்ப்பலைகள் விஜயின் மனதிலே சிறிது குழப்பத்தை ஏற்படுத்தி இருந்தாலும் இப்போது விஜய் மிகவும் சந்தோசத்துடனும். வேட்டைக்காரன் வெற்றி பெறுவான் என்ற நம்பிக்கையோடும் இருக்கின்றார்.

இந்த சந்தோசத்துக்கான காரணம் வேறு ஒன்றுமில்லை. வேட்டைக்காரன் திரைப்படத்தினை. தானும் தனது குடும்பத்தினரும், நண்பர்களும்  பார்த்திருக்கின்றனர். வேட்டைக்காரனை பார்ப்பதற்கு முன்னர் விஜய் பரபரப்பாகக் காணப் பட்டாலும். வேட்டைக்காரனை பார்த்ததுமே விஜய் முகத்திலே ஒரு சந்தோசமும், உற்சாகமும் தென்பட்டதாக நண்பர்கள் சொல்கின்றனர். விஜய் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் அனைவரும் வேட்டைக்காரன் வெற்றி பெறும் என்று நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

இது இவ்வாறிருக்க தன்னை ஒப்பந்தம் போடும் யாராக இருந்தாலும் ஒப்பந்தம் போடும்போதே நேரடியாக விநியோகஸ்தர்களுக்கே விற்க வேண்டும் என்று கண்டிசனையும் அறிவித்துவிட்டார் விஜய்.


இதற்கான காரணம் வேட்டைக்காரன் ஏற்படுத்திய கசப்பான அனுபவமே. ஏ.வி.எம் தயாரித்த வேட்டைக்காரன் திரைப்படத்தை  சன்பிக்சர்ஸிடம் விற்றுவிட்டு ஏ.வி.எம் ஒதுங்கிக் கொண்டது.  இது இவ்வாறிருக்க வேட்டைக்காரனில் சில காட்சிகளை சன்பிக்சர்ஷ் வெட்டி விட்டதாக சில செய்திகள் விஜயை சென்றடைந்தன.

இதனால் ஆத்திரமடைந்த விஜய் வேட்டைக்காரன் படத்தினை பார்க்க வேண்டும் என்று தன் தந்தையிடம் சொல்லி இருக்கிறார். தந்தை ஏ.வி.எம் க்கு சொல்லி இருக்கிறார்.ஏ.வி.எம் எதுவும் எங்களிடம் இல்லை எல்லா உரிமையும் சன்பிக்சர்ஸிடம் இருக்கிறது என்று சொல்லிவிட்டு சன்பிக்சர்ஸ்க்கு அழைப்பை எடுத்து விஜய் வேட்டைக்காரன் திரைப்படத்தை பார்க்க வேண்டும் என்று சொல்கிறார் என்ற விடயங்களை அறிவித்திருக்கின்றனர்.

சன்பிக்சர்ஷ் மறுத்துவிட்டது. இதனால் விஜய் மட்டுமல்ல பலரும் சன்பிக்சர்ஸ் மீது கோபப்பட்டிருக்கின்றனர். கோபப்பட்டவர்களை தயாரிப்புக் குழு சமாதானப் படுத்தி இருக்கிறது.

வேட்டைக்காரனால்  வந்த கசப்பான  அனுபவங்களினால் சன் பிக்சர்ஸ் மட்டுமல்ல , எந்த ஒரு தனிப்பட்ட பெரிய விநியோக கம்பெனியிடமும் தயாரிப்பாளர் விற்க முடியாது என்று விஜய் அறிவித்து இருக்கிறார்.

read more...

Tuesday 15 December 2009

வேட்டைக்காரன் வேட்டையாடுவானா? வேட்டையாடப்படுவானா?




இளைய தளபதி விஜயின் வேட்டைக்காரன். திரைப்படம் என்று வரும் என்று விஜய் ரசிகர்கள் மட்டுமல்ல எல்லோரும் ஆவலோடு எதிர்பார்த்திருந்த வேளை. வேட்டைக்காரன் வெளிவரும் நாள் நெருங்கிக் கொண்டிருக்கும் நேரம். வேட்டைக்காரனை புறக்கணிக்க வேண்டும் என்கின்ற பிரச்சாரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.

இங்கே ஏன் புறக்கணிக்க வேண்டும் என்று சொல்கின்ற காரணங்கள் சரியானதா? அல்லது இது அரசியலாக்கப்படுகிறதா? ஏன் புறக்கணிக்க வேண்டும் என்பதற்கான காரணத்தைப் பார்க்கின்றபோது. இலங்கையிலே சிறந்த கலைஞர்களில் ஒருவராக இருக்கின்ற இராஜ் இந்த பாடத்திலே பங்களித்திருப்பதாகவும் இவர் இலங்கை இராணுவத்தை பற்றி பாடல் எழுதியவர் என்பதால் புறக்கணிக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது.

இந்த கருத்து ஏற்றுக்கொள்ளத் தக்கதா? இவரை நாங்கள் ஒரு சிறந்த படைப்பாளியாகத்தான் பார்க்கவேண்டும். இவர் இராணுவத்தை பற்றிய பாடலுக்கு மட்டுமா சொந்தக்காரர். இவரது தமிழ் பாடல்கள் பிரபலமடையவில்லையா? இவருக்கு அதிகமான தமிழ் ரசிகர்கள் இருப்பது எவராலும் மறுக்க முடியாது.

இவர் இலங்கை இராணுவத்துக்காக பாடல் பாடியவர் என்பதனால் வேட்டைக்காரனை புறக்கணிக்க சொல்லும் தமிழ் சமுகம். கண்ணை மூடிக்கொண்டு  இருக்கிறதா?  இந்த இராணுவம் பற்றிய  சிங்களப் பாடல்களிலே தமிழர்களின் பங்களிப்பு இல்லை என்று சொல்கின்றிர்களா? தமிழர்களின் பங்களிப்பு இருக்கும்போது இராஜ் அவர்களை இங்கே துக்கிப் பிடிப்பது தவறான விடயமாகும்.



இராஜ் தமிழர்களுக்கு எதிரானவர் என்பது தவறானதாகும். அவர் ஒரு பேட்டியிலே சொல்லி இருக்கின்றார் தமிழ் கலைஞர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பவதாக. சரி அவரிடம் இலங்கை இராணுவ வீரர்களை பற்றி பாடல்களை தயாரிக்குமாறு ஜனாதிபதி சொல்லும்போது மறுக்க முடியுமா, யாராக இருந்தாலும் மறுத்தால் . இலங்கையில் இருக்க முடியுமா? நாம் அவர் பக்கமும்  பார்க்க  வேண்டும்.

வேட்டைக்காரனிலே சிங்கள மொழிக் கலாசாரம் புகுத்தப்பட்டிருப்பதாக பிரச்சாரம் செய்கின்றனர். அவர்களிடம் கேட்கிறேன். இன்றைய சினிமா முற்று முழுதாக தமிழையும் தமிழ் கலாசாரத்தையும் மதிக்கிறதா? வேறு நாட்டு, வேற்று மொழிக்கலாசாரங்கள். வேற்று மொழிகள் கலக்கவில்லையா?   இன்று வேற்று மொழிக் கலப்பில்லாமல் பாடல்கள் வரவில்லையா? எத்தனை படங்கள் தமிழ் கலாசாரத்தை கொச்சைப் படுத்தி இழிவு படுத்தி, வேற்று மொழிக் கலாசாரத்தோடு வந்தன. எத்தனை மேல் நாட்டு இசை வடிவங்கள் புகுத்தப் பட்டிருக்கின்றன. இன்றைய பாடல்களிலே எத்தனை மொழிகளை கலந்து தமிழை கொலை செய்கின்றனர். அப்போது வராத தமிழ் பற்று இப்போது வருவது ஏன்?

சரி சிங்கள இராணுவத்தைப்  பற்றிய பாடல்களுக்கு சொந்தக்காரரான இராஜ் அவர்களின் பங்களிப்புக்காக வேட்டைக்காரனை புறக்கணிக்க சொல்பவர்களிடம் கேட்கிறேன்.  இந்த இராணுவ வீரர்களையும், சிங்களவர்களையும் கட்டிக்காத்து. தமிழர்களை ..........................(இடைவெளியை நீங்களே நிரப்புங்கள்)  இலங்கை ஜனாதிபதிக்கும், அவரோடு சார்ந்தவர்களுக்கும் கை கொடுத்து, பன்னாடை, பொன்னாடை எல்லாம் போர்த்திவிட்டு  சென்ற அந்த பத்து தமிழக தலைவர்களை விடவும் இராஜ் பரவாயில்லை  அல்லவா? ஒரு சிங்களவராக இருந்து தமிழ் பாடல்களை உருவாக்கி தமிழ் கலைஞர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கும் ஒருவர் இந்த இராஜ் இவர் வேட்டைக் காரனில் பங்களித்து இருப்பது தவறா?

. ஒரு படத்திலே இராஜ் பணியாற்றி இருப்பதை வெறுக்கும் தமிழ் உணர்வாளர்கள். கை குலுக்கி, பன்னாடை, பொன்னாடை போற்றி சென்ற அந்த பத்துப் போரையும் ஓட, ஓட நாட்டை விட்டு துரத்தி அடித்திருக்க வேண்டுமே. தமிழையும்,  தமிழனையும்  ஏமாற்றி அரசியல் செய்யும் கருணாநிதியை விட இராஜ் தமிழர்களின் துரோகியாக  இருக்க முடியுமா?

வேட்டைக்காரனை ஏன் புறக்கணிக்க வேண்டும் என்பதற்கான காரணங்கள் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. இது தமிழர்களின் உணர்வுகளை தூண்டிவிட்டு  அரசியலாக்க நினைக்கும் ஒரு பிரச்சாரமேயாகும்.    இதற்கு

 முன்னரும் எத்தனை சிங்களை  கலைஞர்கள் தமிழ் சினிமாவிலே பங்களித்திருக்கின்றனர். அப்போது எங்கே போனார்கள் இந்த தமிழ் பற்றாளர்கள். ஏன் இந்தியாவிலே சிங்கள கலைஞர்களுக்கு பாராட்டுக்கள், விருதுகள் எல்லாம் கொடுக்கவில்லையா?   அப்படி  எல்லாம் இருக்கும்போது இன்று வேட்டைக் காரனை புறக்கணிக்க  சொல்வதில் என்ன நியாயம் இருக்கிறது?

எல்லாவற்றையும் தாண்டி வேட்டைக்காரன் வெளிவந்ததும் நடக்கப் போவது என்ன?

 எப்படித்தான் எதிர்ப்பலைகள் வந்தாலும் விஜயின் ரசிகர்கள் இப் படத்தினை பார்க்காமல் இருக்க மாட்டார்கள்.

வேட்டைக்காரன் எப்போ வரும் என்று எதிர் பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு இந்தப் இந்தப் பிரச்சாரங்களுக்கு அப்பால் பார்க்கவேண்டும் என்ற எண்ணம். அவர்களின் மனதை விட்டு போகப்போவதில்லை. நீண்ட நாள் எதிர் பார்ப்பு இத்திரைப்படம் எப்படி இருக்கும் என்று விஜய் இரசிகர்கள் எத்தனையோ கற்பனைகளோடு இருந்திருப்பார்கள்.

விஜய் இரசிகர்கள் மட்டுமல்ல எனையோரும்தான் இவ்வாறு பாரிய எதிர் பிர சாரங்கள் வருகின்றன. எதோ ஒரு விடயம் இந்தத் திரைப்படத்தில் இருக்கிறது என்று பலரை பார்க்கத் தூண்டும்.

விஜய் எதிர்ப்பாளர்களோ, விஜய் படம் பார்க்காதவர்களோ ஏன் இந்தப் படத்துக்கு இப்படி பார்க்க வேண்டாம் என்று பிரச்சாரம் செய்கின்றனர் என்ன என்பதனை பார்க்க வேண்டும் என்று படம் பார்க்க ஆசை படுவோர் பல உருவாவார்கள்.

இராஜ் தொடர்பாக இதுவரை அறியாதவர்கள் இராஜ் பற்றியும் அவரது திறமைகளை அறிவதற்காகவும் பலர் இத் திரைப் படத்தை பார்க்க சந்தர்ப்பமுண்டு.

அது மட்டுமல்ல சில காலமாக விஜய் ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றத்தை கொடுத்த விஜய் இந்த படத்திலே ஏமாற்றத்தை கொடுக்க மாட்டார் என்று நம்பிக்கொண்டிருந்த விஜய் இரசிகர்களுக்கு இந்த எதிர்ப்பலைகளால் இது ஒரு வெற்றிப் படம் என்பதனை உறுதி செய்திருப்பார்கள். சிறிய காரணங்களுக்காக  புறக்கணிக்க சொல்லும் பொது இப்படம் ஒரு வெற்றிப் படமாக அமைய இருப்பதனை சகித்துக் கொள்ள முடியாதவர்களால்  செய்யப்படும் பிரசாரமே இது என்று எண்ணத் தோன்றுகின்றது.

வேட்டைக்காரன் எல்லோரும்  எதிர் பார்ப்பதுபோல்  இரசிகர்களை ஏமாற்றாத ஒரு படமாக அமைய இருக்கின்றது என்பதில் சந்தேகமில்லை. தடைகளையும் தாண்டி சாதனை படைப்பான் வேட்டைக் காரன்.
read more...

Monday 14 December 2009

நம்மவர்கள் சந்தோசத்தில்

நேற்று இடம்பெற்ற பதிவர் சந்திப்பு மிகவும் சிறப்பான முறையிலே. நடந்து முடிந்திருக்கின்றது. அதற்கு முதலிலே ஏற்பாட்டுக் குழுவுக்கு நன்றி சொல்லவேண்டும்.

தேசிய கலை, இலக்கியப் பேரவையிலே குறிப்பிடப்பட்டதுபோல் இரண்டு மணியளவிலே ஆரம்பிக்கப்பட்டது சிறப்பம்சமாகும். இதிலே கொழும்பிலே இருக்கின்ற பதிவார்கள் மட்டுமல்ல. நாட்டின் சகல பாகங்களிலிருந்தும் பதிவார்கள் கலந்து கொண்டதோடு. வருகை தர முடியாமல் போன இலங்கைப் பதிவர்களும் பல வெளிநாட்டுப் பதிவர்களும். நேரடி ஒளி, ஒலிபரப்பு மூலம் சந்திப்பினை நேரடியாகப் பார்த்து தமது கருத்துக்களையும் அரட்டைப் பெட்டி மூலம் பகிர்ந்து கொண்டனர்.

நான் முதலாவது  சந்திப்புக்கு செல்லவில்லை என்பதனால் இந்த சந்திப்பில் கலந்து கொள்வதற்கு அதிக எதிர் பார்ப்புக்களோடு சென்றிருந்தேன். எதிர்பார்ப்பும் வீண் போகவில்லை. மட்டற்ற மகிழ்சியோடு. நேற்றைய பொழுது சென்றது.

கீர்த்தியின்  அறிமுக உரையோடு நிகழ்வுகள் ஆரம்பமாகின. நிகழ்வுகளை, பின்னர் பதிவர்கள்  ஒவ்வொருவரும் தங்களை அறிமுகம் செய்து கொண்டனர். தொடர்ந்து மதுவர்மனால் கலந்துரையாடல்கள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

பயனுறப் பதிவெளுதல் எனும் தலைப்பிலே பலரும் தங்களது ஆக்கபூர்வமான கருத்துக்களை தெரிவித்தனர். குறிப்பாக ஒருவரை இப்படித்தான் எழுத வேண்டும் என்று கட்டாயப் படுத்த முடியாது என்றும். ஒருவர் எழுதும் பதிவினை மற்றவர்கள் படிக்ககூடிய விதத்தில் எழுதுவது நல்லது என்றும்சொல்லப்பட்டது

புல்லட்டை இந்த இடத்திலே பாராட்டினார்கள். புல்லட்டின் பதிவுகளை பலர் விரும்பி படிப்பதாகவும். அவரது பதிவுகள் நகைசுவைப் பதிவுகளாக இருந்தாலும் நல்ல விடயங்களை பற்றியும் சொல்கின்றன என்றும் புள்ளட்டினால் நகைசுவை கலந்து எழுதப்பட்ட  இலத்திரனியல் தொடர்பான பதிவினை பலரும் விரும்பி பார்த்ததாகவும் தொடர்ந்து இலத்திரனியல் தொடர்பாக பதிவிடுவார் என்று நினைத்தும் அவர் பதிவிடவில்லை. தொடர்ந்து இலத்திரனியல் தொடர்பான பதிவுகளை தனது நகை  சுவை உணர்வோடு வழங்க வேண்டும் என்றும் புல்லட்டிடம் பலரும் வேண்டிக் கொண்டனர். இந்த நேரத்தில் புல்லட்டையும் மலேசியாவையும் தொடர்பு படுத்தி சில கதைகள் வந்தன. அப்போது புல்லட் புன் முறுவலுடன் காணப்பட்டார்.


நகைசுவைப் பதிவெழுதுவது என்பது  இலகுவான காரியமல்ல  எல்லோராலும் எழுத முடியாது. இருந்தாலும் பதிவுகள் எழுதும்போது சற்றேனும் நகைச்சுவை கலந்திருந்தால் எல்லோராலும் ரசிக்கப்படும் என்றும் சொல்லப்பட்டது.


சந்திப்பினை ஆரம்பித்து  வைக்கும் கீர்த்தி. .


                                  

கலந்துரையாடல்களை ஆரம்பித்து வைக்கும் மது.


பயனுறப் பதிவெளுதல் எனும் தலைப்பிலான கலந்துரையாடல். நிறைவு பெற்றதும் பெண்களும் பதிவுலகமும் எனும் தலைப்பிலே தர்சாஜனி தனது கருத்துக்களோடு கலந்துரையாடலை ஆரம்பித்தார். அவர் தனது உரையில் பெண்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகளை எடுத்து  சொன்னார். அத்தோடு அனானிகள் பெண்களை தேவையற்ற வார்த்தைப் பிரயோகங்களால் கருத்துரையிடும்போது ஆண்களைப் போல் பெண்களால் மனதை திடப்படுத்திக்கொண்டு மீண்டும் பதிவெழுத முடியாது போகின்றது இதனாலும் பல பெண்கள் பதிவெழுத பின்னிக்கின்றனர். என்று சொன்னார். அத்தோடு இன்று பெண்களே பாராட்டுகின்ற தன்மை இல்லை என்றும் குறிப்பிட்டார். பெண்கள் எதிர் நோக்கும் பல்வேறுபட்ட பிரச்சினைகளை எடுத்து  சொன்னார்.  இவரது கருத்துக்களுக்கு ஆண்களே பதிலளித்துக் கொண்டிருந்தார்கள்.

பெண்களும் பதிவுலகமும் எனும் தலைப்பில் உரையாற்றும் தட்சாஜனி.



 இந்த நேரத்தில் மேகலா எனும் பதிவர் ஆண்களால்தான் இன்று பெண்கள் பல பிரச்சினைகளை எதிர் நோக்குகின்றார்கள்  என்று சற்று உணர்ச்சி வசப்பட்டு பேசியதோடு எந்தக் கணவர் ஒரு பெண்ணை வலைப்பதிவு எழுத போயிற்று வா நான் பிள்ளைகளை பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்கிறார்கள் என்று வந்தியத் தேவனைப் பார்த்துக் கேட்பது போன்று கேட்டார். வந்தி அண்ணாவுக்கு விரைவில் டும், டும், டும் என்பதனை அறிந்திருப்பார் போலும். அப்போது மண்டபம் கலகலப்பானது.


சந்திப்பில் கலந்து கொண்டோரில் சிலர்.   உரையாற்றுவது மேமன்  கவி



பின்னர் பருத்தித் துறை வடையும், பயிற்றம் பணியாரமும் வழங்கப்பட்டது.

தொடர்ந்து  இலங்கைப் பதிவர் கூகுள் குழுமத்தை எப்படிப் பயன்படுத்துவது என்பதுபற்றி தொழிநுட்ப விளக்கங்களோடு விளக்கினார் மது.

அடுத்து இறுதியாக பின்னூட்டங்கள் தொடர்பான கலந்துரையாடலை மு. மயுரன் ஆரம்பித்து  அனானிப் பின்னூட்டங்களை வரவேற்பதாகவும் சொன்னார். இதனை
 ஏற்றுக்கொண்ட லோஷன் இருந்தாலும் .  சில தேவையற்ற தனிநபர் தாக்குதல் பின்னூட்டங்களை கண்டிக்க வேண்டும் என்றார்.  இது
 தொடர்பிலே அனானிகளால் அதிகம் தாக்கப்பட்ட ஹிஷாம், சந்ரு , வந்தியத்தேவன் போன்றோர் தமது அனானிகளால் திட்டு வாங்கிய அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.


அனாணிகள் தொடர்பான  கருத்துக்களோடு லோஷன்



மது கும்மி  பின்னூட்டங்கள் தொடர்பாக கருத்துக்களை
 சொன்னார். இவ்வாறு பலர் தமது கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். .

தொடர்ந்து பதிவார்கள் குழுவாகப் பிரிக்கப்பட்டு சுவாரஸ்யமான போட்டிகள் இடம் பெற்றன.

பின்னர் நண்பர்கள் தங்களுக்குள்ளேயே கலந்துரையாடினர். நான் உடனடியாக மட்டக்களப்பு திரும்ப வேண்டியதால் நேரம் போய்விட்டதால் உடனடியாக வர நினைத்தேன் அப்போது மது பாலகாரங்கள் சிலவற்றை கையிலே தந்துவிட்டார் என்ன செய்வது வீதியால் சாப்பிட்டுக் கொண்டு சென்றேன்.
பதிவார்கள் அனைவரும் மிகவும் சந்தோசத்துடன் இருக்கின்றனர் என்பதே உண்மை.


தனது கருத்துக்களை எலியை மனதில் நினைத்துக் கொண்டு சொல்லும் ஆதிரை
   

என் புதிய சேட்டைப் பாருங்கள் என்று சொல்லும் வந்தி.


அனானி நேரடியாக வந்து தாக்கி விடுவானோ என்று    பயத்துடன் அனாணியால் திட்டு வாங்கிய அனுபவங்களை சொல்லும் சந்ரு.






முன்  வரிசை செந்தூரன், பங்கு சந்தை அச்சு, சந்ரு, பின் வரிசை புல்லட், லோஷன்.....




மலேசியா பற்றி அடிக்கடி பேசப்பட்டதால் சந்தோசத்தில் புல்லட்.

 


புல்லட் பேசும்போது பக்கத்தில் இருக்கும் லோஷன் அண்ணா...தன்னைப்  பற்றி ஏதும் போட்டுத்தாக்கி விடுவானோ என்று பயந்து நடுங்கிக் கொண்டிருக்கிறார்.


உணர்ச்சிவசப்பட்ட மன்னார் அமுதன்.


சுபானு சுகமாகப் பேசுகிறார்

                     


அஷோக்பரன்.



நிமல்




உணர்ச்சி வசப்பட்டு பெண்கள் தொடர்பாகப் பேசிய மேகலா


போட்டியின்போது செய்வதறியாது திண்டாடும் எனது குழு..



ஒரு கடதாசி விளையாட்டுக்கே பாரிய திட்டமிடலை மேற்கொள்ளும் லோஷன் அண்ணா குழு.


இந்த சந்திப்பு தொடர்பான விளம்பரங்களை தமது திரட்டிகளிலே பிரசுரித்த அத்தனை திரட்டிகளுக்கும், வலைப்பதிவாளர்களுக்கும் அனைவர் சார்பிலும் நன்றிகள்.


படங்களுக்கு நன்றிகள் கோபி.
read more...