Saturday, 12 December 2009

இலங்கை பதிவர்கள் சிலர் தலை மறைவு. தேடுகிறது பதிவுலகம்.இலங்கையின் தமிழ் வலைப் பதிவர்களின் இரண்டாவது  சந்திப்பு நாளை இடம்பெற இருக்கின்றது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் அனைத்தும் சிறப்பாக செய்யப்பட்டிருப்பதாக ஏற்பாட்டுக்குழு தெரிவித்திருக்கின்றது. இந்த நிகழ்வுகள் உலகம் முழுவதும் நேரடி ஒளி, ஒலிபரப்பு செய்யப்பட இருக்கின்றது.

சந்திப்பு தொடர்பான விபரங்கள்.
இது ஒரு புறமிருக்க சில பதிவார்கள் தலை மறைவாகி இருப்பதாகவும். இவர்களைத் தேடி வலை விரிக்கப்பட்டிருப்பதாகவும். வலையை எலி வெட்டாமல் ஆதிரை காவல் காத்துக் கொண்டிருப்பதாகவும் அறிய முடிகின்றது. உடனடியாக இன்று தலை மறைவான பதிவர்களின் வாலையாவது பிடித்துத் தரும்படி சந்திப்பு ஏற்பாட்டு  குழுவிலே  இருக்கின்ற சுபாங்கன் அழுது புலம்பிக்கொண்டிருக்கின்றார்.

சுபாங்கன் அழுவதைக் கண்ணுற்ற கீர்த்தியுள்ள கவியரசி தலைமறைவான பதிவர்களை நினைத்து கண்ணீராலே கவிதை  வடித்துக் கொண்டிருக்கிறார். யாரெல்லாம் தலை மறைவு என்று அரசரிடம் கேட்டேன். அரசரோ மந்திரி மந்தியிடம் கேட்க சொன்னார் மந்தியோ மங்கைகளுடன் அரட்டையில். அவசரத்துக்கும் அசரமாட்டார்.

நகை சுவைப் பதிவர் புள்ளப்புடி பாண்டி அண்மைக் காலமாக பதிவர்களை தாக்கோ தாக்கு என்று போட்டுத்த் தாக்கி இருக்கிறார். இதனால் ஆத்திரமுற்ற பதிவர்கள் சந்திப்பிலே இவரது கொடும்பாவிக்கு பதிலாக புள்ளப்புடி கொடிய பாவியையே எரிப்பதற்கு வாந்தி திட்டமிட்டு இருக்கிறார். இதை அறிந்த கொழுப்பேறிக் கொளுத்த பதிவர் புள்ளப்புடி ஆண்டியிடம் சொல்லி இருக்கிறார் புள்ளப்புடி போண்டி தலை மறைவு.
இவர் மலேசியா சென்றிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இருந்தாலும் இவர் நசிக்கும் கும்மி ராணி இவரை உருட்டி புரட்டி அடிப்பதற்கு கூட்டத்தோடு தேடிக்கொண்டிருப்பதால் மலேசியா சென்றிருக்க வாய்ப்பில்லை எங்காவது பற்றைகளுக்குள் பதுங்கி இருக்கலாம் என்று நம்பப் படுகிறது.

அடுத்து கூட்டத்தோடு சென்று கும்மியடிக்கும் கும்மித் தலைவன் கொளுத்த பதிவர் சில வலைப் பதிவுகளை கும்மியே நாசம் செய்ததனால்.  இவரது கும்மிக் குழுவால் பாத்திக்கப் பட்ட பதிவார்கள் இவரை சந்திப்பன்று 100  மீற்றர் ஓட விடவேண்டும் என்று திட்டம் தீட்டினர் இது அவர் காதுகளுக்கு எட்டிவிட்டது. உடனே தலை மறைவு.

இவரை பிடித்தால் எல்லோரையும் பிடித்துவிடலாம் என்று சுபாங்கன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். சிலர் இவரது பின்னாலேதான் ஒளிந்திருக்கலாம் என்று சுபாங்கன் நம்புகிறார். கொளுத்த பதிவருக்கு பின்னால் 5 பேர் நின்றாலே தெரிய மாட்டார்கள் என்றும் சொல்கிறார்.

விஜய்.. விஜய்.. என்று உயிரை விட்ட பதிவர் வேட்டைக்காரனுக்கு எதிர்ப்புக்கள் வர ஆரம்பித்ததும் தன்னை யாராவது இருட்டடி அடித்து விடுவார்களோ என்ற  பயத்தில் தொழிலுக்கும் செல்லாமல் வீட்டு மூலைக்குள் ஒளிந்திருப்பதாக எலியை துரத்தி சென்ற ஆதிரை சொல்கிறார்.

யோ.... என்று குரலெழுப்பும் பதிவர் நீண்ட நாட்களாக தலை மறைவாக இருக்கிறார் ஆனால் அடிக்கடி சில வலைப் பதிவுகளுக்கு வாலாட்டிவிட்டு போவதாக அறிய முடிகிறது. இப்போது அவர் டிவிட்டரில் சில மன்னிக்கவும் பல இளம் பெண்களோடு கும்மி அடிப்பதாக சுபாங்கனின் அன்புத் தோழி தெரிவித்தார்.

 என்ன நாளை நீங்களும் வருவதற்கு ஆயத்தம்தானே நான் இன்றே வருவதற்கு ஆயத்தமாகிவிட்டேன். வரமுடியாதவர்கள் ஒளிபரப்பில் பார்க்க மறந்திடாதிங்க.
http://livestream.com/srilankatamilbloggers

Post Comment


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

20 comments: on "இலங்கை பதிவர்கள் சிலர் தலை மறைவு. தேடுகிறது பதிவுலகம்."

Subankan said...

ஹா ஹா ஹா, கலக்கல் அண்ணா.

கனககோபி said...

ஆகா....
கிளம்பிற்றாங்கய்யா கிளம்பிற்றாங்க....

//வலையை எலி வெட்டாமல் ஆதிரை காவல் காத்துக் கொண்டிருப்பதாகவும்//
ஹா ஹா ஹா....
ஐயோ ஐயோ..........
கடவுளே.....

//ஆத்திரமுற்ற பதிவர்கள் சந்திப்பிலே இவரது கொடும்பாவிக்கு பதிலாக புள்ளப்புடி கொடிய பாவியையே//

தமிழ் புகுந்து விளையாடுகிறது....
கலக்கல்....


//அடுத்து கூட்டத்தோடு சென்று கும்மியடிக்கும் கும்மித் தலைவன் கொளுத்த பதிவர் சில வலைப் பதிவுகளை கும்மியே நாசம் செய்ததனால். இவரது கும்மிக் குழுவால் பாத்திக்கப் பட்ட பதிவார்கள் இவரை சந்திப்பன்று 100 மீற்றர் ஓட விடவேண்டும் என்று திட்டம் தீட்டினர்//
அவன் அப்பாவி...
அவன் யாரின்ர வலையயும் நாசமாக்கேல...
ஹீ இஸ் பாவம்....


//கொளுத்த பதிவருக்கு பின்னால் 5 பேர் நின்றாலே தெரிய மாட்டார்கள் //

ஓம் ஓம்...
அவருக்குப் பின்னால சந்திரமான குட்டிப் பதிவரப் போல ஆக்கள் நிண்டா 5 இல்ல 10 பேர் இருக்கலாம்.
ஹி ஹி....


அசத்தல்....

சந்திப்போம்.....

புல்லட் said...

ஒரு அப்பாவியை புள்ளப்புடி என்றது மாத்திரமல்லாமல் அவன் கொடும்பாவியையும் எரிக்க வெளிக்குடும் ஓமக்குச்சி நரசிம்மன் மீது கங்கோனை நாலுதரம் ஏறி உருள அனுமதிக்கவேண்டும் என இத்தால் கேட்டுக்கொள்கிறேன்.. என்னடா எல்லாரும் போட்டுத்தாக்கிறீங்க? ஏன்? ஏன்?

யோ வொய்ஸ் (யோகா) said...

ஏன் நல்லாதானே போகுது என்ன ஏன் கும்மில இழுத்து விடுறீங்க.

ஐயம் பாவம், வேண்டாம்...

ஜோ.சம்யுக்தா கீர்த்தி said...

இதுக்கு முடிவே இல்லையாப்பா.....

நல்லா தானே போய்க்கொண்டிருந்தது என்னையும் ஏன் இதுக்குள்ள????

சந்ரு said...

//Subankan கூறியது...
ஹா ஹா ஹா, கலக்கல் அண்ணா.//


இதைத்தானா கலக்கல் என்று சொல்வது?

சந்ரு said...

//கனககோபி கூறியது...
ஆகா....
கிளம்பிற்றாங்கய்யா கிளம்பிற்றாங்க....//

நான் பக்கத்து வீட்டு மதிலுக்கு மேலால கிளம்பித்தான் பார்க்கிறேன் முடியல.

//தமிழ் புகுந்து விளையாடுகிறது....
கலக்கல்....//

அப்படியா?

//அவன் அப்பாவி...
அவன் யாரின்ர வலையயும் நாசமாக்கேல...
ஹீ இஸ் பாவம்....//

பாவம்தான் நாங்கள்..

//ஓம் ஓம்...
அவருக்குப் பின்னால சந்திரமான குட்டிப் பதிவரப் போல ஆக்கள் நிண்டா 5 இல்ல 10 பேர் இருக்கலாம்.
ஹி ஹி....//

யாரந்த சந்திரமான பதிவர்???????

Asfer said...

முதல் சந்திப்ப பாக்ககிடைக்கல்ல
இந்த முறை பாக்க்னும் எண்ட ஆவலுடன் இருக்கன்.சொதப்ப மாட்டாங்ளே

சந்ரு said...

//புல்லட் கூறியது...
ஒரு அப்பாவியை புள்ளப்புடி என்றது மாத்திரமல்லாமல் அவன் கொடும்பாவியையும் எரிக்க வெளிக்குடும் ஓமக்குச்சி நரசிம்மன் மீது கங்கோனை நாலுதரம் ஏறி உருள அனுமதிக்கவேண்டும் என இத்தால் கேட்டுக்கொள்கிறேன்.. என்னடா எல்லாரும் போட்டுத்தாக்கிறீங்க? ஏன்? ஏன்?//

என்ன உங்களுக்கு இரக்கமே இல்லையா இந்த கோப்பி பதிவர் யாரையும் ஒருதடவ ஏறி மிதித்தால் எழும்பும் மிஞ்சாது அதுக்குள்ளே என்னை 4 தரம் ஏறி மிதிக்க சொல்றியள்.

சந்ரு said...

//யோ வொய்ஸ் (யோகா) கூறியது...
ஏன் நல்லாதானே போகுது என்ன ஏன் கும்மில இழுத்து விடுறீங்க.

ஐயம் பாவம், வேண்டாம்...//

அட நீங்கதானா அந்த பதிவர்

சந்ரு said...

//ஜோ.சம்யுக்தா கீர்த்தி கூறியது...
இதுக்கு முடிவே இல்லையாப்பா.....

நல்லா தானே போய்க்கொண்டிருந்தது என்னையும் ஏன் இதுக்குள்ள????//


வருக எங்கள் கவியரசி உங்கள் வருகை நல வரவாகட்டும் எங்கே எங்கள் கொழுப்பேறிக் கொளுத்த பதிவரைப் பற்றி ஒரு கவிதை சொல்லுங்கள் நாங்கள் அனைவரும் காதுகளை பொத்திக் கொள்கிறோம்.

சந்ரு said...

//Asfer கூறியது...
முதல் சந்திப்ப பாக்ககிடைக்கல்ல
இந்த முறை பாக்க்னும் எண்ட ஆவலுடன் இருக்கன்.சொதப்ப மாட்டாங்ளே//

என்ன சொதப்பலா அப்படிஎன்றால் என்ன??? நாங்கள் ""இருக்கிறமில்ல""

சந்ரு said...

விசேட செய்திகள்கொளுத்த பதிவரது வலைப்பதிவை இப்போது பெயரிலிகள் நாசப்படுத்துவதால் நாளைய சந்திப்பில். பெயரில்லாதவர்களுக்கு பெயர் வைக்கும் திட்டம் ஒன்றினை இவர் ஆரம்பிக்க இருப்பதாக பூனை பிடிப்போர் சங்கத் தலைவர் தெரிவிக்கிறார்.கடந்த சில நாட்களாக மலேசிய கும்மி இளவரசியால் மோசமான வார்த்தையால் தாக்கப்பட்டு மனமுடைந்த புள்ளப்புடி பாண்டி தலையை சுவரில் முட்டியதால் சுவர் இடிந்து விழுந்ததால் ௧௨ எலிகள் சம்பவ இடத்திலேயே மரணம். இதனை கேள்வியுற்ற ஆதிரை சந்தோசத்தில் ஓடிப்போய் வீதியால் சென்ற இளம் பெண்ணில் மோதியிருக்கிறார். இளம்பெண் ஆதிரையின் கன்னத்தில் ஏதோ கொடுத்து அனுப்பியிருக்கிறார்.

அக்பர் said...

பதிவர் சந்திப்பு இனிதாக அமைய வாழ்த்துகள்.

Anonymous said...

ஆஹா சந்துரு.....

சந்திப்பு இனிமையாக அமைய வாழ்த்துக்கள்....

ஸ்ரீராம். said...

பதிவர் சந்திப்புக்கு வாழ்த்துக்கள்..

LOSHAN said...

ஹா ஹா ஹா.. தமிழில் கலக்கி இருக்கிறீர்கள் சந்த்ரு..

புள்ளப்புடி பாண்டி ரசித்தேன்.. :) பாவம் புஸ் பாண்டி.. சகல பக்கமும் அடி நடக்குது..
கும்மித் தலைவன்.. இதுவும் நல்லா இருக்கே.. ;)

மயில்வாகனம் செந்தூரன். said...

ஆஹா அசத்துறீங்கப்பா.............. அப்பிடியே நாளைக்கு சந்திப்பம்.........

Anonymous said...

உங்கள் வலைத்தளத்தை கொஞ்ச நாட்களாக ஓபின் பண்ண முடியவில்லை..Why?

நிறைய சீரியசான விசயங்கள் எழுதி இருக்கிறியள்... என்ட கருத்தை எழுதப்போனால் உங்களின் ஆக்கத்தை விட பெரிசாப்போடும்.. அதனாலும், என்னை கடைசி வரை விட்டுக்கொடுக்காத நல்ல உள்ளம் என்பதாலும் இப்போதைக்கு என்ட கொமன்றால அறுக்காமல் விடுறன்.. சரியோ..

உங்கட பதிவுகளை படிக்கேக்க உங்களில் என்னைக் காண்கிறேன்.. கண் இடுக்க புன்னகை தன்னாலே வரும்.. நானும் கொஞ்சம் தேசம், மக்கள், சமூகம் என்டு கொஞ்சம் வில்லங்கம் பிடிச்சு திரியிற ஆள் தான்.. இப்ப கொஞ்ச நாளாக பிரேக்கில் இருக்கிறன்... ஒவ்வொரு ஆக்கத்துக்கும் எழும்பி நின்டு கை தட்டுகிறேன்.. அருமையானவை...

Btw, நீங்கள் இப்படி கடிப்பியள் என்டு தெரியாது.. உங்கன்ட ஆக்கங்கள் பொதுவா சீரியசானவை தான... நல்லா இருக்கு... மொக்கைப் பதிவு போடுவது கஷ்டம் தான்.. உங்களுக்குத் தான அதுவும் நல்லா வருது.. அப்பப்ப கொஞ்சம் எடுத்து விடுங்கோவன். என்ன..

Good Day.............

ஆ.ஞானசேகரன் said...

//என்ன நாளை நீங்களும் வருவதற்கு ஆயத்தம்தானே நான் இன்றே வருவதற்கு ஆயத்தமாகிவிட்டேன். வரமுடியாதவர்கள் ஒளிபரப்பில் பார்க்க மறந்திடாதிங்க.
http://livestream.com/srilankatamilbloggers//

சந்திப்பு இனிமையாக இருக்க வாழ்த்துகள்... நண்பர் லோஷனை கேட்டதாக சொல்லிவிடவும்

Post a Comment