Friday, 25 December 2009

இந்த நிலை மாறுமா? திருந்துவார்களா இவர்கள்?
காட்சிப் போருளாக்கப்பட்ட பெண்கள், பெண்களை குட்டி சுவராக்க நினைக்கும் தேசமிது எனும் இரு இடுகைகளின் தொடராகவே இந்தப் இடுகையும் வருகின்றது. இத்தொடரிலே பெண்கள் எதிர் நோக்கும் பிரட்சினைகள் பற்றி பேசுகின்றேன் என்றாலும் ஒவ்வொரு இடுகைக்கும் நான் தலைப்பை மாற்றக் காரணம் பெண்கள் பற்றி எழுதினாலே சிலர் அந்தப் பக்கமே தலை வைத்தே படுக்கமாட்டார்கள். அதற்குள் பெண்கள் பற்றிய தொடர் பதிவு என்றால் வருபவர்களும் வரமாட்டார்கள். 

இத் தொடர் பதிவு தொடர்பாக எனக்கு மின்னஞ்சலில் வந்த சில கேள்விகளும் அதற்குரிய என் கருத்துக்களும் உங்களுக்காக. மின்னஞ்சல் நீளமானதாகையால் முக்கியமான பகுதியை மட்டுமே தருகிறேன்.//மனைவியை இழந்தால் கணவனுக்கு ஏதாவது பட்டம் உண்டா?...............................?
ஒரு பெண் கற்பழிக்கப் பட்டாள் ...என்றால் அது யாரால்?..................?
ஒரு பெண் மானபங்கம் படுத்தப்பட்டாள் அது யாரால்?......................?
தனக்குப் பிறந்த மகளுடன் தந்தை தகாத உறவு  இதற்கு காரணம் யார்?..............?


பெண்கள் விலைமாது ஆவதற்கு சில ஆண்களே காரணம்.அவர்கள் விலைமாதர்கள் என்று தெரிந்தும்,தேடிப்போவதும் ஆண்களே! அவர்கள் தேடிப்போவதால் தான் அத் தொழில் நடக்கின்றது எந்த ஒரு ஆண்மகனையும் போகமல் இருக்கச் சொல்லுங்கள் பார்க்கலாம்  முடியுமா?எந்த ஒரு ஆண் மகனும் போகாமல் இருந்தால் விபச்சாரி இல்லை,விபச்சாரம் இல்லை விலைமாது இல்லை .இதற்கு காரணம் யார்?.............?//

அவர் முதலாவதாக கேட்ட கேள்வி கணவனை இழந்தால் அந்த பெண்ணுக்கு கொடுக்கும் பட்டம் கைம்பெண், விதவை. மனைவியை இழந்தால் கணவனுக்கு ஏதாவது பட்டம் கொடுக்கிறார்களா என்று கேட்டு இருந்தார்.  மனைவியை இழந்த கணவனை தபுதாரன் என்று சொல்கிறோம் ஆனால் இப்படி ஒரு தமிழ் சொல் இருப்பது மட்டுமே ஆனால் பயன்படுத்துவது குறைவு.


இந்த சமுகத்திலே கணவனை இழந்த பெண்கள் வெகுவாகவே பாதிக்கப் படுகின்றனர். பொருளாதார நிலைமை சிக்கல்கள் ஒருபுறமிருக்க. சமூகம் இவர்களை ஓரம் கட்ட நினைக்கின்றது, அதிகமான விடயங்களிலே கட்டுப்பாடுகளை விதிக்கின்றது.
கணவனை இழந்த பெண் ஒரு நல்ல காரியத்துக்கு செல்ல முடியாது, நல்ல காரியம் நடைபெறும் இடத்திலிருந்து விலக்கி வைத்தல், நல்ல காரியத்துக்கு செல்கின்றபோது அந்த பெண் முன்னால் வந்தால் சகுனம் என்று சொல்வது. இது எல்லாம் எந்த வகையில் நியாயம்.
ஆனால் மனைவியை இழந்த ஒரு ஆணுக்கு இந்த கட்டுப்பாடுகள் இருக்கிறதா? இல்லையே மனைவியை இழந்த ஆண்கள் இந்த நிகழ்வுகளிலே முக்கியமானவர்களாக இருப்பார்கள் ஆனால் தனது சகோதரிக்கோ குடும்ப உறுப்பினர்களுக்கோதிருமணம் போன்ற  நல்ல விடயங்கள் நடை பெறும்போது இந்த பெண்கள் ஒதுக்கப் படுகின்றார்கள். அவர்களால் தான் பங்கு கொள்ளவில்லையே என்று அழுவதைத் தவிர வேறு வழியில்லை.
ஒரு பெண் கணவனை இழந்தால் பல கட்டுப்பாடுகள், குடும்பத்தில் பொருளாதார பிரச்சினைகள்,  பிள்ளைகளை வளர்த்து நல்ல வழிக்கு கொண்டு வரவேண்டும் என்று. ஒரு திருமணம் செய்ய நினைத்தால் எத்தனை கொடுமைகள் நடக்கின்றது. மறுமணம் செய்ய முடியாது என்று எத்தனை கட்டுப்பாடுகள். மீறியும் அந்தப் பெண் ஒருவரை திருமணம் செய்தால் நடத்தை கெட்டவள் என்ற பட்டத்துடன். அவளை ஒதுக்கியும் வைக்கின்றனர்.

ஆனால் ஒரு ஆண் மனைவியை இழந்தால் மனைவி இறந்து ஒரு மாதம் செல்ல முன்னரே அடுத்த திருமணம் செய்யவும் ஆதரிக்கின்றது இந்த சமூகம். மனைவியை இல்;அந்த ஒரு ஆண் எத்தனை திருமணம் செய்யவும் ஆதரிக்கும் சமூகம் ஏன் பெண்களை மட்டும் தனது குடும்ப நிலை காரணமாக மறுமணம் செய்ய நினைக்கும் போது மறுக்கிறது.
சில பெற்றோரோ ஒரு ஆணின் மனைவி இறந்துவிட்டால் உடனடியாக அந்த ஆணுக்கு வேறு பெண்ணை தேட ஆரம்பித்து விடுகின்றனர். ஆனால் இதே பெற்றோர் ஒரு பெண்ணின் கணவன் இறந்துவிட்டால் அவளை ஒதுக்கி வைப்பதுதான் ஏன்?
அவர் கேட்ட அடுத்த கேள்வி ஒரு பெண் மானபங்கப் படுத்தப் படுவது யாரால் என்று. ஒரு பெண் ஒரு ஆனால் மானபங்கப் படுத்தப் பட்டால், பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப் பட்டால். அந்தப் பெண் இந்த இடத்திலே தவறு செய்கிறாளா இல்லையே அப்பாவியான பெண் ஆனால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்துகிறான் ஆனால் எந்த தவறும் செய்யாத அந்தப் பெண்ணை வித்தியாசமான கண்ணோட்டத்துடன் பார்க்கிறது இந்த சமூகம். அதுமட்டுமல்ல பாலியல் வல்லுறவு செய்த அந்த ஆணின் செயலை மறுகணமே மறந்து அந்த ஆணை நல்ல மனிதனாக பார்ப்பவர்களும் இருக்கின்றனர்.
தனது பிள்ளையையே பாலியல் வல்லுரவுக்குத் படுத்தும் எத்தனை தந்தைகள் இருக்கின்றனர். எத்தனை சகோதரர்கள் இருக்கின்றனர். இப்படியோப்பட்ட தந்தை, சகோதரர்களால் எத்தனை பெண்கள் இறந்திருக்கின்றனர், வாழ்க்கையை தொலைத்து தவிக்கின்றனர்.
விபசாரிகள் பற்றி அவர் குறிப்பிட்ட விடயங்கள் உண்மைதான். சில தவிர்க்க முடியாத காரணங்களால்  பெண்கள் விலை மாதர்களாக வந்துவிட்டார்கள். முக்கிய காரணம் பணம் உழைக்க வேண்டும் என்பதுதான். அப்படித்தான் அவர்கள் வந்தாலும் ஆண்கள் அவர்களை நாடி செல்லாவிட்டால் விலை மாதர்கள் இருக்க முடியாதுதானே.
இன்று பணக்கார வர்க்கத்தை சேர்ந்த சில ஆண்கள் என்ன செய்கிறார்கள். சில நல்ல பெண்களை பணத்தைக் காட்டியே ஆசையை வளர்த்து தங்களது உடல் இச்சைகளை தீர்த்து கொள்வதற்காக பயன்படுத்துகின்றனர். தாங்கள் எந்தளவு வேண்டுமோ அந்த அளவுக்கு அனுபவித்துவிட்டு அந்த பெண்ணை கைவிடுகின்றனர். இந்தப் பெண் தனது உடல் இச்சைகளை அடக்கிக்கொள்ள முடியாமல் மற்றவர்களை நாடிச்செல்ல நினைக்கின்றாள். இதனால் இவள் விலை மாதராகின்றாள்
தொடர்ந்து வரும்...

Post Comment


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

9 comments: on "இந்த நிலை மாறுமா? திருந்துவார்களா இவர்கள்?"

tharshayene said...

நல்ல கேள்விகள்;ஆதங்கங்கள் . நிச்சயமாக வரவேற்கப் பட வேண்டிய பதிவு....

கவிக்கிழவன் said...

பெண் என்ற காரணத்தினால் மட்டும் அனுபவிக்கும் கொடுமைகள் அதிகம்

மயில்வாகனம் செந்தூரன். said...

ஒரு சமுகத்தில் பெண்ணியம் பேசும் ஆண்கள் குறைவு... குறிப்பாக பாரதிக்குப் பிறகு பெண்களுக்காக பேசுபவர்கள் குறைவு என்றுதான் சொல்லவேண்டும். .. அந்த வகையில் நீங்கள் எடுக்கும் முயற்சி ஆரோக்கியமானது... வாழ்த்துக்கள் அண்ணா.. தொடருங்கள்...

பித்தனின் வாக்கு said...

//ஆனால் மனைவியை இழந்த ஒரு ஆணுக்கு இந்த கட்டுப்பாடுகள் இருக்கிறதா? இல்லையே மனைவியை இழந்த ஆண்கள் இந்த நிகழ்வுகளிலே முக்கியமானவர்களாக இருப்பார்கள் //
தங்களின் இந்தக் கூற்றுக்கள் தவறு நண்பரே. மனவியை இழந்த பிராம்னன் ஒற்றை பிராம்னன் என்று பெயர். இந்த ஒற்றை பிராம்னன் அபசகுனம் என்றும். சடங்குகள்,வைதீகங்கள் நடத்த அருகதை இல்லாதவர்கள். ஒற்றை பிராம்னனுக்கு கொள்ளி வைக்கக் கூட அனுமதி இல்லை. பங்காளி பசங்கதான் கொள்ளி வைப்பார்கள்.
பிரம்ச்சாரிகள் மூனு வடப் பூணுல் அணிவார்கள், மனைவியுடையவர்கள் அறு வட பூணூலை அணிவார்கள். ஒற்றை பிராம்னன் ஒன்பது வட பூனூலை அணிவார்கள். இந்து சமுதாயத்தில் எந்த ஒரு நல்ல அல்லது கெட்ட காரியங்களையும்(அசுபம்) செய்ய கிரகஸ்தன் மட்டும் ஏற்றவன் என்பது சம்பிரதாயம்.
//மறுமணம் செய்ய முடியாது என்று எத்தனை கட்டுப்பாடுகள். மீறியும் அந்தப் பெண் ஒருவரை திருமணம் செய்தால் நடத்தை கெட்டவள் என்ற பட்டத்துடன். அவளை ஒதுக்கியும் வைக்கின்றனர். //
நீங்கள் சொல்வது பத்து வருடங்களுக்கு முன்னர் இருந்தது. இப்போது குறைந்து விட்டது.

பாலியல் பற்றிய தங்களின் கருத்துக்கள் உண்மை. ஆனாலும் ஒரு பெண் தனது சுய கட்டுப்பாடுகளை மீறினால்தான் இவை நடக்கின்றது.
தந்தை மகள் போன்ற சம்பவங்கள் ஒருசில சமயம் நடப்பை(அநாகரிகமான குடியினால்) அதை வைத்து எல்லாமும் பொதுப் படையாக கருத்து எழுதுவது நல்லது அன்று. நன்றி சந்ரு.

kamalesh said...

இந்த சமூகத்திருக்கு
நிறைய சொல்ல முயற்சி செய்க்ரீர்கள்...
புத்தாண்டு வாழ்த்துக்கள்...

kamalesh said...

இந்த சமூகத்திருக்கு
நிறைய சொல்ல முயற்சி செய்க்ரீர்கள்...
புத்தாண்டு வாழ்த்துக்கள்...

kamalesh said...

இந்த சமூகத்திருக்கு
நிறைய சொல்ல முயற்சி செய்க்ரீர்கள்...
புத்தாண்டு வாழ்த்துக்கள்...

kamalesh said...

இந்த சமூகத்திருக்கு
நிறைய சொல்ல முயற்சி செய்க்ரீர்கள்...
புத்தாண்டு வாழ்த்துக்கள்...

kamalesh said...

இந்த சமூகத்திருக்கு
நிறைய சொல்ல முயற்சி செய்க்ரீர்கள்...
புத்தாண்டு வாழ்த்துக்கள்...

Post a Comment