Wednesday 28 March 2012

இந்து மதத்தை கேவலப் படுத்த நினைக்கிறதா தமிழ்மணம் பதிவர்களே ஒன்று படுங்கள்

தமிழ் முன்னணி வலைப்பதிவுத் திரட்டி என்று எல்லோராலும் சொல்லப்பட்ட தமிழ்மணம் இன்று பக்கம் சார்ந்து செயற்பட்டு பல அடாவடித்தனங்களையும் செய்து வருகின்றது. இந்த தமிழ் மணம் திரட்டியானது இவ்வாறான நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும்.

அண்மையில் எனது வலைப்பதிவு தமிழ்மணம் திரட்டியில் இருந்து நீக்கப்பட்டது நீக்கப்பட்டதற்கான காரணம் சரியான காரணம் இல்லை சமூகம் சார்ந்து பல பதிவுகளை எழுதிவரும் நான் சமூகத்தில் இருக்கின்ற சீர்கேடு தொடர்பாக பதிவிட்டு அரை குறை ஆடையுடனான புகைப்படம் ஒன்றையும் வலைப்பதிவில் இணைத்தேன். பின்னர் உடனே அதனை நீக்கிவிட்டேன். நான் ஒருபோதும் இவ்வாறான புகைப்படங்களை பதிவிடவில்லை. அதுவே முதல் தடவை. இது என் பதிவு நீக்கப்பட்டமைக்கு காரணம் அல்ல. 

அவர்கள் நீக்கியதற்கு காரணம் காட்டிய பதிவு

என் வலைப்பதிவு நீக்கப்பட்டமைக்கு காரணம் எனது

 எனும் பதிவே காரணம். இப் பதிவு தொடர்பில் ஒட்டு மொத்த மஸ்லிம்களையும் நான் சாடியிருப்பதாகவும் என் வலைப்பதிவை தமிழ் மணத்திலிருந்து நீக்கும்படியும் பலர் தமிழ் மணத்தை கேட்டிருந்தனர்.

இதனையும் பாருங்கள்.


அண்மைக் காலமாக் இந்து மதத்தினை கேவலப்படுத்துகின்ற பல பதிவுகள் தமிழ் மணத்தில் இணைக்கப்படுகின்றன. அவற்றை முதலிடத்திற்கு தமிழ்மணம் மகுடம் சூட்டி அழகு பார்க்கின்றது. இவ்வாறு இந்து மதத்தினை கேவலப்படுத்தும் பதிவுகளை தமிழ்மணம் நீக்காததன் நோக்கம் என்ன?

முஸ்லிம்களையும் இஸ்லாத்தையும் விமர்சித்தால் உடனே நீக்குகின்ற தமிழ்மணம் இந்து மதத்தினை கேவலமாக விமர்சிக்கும் பதிவர்களுக்கும் பதிவுகளையும் முதலிடத்தில் வைத்து அழகு பார்ப்பது ஏன்?

அனைத்து பதிவர்களும் இவ்விடயம் தொடர்பாக உடனடியாக தமிழ்மணத்திற்கு மின்னஞ்சல் அனுப்புங்கள் இந்து மத்தினை கேவலப்படுத்தி வெளியிடப்படும் பதிவுகளை நீக்கும்படி. 

முன்னைய பதிவு


read more...

Sunday 18 March 2012

உணர்ச்சி வசனங்களை பேசி தேர்தல் காலங்களில் வாக்கு கேட்டு வீடுகளுக்கு வருபவர்களுக்கு உங்கள் வீடுகளிலுள்ள விளக்குமாறை காட்டி விரட்டியடிக்க வேண்டும் என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ


தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முதலாவது தேசிய மாநாடு இன்று மட்டக்களப்பு சிவானந்தா விளையாட்டரங்கில் இடம்பெற்றது. இம் மாநாடு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கு பாரிய திருப்பு முனையாக அமைந்திருக்கின்றது.

எவரும் எதிர்பார்க்காத விதமாக 15000 அதிகமான மக்கள் திரண்டு வந்திருந்தனர் கிழக்கு மக்கள் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கு அங்கிகாரம் வழங்கியிருக்கின்றார்கள்

இன்று இடம்பெற்ற மாநாட்டு நிகழ்வுகளை இங்கு சென்று பார்க்கலாம் ஆரம்பத்தில் சில நிமிடங்கள் சத்தம் இல்லாமல் இருக்கின்றது பின்னர் சரியாகிவிடும்.

நிகழ்வுகளை பார்க்க


read more...

கிழக்கு மக்கள் மீண்டும் ஒன்று திரண்ட வரலாறு

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தேசிய மாநாடு மட்டக்களப்பு சிவானந்தா விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றுக் கொண்டீருக்கின்றது 15000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இந் மாநாட்டில் கலந்துகொண்டிருக்கின்றனர். 

இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் கௌரவ பசில் ராஜபக்ஷ அவர்கள் கலந்து சிறப்பித்துக் கொண்டிருக்கின்றார் 
தமிழ் மக்கள் பிடுதலைப் புலிகள் கட்சியின் 1வது தேசிய மாநாடு நேரடியாக ஒளிபரப்பாகிக் கொண்டிக்கின்றன





Watch live streaming video from puthiyavidiyal at livestream.com
read more...

பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் கௌரவ பசில் ராஜபக்ஷ அவர்கள் உரையாற்றிக் கொண்டிருக்கிறார் நேரடி ஒளிபரப்பாகிறது

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தேசிய மாநாடு மட்டக்களப்பு சிவானந்தா விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றுக் கொண்டீருக்கின்றது 15000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இந் மாநாட்டில் கலந்துகொண்டிருக்கின்றனர். 

இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் கௌரவ பசில் ராஜபக்ஷ அவர்கள் கலந்து சிறப்பித்துக் கொண்டிருக்கின்றார் 
தமிழ் மக்கள் பிடுதலைப் புலிகள் கட்சியின் 1வது தேசிய மாநாடு நேரடியாக ஒளிபரப்பாகிக் கொண்டிக்கின்றன



Watch live streaming video from puthiyavidiyal at livestream.com
read more...

கிழக்கு மாகாணத்தில் சரித்திரத்தில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நாள்

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தேசிய மாநாடு மட்டக்களப்பு சிவானந்தா விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றுக் கொண்டீருக்கின்றது 15000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இந் மாநாட்டில் கலந்துகொண்டிருக்கின்றனர். 

இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் கௌரவ பசில் ராஜபக்ஷ அவர்கள் கலந்து சிறப்பித்துக் கொண்டிருக்கின்றார்
தமிழ் மக்கள் பிடுதலைப் புலிகள் கட்சியின் 1வது தேசிய மாநாடு நேரடியாக ஒளிபரப்பாகிக் கொண்டிக்கின்றன


Watch live streaming video from puthiyavidiyal at livestream.com
read more...

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தேசிய மாநாட்டில் 13000 க்கு மேற்பட்ட மக்கள் பங்கேற்பு

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தேசிய மாநாடு மட்டக்களப்பு சிவானந்தா விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றுக் கொண்டீருக்கின்றது 13000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இந் மாநாட்டில் கலந்துகொண்டிருக்கின்றனர். 

இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் கௌரவ பசில் ராஜபக்ஷ அவர்கள் கலந்து சிறப்பித்துக் கொண்டிருக்கின்றார்
தமிழ் மக்கள் பிடுதலைப் புலிகள் கட்சியின் 1வது தேசிய மாநாடு நேரடியாக ஒளிபரப்பாகிக் கொண்டிக்கின்றன


read more...

தமிழ் மக்கள் பிடுதலைப் புலிகள் கட்சியின் வது தேசிய மாநாடு நேரடியாக ஒளிபரப்பாகிக் கொண்டிக்கின்றன

தமிழ் மக்கள் பிடுதலைப் புலிகள் கட்சியின் வது தேசிய மாநாடு நேரடியாக ஒளிபரப்பாகிக் கொண்டிக்கின்றன
read more...

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தேசிய மாநாடு நேரடியாக ஒளிபரப்பாகின்றது

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தேசிய மாநாடு நேரடியாக ஒளிபரப்பாகின்றது
read more...

Saturday 17 March 2012

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முதலாவது தேசிய மாநாடு ஒரு பார்வை

read more...

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியன் பேராளர் மாநாடு நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன (படங்கள் இணைப்பு)

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் 1வது தேசிய மாநாடு நாளை மட்டக்களப்பு கல்லடி சிவானந்தா விளையாட்டு மைதானத்தில் இடம்பெற இருக்கின்றது. இப்பொழுது கட்சியின் பேராளர் மாநாடு மட்டக்களப்பு மாநகரசபை மண்டபத்தில் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது.
நாளை இடம்பெறும் மாநாட்டு நிகழ்வுகள் பல இணையத்தளங்களில் நேரடியாக ஒளிபரப்புச் செய்யப்பட இருக்கின்றன. நேரடி ஒளிபரப்பு 





தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முதலாவது தேசிய மாநாடு எதிர்வரும் 18ம் திகதி மட்டக்களப்பு கல்லடி சிவானந்தா விளையாட்டு மைதானத்தில் இடம்பெற இருக்கின்றது. இவ் மாநாட்டு நிகழ்வுகள் 18 ம் திகதி காலை 09.00 மணிமுதல் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் இணையத்தளங்கள்
read more...

Friday 16 March 2012

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முதலாவது தேசிய மாநாட்டு நிகழ்வுகள் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் இணையத்தளங்கள்

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முதலாவது தேசிய மாநாடு எதிர்வரும் 18ம் திகதி மட்டக்களப்பு கல்லடி சிவானந்தா விளையாட்டு மைதானத்தில் இடம்பெற இருக்கின்றது. இவ் மாநாட்டு நிகழ்வுகள் 18 ம் திகதி காலை 09.00 மணிமுதல் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் இணையத்தளங்கள்
Watch live streaming video from puthiyavidiyal at livestream.com
read more...

Thursday 15 March 2012

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தேசிய மாநாட்டு நிகழ்வுகள் நேரடி ஒளிபரப்பு


தமிழ் மக்கள் விதலைப் புலிகள் கட்சியின் முதலாவது தேசிய மாநாடு எதிர்வரும் 18 மார்ச் 2012 மட்டக்களப்பு கல்லடி சிவானந்தா விளையாட்டரங்கில் காலை 09.00 மணிக்கு இடம்பெற இருக்கின்றன. தேசிய மாநாட்டு நிகழ்வுகளை நேரடியாக எமது இணையத்தளத்தில் ஒளிபரப்பு செய்யக் காத்திருக்கின்றோம்
Watch live streaming video from puthiyavidiyal at livestream.com
read more...

Wednesday 14 March 2012

பரீட்சார்த்தம்


Watch live streaming video from puthiyavidiyal at livestream.com
read more...

Tuesday 13 March 2012

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உருவாக்கத்துக்கு காரணகர்த்தாவான கருணாவிற்கு கட்சியின் மாநாட்டிற்கு அழைப்பு இல்லை



எதிர் வரும் 18ம் திகதி மட்டக்களப்பில் இடம்பெற இருக்கின்ற தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியன் தேசிய மாநாட்டுக்கு பிரதி அமைச்சர் வினாயகமூர்த்தி முரளிதரனுக்கு (கருணா) அழைப்பு விடுக்கப்படவில்லை என அறிய முடிகின்றது.

இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது

கிழக்கு மாகாணத்திற்கென தனியான ஒரு கட்சி வேண்டும் கிழக்கு மக்கள் வடக்குத் தலைமைகளினால் தொடர்ந்தும் ஏமாற்றப்பட்டு வரக்கூடாது கிழக்கு மக்களுக்கு தனித்துவமான கிழக்குத் தலைமைத்தவம் வேண்டும் என்று புலிகள் அமைப்பில் இருந்து பிரிந்து வந்து தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உருவாக்கத்திற்கு காரணகர்த்தாவாக இருந்தவர் கருணா அவர்கள். எதிர்வரம் 18ம் திகதி இடம்பெற இருக்கின்ற கட்சியின் தேசிய மாநாட்டுக்கு கருணாவிற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.

இலங்கையின் அரசியல் தலைவர்கள் பலருக்கு அழைப்பு விடுக்கப்பட்டபோதிலும் கட்சியின் உருவாக்கத்திற்கு காரணமான பிரதி அமைச்சர் வினாயகமூர்த்தி முரளிதரனுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. பிரதி அமைச்சர் அவர்களுக்கு அழைப்பு விடுவதில்லை என கட்சியின் தலைவர் செயற்குழு தீர்மானித்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து அறிய முடிகின்றது.

அழைப்பு விடுக்கப்படாமைக்கு காரணம் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உருவாக்கத்திற்கு கரணகர்த்தாவாக இருந்த போதிலும் அவர் கிழக்கு மக்கள் மீதும் கிழக்கின் தனித்தவ கட்சியில் பற்கு இல்லாததன் காரணமாகவே வேறு ஒரு கட்சியில் இணைந்து செயற்படுவதன் காரணமாகவே அழைப்பு விடுக்கப்படவில்லை எனவும் அறிய முடிகின்றது. 
read more...

Monday 12 March 2012

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தேசிய மாநாடு ஒரு பார்வை

கிழக்கு மாகாணசபை உட்பட மட்டக்களப்பு மாவட்டத்தின் பல உள்ளூராட்சி மன்றங்களையும் தன் வசம் வைத்துள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முதலாவது தேசிய மாநாடு எதிர்வரும் 18 மார்ச் 2012 கல்லடி சிவானந்தா விளையாட்டர்கில் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.

இம் மாநாடு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியன் முதலாவது மாநாடு. இம் மாநாடு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு மாநாடு மட்டுமல்லாமல். தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சிக்கும் கிழக்கு மக்களுக்கும் ஒரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வாகும். இவ் வேளையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியையும் அதன் செயற்பாடுகள் இம் மாநாட்டின் மூலம் கட்சியின் பலம் தொடர்பாகவும் ஆராயப்பட வேண்டும்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியானது கிழக்கு மாகாணத்தை தலைமைத்துவமாகக் கொண்டு கிழக்கு மாகாண மக்களுக்கு குரல் கொடுக்கும் ஒரு கட்சியாக உருவாக்கப்பட்ட ஒரு கட்சியாகும். இக் கட்சி எந்த நோக்கத்துக்காக உருவாக்கப்பட்டதோ அந்த நோக்கத்திலிருந்து விலகிச் செல்லாமல் கிழக்கு மாகாண மக்களின் தனித்துவக் கட்சியாக கிழக்கின் துரித அபிவிருத்தியில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது.

இக் கட்சியானது பல சவால்களுக்கும் பல உயிர்ப்பலிகளுக்கும் மத்தியில் உருவாக்கப்பட்ட கட்சி. தற்பொது கிழக்கு மாகாணத்தில் இடம்பெறும் துரித அபிவிருத்தித் திட்டங்கள் முதலமைச்சரின் தூர நோக்கிலான சிந்தனை செயற்பாடு கட்சியின் கொள்கைகள் என்பவற்றால் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியினர் கிழக்கிலே பலமான ஒரு கட்சியாக வேருன்றி வருகின்றனர். தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி கிழக்குக்கான ஒரு தலைமைத்துவம் வேண்டும் கிழக்கிற்கு தனியான ஒரு கட்சி வேண்டும் எனும் அடிப்படையில் உருவாக்கப்பட்ட கட்சி. அதன் அடிப்படையில் கிழக்கு மாகாணசபை தேர்தலிலும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலிலும் போட்டியிட்டு கிழக்கு மாகாணசபையை கைப்பற்றியதுடன் பல உள்ளுராட்சி மன்றங்களையும் கைப்பற்றி கிழக்கு மாகாணசபை மூலம் கிழக்கு மாகாணம் தூரிதமாக அபிவிருத்தி அடைந்து வருகின்றது.

இக் கட்சியின் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த முதலாவது தேசிய மாநாட்டுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வரும் இவ் வேளையில் கட்சியின் உருவாக்கத்திற்கு பக்க பலமாக இருந்து கிழக்கினதும் கட்சியினதும் முன்னேற்றத்தின் பக்க பலமாக இருந்து செயற்பட்ட படுகொலை செய்யப்பட்ட கட்சியின் முன்னாள் தலைவர் குமாரசாமி நந்தகோபன்(ரகு) அவர்கள் இவ் வேளையில் நினைவு கூரப்படவேண்டும். குமாரசாமி நந்தகோபன் அவர்கள் படுகொலை செய்யப்பட்டாலும் தற்போதைய கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான சந்திரகாந்தன் அவர்கள் கட்சியை மக்கள் மயப்படுத்தும் முயற்சியில் பல திட்டங்களை செயற்படுத்தி வருகின்றார்.

கட்சி உருவாக்கப்பட்ட ஆரம்பகாலத்தில் கட்சிக்கு பெரும் வரவேற்பு இருந்தாலும் பின்னர் படிப்படியாக மக்கள் ஆதரவு குறைந்திருந்தது. இதற்கான காரணம் கருணா பிள்ளையான் இருவருக்குமிடையிலான கருத்து முரண்பாடும் பிரிவுமாகும். இதனை சாதகமாகப் பயன்படுத்திய தமிழ் ஊடகங்கள் கட்சி தொடர்பாகவும் முதலமைச்சர் தொடர்பாகவும் தவறான கருத்துக்களை வெளியிட்டன. கருணா அம்மான் புலிகள் அமைப்பிலிருந்து விலகி வந்தபோது அவர் பிரிவிற்கான காரணத்தை சொன்னபோது கிழக்கு மக்கள் அவரை 100 வீதம் நம்பினர். அவர் அன்று சொன்ன விடயங்கள் கிழக்கு மக்கள் வடக்கு தலைமைகளால் ஏமாற்றப்படுகின்றார்கள் கிழக்குக்கு ஒரு தலைமைத்துவம் வேண்டும் கிழக்கில் ஒரு கட்சி வேண்டும் என்று சொன்னவர் தனது நோக்கத்திலிருந்து விலகி அரசுடன் இணைந்து கொண்டதனால் மக்கள் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியையும் கருணாவையும் ஒன்றென நினைத்துவிட்டனர்.

இது ஒரு புறமிருக்க கருணா அம்மானின் குழுவைச் சேர்ந்தவர்களின் அடாவடித்தனங்கள் மலிந்திருந்தன. அவர்கள் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் எனும் பெயரில் இயங்கியவர்கள் என்பதனால் கருணா குழுவினர் செய்யும் அடாவடித்தனங்கள் அனைத்தும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்தான் செய்கின்றனர் எனும் தப்பான அபிப்பிராயம் மக்கள் மத்தியில் இருந்தன. ஊடகங்களும் இதனை மிகப்படுத்தி பரப்புரை செய்ய ஆரம்பித்தன. இக்கால கட்டத்தில்தான் பாராளுமன்றத் தேர்தல் இடம்பெற்றன அப்போது பல சவால்களுக்கு மத்தியில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி போட்டியிட்டாலும் 25 ஆயிரத்தக்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்றிருந்தனர். இத் தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி போட்டியிட்டிருக்க வில்லை எனில் முஸ்லிம்களின் பாராளுமன்றப் பிரதிநிதித்தும் அதிகரித்திருக்கும்.

தொடர்ந்தும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தமது கட்சியினை வலுப்பெற செய்வதில் பல முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வருகின்றனர். தமது கட்சியின் நிலைப்பாடுகள் தொடர்பாக கட்சியின் ஆதரவாளர்களுக்கும் மக்களுக்கும் தெளிவுபடுத்தப்பட்டு வருகின்றது. அத்துடன் கட்சியானது முற்றிலும் மக்கள் மயப்படுத்தப்பட்டு மக்கள் கட்சியாக மாற்றம் பெற்றிருக்கின்றது. கட்சியில் கிழக்கைச் சேர்ந்த பல படித்த புத்தியீவிகள் இணைக்கப்பட்டுள்ளதுடன் கட்சியில் உள்வாங்கப்பட்டு இளைஞர்களுக்கு பதவிகள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.

மறு புறத்திலே சர்வதேச ரீதியிலும் தமது கட்சியின் கொள்கைகள் நிலைப்பாடுகள் தொடர்பாகவும் கிழக்கிலே இடம்பெறுகின்ற அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாகவும் தெளிவு படுத்தும் செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.அண்மையில் முதலமைச்சர் மற்றும் மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் உள்ளிட்ட குழுவினர் இரண்டுவார கால ஐரோப்பிய நாடுகளுக்கான விஜயத்தினை மேற்கொண்டிருந்தனர். பிரான்ஸ், ஜேர்மன், டென்மார்க் போன்ற நாடுகளில் வாழும் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்களை சந்தித்து தமது கட்சியின் கொள்கைகள நிலைப்பாடுகள் கிழக்கிலே இடம்பெற்று வரும் அபிவிருத்திகள் தொடர்பாகவும் பேசப்பட்டிருக்கின்றது.

இச்சந்திப்புக்களில் புலம்பெயர் கிழக்கு மாகாண முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொண்டிருக்கின்றனர். இவர்கள் கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்திக்கு தமது பங்களிப்பினை வழங்குவதாக உறுதியளித்துள்ளனர். அத்துடன் பல முக்கியமான விடயங்கள் தொடர்பாக பேசப்பட்டதாகவும் மாகாண சபை உறுப்பினர் பூ. பிரசாந்தன் தெரிவித்தார். அத்துடன் தாம் எதிர்பார்த்ததைவிட அதிக வரவேற்பு தமக்கு கிடைத்ததாகவும் புலம்பெயர் கிழக்கு மாகாண மக்கள் கிழக்கு மாகாணம் அபிவிருத்தி செய்யப்படவேண்டும் எனும் நிலைப்பட்டில் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

இது ஒரு புறமிருக்க மத்திய கிழக்கு நாடுகளிலும் வாழும் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்களிடமும் கட்சியின் கொள்கைகள் நிலைப்பாடுகள் கிழக்கின் அபிவிருத்தி தொடர்பாகவும் தெளிவு படத்தப்பட்டு வருவதாக அறிய முடிகின்றது. கடந்த வருடம் கட்டாரில் கிழக்கு மாகாண தமிழர்கள் இருக்கும் இடங்களில் குறிப்பிட்ட சிலரால் கட்சியின் கொள்கைகள் நிலைப்பாடுகள் கிழக்கில் இடம்பெறும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாகவும் விளக்கமளிக்கப்பட்டதாகவும் அறிய முடிகிறது. கட்டாரில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் ஆதரவாளர்கள் பலர் இருப்பதாவும் இவர்களால் இச் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அறிய முடிகின்றது.

முதலமைச்சரின் அபிவிருத்தித் திட்டங்களின் தொகுப்பாக வெளியிடப்பட்ட இறுவட்டக்கள் இரண்டு பகுதிகளும் கட்டாரில் கிழக்கு மாகாணத்தவர்கள் வாழும் இடங்களில் அதிகம் உலாவுவதாகவும் அறிய முடிகின்றது.தொடர்ந்து கட்சியை மக்கள் மயப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட இருப்பதாகவும் அறிய முடிகின்றது.

இவ்வாறு சென்று கொண்டிருக்க கட்சி மாநாட்டிற்கான வேலைகள் துரிதமாக இடம்பெற்று வருகின்றன. இம் மாநாடு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கு மட்டுமல்லாது கிழக்கு மாகாணத்தில் இருக்கின்ற ஒட்டுமொத்த மக்களுக்கும் ஒரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வாக அமைய இருக்கின்றது. கிழக்கு மாகாணத்துக்காக உருவாக்கப்பட்ட ஒரு கட்சி. கிழக்கு மாகாணத்தை ஆட்சி செய்கின்ற கிழக்கு மாகாணத்தை துரித அபிவிருத்திப் பாதைக்கு இட்டுச் செல்கின்ற ஒரு கட்சியின் மாநாடு இடம்பெற இருக்கின்றது. அதுவும் இதுவரை கிழக்கு மாகாணத்திலே இடம் பெறாத அளவிற்கு சிறப்பாக இம் மாநாடு இடம்பெறுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக அறிய முடிகின்றது.

இம் மாநாடானது கட்சியால் ஏற்பாடு செய்யப்பட்டது என்பதனைவிட கிழக்கு மாகாண மக்களால் ஏற்பாடு செய்யப்பட்டது என்று சொல்வது பொருத்தமானது என்று நினைக்கின்றேன். காரணம் மாநாட்டுக்கான ஏற்பாடுகளை கிழக்கு மாகாண மக்களும், கிழக்கு மாகாணத்திலே இருக்கின்ற பல சமூக அமைப்புக்களுமே  செய்து வருகின்றனர். இம் மாநாட்டுக்கான மக்கள் பங்களிப்பு என்பது அதிகமாக இருக்கின்றது.

இம் மாநாட்டை கிழக்கு மாகாண மக்கள் எதிர்பார்ப்புடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். பலரது மனங்களிலே ஏதோ ஒரு எதிர்பார்ப்பு தென்படுகின்றது.

அடுத்த பகுதியில் இம் மாநாடு கிழக்கு மக்களுக்கும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கும் எவ்வாறான நன்மைகளை பெற்றுத்தரப் போகின்றன இம் மாநாட்டின் பின்னர் கிழக்கு மாகாணத்தின் தலைவிதி எவ்வாறு மாற்றமடையும் போன்ற விடயங்களை ஆராய்வோம்.

தொடரும்
read more...