Showing posts with label மதம். Show all posts
Showing posts with label மதம். Show all posts

Thursday, 4 October 2012

மதச் சண்டை போடும் மதம் பிடித்தவர்களே சண்டையை நிறுத்துங்கள்


இது என்னுடைய 500வது பதிவு

மிக நீண்ட காலத்துக்குப் பின்னர் வலைப்பதிவுகளை கடந்த 10 நாட்களாக வலம் வந்தேன். பதிவுலகத்தில் என்ன நடக்கின்றது என்பதனை அறிந்துவிட்டத்தான் எனது 500 வது பதிவை எழுதவேண்டும் என்ற எண்ணத்தில் 10 நாட்களும் பதிவுலகை வலம் வந்தேன். நீண்ட நாட்களாக அரசியல் தவிர்ந்த ஏனைய பதிவுகளை எழுதவில்லை என்பதனால் நிறைய விடயங்களை எழுதவேண்டும் எதனை எழுதுவது என்ற திண்டாட்டமும் இருந்தது.

வலைப்பதிவுகளைப் பார்க்கின்றபோது எனக்குள் நானே சிரித்துக் கொண்டேன். மதச் சண்டைகள் ஓய்ந்தபாடில்லை மதத்துக்காகச் சண்டை மதச்சண்டை நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றது.. இதில் வேடிக்கை என்னவென்றால் அன்று கிழக்கிலே தமிழர்களுக்கு எதிராக முஸ்லிம்களால் மேற்கொள்ளப்படும் அடக்கு முறைகள் பற்றியும் தமிழ் பெண்களை முஜஸ்லிம் இளைஞர்கள் காம இச்சைகளை தீர்த்துக் கொள்ள பயன்படுத்துவது தொடர்பாகவும் ஆதாரங்களுடன் எழுதியிருந்தேன் அவ்வாறு முஸ்லிம்களுக்கு எதிராக நான் எழுதியதற்கு முதன் முதலில் போர்க்கொடி து+க்கியவர்களே இன்று இஸ்லாமிய மதத் தீவிரவாதிகளுக்கு  எதிராக மதச் சண்டை செய்கின்றனர்.

மதங்கள் புனிதமானவைவதான் ஆனால் சில மத வெறியர்கள் மதத்தைவைத்து மதவெறி பிடித்து அலைகின்றனர் என்பதே உண்மை. 

இதில் இஸ்லாம் மட்டுமல்ல அனைத்து மதத்திலும் மதவாதிகள் இருக்கின்றனர். ஆனாலும் இஸ்லாத்தில் மத தீவிரவாதிகள் அதிகம் என்றுதான் என்னுள் தோன்றுகின்றது. அமேரிக்காவில் இஸ்லாத்திற்கு எதிராக ஒரு திரைப்படம் வெளியிடப்படுகின்றது என்றால். எதற்காக இலங்கையில் வீதியால் செல்லும் வாகனங்களுக்கு கல்லெறிய வேண்டும். ஒருவருக்கு மத சுதந்திரம் இருக்கலாம் ஆனால் அது இன்னொருவரின் மூக்கில் கை வைக்கும் அளவிற்கு இருக்கக்கூடாது.

வலைப்பதிவில் எழுதுவதற்கு எத்தனையோ விடயங்கள் இருக்கின்றன அவற்றை எழுதலாம் வெறுமனே மத வெறியர்கள் போல் சண்டை பிடிப்பதை விட்டுவிடுங்கள். ஒருசிலர் மதத்தை வைத்து வலைப்பதிவில் சண்டை பிடிப்பது நல்ல விடயமல்ல. பல இணையத்தளங்கள் மதம் சார்ந்து எழுதுகின்றன அவை இவ்வாறு சண்டை பிடிப்பதாகத் தெரியவில்லை. ஒருசில இஸ்லாமிய நண்பர்கள் இஸ்லாமிய மதம் சார்ந்து எழுதுகின்றோம் என்று ஏனைய மதங்களையும் சாடுவது தவறானது. 

இந்து மதம் பற்றி பலர் எழுதுகின்றனர் அவர்கள் இஸ்லாத்தை சாடுகிறார்களா? இல்லையே. நான் இந்து மதத்தை அதிகம் நெசிப்பவன் என்னாலும் இந்து மதத்தை முன்னிலைப்படுத்தி ஏனைய மதங்களை சாடி எழுத முடியும் ஆனாலும் ஏனைய மதங்களையும் நேசிக்கின்றேன். 

மதத்தை வைத்து வலைப்பதிவுலகில் சண்டை பிடிப்பவர்கள் மதச் சண்டைகளை நிறுத்துங்கள் 
read more...

Wednesday, 28 March 2012

இந்து மதத்தை கேவலப் படுத்த நினைக்கிறதா தமிழ்மணம் பதிவர்களே ஒன்று படுங்கள்

தமிழ் முன்னணி வலைப்பதிவுத் திரட்டி என்று எல்லோராலும் சொல்லப்பட்ட தமிழ்மணம் இன்று பக்கம் சார்ந்து செயற்பட்டு பல அடாவடித்தனங்களையும் செய்து வருகின்றது. இந்த தமிழ் மணம் திரட்டியானது இவ்வாறான நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும்.

அண்மையில் எனது வலைப்பதிவு தமிழ்மணம் திரட்டியில் இருந்து நீக்கப்பட்டது நீக்கப்பட்டதற்கான காரணம் சரியான காரணம் இல்லை சமூகம் சார்ந்து பல பதிவுகளை எழுதிவரும் நான் சமூகத்தில் இருக்கின்ற சீர்கேடு தொடர்பாக பதிவிட்டு அரை குறை ஆடையுடனான புகைப்படம் ஒன்றையும் வலைப்பதிவில் இணைத்தேன். பின்னர் உடனே அதனை நீக்கிவிட்டேன். நான் ஒருபோதும் இவ்வாறான புகைப்படங்களை பதிவிடவில்லை. அதுவே முதல் தடவை. இது என் பதிவு நீக்கப்பட்டமைக்கு காரணம் அல்ல. 

அவர்கள் நீக்கியதற்கு காரணம் காட்டிய பதிவு

என் வலைப்பதிவு நீக்கப்பட்டமைக்கு காரணம் எனது

 எனும் பதிவே காரணம். இப் பதிவு தொடர்பில் ஒட்டு மொத்த மஸ்லிம்களையும் நான் சாடியிருப்பதாகவும் என் வலைப்பதிவை தமிழ் மணத்திலிருந்து நீக்கும்படியும் பலர் தமிழ் மணத்தை கேட்டிருந்தனர்.

இதனையும் பாருங்கள்.


அண்மைக் காலமாக் இந்து மதத்தினை கேவலப்படுத்துகின்ற பல பதிவுகள் தமிழ் மணத்தில் இணைக்கப்படுகின்றன. அவற்றை முதலிடத்திற்கு தமிழ்மணம் மகுடம் சூட்டி அழகு பார்க்கின்றது. இவ்வாறு இந்து மதத்தினை கேவலப்படுத்தும் பதிவுகளை தமிழ்மணம் நீக்காததன் நோக்கம் என்ன?

முஸ்லிம்களையும் இஸ்லாத்தையும் விமர்சித்தால் உடனே நீக்குகின்ற தமிழ்மணம் இந்து மதத்தினை கேவலமாக விமர்சிக்கும் பதிவர்களுக்கும் பதிவுகளையும் முதலிடத்தில் வைத்து அழகு பார்ப்பது ஏன்?

அனைத்து பதிவர்களும் இவ்விடயம் தொடர்பாக உடனடியாக தமிழ்மணத்திற்கு மின்னஞ்சல் அனுப்புங்கள் இந்து மத்தினை கேவலப்படுத்தி வெளியிடப்படும் பதிவுகளை நீக்கும்படி. 

முன்னைய பதிவு


read more...

Sunday, 4 July 2010

இந்து சமயமும் மூட நம்பிக்கைகளும்


எனும் பதிவிலே நான் அதீத கடவுள் நம்பிக்கை கொண்டவன் என்றாலும் இவ்வாறன விடயங்களை நம்புவதில்லை என்று குறிப்பிட்டிருந்தேன்.  நான் இவ்வாறான விடயங்களை நம்பாததட்கு காரணம் இன்று பலர் தாம் பணம் உழைப்பதற்காக இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.

சிலைகள் நிலத்தின் கீழிருந்து கண்டெடுக்கப்படலாம். அது எமது முன்னோர்கள் பயன்படுத்தியவைகளாக இருக்கலாம். அவை இன்று எமது கண்களில் பட்டிருக்கலாம். ஆனால் சிலர் இவற்றை வைத்து பணம் உழைக்க முற்படுகின்றனர்.
அதனாலேயே இன்று மக்கள் இவ்வாறான விடயங்களையோ, கடவுளையோ நம்புவதிலிருந்து விலகி  செல்கின்றனர்.

நாங்கள் சுனாமிக்கு முன்னர் கடற்கரைப் பிரதேசத்திலே இருந்தோம். இப்பொழுது வேறு இடத்துக்கு மாறி இருக்கின்றோம். இப்பொழுது இருக்கின்ற இடம் முன்னர் பாரிய பள்ளமும், மேடுமாக  இருந்தது. அவற்றை சம தரையாக்கி எடுத்திருக்கின்றோம்.

வீட்டிலேயே சிறு பையன் (மருமகன்) இருக்கிறான் அவன் தனது மோதிரத்தைக் தொலைத்துவிட்டான். அப்போது நிலத்திலே அம்மா தேடிக்கொண்டிருக்கும்போது. அம்மாவின் கையிலே வெண்கலத்தாலான பிள்ளையார் சிலை ஒன்று கிடைத்தது. அவற்றை இப்பொழுதும் எங்கள் வீட்டில் வைத்து வணங்கி வருகின்றோம். நாங்களும் நிலத்திலிருந்து சிலை வந்துவிட்டது என்று பெரிதுபடுத்தி இருந்தால் நிலை வேறு.

இன்று பல இடங்களிலே இவ்வாறான நிகழ்வுகள் சாதாரணமான ஒன்றாகிவிட்டது. பலர் இதை வைத்து உழைத்துக் கொண்டிருக்கின்றனர். இன்று நடக்கின்ற சில நிகழ்வுகளைப் பார்க்கின்றபோது எமது சமயம் செல்கின்ற பாதையை நினைத்து கவலைப் படுவதுண்டு.

கிராமங்களிலே சொல்வார்கள் தெய்வம் ஆடுதல் என்று. இன்று பல மனிதர்களை தெய்வம் பிடித்து ஆட்டிக்கொண்டிருக்கிரதாம். அல்லது தெய்வத்தை இவர்கள் பிடித்து ஆட்டிக் கொண்டிருக்கிறார்களோ தெரியவில்லை.

இப்போது அடிக்கடி ஏன் காதில் விழுகின்ற விடையன். அவர் தெய்வம் ஆடுகிறாராம், இவர் தெய்வம் ஆடுகிறாராம், அம்மன் பார்வையாகிவிட்டாராம், அம்மன் வாக்கு கொடுத்திருக்கிறாராம், சில நாட்கள் தெய்வம் ஆடப்படும் பின்னர் பார்த்தால் வீட்டருகே சோதிட நிலையம் என்று பெயர்ப்பலகை இருக்கும். சாஸ்த்திரம் சொல்லப்படும். இவ்வாறு பலர் உழைத்துக்கொண்டிருக்கின்றனர். கடவுள் பெயரை சொல்லி.

இவ்வாறான ஒரு சிலரின் நடவடிக்கைகளால்தான் இன்று கடவுள் நம்பிக்கை இல்லாமல் போகின்றது.  இவ்வாறு தெய்வம் ஆடுபவர்கள் தங்களை கடவுளாக காட்டிக் கொள்கின்றனர். அம்மன் சொல்கிறார் என்று தாங்களாகவே பல கதைகளை சொல்கிறார்கள்.

இவர்கள் கடவுளைவிட மேலானவர்களாகிவிட்டார்களா?  கடவுளோடு பேசுகின்ற நிலையில் இருக்கின்றார்களா?  சரி அப்படியானால் ஏன் கடவுள் இவர்களிடம் சொல்லவேண்டும்? கடவுள் நேரடியாக வந்து சொல்லலாம்தானே.

இது ஒரு புறமிருக்க பலர் இவர்களை நம்பி சாஸ்த்திரம் (சோதிடம்)  பார்க்கப்போகிறோம் என்று அலைந்து திரிவதுதான் கவலைப்படவேண்டிய விடயம்.
இவர்களெல்லாம் திருந்துவார்களா?
read more...

Monday, 28 September 2009

மதத்தின் பெயரால் பிழைப்பு நடத்துகின்றார்களா?

நான் 100% கடவுள் நம்பிக்கையும், கடவுள் மீது அளவற்ற நம்பிக்கையும் கொண்டவன். இன்று எமது இந்து மதம் போகிற போக்கைப் பார்த்தால் மதமும் மண்ணாங்கட்டியும்..என்று லோஷன் அண்ணா சொல்வது சரிதானோ என்று எண்ணத் தோன்றுகின்றது.
எமது இந்து மதம் ஆதியும் அந்தமும் இல்லாத ஒன்று, இறைவன் ஒருவனே அவனை பல அவதாரங்களிலே காண்கின்றோம் என்றெல்லாம் சொல்கின்றோம். இது முற்றிலும் உண்மையே.

எமது இந்துக்கள் ஆதியும் அந்தமும் இல்லாத கடவுளை வணங்குகின்றோம். எமது இந்துக்களிடையே இப்போது மனிதர்களாகப் பிறந்தவர்களை வணங்குகின்ற ஒரு நாகரிகம் பரவிவருகின்றது. இது சரியா? மனிதர்களை வணங்குபவர்களை ஆதியும் அந்தமும் இல்லாத இறைவனை வணங்கும் நாம் எப்படி இந்துக்களாக ஏற்றுக்கொள்ள முடியும்.

இந்த இடுகை இடுவதற்கு காரணம் நண்பர் கனககோபியின் மதத் திணிப்புகள் கெளரவமான வடிவில்... எனும் இடுகையும் வந்தியின் வேட்டைக்காரன், அம்மா பகவான் சில எதிர்வினைகள். எனும் இடுகையும் காரணமாக இருந்தாலும் எனது நண்பர்களோடு நான் அடிக்கடி சண்டை செய்கின்ற விடயமே இந்த அம்மா பகவானை வணங்குதல் விடயம்.

அம்மா பகவான் மட்டுமல்ல இன்று இந்துக்களிடையே பல மனிதர்களை கடவுளாய் சித்தரித்து வணங்குகின்ற ஒரு நோய் பரவிவருவதோடு அவர்களுக்குள்ளே போட்டி அதிகரித்துவிட்டது. இன்று எத்தனை அமைப்புக்கள் தங்கள் தங்கள் பாட்டிலே பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றன. இன்று எமது ஆதியும் அந்தமும் இல்லாத கடவுளர்களை முக்கியத்துவப்படுத்துவதைவிட மனிதர்களாகப் பிறந்தவர்களை முக்கியத்துவப்படுத்துகின்றனர்.

இவர்கள் தங்களைப் பிரபல்யப்படுத்துவதட்காக சில பிரச்சாரங்களில் ஈடுபடும்போது அது இந்து சமயக் கோட்பாடுகளிலிருந்து வேறுபடுகின்றன. அத்தோடு இப்படியான மனிதக் கடவுளர்களின் தோற்றத்தால் கடவுள் மீது இருக்கின்ற நம்பிக்கையினை மக்கள் இழக்கின்றனர்.

இந்துக்களாகிய நாம் ஏன் மனிதர்களை வணங்கவேண்டும்? தெய்வமாகப் போற்றவேண்டும்? இங்கே வணங்கப்படுகின்றவர்கள் என்ன செய்தார்கள்? ஏன் கடவுளை வைத்து பிழைப்பு நடத்துகின்றீர்கள்? இன்று பல தியாகங்களைச் செய்தவர்கள் இருக்கின்றனர். அவர்களையும் வணங்கலாமல்லவா? இன்று நாம் அப்படி வணங்கப்போனால் பல ஆயிரம் மனிதக் கடவுளர்கள் உருவாகலாமல்லவா?

கனககோபியின் பதிவிலே அனானி இட்ட பின்னூட்டங்களில் ஒன்று கீழே


//பெயரில்லா சொன்னது…


உமது கருத்து ஒரு வட்டம் அதாவது அம்மாபகவான் மீது குறை கூறுவதாக மட்டும் தான் இருக்கிறது தற்பொழுது அம்மாபகவான் கல்கி அவதாரம் என்றுதான் பக்தர்கள் வணங்குகிறார்கள். சாய்பாபா கிருஷ்ண அவதாரம் என்று சொல்லுராங்க.சாய் பாபா பற்றிய இன் வீடியோ ஆதாரம் என்னிடம் உண்டு வேண்டுமென்றால் அனுபிறேன். ஆதாரம் இல்லாமல் பேசப்பிடாது..நான் பாடசாலை படித்த காலத்தில் செவ்வாய் தோறும் பாபா பஜனை நடக்கும்.இது வற்புறுத்தல் இல்லையா. தம்பி பாபாவை விட தற்பொழுது அம்மா பகவனை வணங்குவோர் அதிகம்
//

இந்த பின்னூட்டம் மூலம் பல விடயங்களை அறிய முடிகின்றதல்லவா. மனிதர்களை வணங்குவோரின் போட்டி எப்படி இருக்கின்றது என்று. ஒரு பகவானை வணங்குவோர் இன்னொரு பகவானை ஆதார பூர்வமாக வீடியோ மூலம் பிடித்துக்கொடுக்க நினைக்கின்றார்.

அடுத்து இங்கே அவதாரம் பற்றிச் சொல்கின்றார். இது இந்த மனிதர்களை இறைவனாக போற்றுகின்றவர்கள் மக்களை தன பக்கம் இழுப்பதற்கு புனையப்பட்ட கட்டுக்கதைகளே. அப்படியானால் நானும் ஒரு கடவுளின் அவதாரம் என்று சொல்லலாமா?

இன்று பலர் அம்மா பகவானை வணங்குவதாக குறிப்பிடுகின்றார். இன்று தங்களை கடவுளாக மக்கள் நினைக்க வேண்டும் என்பதற்காக அவர்களால் பயன் படுத்தப்பட்ட மந்திர தந்திரங்களும் போலி நாடகங்களும் பிரச்சாரங்களுமே மக்கள் உண்மையான கடவுள் மீது இருக்கும் நாட்டத்தைவிட்டு போலி கடவுளர்களை தேடிப்போவது.

ஏன் நாம் இவர்களை வணங்கவேண்டும்? உண்மையான சிவபெருமான் போன்ற கடவுளர்களைவிட இவர்கள் என்ன செய்திருக்கின்றார்கள்? இந்துக்கள் என்போர் யார்? இவர்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்கள்?

கடவுளை வைத்து பிழைப்பு நடத்துவோர் பலர் அவர்களை உண்மையான இந்து ஒரு போதும் நம்பி ஏமாற மாட்டான். கடவுளின் பெயரால் பிழைப்பு நடத்த நினைப்பவன் என்றுமே இந்து மதத்துக்கு துரோகம் செய்து கொண்டே இருப்பான்.

இதனையும் பாருங்கள். எனது முன்னைய இடுகை
read more...