Tuesday 30 June 2009

திருந்துவார்களா இவர்கள்.....

இன்று இலங்கையை பொறுத்தவரை எல்லாமே ஒட்டு மொத்தத்தில் இன்று சாதாரண மக்களை விட படித்து பெரிய பதவிகளில் இருப்பவர்களில் சிலர்தான் பல குற்றச் செயல்களிலும் லஞ்சம் வாங்குதல் போன்றவற்றிலும் ஈடுபடுகின்றனர்.

இன்று பல்வேறுபட்ட விடயங்கள் பற்றி இந்த பதிவினுடாக தர இருக்கின்றேன். என்று லஞ்சம் வாங்குதல் என்பது இலங்கையையும் தொற்றி விட்ட ஒன்றாக மாறி இருக்கின்றது. இன்று இந்த காரியங்களில் பல உயர் அதிகாரிகளும், அரசியல் வாதிகளுமே அதிகம் ஈடுபடுகின்றார்கள் என்று சொல்லலாம். இன்று உயர் அதிகாரிகளை பொறுத்தவரை (எல்லோரும் இல்லை நல்ல அதிகாரிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள்) எதற்கு எடுத்தாலும் லஞ்சம் வாங்கிக்கொண்டு இருக்கின்றார்கள் இதனால் அதிகம் பாதிக்கப்படுவது அப்பாவி ஏழை மக்கள்தான்.

இன்று பணம் இருந்தால் எதையும் சாதித்து விடலாம். பணம் படைத்தவர்களுக்கு எல்லாமே சர்வ சாதாரணமாகிவிட்டது. காசிருந்தா வாங்கலாம் எல்லாவறைறயும். இன்று இலங்கையை பொறுத்தவரை உயர் அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதனால் அதிகம் பாதிக்கப்படுவது கீழ்மட்ட மக்களே.

இன்று என்ன நடக்கின்றது எதற்கு எடுத்தாலும் லஞ்சம். இன்று படித்த இளைஜர்கள் வேலை இல்லாமல் திண்டாடிக்கொண்டு இருக்கின்றார்கள். அதிலும் சாதாரண குடும்பத்தில் பிறந்து படித்து பட்டம் பெற்ற ஒரு பட்டதாரி படும்பாடு கேட்கவேண்டியதில்லை. அவன் படிப்பதற்கோ அவன் பட்ட கஷ்டம் வேறு. எப்படியோ கஷ்டப்பட்டு படித்து பட்டம் பெற்று வெளியே வந்து வேலைக்கு போகலாம் என்று நினைத்தால் அவன் ஏறி இறங்காத அலுவலகமில்லை போகாத நேர்முக பரிட்சை இல்லை. வேலைதான் கிடைத்த பாடில்லை. ஆனால் கஷ்டப்பட்டு படிக்காமல் குறுக்கு வழியில் வந்த இன்நொருத்தனுக்கு அந்த வேலை கிடைக்கிறது. எப்படித்தான் இவன் படித்து பட்டம் பெற்றாலும் இவனிடம் பணம் என்னும் தகுதி இருக்கவில்லை.
இங்கே என்ன நடக்கிறது உயர் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் இருக்கும் வேலைகளை பேரம்பேசி விற்கின்றனர். தங்களது குடும்ப உறவுகள் அல்லது வேண்டப்பட்டவர்களுக்கு அந்த பதவிகளை கொடுக்கின்றனர். மற்றவர்களை ஏமாற்றுவதற்காக நீர்முகப்பரிட்சை நடாத்திவிடுவார்கள் ஆனால் ஏற்கனவே வேலை பேரம் பேசப்பட்டு விடும்.

சாதாரண குடும்பத்தில் பிறந்த இவனால் என்னதான் செய்யமுடயும். அந்த பதவிகளுக்கு அமர்த்தப்படுபவர்கள் சரியான தகுதியோடு வந்திருக்கிரார்களா என்று பார்த்தால் அவர்கள் அலுவலகங்களிலே படும் பாட்டை பார்த்தால் புரிகிறது.
அதுமட்டுமல்ல இன்று சில அரச அலுவலகங்களிலே மக்கள் சிறிய வேலைகளை செய்வதாக இருந்தாலும் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க வேண்டும். அப்பொழுதுதான் அந்த காரியம் நிறைவடையும். உயர் அதிகாரிகள் மட்டுமல்ல சில கீழ்மட்ட அதிகாரிகளும் இதிலே கில்லாடிகள். இவர்களிடம் அதிகம் மாட்டுப்படுவது கிராமப்புற மக்களே.
லஞ்சத்தை ஒழிக்க வேண்டியவர்களே லஞ்சம் வாங்குவது சர்வ சாதாரணமாகிவிட்டது. இன்று ஒருசில பொலிஸ் அதிகாரிகள் நன்றாகவே உழைக்கின்றார்கள். பல்வேறு வழிகளில்...... (வேண்டாம் சொன்னால் சிக்கலில் மாட்டிவிட்டேன் என்றால்.....)
அதேபோல் சிலர் முக்கிய பொறுப்பு வாய்ந்த அதிகாரியாக இருப்பார்கல் ஆனால் அவரோ பல ஊளல்களில் ஈடுபடுவார். இயட்கையை பாதுகாக்க வேண்டியது எமது கடமையல்லவா. இன்று எமது வளங்கள் அளிக்கப்பட்டு வருகின்றன. இந்த இயட்கை வளங்களை நாசம் செய்வதிலே பல உயர் அதிகாரிகள் அரசியல்வாதிகள் ஈடுபடும் போது அவர்களை தட்டிக்கேட்பதற்கு மக்களோ மற்றும் அதனோடு தொடர்புடையவர்களுக்கோ முடியாத காரியம்........ என்ன நடந்தது.... அடுத்த அடுத்த பதிவுகளில் தொடரும்....
read more...

Monday 29 June 2009

இன்றைய நம் சிறுவர்களின் எதிர்காலம்??????



இன்று இலங்கையிலே மிஞ்சி இருப்பது என்ன கிராமத்துக்கொரு சிறுவர் இல்லங்களேதான். (அநாதை இல்லம் என்று சொல்லவேண்டாம் அவர்கள் அனாதைகள் இல்லை அனாதைகள் ஆக்கப்பட்டவர்கள்) நாட்டில் நடந்து வந்த உத்த சூழ்நிலையின் காரணமாக இன்று சிறுவர்களே அதிகம் பாதிக்கப்பட்டு இருக்கின்றார்கள்.



இவர்கள் தாய் தந்தையரை இழந்த நிலையில் சிறுவர் இல்லங்களிலே ஏங்கிக்கொண்டு இருக்கின்றார்கள் தனது தாய் தந்தையரோடு, உறவினர்களோடு சந்தோசமாக வாழ வேண்டியவர்கள் இன்று பல இன்னல்களுக்கு மத்தியிலும் தமது வாழ் நாளைகளித்துக்கொண்டு இருக்கின்றார்கள். எத்தனை சிறுவர்கள் தாய் பாசத்துக்காக ஏங்கிக்கொண்டு இருக்கின்றார்கள். ஏனைய சிறுவர்கள்போல் தாங்களும் வாழ வேண்டுமே என்று ஏங்கிக்கொண்டு இருக்கின்றார்கள். இந்தச் சிறுவர்களால் தங்களது ஆசா பாசங்களை கட்டுப்படுத்தி எப்படித்தான் வாழ முடயும். சந்தோசமாக வாழ வேண்டிய சிறுவர்கள் இன்று விரக்தி நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள்


சந்தோசமாக தமது வாழ்நாளைகளிக்க வேண்டிய நாளைய நம் தலைவர்கள் சந்தோசமாக சிறுவர் இல்லங்கல்ளிலே வாழ்வார்களா? அவர்களால் படிப்போ அது சார்ந்த செயற்பாடுகளிலோ எப்படி ஈடுபட முடயும். எப்போதும் அவர்களை தாங்கள் அனாதைகள் என்றும் தங்களுக்கு யாரும் இல்லையே என்ற ஏக்கமுமே இருக்கும். சிறுவர் இல்லங்களிலே இருக்கின்ற சிறுவர்கள் தங்களுக்கு தேவையானவற்றை ஏனைய சிறுவர்கள்போல் பெற்றுக்கொள்ளத்தான் முடயுமா


இந்த சிறுவர் இல்லங்களிலே ஆண் பிள்ளைகள் மட்டுமல்ல பெண் பிள்ளைகளும் இருக்கின்றார்கள். இந்த பெண் பிள்ளைகளின் எதிர்காலத்தை பற்றி யோசித்துப்பாருங்களேன். ஆண் பிள்ளைகளோ ஒரு குறிப்பிட்ட வயதை அடைந்ததும் எல்லாம் சரியாகிவிடும் ஆனால் பெண் பிள்ளைகளைப் பொறுத்தவரை பல பிரட்சனைகளை எதிர்நோக்க வேண்டி ஏற்படுகின்றது. தங்களது வயது அதிகரிக்க அதிகரிக்க அவர்களுக்கு கவலையும் விரக்தியும் அதிகரிக்கின்றது. தங்களுக்கு யாரும் இல்லையே என்ற ஏக்கம் வருகின்றது. தங்கள் எதிர் காலத்தை பற்றி சிந்திக்க தொடங்கி மனதை குழப்பிக்கொண்டே இருப்பார்கள்




அவர்களது எதிர்காலத்தை பற்றி அவர்களை விட நாமே சிந்திக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம். இன்றைய கால கட்டத்தில் பணக்கார வீட்டு பெண்களுக்கே சீதனம் என்ற ஒன்றினால் திருமணம் தள்ளப்பட்டுக்கொண்டு போகும் இந்த காலத்தில் இவர்களின் நிலை பற்றி நாம் சிந்திக்க வேண்டும்

இந்த பெண் பிள்ளைகள் தங்களது பருவ வயதை அடைந்ததும் பல பிரட்சனைகளை எதிர் நோக்குகின்றனர். இன்று நாகரிக மோகத்தில் இளம் பெண்கள் நாகரிகமான உடை, (நடை), அலங்காரங்களோடு திரிவதை கண்டால் இவர்களது மனதிலே எப்படி கவலை வராமல் இருக்கும்.
இந்த சிறுவர்கள், பெண் பிள்ளைகள் பற்றி யாரும் கவலைப்படுவதாகத்தெரியவில்லை அவர்களின் எதிர் காலம் பற்றி எவரும் சிந்திப்பாரும் இல்லை.

இந்த இடத்திலே நான் ஒன்றை குறிப்பிட வேண்டும் நான் இந்த பதிவினை மேற்கொள்ள துண்டியது எனக்கு தெரிந்த ஒரு அக்காவின் தாராள மனசுதான். அவரோ ஒரு பணக்கார குடும்பத்தை சேர்ந்தவர் தேயிலை தோட்டங்கள் எல்லால் இருக்கின்றன அந்தளவிற்கு பணம் படைத்தவர். ஆனால் ஏழைகளுக்கு உதவி செய்பவர். அவர் அடிக்கடி என்னிடம் கூறுவார் இந்த சிறுவர் இல்லங்களில் இருக்கின்ற பெண் பிள்ளைகளின் எதிர்காலம் பற்றி தான் சிந்திப்பதாகவும் கவலை அடைவதாகவும்.


அவர் அண்மையில் என்னிடம் கூறிய ஒருசில விடயங்களை என்னால் நம்ப முடியவில்லை அவருக்கு இரண்டு ஆண் பிள்ளைகள் இருக்கின்றார்கள். அவர்கள் இருவரையும் சிறுவர் இல்லங்களிலே இருக்கின்ற பெண் பிள்ளைகளுக்கே திருமணம் செய்து வைக்க நினைத்து இருப்பதாகவும். இதனால் அந்த பிள்ளையின் உறவுகளை இளந்த கவலை இல்லாமல் போவதோடு அந்த பிள்ளையின் எதிர் காலம் வளம் பெரும் என்றும். தாய் பாசத்துக்காக ஏங்கிய அந்த பிள்ளைக்கு தான் ஒரு தாயக இருக்க போவதாகவும் கூறினார். தனது மகன் கூட சம்மதம் தெரிவித்து விட்டார் என்பது சந்தோசமான விடயம்.


இப்படி எல்லோரு இருப்பார்களானால் இவர்களின் வாழ்க்கை வளப்படுமல்லவா.
read more...

Saturday 27 June 2009

எனது மின்னஞ்சல் திருடப்பட்டுவிட்டது...

எது என்னுடைய அவசர பதிவு நண்பர்களே. இன்று எனது நண்பர்கள் பலர் தொலைபேசி அழைப்பினை எடுத்து நான் ஹலோ சொல்லுமுன்னரே என்னை திட்டி தீர்த்துவிட்டார்கள். நான் என்ன என்று வினவியபோது எனது மின்னஞ்சல் முகவரியிலிருந்து பல தேவையற்ற படங்கள் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக கூறினார்கள்.
நான் அவசர அவசரமாக எனது மின்னஞ்சலை திறந்தபோது திறக்க முடியவில்லை. என்னதான் நடந்தது என்பது புரியாத புதிராகவே இருக்கின்றது. எனக்கு கலைத்துறையில் அதிக ஆர்வம் என்பதனால் நான் பல கலைஜர்களின் மின்னஞ்சல் முகவரிகளைகூட வைத்து இருந்தேன் அவர்களுக்கும் தேவையற்ற படங்கள் அனுப்பப்பட்டுள்ளன.
எனது வளர்த்சி பொறுக்க முடியாத சிலர் என்னை பல விதங்களிலே அட்சுருத்தி இருந்தார்கள் அதன் ஒரு அங்கமாகவே இன்று எனது மின்னஞ்சலில் நுழைந்து இருக்கிறார்கள் என்று நினைக்கின்றேன்.
எவர் என்ன செய்தாலும் என் முன்னேற்றத்தில் கடவுள் என்றும் துணை இருப்பார் என்ற நம்பிக்கை இருக்கின்றது.

நான் தற்போது shanthruspecial25@yahoo.com எனும் மின்னஞ்சல் முகவரி மட்டுமே பயன் படுத்துகின்றேன்.
read more...

கிறுக்கல்கள்....


அன்று என் நண்பர்கள்
காதலித்த போது
நானும் காதலிக்கவில்லையே
என்று கவலைப்பட்டேன்.


காதலிக்கலாம் என்று

தோன்றியது காதலித்தேன்

சந்தோசப்பட்டேன்

ாதல் சிறகடித்து

சிட்டுகளாய் பறந்தோம்
இன்றுதான்
நினைக்கிறேன் - நான்
அவசரப்பட்டுவிட்டேன்
என்று - நம்
பிரிவும் என்
காதலைப்போல்
அவசரப்பட்டு விட்டது...


அன்று காதலித்துப்பார்
உன்னைசுற்றி ஒளிவட்டம்
தோன்றும்............ தோன்றியது.
இன்று - என்னை
இருள் வட்டமிடுகின்றது.


காதலித்தால்
கவிதை வரும்......
கவிதை வருகிறது
என் காதலின்
சோககதை சுமந்து.......


இன்று - நீ
என்னை மறந்து
விடலாம் - நம்
காதல் கதைகளை
நாம்காதலித்த போது
நமக்கு குடை
பிடித்தஅந்த
மரங்கள்தான்
மறந்து விடுமா
இன்று என்னை
ரவணைக்கின்றன.....
read more...

Wednesday 24 June 2009

களுதாவளைப்பதிக்கு வாருங்கள் கவலைகள் மறக்கலாம்...


இப்பொழுது கிழக்கிலங்கையிலே வரலாற்றுப்பிரசித்தி பெற்ற ஆலயமாக மூர்த்தி தலம் தீர்த்தம் என்று முச்சிறப்புக்களும் ஒருங்கே அமையப்பெற்ற மட்டக்களப்பு களுதாவளை சுயம்புலிங்கப்பிளைளயார் ஆலய வருடாந்த அலங்கார உச்சவம் மிக விமர்சையாக இடம் பெற்றுக்கொண்டு இருக்கின்றது .

கடந்த 20 ம திகதி ஆரம்பமான திருவிழா எதிர்வரும் 29 .6 .2009 ஆனி உத்தர நட்சத்திரத்தில் தீர்த்த உற்சவத்துடன் இனிதே நிறைவுபெற இருக்கின்றது.


இந்த ஆலயத்தை பெறுத்தவரை பன்னெடுங்கால வரலாற்றை கொண்டுள்ளதோடு தம்மை நாடி வருவோர்க்கெல்லாம் வாரி வழங்கும் வள்ளலாகவும் இருக்கின்றார். இந்த ஆலயத்தின் வரலாற்றினை களுதேவாலயக் கல்வெட்டு விளக்கமாக சொல்கின்றது. இந்த ஆலயத்திலே தானாக தோன்றிய சுயம்புலிங்கம் கருவறையுள்ளே இருக்கிறது சுயம்புலிங்கமாக இருந்தாலும் விநாயகராக மக்கள் வழிபடுகின்றனர்.

இந்த ஆலயத்துக்கு நாள் தோறும் நாட்டின் பல பாகங்களிலிருந்தும் இன, மத பேதமின்றி வருகை தந்து கொண்டு இருக்கின்றனர். மக்கள் வைக்கின்ற நேர்கடன்களை நிவர்த்தி செயும் பொருட்டு அதிகமான மக்கள் வருகை தருவது வழக்கம். பக்தர்கள் நேர்கடன் வைத்ததும் உடனடியாக தீத்து வைப்பவர் என்ற நம்பிக்கை மக்களுக்குண்டு அதுதான் உன்மையும்கூட.

வாய் பேசாத பிள்ளைகளை பேச வைக்கின்ற பெருமை படைத்தவர் இந்த பிள்ளையார். அதே போல் பல அற்புதங்கள் நிறைந்த ஆலயமாகவும் இந்த ஆலயம் இருக்கின்றது.

திருவிழாக்காலங்களில் சமய சம்மந்தமான பல கலை நிகழ்வுகள் இடம் பெறுவதோடு பிரதேசமே விழாக்கோலம் பூண்டிருக்கின்றது. இந்த ஆலயத்தை பற்றிய பாடல்கள் அடங்கிய பல பாடல் தொகுப்புக்கள் வெளியிடப்பட்டுள்ளன. பல புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இந்தஆலயத்திலே மாம்பழத்திருவிழா இடம் பெறுவது சிறப்பு அம்சமாகும் இந்த தொகுப்புக்கள் பார்ப்பதுக்கு என்று அதிகமான பக்தர்கள் வருவார்கள்.

இந்த ஆலயத்தை பற்றி கலாபூசணம் ஆறுமுகம் அரசரெத்தினத்தின் நவரசக் கதம்ப மாலை எனும் புத்தகத்திலிருந்து சில பாடல் வரிகளை தருகின்றேன்.

களுதாவளைப்பதிக்கு வாருங்கள்....


களுதாவளைப் பதிக்கு வாருங்கள் - உங்கள்
கவலைகளை கணபதியின் காதில் கூறுங்கள்
தொளுபவர்க்கும் அழுபவர்க்கும் வினைகள் நீக்குகிறார் - இங்கு
சுயம்புலிங்கராய் அமர்ந்து அருள் பொழிகிறார்

பிள்ளையாரை நம்பி வாருங்கள் - அவர்
பிள்ளையாகி மகிழ்ச்சி ஊட்டுவார்
துள்ளி ஓடும் எலியில் ஏறுவார் - அவர்
வள்ளலாகி வாரி வழங்குவார்.

கணங்களுக்கு நாதனாக அமர்ந்து இருப்பவர் - தன்னை
வணங்குவோர்க்கு வாழ்க்கையினை வசதி ஆக்குவார்
இணங்குவோர்க்கு நலன்கள் நாட்டுவார் - தன்னை
பிணங்குவோர்க்கு பிணிகள் காட்டுவார்.

கரத்தை நீட்டி கருணை கேளுங்கள் - ஐந்து
கரத்தை நீட்டி உரத்தை ஊட்டுவார்
சிரத்தையோடு சிரத்தைத தாழ்த்துங்கள் - கேட்கும்
வரத்தை தந்து பரத்தை காட்டுவார்

பெனையாக கொம்பை நாட்டினார் - எம்
ஊனை உருக்கும் திருமுறை எமக்கு காட்டினார்
ஆணையாககாட்டி ஓடினார்கள் - குற
வள்ளிமானை வேலன் கையில் ஊட்டினார்.
மேலதிக விபரங்களுக்கு இங்கு கிளிக் பண்ணுங்கள்...

read more...

Sunday 21 June 2009

எனது கிறுக்கல்கள்....

தொலைந்த -என்
சந்தோசத்தின்

தேடினேன் -அந்த
முகவரியின்
முதல்வரியாய் -நீ முகவரிகளை
வந்தாய்

உன் மூச்சில் -நான்
வாழ நினைத்தேன்
இன்று -நீ
சொன்ன ஒரு
வார்த்தை -என்
மூச்சையே
நிறுத்திவிட்டது.

நட்பிற்கு
இலக்கணமாய்
வந்தாய்
காதலுக்கு
இலக்கணமாய்
இருந்தாய் -இன்று
பிரிவிற்கே
இலக்கணமாய்
மாறியதேனோ?
read more...

Saturday 20 June 2009

வாய் பேசாத பிள்ளைகளை பேசப்பழக்குபவருக்கு இன்று திருவிழா


வரலாற்று சிறப்பு மிக்க வாய் பேசாத பிள்ளைகளை பேசப்பழக்கும் சிறப்புப் பெற்றமட்டக்களப்பு களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம் என்று 20.06 .2009 ஆரம்பமாகி எதிர்வரும் 29.06 .2009 காலை 09 .00 மணிக்கு ஆணி உத்தர நட்சத்திரத்தில் தீர்த்த உற்சவத்துடன் நிறைவு பெறும்.


மேலதிக விபரங்களுக்கு இங்கு click பண்ணவும் .


தொலைபேசி இலக்கம் 094652250625
read more...

தயாவின் உள்ளக் கீறல்கள்....

இந்தப்பதிவிநூடாக எனது நண்பரும் இளம் கவிஞருமாகிய அன்பு நண்பர் தயவினுடைய கவிதைகள் சிலவற்றை தர நினைக்கின்றேன்.

இவரைப்பற்றி சொல்வதென்றால் ஒரு இளம் கலைஞர் இவரது கவிதைகள் பல பத்திரிகைகளில் வெளிவந்து பலரது பாராட்டும் பெற்றது இவரது கவிதைகள் அனைவரையும் கவர்ந்தவை என்பது குறிப்ப்பிடத்தக்கது. விரைவில் இவரது பாடல்கள் அடங்கிய இறுவட்டு ஒன்று வெளிவர இருக்கின்றது.

இவரது கவிதைகள் எனது வலைப்பதிவிலும் அடிக்கடி உங்கலையும் மகிழ்விக்க இருக்கின்றது காத்திருங்கள்...

நட்பு

புல் நுனியில்பூத்த
பூவாய் - நம்நட்பு
மறைந்தாலும்துடிக்கும்
உன்இதயத்தில்
எந்தபூவையும் -ஒரு
ஓரத்தில் வைத்துக்கொள்....

குடை

வேணும் என்பதைமறைப்பதற்கும்
வேண்டாம்என்பதைக்காட்டுவதட்கும்
இறைவன் கொடுத்தகொடை
இந்த குடை...

செருப்பு

கெட்டவற்றை
தன்னுள்
அடக்கிக்கொண்ட
தன்னிகரில்லா
தலைவன்....


என்னவள்

கண்ணாடி
முன்னின்று
என்னவளை
காட்டு என்றால் _
என் முன்னாடி
உன் ஹார்ட்டை (hart)
காட்டு என்கிறது....?


குருவான குரல்

குயில்கள்
அனைத்தையும்
அழித்து ஒரு
குரல் செய்தேன்
அதுஉன்னைப்போல்
ஊமையாக இருப்பதேன்....


பாவ ஜென்மம்

முன் ஜென்மம்
உன் வீட்டில்
நாயாக இருந்தேனோ
என்னவெனில்
இப்போதும்உன்
பின்னே அலைகிறேன்...


read more...

Friday 19 June 2009

இன்றைய இளைஐர்கள் போகிற போக்கில்...

இன்று நவின தொழினுட்ப வளர்த்சியினால் உலகம் சுருங்கிவிட்டது எனலாம்.நவின உலகுக்கு நாமும் மாறவேண்டி இருக்கின்றது. நவின உலகத்திற்கு ஏற்றாற்போல் மாறவேண்டும் என்பதற்காக மனம் போகிற போக்கிலும் கால் போற போக்கிலும் போக முடயுமா?....

இந்த நாகரிக உலகில் பெஷன் என்பது அனைவராலும் முணுமுணுக்கப்படும் ஒன்று. எதற்கு எடுத்தாலும் இதுதான் பெஷன் என்பார்கள். நவ நாகரிகத்துக்கு ஏற்றாற்போல் மாறவேண்டும் என்பதுக்காக பெஷன் என்று சொல்லும் எல்லா விடயங்களும் ஏற்றுக்கொள்ளத்தான் முடயுமா.

இந்த பெஷன் என்கின்ற நாகரிக மோகம் பலரை பாழாக்கிக்கொண்டு இருக்கின்றது. இந்த நாகரிக மோகத்தில் அதிகம் சிரளிக்கப்படுபவர்கள் இளைஜர்கள் என்றுதான் சொல்லலாம். இன்றைய இளைஜர்கள் நாகரிக மோகத்தால் தங்களது வாழ்க்கையை பாளாக்கிக்கொண்டு இருக்கிறார்கள். (நீங்க என்ன திட்டுறது புரியுது நம்ம யுவதிக்களும்தான் அவங்களுக்கு வேற பதிவு இருக்குங்க.)

நாகரிகம் என்கின்ற போர்வையில் இன்றைய இளைஜர்கள் மேல்நாட்டு நாகரிக மோகம் கொண்டு பல போதைப்பொருளுக்கு அடிமையாகி தாங்கள் மட்டுமல்ல சமுகததையும் சீரழித்துக்கொண்டு இருக்கிறார்கள்.
மதுபானம் சிகரெட் கஞ்சா என்னும் பலவற்றுக்கு அடிமையாகி இருக்கின்றார்கள். இளையர்கள் மட்டுமல்ல பாடசாலை செல்லும் சிறுவர்களும் இதட்கு அடிமையாகிவிட்டதுதான் கவலைக்குரிய விடயம்.
எது எப்படி இருப்பினும் இவர்கள் மதுவுக்கு அடிமயாததனால் குடிக்கவும் குடித்தபின்னும் நடக்கும் திருவிழாக்களை பார்ப்போம்.

இவர்கள் குடித்தபின்னும் என்ன பாடு படுத்துகிறார்கள் தினமும் சாப்பிடுரான்களோ இல்லையோ குடித்துவிடுவாங்க அதுவும் சொந்த காசில் குடிப்பது குறைவு என்னைப்போல் அப்பாவிங்க மாடடுவாங்க (உண்மைதான் நான் நல்லவன் நம்புங்க) யாரை பிடிப்பது காசு பறிக்க என்று இருப்பாங்க சிலர மாலை 6 மணிக்கு பிறகு நல்ல நிலையில் இருக்கமாட்டார்கள். குடித்துவிட்டு எங்களை தூங்க விடுறாங்களா இல்லையே.

இன்னுமொரு நாகரிகம் இருக்கிறது என்ன ஒரு சின்ன விடயம் நடந்தாலும் பார்ட்டி போடவேண்டும். கல்யாணம் கட்டினால், குழந்தை பிறந்தால், குழந்தைக்கு பெயர் வைத்தால், வெளியூர் போனால், பரிட்சையில் சித்தி பெற்றால், ..........இன்னும் இருக்குங்க ஏன் யாராவது மரணமடைந்தால் அவரது உறவினர் பார்ட்டி போடா வேண்டும். என்ன பார்ட்டி என்று கேட்காதிங்க தண்ணி பார்ட்டிதான்.
இவர்களது இந்த செயல்களை பார்த்து மற்ற சிறுவர்களும் இவர்கள் பாதையில் செல்கின்றார்கள். இன்று சிகரெட் பிடிப்பதும் ஒரு நாகரிகமாக மாறிவிட்டது இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம் அனைத்தையும் சிந்தித்து நல்ல பழக்க வழக்கங்களை நல்ல சமுகத்தை சிரளிக்காத நாகரிகத்துக்கு இன்றைய இளயர்கள் மாறுவது நல்லதே.


read more...

Thursday 18 June 2009

தொல்லை தரும் தொலைபேசிக் கலாச்சாரம்... பதிவு 2

இன்று கையடக்க தொலை பேசிகளின் பாவனை அதிகரித்து விட்டது என்பது நாம் அறிந்தது. சிறுவர் முதல் பெரியோர் வரை அனைவர் கையிலும் இன்று தவழ்ந்து பலரை சீரழித்துக்கொண்டு இருக்கிறது இந்தத் தொல்லைபேசி என்று சொல்லலாம்.

கையடக்க தொலைபேசி நல்ல விடயங்களுக்கு பயன் படுத்தும் காலம் மாறி இன்று தொலைத்துதொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்களின் போட்டியின் காரணமாக வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு பட்ட சேவைகளை போட்டி போட்டுக்கொண்டு வழங்குகின்றன.

எது எப்படி இருப்பினும் இந்த தொலைபேசி உரையாடல்கள் முலம் நடந்த சில சுவையான, யோசிக்கவேண்டிய சில சம்பவங்கள் இப்பதிவிநூடாக தருகிறேன்.

ஒரு நண்பர் தனது நண்பி ஒருவருக்கு இரவு 9 மணியளவில் அவசர செய்தி ஒன்று சொல்வதற்காக அழைப்பினை எடுத்து இருக்கிறார். அந்த நண்பி வேய்ட்டிங்கில் இருந்திருக்கிறார் நண்பரோ அவசர செய்தி சொல்லவேண்டியவர் பலதடவை அழைப்பினை எடுத்து பார்த்தார் அழைப்பு கிடைக்கவில்லை வேய்டிங்தான். நண்பரும் விடவில்லை நள்ளிரவு 1.30 போல் நண்பிக்கு அழைப்பு கிடைத்தது. நண்பர் கேட்டார் 9 மணிமுதல் 1.30 வரை இந்த இரவில் யாரோடு பேசுனிங்க என்று. நண்பி சொன்ன பதில் அண்ணாவோடு பேசினேன் என்றார். நண்பர் நினைத்தார் அண்ணா எதோ வெளி நாட்டில் இருக்கிறார் என்று. அண்ணா எங்கே இருக்கிறார் என்று கேட்டார். நண்பி சொன்னார் அண்ணா பக்கத்து ரூம்ல இருக்கிறார் என்று . நண்பருக்கு கோபம் கோபமாக வந்ததாம். ஒரு வீட்டில் இருந்து கொண்டு பக்கத்து ரூம்ல இருக்கும்இந்த நேரத்துல ...... கடவுள்தான் காப்பாத்தணும்

பெரிய தேன்னை மரங்களிலே தேங்காய் பறிப்பவர்கள் மரத்திலே ஏறி தேங்காய் பறிக்கும் போது ஒரு தேங்காயை பறித்து கிழே போடுவார் கிழே நிற்பவர் அது தேங்காயா என்று பார்த்து சத்தம் போட்டு சொல்லுவார் மரத்தில் இருப்பவரும சத்தம் போட்டு தேங்காயா என்று கேட்பார் அது அந்த பிரதேசத்தில் எல்லோருக்கும் கேட்கும்படியாக இருக்கும். இது அந்தக்காலம். இன்று மரத்தில் ஏறுபவரும் கிழே நிற்பவரும் தொலை பேசியில் உரையாடுகின்றார்கள்.

இன்று வாகனங்களிலே பிச்சைக்காரர்களின் தொல்லை அதிகரித்து விட்டது. அது ஒருபுறமிருக்க. ஒரு தெருவோர பிச்சைக்காரன் ஒரு பேருந்து தரிப்பிடத்திலே. யாருமற்ற ஒரு பக்கம் சென்றான் என்ன செய்கிறான் என்று பார்த்தேன் தொலைபேசியை எடுத்து தனது மற்ற நண்பனிடம் சொல்கிறான் பஸ்சில் சனக்கூட்டம் அதிகமாக இருக்கிறது உடனே வரவும் என்று.

தொலைபேசி முலமாக நண்பர்களிடையே பல சுவாரஸ்யமான சம்பவங்கள் எடம் பெறுவதோடு சில வேளைகளில் அவர்களது நட்புக்கும் பாதிப்பு ஏற்படுவதுண்டு. அதே போன்று ஒரு சம்பவம்தான் இது.

ஒரு நண்பர் தன்னுடைய ஒரு நண்பரை கலாய்க்க விரும்பினார். அதற்கு தனது காதலியை துரும்பு சீட்டாக பயன் படுத்தினார். அது வேறு விபரிதமாகிவிட்டது.

ஒருவர் தனது காதலியிடம் தனது நண்பனின் தொலைபேசி இலக்கத்தினை கொடுத்து.தனது நண்பருக்கு அழைப்பினை எடுத்து யார் என்று சொல்லாமல் காதலிப்பது போல் கலாய்க்க சொல்லி இருக்கிறார். 2, 3 நாட்கள் நன்றாகவே நண்பரை குழப்பி இருக்கிறார்கள். அத்தோடு முடியவில்லை காதலியோ காதலனுக்கு தெரியாமல் அடிக்கடி அழைப்பினை எடுத்து கதலனின் நண்பனோடு காதலனுக்கு தெரியாமல் பேச ஆரம்பித்து விட்டார். இன்னும் சொல்ல வேண்டுமா?........

இன்று குரல்களை மாற்றிப்பேசும் தொலைபேசிகள் முலமும் நிறையவே நம்ம பசங்கள பசங்களே பெண்களாக நடித்து ஏமாற்றிக்கொண்டு இருகாங்க. பெண்கள் ஏமாற்றியது போதாதா நண்பர்களே நீங்களும் ஏமாற்றனுமா...

இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம் சொல்ல முடியாத விசயமும் நிறையவே இருக்குங்க...
read more...

Sunday 7 June 2009

தமிழனாய் பிறந்ததால் நம்கதி இதுதானா....

எம் தேசம் எப்படி இருந்தது
இன்று பார்க்கும்போது
அழுவதைத்தவிர வேறு வழி
தெரியவில்லை எனக்கு
இதுதான் அன்று நான் கண்ட
அழகிய தேசமா?
இன்று என் தேசத்தில்
மிஞ்சி இருப்பது என்ன?


இல்லை இல்லை
நிறையவே இருக்கின்றனவே
கிராமங்கள் தோறும்
ஒன்றுக்கு இரண்டு
அநாதை இல்லங்களும்
அகதி முகாம்களும்
நாம் என்ன செய்தோம்
தமிழராய் பிறந்ததை தவிர.

அநாதை இல்லங்களில் வாழும்
அந்த மழலைகளின் முகத்தில்
எத்தனை எத்தனை
கவலைகளின் முகவரிகள்
ஆறுதல் சொல்வதைத்தவிர
என்னால் எதுவும்
செய்ய முடியவில்லை
வார்த்தைகள் வர மறுக்கின்றன..

நீங்கள் அனாதைகள் இல்லை
அனாதைகள் ஆக்கப்பட்டவர்கள்
நீங்கள் மட்டுமல்ல
நாங்களும்தான் அனாதைகள்
சொந்தங்களை இளந்ததனால்
நீங்கள் அனாதைகள்
சிறுவர் இல்லங்களில்.
தமிழனாய் பிறந்தோம் -இன்று
அனைத்தும் இழந்து
அகதிகளாக அடை பட்டோம்
அகதி முகாம்களில்.


தமிழன் என்றால்
அகதி என்று
மகுடம் சூட்ட
நினைக்கும் தேசமிது
"தமிழன் நாம்'
தலை நிமிர்ந்து சொல்லுங்கள்
தம்பிகளே தங்கைகளே
நாளைய தலைவர்கள்
நீங்கள் அல்லவா
அதுதான் உங்களையும்
முளையிலே கிள்ள நினைக்கிறது
இந்த தேசம்
காலம்தான் பதில் சொல்லும்
காத்திருங்கள் - என்னால்
இதட்கு மேலும் என்னால்
எதுவும் சொல்லமுடியாது
சொன்னால் நானும் நாளை
அநாதை ஆக்கப்படலாம்
வாய் பொத்தச் சொல்லும்
தேசமல்லவா இது...
read more...

Thursday 4 June 2009

நமக்குத்தான் கவியரசு சொன்னாரோ...

நான் அடிக்கடி வைரமுத்துவின் வைர வரிகளில் தொலைந்து போனவன். எனக்கு பிடித்த ஒரு கவிதை உங்களுக்காக.... .


வகுப்பறைகளின்
புழுக்கத்தில் புழுங்கி புழுங்கி
மாணவர்களின் நுரையிரல்
வேந்துவிட்டன.

பல இளம் பெண்கள்
புத்தகத்சுமை பொறுக்காமலேயே
பூப்பெய்திவிட்டார்கள்.


பள்ளி செல்லும் சிறுவன்
ஒவ்வொரு விடியலிலும்
தான்
நாடு கடத்தப்படுவதாய்
நசிந்து பூக்கிறான்.

பாலகர்கள்
சிலேட்டின் ஒரு பக்கத்தை
ஏற்சிலாலும
மறு பக்கத்தை கண்ணிராலும்
துடைத்தளிக்கிறார்கள்.

அந்த
சிறு பறவைகளின்
இறகுகளை -
கொள்ளிக்கட்டைகழாலா
கோதிவிடுவது?

எழுத்துக்களின் ஊர்வலத்தில்
அவர்கள்
காணாமல் போனவர்கள்

அவர்களோடு சேர்ந்து
துக்கம் கொண்டாடத்தான்
வகுப்பறைகளின் சுவர்கள்
கரும்பலகையை நெஞ்சில்
நிரந்தரமாய் அணிந்தனவோ

அவர்கள் மூழையில்
விதயைப்போல்
தூவப்பட வேண்டிய அறிவு
ஆணியைப்போல்
அறையப்படுகிறது.

இந்த
இள மூங்கில்களை
இந்திள்ளே வளைக்க
ஆசைப்பட்டார்கள்.


பல மூங்கில்கள்
முளைக்கும் அவசரத்தில்
முறிக்கப்பட்டதால்
விறகுக்கடைகளில்
விற்பனையாயின.

எந்த பட்டறைகளில்
கூர்செய்யக்
கடப்பரைகளைக்கொடுத்தோம்
அவை
குண்டுசிகளாகத்திரும்பின.

பல்கலைக்கழகமோ
பள்ளிக்கூடங்கள் தயாரித்துத்தரும்
சல்லடைகளில்
ஓடங்கள் செய்வதாய்
உத்தரவாதம் தருகிறது.

இந்தக் கல்வி முறை
புதைத்த பிணங்களைத்
தொண்டிஎடுத்துத்
துடைத்துக்கொண்டிருக்கிறது.

பாடத்திட்டம் படைப்பவர்கள்
சுட்டுவிரல்கழால்தொட்டு நுகர்வது
மகரந்தமாம்.
இல்லை.... இல்லை...அது
போன நுற்றாண்டின் புழுதி.

கல்விக் கழகங்களின்
உட்கூரைகளில்
தோரணமாய் மின்னுவன
சரிகைகளாம்.
இல்லை... இல்லை... அவை
குருட்டுச் சிலந்தி பின்னிய
ஒட்டடைகள்!

மனப்பாட மந்திரங்களை
சரியாக உட்சரித்தல்தான்
சரஸ்வதி வரம்தர
சம்மதிப்பாளாம்!

தேர்வுக்கூடமெனும்
நரகச்சுரங்கம்தான்
சொர்க்கத்திற்கு செல்லும்
சுருக்கு வழியாம்.

இந்தப் பல்கலைக் கழகங்கள்
வேலையில்லாதவர்களை
உற்பத்தி செயும்
தொளிச்சாலைகளா?

இந்தக் கல்வியால் லாபம்
மூக்குக்கண்ணாடி யில்
மூ லதனம்போட்டவனுக்குத்தான்

நியுட்டன் விதியை விடவும்
தலை விதியை நம்பும்
தலைமுறை படைத்தோம்!

பட்டுப்போன ஒரு
பட்டதாரி கேட்கிறான்.
ஆயிரம் அட்சரங்கள் கற்று
ஆவதென்ன?
வாழ்க்கை புத்தகத்தை
வாசிக்க முடியவில்லையே!

எல்லாப் பத்திரிகையிலும்
மணமகன் வேலை மட்டும்
காலியாயிருக்கிறது.

சிகரெட்டின் நுணியில் தெரியும்
நெருப்பை தவிர
வேறேதும் வாழ்க்கையில்
வெளிச்சமில்லை.

குட்டி போடும் என நினைத்துப்
பிள்ளைகள்
புத்தகத்துக்குள் வைக்கும்
மயிலிறகு மாதிரி...
பட்டம் மட்டும்பெயரோடு
பத்திரமாக இருக்கிறது

கல்விக் கூடம்
அவனைத் தன்னுள்
பதுக்கி வைத்திருந்து பிறகு
பிதுக்கி எறிந்து விட்டது

அவனுக்கே அவன்
அன்னியமானான்!

அவனது மாணவப்பருவம்
ஒரு
கடன் வாங்கிய வசந்தம்!
அவன் பாதங்களுக்கு
கீழே
பாதைகள் முடிந்துவிட்டனவா ?

மண்வெட்டி பிடிக்கும்
திராணியைக்கூட
மனப்பாடக் கரையான்
தின்று விட்டது.

முதுகுக்குப் பின்னால் அஸ்த்தமனம்!
முகத்துக்கு முன்னால் இருள்
மூளையின்
பயன்படுத்தப்படாத பரப்புக்களைக்
கத்தரித்து எடுத்துவிட்டது இந்தக்
கல்வி!

படை வீரர்களைப்
படைக்க வேண்டிய கல்வி,
நடை நோயாளிகளைத் தயாரித்தது.

பிச்சை புகினும் கற்கை நன்றாம்!
கற்றபின் பிட்சை புகலும் நன்றோ ?

வாழ்க்கைக்கும் வகுப்பறைக்குமிடையே
தொங்கு திரைச்சீலையைத்
துணித்து விடுங்கள்!அது ஒன்றும்
திரோபதியின் சிலையன்று.

பழமையை ஆதரிக்கும்
பாடத்திட்டத்தை
நிரந்தரமாக நீக்கி விடுங்கள்!

அது ஒன்றும்
கர்ணனின் கவச குண்டலமன்று.
கல்வித்திட்டத்தில் இருக்கும்
செயற்கை ஒப்பனைகளை
குலைத்து விடுங்கள்.

ஆடம்பர அவசரத்தில்
புல்லாங்குழலை பொன்னில் செய்துவிடாதிர்கள்!
அது முன்கிலாகவே இருக்கட்டும்!


என்னங்க..... யோசிக்கிறிங்களா நமக்குத்தானோ வைரமுத்து சொன்னார் என்று.........
read more...

Wednesday 3 June 2009

கேள்விக்குறியாகும் சிறுவர்களின் எதிர்காலம்...

எனது தொலைந்த வலைப்பதிவில் இருந்து ஒரு பதிவு எனது புதிய வலைப்பதிவில்...

இன்றையசிறுவர்கள் நாளைய தலைவர்கள் என்று சொல்லப்படுகிறது. சிறுவர் உரிமைகள் பற்றி எல்லாம் பேசுகின்றார்கள்ஆனால் இன்று பல காரணங்களினால் சிறுவர்கள் பல இன்னல்களை எதிர் நோக்கி வருகின்றார்கள். கட்டாயமாக வழங்கப்படவேண்டிய கல்விகூட பாதிக்கப்படுகின்றது. இன்று பாடசாலையை விட்டு இடை விலகுகின்ற சிறுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இவைத்தடுப்பதட்குரிய வழிவகைகளை பல்வேறுபட்ட அமைப்புகள் அரச சார்பற்ற நிறுவனங்கள் முன்னெடுக்கின்ற போதிலும் சில காரணங்களினால் மாணவர்கள் இடை விலகும் வீதம் குறைந்த பாடில்லை. இந்த பதிவினுடாக மாணவர்கள் இடை விலகுவதற்கான காரணங்கள் அவர்கள் எதிர் நோக்கும் பிரட்சனைகள்அவற்றுக்குரிய திர்வுகள் பற்றி பேச இருக்கின்றேன்.

இன்று மாணவர்கள் இடை விலகுகின்றவீதம் ஏனைய இடங்களை விட வடக்கு , கிழக்கிலேயே அதிகமாக இருக்கின்றது இதட்கு முக்கிய காரணம் நாட்டில் இடம் பெற்றுவரும் யுத்தம் என்பது அனைவரும் அறிந்த விடயம்.

இன்னும் பல காரணங்கள் இருக்கின்றன. இவற்றை தடுப்பதற்கான காரணங்களை அறிவதற்காக பல அமைப்புக்கள், நிறுவனங்கள் பல ஆய்வுகளை மேற்கொண்டு மாணவர்கள் இடை விலகுகின்ற வீதத்தினை குறைப்பதட்க்கான திட்டங்களை மேற்கொண்டு வருகின்றன.

கல்வி, கலை, கலாச்சாரம் , மற்றும் சிறுவர்களில் அக்கறை கொண்ட ஒரு அமைப்பாக ஒரு தசாப்தமாக சேவையாற்றி வரும். களுதாவளை கல்வி அபிவிருத்தி ஒன்றியம் இருவர்கள் கல்வியில் இருந்து இடை விலகுவது தொடர்பாக ஒரு ஆய்வினை மேற்கொண்டது.

சிறுவர்கள் இடை விலகுவதற்கு உள்நாட்டு யுத்தம் ஒரு காரணம் அது பற்றி நான் சொலலவே தேவை இல்லை எல்லோருக்கும் தெரிந்த விடயம். இடை விலகும் சிறுவர்களின் எண்ணிக்கை கிராமப்புறங்களிலேயே அதிகமாக இருக்கின்றது.இவற்றுக்குபல பல காரணங்கள் இருக்கின்றது. தனது தாய் தந்தையர் படிப்பறிவு அற்றவர்கள் ஆதலால் தாய் தந்தையர் தனது பிள்ளைகளை படிப்பிப்பதில் அக்கறை காட்டாமை. மற்றும் கிராமப்புறங்களிலே போதிய வசதிகள் செய்து கொடுக்கப்படாமை. வறுமை என பல காரணங்கள் இருக்கின்றன.

கிராமப்புறங்களிலே வறுமையின் காரணமாக பாடசாலை போக வேண்டிய வயதில் விவசாயம் போன்ற தொழில்களில் ஈடுபடுகின்றனர். கிராமப்புற பெற்றோர் படிப்பறிவு குறைந்தவர்கள் அவர்களுக்கு தகுந்த விழிப்புணர்வு இல்லை விழிப்புணர்வு வழங்கப்பட வேண்டும்.

என்னுமொரு முக்கிய விடயமிருக்கின்றது பல வழிகளில் விழிப்புணர்வுகள் ஏறபடுத்தப்பட்டாலும் இடை விலகும் சிறுவர்களின் எண்ணிக்கை குறைந்த செல்கின்றபோது பல பிரட்சனைகளை எதிர் நோக்க வேண்டி வருகிறது ஒரு வகையில் இடை விலகிய மாணவர்களை மீண்டும் பாடசாலையில் சேர்ப்பதாக வைத்துக்கொள்வோம். இடை விலகும் மாணவர்களில் அதிகமானவ்கார்கள் தரம் 6, 7 மாணவர்களே இந்த 6, 7 தரங்களை சேர்ந்த மாணவர்கள் இந்த வயதில்தான் சமுகத்தை உணர்ந்து கொள்கின்றார்கள். தாங்கள் 6, 7 தரம் படிக்கும் பொது தங்களுக்கு எழுத வாசிக்க தெரியாமல் போவதனால் பாடசாலையை விட்டு விலகுகிறார்கள். இது தங்களை சக மாணவர்கள் கேலி நிலைக்கு நினைப்பார்கள் என்ற ஒரு தாழ்வு மனப்பாண்மை காரணமாக இருக்கின்றது.

இப்படி இடை விலகும் மாணவர்களை மிண்டும் பாடசாலையில் சேர்த்தாலும் அவர்கள் மீண்டு இடை விலகும் சந்தர்ப்பங்கள் அதிகம் அவர்களை நல்ல முறையில் ஆசிரியர்களோ, பெற்றோரோ, சிறுவர் நலனில் அக்கறை உடைய தரப்பினரோ அடிப்படை கல்வியை வழங்கி அவர்களை பாடசாலையில் சேர்க்க முன்னர் எழுத வாசிக்க பழக்க வேண்டிய தேவை இருக்கின்றது

இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம் எது எப்படி இருப்பினும் எல்லா வகையிலும் பாதிக்கப்படுவது எமது சமுகமே........
read more...

Tuesday 2 June 2009

மலையக நாட்டுப்புறப்பாட்டு......

எனது தொலைந்து போன வலைப்பதிவில் மலையாக நாட்டுப்புறப்பாட்டு பதிவுகளை உங்களுக்காக புதிய வலைப்பத்திவில் தருகிறேன்.....

தமிழருக்கென்று ஒரு தனித்துவமான கலை,கலாச்சார , பாராம்பரியங்கள் இருக்கின்றது.
அவற்றில் குறிப்பாக தமிழர்களது கலைகள் தமிழ் மக்களின் வாழ்வோடு பின்னிப்பிணைநத ஒன்றாக காணப்படுகின்றது. தமிழருக்கே தனித்துவமான பல கலைகள் இருக்கின்றன. அதிலும் கிராமங்கள் என்றால் சொல்லவே தேவையில்லை ,கிராமத்து மக்களின் வாழ்வியலோடு பின்னிப்பிணைந்த ஒன்றாக கிராமியக்கலைகள் விளங்குகின்றன.

நான் அடிக்கடி கவலைப்படுவதுண்டு இப்போது கிராமப்புரங்களில்கூட கலைகளை காணமுடியாது தமிழர்களின் தனித்துவமான கலைகள் மறைந்து கொண்டு வருகின்றன். இவற்றுக்கான காரணம்தான் என்னவோ தமிழர் கலைகளுக்கு ஒரு தனித்துவம் இருக்கின்றது அவை கட்டிக்காக்கப்பட வேண்டும்.ஆரம்பத்திலே இருந்த தமிழர் கலைகள் அமக்கு தெரியாது அம்மா அப்பா பாட்டன், பாட்டி சொல்ல கேள்விப்பட்டிருக்கின்றோம். எமது எது எதிர்கால சந்ததி நாம் அறிந்த அளவுக்குகுட அறிய வாய்ப்பு இல்லாமல் போகும் போல் இருக்கிறது...

சரி விடயத்துக்கு வருகிறேன் எமது தமிழர் பாரம்பரியங்கள், கலைகள் பற்றி எல்லா தொடர்ந்து எழுதலாம் என்று இருக்கின்றேன் . பல கலைத்துறை சார்ந்தவர்களையும் அவர்களது அனுபவங்களையும் எதிர்வரும் காலங்களில் பதிவு செய்யலாம் என்று இருக்கிறேன்.

இன்று மலையாக மக்களோடுடும் அவர்களது வாழ்வோடும் பின்னிப்பினந்த மலையகப் பாடல்களிலே எனக்குப்பிடித்த சில வரிகளை தரலாம் இன்று நினைக்கிறேன் [தமிழர் கலைகள் பற்றி தொடர்ந்து எதிர்பாருங்கள்]

மலையாக மக்களின் நேரடி அனுபவங்களை எப்பாடல்கலிலே கானக்குடியதாக இருக்கின்றது

"கண்காணி காட்டுமெல்லெ
கண்டக்கைய ரோட்டுமேலே
பொடியன் பலமேடுக்க
பொல்லாப்பு நேர்ந்ததையா"

"கலையிலே நேர புடிறசு
காட்டுத்தொங்க பொய் முடித்சு
குட நேரயலையே - எந்தக்
குனப்பய தோட்டத்திலே"

அந்தணா தொட்டமினு
ஆசையா தானிந்தேன்
ஓர முட்ட துக்கத்சொல்லி
ஒதக்கிராரே கண்டாக்கையா"

"கல்லாறு தோட்டத்திலே
கண்டக்கையா பொல்லாதவன்
மொட்டே புடுன்குதின்னு
முனாலு விரட்டிவிட்டான்"

ஓடி நேர புடிறசு
ஒரு குட கொளுந்தேடுக்க
பாவி கணக்குப் புள்ளே
பத்து ராத்து போடுறானே"

"எண்ணிக்குளி வெட்டி
எடுப்போடின்சு நிற்கையிலே
வேட்டுவேட்டு என்கிறானே
வேலையத்த கண்காணி"

"தோட்டம் புறலியிலே
தொரமேல குத்தமில்லே
கண்காணி மாராலே
காண பிரளி யாகுதையா"

எப்படி தமது தொழிலும், தொழில் சார்ந்த வாழ்க்கையும் அதில் அவர்களுக்கு ஏற்படும் பிரட்சனைகளும் இப்பாடல் தொட்டுக்காட்டுகின்றன.

வறுமை, வரட்சி எண்பவத்ரிநாலும், பண்ணையாளர்களின் அடக்கு முறையாலும்,சாதிக்கொடுமயாலும் எவர்கள் புலம் பெயர்ந்து இருந்தாலும். பிழைப்புத்தேடி வந்த ஒரு இடமாகத்தான் கண்டியை [இலஙகையை] பார்த்தார்கள்.அவர்கள் தாயக நினைவிலிருந்து விடுபடாதவர்கலாகவும் மிண்டும் தாயகம் நோக்கி போக வேண்டும் என்ற எதிர் பார்ப்புடநேயே வாழ்ந்தார்கள் என்பதற்கு பல பாடல்கள் சான்று பகர்கின்றன.

"ஆளு கட்டும் நம்ம சிமை
அரிசி போடும் நம்ம சிமை
சோறு போடும் நம்ம சிமை
சொந்தமேன்னு என்னாதிங்க"

புலம் பெயரும் எவரும் தமது தாயகத்தை மறக்க மாட்டார்கள் தங்களது தாயக நினைவுகளை சொல்லும் இவர்கள்...

"உரான உரிழந்தேன்
ஒத்தப்பன தோப்பிழந்தேன்
பேரான கண்டியிலே
பெத்த தாய நாமறந்தேன்"

"பாதையிலே விடிருக்க
பலனித்சம்பா சோறிருக்க
எரும தயிருரிக்க
ஏனடி வந்த கண்டி சிமை"

என்ற வரிகள் தாயக நினைவுகளை மட்டுமல்லாமல் தாம் வாழ்ந்த வாழ்க்கையும் தமது தாய் மண்ணின் பிடிப்பினும் கோடிட்டுக் காட்டுகின்றன...

[தொடந்து வரும்...]


மலையக நாட்டுப்புறப்பாட்டு பதிவு 2

மலையக மக்களின் வாழ்வியலோடு பின்னிப்பிணைந்த ஒன்றான மலையக நாட்டுப்புறப்பாட்டு பதிவு 2 முலமாக ஒருசில பாடல்களை தர நினைக்கின்றேன்.....

மலையக தொழிலாளர்கள் தாங்கள் தொழில் செய்கின்றபோது பாடப்படுகின்ற பாடல்கள் வேடிக்கையாகவும் நகைசுவை நிறைந்ததாகவும் காணப்படும். இப்பாடல்கள் பெரும்பாலும் தொழிலாளர்கள் தங்களை வேலை வாங்குகின்ற தொழிலாளர்களைபபற்றிய பாடல்களே அதிகம் என்று சொல்லலாம்.

இருப்பினும் காதல்பாடல்களும் இடம் பெற்று இருக்கிறன. தொட்டப்புரங்களிலே சிங்கள, தமிழ், முஸ்லிம் தொழிலாளர்களிடையே காதல் ஏற்பட்டமைக்கான பதிவுகள் நாட்டுப்புரப்பாடல்கலிலே காணப்படுகின்றன.
,
தாழ்நிலை, இடைநிலை,பெருந்தோட்டங்களில் சிங்கள-தமிழ் தொழிலாளர்கள் இணைந்து வேலை செய்வதற்கான வாய்ப்புக்கள் அதிகம். இவர்களிடையே இன ,மொழி
மத, சாதிபேதங்களுக்கு அப்பால் தொழிலாளர்கள் என்ற உணர்வின் மேலோங்கள் ஏக காதல் மலர்வதற்கு காரணமாகலாம்.

"சிங்களக்குட்டி அடி செவத்தக்குட்டி ரன்மேனிகே
ஒன்னாலே என் உசிரு என் தங்க ரேத்தினமே
வினாகப்போகுதடி என் தங்க ரத்தினமே"

எனும் இப்பாடல் இன முரண்பாடுகளுக்கு அப்பால் மலர்ந்த காதலுக்கு ஆவணமாகின்றது.

மலையக நாட்டார் பாடல்களிலே இன புரிந்துணர்வை ஏற்படுத்துகின்ற பாடல்கள் இருந்தபோதிலும். இன முரண்பாடுகளை வெளிப்படுத்துகின்ற பாடல்களும் காணப்படுகின்றன. இன முரண்பாடு ஏற்படுவதற்கு பல காரணங்களும் இருக்கின்றன.

"அப்பு குசினி மெட்டி
ஆயம்மா சிங்களத்தி
வான்கோழி ரெண்டு காணோம்
வங்க மட்சான் தேடிப்போகலாம்"

"சிங்களவா சிங்களவா
தவறான சிங்களவா
நாலு பணத்துக்கு
நீ கொடுத்த சாராயம்
ஆழ மயக்குது
அல்லோல கல்லோல"
என்ற பாடல்களோடு

"ஆப்பத்தோடு சுட்டு வாட்சு
அது நடுவே மருந்து வைத்சு
கொப்பிக்குடிக்க சொல்லி
கொள்ளுராலே சிங்களத்தி"

போன்ற பாடல்களும் மலையக வாழ்வியல் சுழலில் இன முரண்பாடுகளை எடுத்துக்காட்டும் பாடல்களாக அமைந்துள்ளன.
read more...