வகுப்பறைகளின்
புழுக்கத்தில் புழுங்கி புழுங்கி
மாணவர்களின் நுரையிரல்
வேந்துவிட்டன.
பல இளம் பெண்கள்
புத்தகத்சுமை பொறுக்காமலேயே
பூப்பெய்திவிட்டார்கள்.
பள்ளி செல்லும் சிறுவன்
ஒவ்வொரு விடியலிலும்
தான்
நாடு கடத்தப்படுவதாய்
நசிந்து பூக்கிறான்.
பாலகர்கள்
சிலேட்டின் ஒரு பக்கத்தை
ஏற்சிலாலும
மறு பக்கத்தை கண்ணிராலும்
துடைத்தளிக்கிறார்கள்.
அந்த
சிறு பறவைகளின்
இறகுகளை -
கொள்ளிக்கட்டைகழாலா
கோதிவிடுவது?
எழுத்துக்களின் ஊர்வலத்தில்
அவர்கள்
காணாமல் போனவர்கள்
அவர்களோடு சேர்ந்து
துக்கம் கொண்டாடத்தான்
வகுப்பறைகளின் சுவர்கள்
கரும்பலகையை நெஞ்சில்
நிரந்தரமாய் அணிந்தனவோ
அவர்கள் மூழையில்
விதயைப்போல்
தூவப்பட வேண்டிய அறிவு
ஆணியைப்போல்
அறையப்படுகிறது.
இந்த
இள மூங்கில்களை
இந்திள்ளே வளைக்க
ஆசைப்பட்டார்கள்.
பல மூங்கில்கள்
முளைக்கும் அவசரத்தில்
முறிக்கப்பட்டதால்
விறகுக்கடைகளில்
விற்பனையாயின.
எந்த பட்டறைகளில்
கூர்செய்யக்
கடப்பரைகளைக்கொடுத்தோம்
அவை
குண்டுசிகளாகத்திரும்பின.
பல்கலைக்கழகமோ
பள்ளிக்கூடங்கள் தயாரித்துத்தரும்
சல்லடைகளில்
ஓடங்கள் செய்வதாய்
உத்தரவாதம் தருகிறது.
இந்தக் கல்வி முறை
புதைத்த பிணங்களைத்
தொண்டிஎடுத்துத்
துடைத்துக்கொண்டிருக்கிறது.
பாடத்திட்டம் படைப்பவர்கள்
சுட்டுவிரல்கழால்தொட்டு நுகர்வது
மகரந்தமாம்.
இல்லை.... இல்லை...அது
போன நுற்றாண்டின் புழுதி.
கல்விக் கழகங்களின்
உட்கூரைகளில்
தோரணமாய் மின்னுவன
சரிகைகளாம்.
இல்லை... இல்லை... அவை
குருட்டுச் சிலந்தி பின்னிய
ஒட்டடைகள்!
மனப்பாட மந்திரங்களை
சரியாக உட்சரித்தல்தான்
சரஸ்வதி வரம்தர
சம்மதிப்பாளாம்!
தேர்வுக்கூடமெனும்
நரகச்சுரங்கம்தான்
சொர்க்கத்திற்கு செல்லும்
சுருக்கு வழியாம்.
இந்தப் பல்கலைக் கழகங்கள்
வேலையில்லாதவர்களை
உற்பத்தி செயும்
தொளிச்சாலைகளா?
இந்தக் கல்வியால் லாபம்
மூக்குக்கண்ணாடி யில்
மூ லதனம்போட்டவனுக்குத்தான்
நியுட்டன் விதியை விடவும்
தலை விதியை நம்பும்
தலைமுறை படைத்தோம்!
பட்டுப்போன ஒரு
பட்டதாரி கேட்கிறான்.
ஆயிரம் அட்சரங்கள் கற்று
ஆவதென்ன?
வாழ்க்கை புத்தகத்தை
வாசிக்க முடியவில்லையே!
எல்லாப் பத்திரிகையிலும்
மணமகன் வேலை மட்டும்
காலியாயிருக்கிறது.
சிகரெட்டின் நுணியில் தெரியும்
நெருப்பை தவிர
வேறேதும் வாழ்க்கையில்
வெளிச்சமில்லை.
குட்டி போடும் என நினைத்துப்
பிள்ளைகள்
புத்தகத்துக்குள் வைக்கும்
மயிலிறகு மாதிரி...
பட்டம் மட்டும்பெயரோடு
பத்திரமாக இருக்கிறது
கல்விக் கூடம்
அவனைத் தன்னுள்
பதுக்கி வைத்திருந்து பிறகு
பிதுக்கி எறிந்து விட்டது
அவனுக்கே அவன்
அன்னியமானான்!
அவனது மாணவப்பருவம்
ஒரு
கடன் வாங்கிய வசந்தம்!
அவன் பாதங்களுக்கு
கீழே
பாதைகள் முடிந்துவிட்டனவா ?
மண்வெட்டி பிடிக்கும்
திராணியைக்கூட
மனப்பாடக் கரையான்
தின்று விட்டது.
முதுகுக்குப் பின்னால் அஸ்த்தமனம்!
முகத்துக்கு முன்னால் இருள்
மூளையின்
பயன்படுத்தப்படாத பரப்புக்களைக்
கத்தரித்து எடுத்துவிட்டது இந்தக்
கல்வி!
படை வீரர்களைப்
படைக்க வேண்டிய கல்வி,
நடை நோயாளிகளைத் தயாரித்தது.
பிச்சை புகினும் கற்கை நன்றாம்!
கற்றபின் பிட்சை புகலும் நன்றோ ?
வாழ்க்கைக்கும் வகுப்பறைக்குமிடையே
தொங்கு திரைச்சீலையைத்
துணித்து விடுங்கள்!அது ஒன்றும்
திரோபதியின் சிலையன்று.
பழமையை ஆதரிக்கும்
பாடத்திட்டத்தை
நிரந்தரமாக நீக்கி விடுங்கள்!
அது ஒன்றும்
கர்ணனின் கவச குண்டலமன்று.
கல்வித்திட்டத்தில் இருக்கும்
செயற்கை ஒப்பனைகளை
குலைத்து விடுங்கள்.
ஆடம்பர அவசரத்தில்
புல்லாங்குழலை பொன்னில் செய்துவிடாதிர்கள்!
அது முன்கிலாகவே இருக்கட்டும்!
என்னங்க..... யோசிக்கிறிங்களா நமக்குத்தானோ வைரமுத்து சொன்னார் என்று.........
4 comments: on "நமக்குத்தான் கவியரசு சொன்னாரோ..."
ஆமா.. சந்துரு.
இத கொஞ்சம் வெட்டியிருக்கலாம்...
மத்தபடி சூப்பர்!
உங்கள் வருகைக்கு நன்றி கலையரசன்....
தொடருங்கள்....
உங்கள் பக்கமும் வருகிறேன்...
நானும் மிகவும் நோசிக்கும் ஒரு கவிமான் வைரமுத்து அவர்கள்!! அருமையான கவிதையை பகிர்ந்தமைக்கு நன்றிகள் சந்துரு!!!!! தொடருங்கள்!!
அதிகமாய் இரசித்த வரிகள்!
////பட்டுப்போன ஒரு
பட்டதாரி கேட்கிறான்.
ஆயிரம் அட்சரங்கள் கற்று
ஆவதென்ன?
வாழ்க்கை புத்தகத்தை
வாசிக்க முடியவில்லையே!///////
//சிகரெட்டின் நுணியில் தெரியும்
நெருப்பை தவிர
வேறேதும் வாழ்க்கையில்
வெளிச்சமில்லை.///
நன்றி கலை உங்கள் வருகைக்கு..
தொடருங்கள்...
என்ன நீண்ட நாட்களாகக் காணவில்லை....
Post a Comment