இன்று இலங்கையை பொறுத்தவரை எல்லாமே ஒட்டு மொத்தத்தில் இன்று சாதாரண மக்களை விட படித்து பெரிய பதவிகளில் இருப்பவர்களில் சிலர்தான் பல குற்றச் செயல்களிலும் லஞ்சம் வாங்குதல் போன்றவற்றிலும் ஈடுபடுகின்றனர்.
இன்று பல்வேறுபட்ட விடயங்கள் பற்றி இந்த பதிவினுடாக தர இருக்கின்றேன். என்று லஞ்சம் வாங்குதல் என்பது இலங்கையையும் தொற்றி விட்ட ஒன்றாக மாறி இருக்கின்றது. இன்று இந்த காரியங்களில் பல உயர் அதிகாரிகளும், அரசியல் வாதிகளுமே அதிகம் ஈடுபடுகின்றார்கள் என்று சொல்லலாம். இன்று உயர் அதிகாரிகளை பொறுத்தவரை (எல்லோரும் இல்லை நல்ல அதிகாரிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள்) எதற்கு எடுத்தாலும் லஞ்சம் வாங்கிக்கொண்டு இருக்கின்றார்கள் இதனால் அதிகம் பாதிக்கப்படுவது அப்பாவி ஏழை மக்கள்தான்.
இன்று பணம் இருந்தால் எதையும் சாதித்து விடலாம். பணம் படைத்தவர்களுக்கு எல்லாமே சர்வ சாதாரணமாகிவிட்டது. காசிருந்தா வாங்கலாம் எல்லாவறைறயும். இன்று இலங்கையை பொறுத்தவரை உயர் அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதனால் அதிகம் பாதிக்கப்படுவது கீழ்மட்ட மக்களே.
இன்று என்ன நடக்கின்றது எதற்கு எடுத்தாலும் லஞ்சம். இன்று படித்த இளைஜர்கள் வேலை இல்லாமல் திண்டாடிக்கொண்டு இருக்கின்றார்கள். அதிலும் சாதாரண குடும்பத்தில் பிறந்து படித்து பட்டம் பெற்ற ஒரு பட்டதாரி படும்பாடு கேட்கவேண்டியதில்லை. அவன் படிப்பதற்கோ அவன் பட்ட கஷ்டம் வேறு. எப்படியோ கஷ்டப்பட்டு படித்து பட்டம் பெற்று வெளியே வந்து வேலைக்கு போகலாம் என்று நினைத்தால் அவன் ஏறி இறங்காத அலுவலகமில்லை போகாத நேர்முக பரிட்சை இல்லை. வேலைதான் கிடைத்த பாடில்லை. ஆனால் கஷ்டப்பட்டு படிக்காமல் குறுக்கு வழியில் வந்த இன்நொருத்தனுக்கு அந்த வேலை கிடைக்கிறது. எப்படித்தான் இவன் படித்து பட்டம் பெற்றாலும் இவனிடம் பணம் என்னும் தகுதி இருக்கவில்லை.
இங்கே என்ன நடக்கிறது உயர் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் இருக்கும் வேலைகளை பேரம்பேசி விற்கின்றனர். தங்களது குடும்ப உறவுகள் அல்லது வேண்டப்பட்டவர்களுக்கு அந்த பதவிகளை கொடுக்கின்றனர். மற்றவர்களை ஏமாற்றுவதற்காக நீர்முகப்பரிட்சை நடாத்திவிடுவார்கள் ஆனால் ஏற்கனவே வேலை பேரம் பேசப்பட்டு விடும்.
சாதாரண குடும்பத்தில் பிறந்த இவனால் என்னதான் செய்யமுடயும். அந்த பதவிகளுக்கு அமர்த்தப்படுபவர்கள் சரியான தகுதியோடு வந்திருக்கிரார்களா என்று பார்த்தால் அவர்கள் அலுவலகங்களிலே படும் பாட்டை பார்த்தால் புரிகிறது.
அதுமட்டுமல்ல இன்று சில அரச அலுவலகங்களிலே மக்கள் சிறிய வேலைகளை செய்வதாக இருந்தாலும் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க வேண்டும். அப்பொழுதுதான் அந்த காரியம் நிறைவடையும். உயர் அதிகாரிகள் மட்டுமல்ல சில கீழ்மட்ட அதிகாரிகளும் இதிலே கில்லாடிகள். இவர்களிடம் அதிகம் மாட்டுப்படுவது கிராமப்புற மக்களே.
லஞ்சத்தை ஒழிக்க வேண்டியவர்களே லஞ்சம் வாங்குவது சர்வ சாதாரணமாகிவிட்டது. இன்று ஒருசில பொலிஸ் அதிகாரிகள் நன்றாகவே உழைக்கின்றார்கள். பல்வேறு வழிகளில்...... (வேண்டாம் சொன்னால் சிக்கலில் மாட்டிவிட்டேன் என்றால்.....)
அதேபோல் சிலர் முக்கிய பொறுப்பு வாய்ந்த அதிகாரியாக இருப்பார்கல் ஆனால் அவரோ பல ஊளல்களில் ஈடுபடுவார். இயட்கையை பாதுகாக்க வேண்டியது எமது கடமையல்லவா. இன்று எமது வளங்கள் அளிக்கப்பட்டு வருகின்றன. இந்த இயட்கை வளங்களை நாசம் செய்வதிலே பல உயர் அதிகாரிகள் அரசியல்வாதிகள் ஈடுபடும் போது அவர்களை தட்டிக்கேட்பதற்கு மக்களோ மற்றும் அதனோடு தொடர்புடையவர்களுக்கோ முடியாத காரியம்........ என்ன நடந்தது.... அடுத்த அடுத்த பதிவுகளில் தொடரும்....
2 comments: on "திருந்துவார்களா இவர்கள்....."
திருடனைப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பது மாதிரி.. இவன்கலாகத் திருந்தினால் தான் உண்டு...
Sinthu கூறியது...
//திருடனைப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பது மாதிரி.. இவன்கலாகத் திருந்தினால் தான் உண்டு...//
சரியாகத்தான் சொன்னிங்க சிந்து....
இன்று திருந்தும் அளவில் யாரும் இல்லையே இலட்ச இலட்சமாய் சம்பாதிக்க இலகுவனே வழியல்லவா இது...
Post a Comment