இன்று பார்க்கும்போது
அழுவதைத்தவிர வேறு வழி
தெரியவில்லை எனக்கு
இதுதான் அன்று நான் கண்ட
அழகிய தேசமா?
இன்று என் தேசத்தில்
மிஞ்சி இருப்பது என்ன?
இல்லை இல்லை
நிறையவே இருக்கின்றனவே
கிராமங்கள் தோறும்
ஒன்றுக்கு இரண்டு
அநாதை இல்லங்களும்
அகதி முகாம்களும்
நாம் என்ன செய்தோம்
தமிழராய் பிறந்ததை தவிர.
அநாதை இல்லங்களில் வாழும்
அந்த மழலைகளின் முகத்தில்
எத்தனை எத்தனை
கவலைகளின் முகவரிகள்
ஆறுதல் சொல்வதைத்தவிர
என்னால் எதுவும்
செய்ய முடியவில்லை
வார்த்தைகள் வர மறுக்கின்றன..
நீங்கள் அனாதைகள் இல்லை
அனாதைகள் ஆக்கப்பட்டவர்கள்
நீங்கள் மட்டுமல்ல
நாங்களும்தான் அனாதைகள்
சொந்தங்களை இளந்ததனால்
நீங்கள் அனாதைகள்
சிறுவர் இல்லங்களில்.
தமிழனாய் பிறந்தோம் -இன்று
அனைத்தும் இழந்து
அகதிகளாக அடை பட்டோம்
அகதி முகாம்களில்.
தமிழன் என்றால்
அகதி என்று
மகுடம் சூட்ட
நினைக்கும் தேசமிது
"தமிழன் நாம்'
தலை நிமிர்ந்து சொல்லுங்கள்
தம்பிகளே தங்கைகளே
நாளைய தலைவர்கள்
நீங்கள் அல்லவா
அதுதான் உங்களையும்
முளையிலே கிள்ள நினைக்கிறது
இந்த தேசம்
காலம்தான் பதில் சொல்லும்
காத்திருங்கள் - என்னால்
இதட்கு மேலும் என்னால்
எதுவும் சொல்லமுடியாது
சொன்னால் நானும் நாளை
அநாதை ஆக்கப்படலாம்
வாய் பொத்தச் சொல்லும்
தேசமல்லவா இது...
0 comments: on "தமிழனாய் பிறந்ததால் நம்கதி இதுதானா...."
Post a Comment