Wednesday, 3 June 2009

கேள்விக்குறியாகும் சிறுவர்களின் எதிர்காலம்...

எனது தொலைந்த வலைப்பதிவில் இருந்து ஒரு பதிவு எனது புதிய வலைப்பதிவில்...

இன்றையசிறுவர்கள் நாளைய தலைவர்கள் என்று சொல்லப்படுகிறது. சிறுவர் உரிமைகள் பற்றி எல்லாம் பேசுகின்றார்கள்ஆனால் இன்று பல காரணங்களினால் சிறுவர்கள் பல இன்னல்களை எதிர் நோக்கி வருகின்றார்கள். கட்டாயமாக வழங்கப்படவேண்டிய கல்விகூட பாதிக்கப்படுகின்றது. இன்று பாடசாலையை விட்டு இடை விலகுகின்ற சிறுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இவைத்தடுப்பதட்குரிய வழிவகைகளை பல்வேறுபட்ட அமைப்புகள் அரச சார்பற்ற நிறுவனங்கள் முன்னெடுக்கின்ற போதிலும் சில காரணங்களினால் மாணவர்கள் இடை விலகும் வீதம் குறைந்த பாடில்லை. இந்த பதிவினுடாக மாணவர்கள் இடை விலகுவதற்கான காரணங்கள் அவர்கள் எதிர் நோக்கும் பிரட்சனைகள்அவற்றுக்குரிய திர்வுகள் பற்றி பேச இருக்கின்றேன்.

இன்று மாணவர்கள் இடை விலகுகின்றவீதம் ஏனைய இடங்களை விட வடக்கு , கிழக்கிலேயே அதிகமாக இருக்கின்றது இதட்கு முக்கிய காரணம் நாட்டில் இடம் பெற்றுவரும் யுத்தம் என்பது அனைவரும் அறிந்த விடயம்.

இன்னும் பல காரணங்கள் இருக்கின்றன. இவற்றை தடுப்பதற்கான காரணங்களை அறிவதற்காக பல அமைப்புக்கள், நிறுவனங்கள் பல ஆய்வுகளை மேற்கொண்டு மாணவர்கள் இடை விலகுகின்ற வீதத்தினை குறைப்பதட்க்கான திட்டங்களை மேற்கொண்டு வருகின்றன.

கல்வி, கலை, கலாச்சாரம் , மற்றும் சிறுவர்களில் அக்கறை கொண்ட ஒரு அமைப்பாக ஒரு தசாப்தமாக சேவையாற்றி வரும். களுதாவளை கல்வி அபிவிருத்தி ஒன்றியம் இருவர்கள் கல்வியில் இருந்து இடை விலகுவது தொடர்பாக ஒரு ஆய்வினை மேற்கொண்டது.

சிறுவர்கள் இடை விலகுவதற்கு உள்நாட்டு யுத்தம் ஒரு காரணம் அது பற்றி நான் சொலலவே தேவை இல்லை எல்லோருக்கும் தெரிந்த விடயம். இடை விலகும் சிறுவர்களின் எண்ணிக்கை கிராமப்புறங்களிலேயே அதிகமாக இருக்கின்றது.இவற்றுக்குபல பல காரணங்கள் இருக்கின்றது. தனது தாய் தந்தையர் படிப்பறிவு அற்றவர்கள் ஆதலால் தாய் தந்தையர் தனது பிள்ளைகளை படிப்பிப்பதில் அக்கறை காட்டாமை. மற்றும் கிராமப்புறங்களிலே போதிய வசதிகள் செய்து கொடுக்கப்படாமை. வறுமை என பல காரணங்கள் இருக்கின்றன.

கிராமப்புறங்களிலே வறுமையின் காரணமாக பாடசாலை போக வேண்டிய வயதில் விவசாயம் போன்ற தொழில்களில் ஈடுபடுகின்றனர். கிராமப்புற பெற்றோர் படிப்பறிவு குறைந்தவர்கள் அவர்களுக்கு தகுந்த விழிப்புணர்வு இல்லை விழிப்புணர்வு வழங்கப்பட வேண்டும்.

என்னுமொரு முக்கிய விடயமிருக்கின்றது பல வழிகளில் விழிப்புணர்வுகள் ஏறபடுத்தப்பட்டாலும் இடை விலகும் சிறுவர்களின் எண்ணிக்கை குறைந்த செல்கின்றபோது பல பிரட்சனைகளை எதிர் நோக்க வேண்டி வருகிறது ஒரு வகையில் இடை விலகிய மாணவர்களை மீண்டும் பாடசாலையில் சேர்ப்பதாக வைத்துக்கொள்வோம். இடை விலகும் மாணவர்களில் அதிகமானவ்கார்கள் தரம் 6, 7 மாணவர்களே இந்த 6, 7 தரங்களை சேர்ந்த மாணவர்கள் இந்த வயதில்தான் சமுகத்தை உணர்ந்து கொள்கின்றார்கள். தாங்கள் 6, 7 தரம் படிக்கும் பொது தங்களுக்கு எழுத வாசிக்க தெரியாமல் போவதனால் பாடசாலையை விட்டு விலகுகிறார்கள். இது தங்களை சக மாணவர்கள் கேலி நிலைக்கு நினைப்பார்கள் என்ற ஒரு தாழ்வு மனப்பாண்மை காரணமாக இருக்கின்றது.

இப்படி இடை விலகும் மாணவர்களை மிண்டும் பாடசாலையில் சேர்த்தாலும் அவர்கள் மீண்டு இடை விலகும் சந்தர்ப்பங்கள் அதிகம் அவர்களை நல்ல முறையில் ஆசிரியர்களோ, பெற்றோரோ, சிறுவர் நலனில் அக்கறை உடைய தரப்பினரோ அடிப்படை கல்வியை வழங்கி அவர்களை பாடசாலையில் சேர்க்க முன்னர் எழுத வாசிக்க பழக்க வேண்டிய தேவை இருக்கின்றது

இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம் எது எப்படி இருப்பினும் எல்லா வகையிலும் பாதிக்கப்படுவது எமது சமுகமே........

Post Comment


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "கேள்விக்குறியாகும் சிறுவர்களின் எதிர்காலம்..."

Post a Comment