
நான் பதிவுலகத்துக்கு வந்து என்ன செய்திருக்கிறோம், எதை சாதித்து இருகி்க்கிறேன், எனக்குள்ளே நான் கேட்கும் கேள்விகள். நீங்களும் என்னைபார்த்து கேட்பது புரிகிறது. நான் எதுவும் சாதிக்க வில்லை. சாதிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். இன்று எமது சமுகம் எதிர் நோக்கும் பிரட்சனைகளையும், மறைந்து வரும் தமிழர் நம் கலை,கலாசாரங்களையும் வெளி உலகிற்கு கொண்டு வரவேண்டும் என்ற ஆதங்கம் என்னை விடுவதாக இல்லை. எமது சமுகம் எதிர் நோக்கும் பிரட்சனைகள்தான் எத்தனை எத்தனை. இவை எல்லாம் வெளி உலகிற்கு எடுத்துச் சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன். ஆனால் முடியாத காரியமே எனது கருத்துக்கே சுதந்திரம் இல்லை எனக்கு எங்கே சுதந்திரம் வரப்போகிறது. எது எப்படி இருப்பினும் மறைந்து வரும் எமது கலை, கலாசாரம் தொடர்பாக நிறையவே எழுத வேண்டும் என்றொரு எண்ணம் இருக்கிறது.
இது என்னுடைய 50 வது பதிவு நான் பதிவுலகத்துக்கு வந்து படித்தவை ஏராளம், நல்ல நண்பர்கள் கிடைத்திருக்கின்றார்கள். மிகவும் சந்தோசம் அடைகின்றேன். நான் இந்த வலைப்பதிவினை ஆரம்பித்து இன்று சரியாக இரண்டு மாதங்கள் நான் கடந்த 21.05.2009 இல் தான் இந்த வலைப்பதிவினை ஆரம்பித்தேன். எல்லோரும் கேட்பது ஏன் எவ்வளவு விரைவாக பதிவிடுறிங்க எங்களுக்கு வாசிப்பதற்கு இடம் கொடுங்க என்றுதான். இன்னும் அதிகமாக எழுத வேண்டும் என்ற ஆதங்கம் இருக்கிறது அதுதான் எவ்வளவு வேகம்.
நான் பதிவுலகத்துக்கு வந்தது 19.02.2009 இல் தான் அப்போது நான் வேறொரு வலைப்பதிவினை வைத்து இருந்தேன். அது எங்கோ மாயமாகி விட்டது. என்னை பதிவுலகிற்கு அறிமுகம் செய்தவர் எனது நண்பரும் இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபன அறிவிப்பாளரும், தொழிநுட்பக் கலைஞரும் பதிவருமான பிரபா. நண்பர் பிரபாவுக்கு என்றும் நன்றி கூறக்
கடமைப்பட்டுள்ளேன்
நான் எழுதுவதெல்லாம் சரியா நானும் ஒரு பதிவரா? என்றெல்லாம் எனக்குள் நான் அடிக்கடி கேட்கும் கேள்விகள். இன்று அதற்கு விடை கிடைத்து இருக்கின்றது. நானும் ஒரு பதிவர் என்பதற்கான அந்தஸ்த்து கிடைத்திருக்கின்றது. இரண்டு மாதத்திலே 50 பதிவுகள், எனது 50 வது பதிவிலே இரண்டு விருதுகள் வழங்கப்பட்டு இருக்கின்றது எல்லையற்ற சந்தோசம் அடைகின்றேன்.
என்னை உற்சாகப்படுத்திய எனது நண்பர்களுக்கு நான் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளேன். பதிவுலகிற்கு வருவதற்கு முன்னர் கவிதை எழுத வேண்டும் என்ற ஆசை இருந்தது ஆனால் எழுதவில்லை. கவிதை என்று இல்லாமல் கிறுக்கல்கள் என்று எனது கவிதைகளை பதிவிட்டேன். நண்பர்களின் பாராட்டுக்கள்தான் நான் எழுதும் அத்தனையும்.
நான் பதிவுலகத்திற்கு வந்து பல நல்ல நண்பர்களை சந்தித்து இருக்கிறேன். நான் அன்று முதல் இன்றுவரை என்றும் மதிக்கின்ற ஒரு நல்ல மனிதர். அறிவிப்பாளர் லோஷன் அண்ணா அவர்கள் எனக்கு முதன் முதலில் பின்நூட்டமிட்டது எனக்கு இன்னும் எழுத வேண்டும் என்ற ஆவலை தூன்டியது. லோஷன் அண்ணாவுக்கும் எனது நன்றிகள். லோஷன் அண்ணா எனக்கு முதன்முதலில் வழங்கிய பின்னூட்டம் இதுதான் "LOSHAN கூறியது... உங்கள் பார்வைக் கோணம் அருமை சகோதரா..இந்த பிஞ்சுகளின் எதிர்காலம் பற்றிப் பெரிதாக கவலைப்பட பெரியவர்கள் முன்வரவேண்டும்." இது எனக்குக் கிடைத்த முதல் அங்கிகாரம்.
அடுத்து நானும் ஒரு பதிவர் என்ற அந்தஸ்தை பட்டாம் பூச்சி விருது மூலமாகத்தந்த முனைவர் இரா. குணசீலன் அவர்களுக்கும் எனது நன்றிகள். இவரது இலக்கியப்படைப்புகளை கண்டு வியந்தவன் நான்.
எனக்கு பல வாசகர்களையும் நண்பர்களையும் தேடித்தந்த தமிழிஸ் தமிழ்மணம் இரண்டுக்கும் எனது விசேட நன்றிகளோடு ஏனைய திரட்டிகளுக்கும் எனது நன்றிகள்.
எனக்கு சந்தோசத்துக்கு மேல் சந்தோசத்தை கொடுக்கும் விடயம்தான். நண்பர் அக்பர் அவர்களினால் வழங்கப்பட்டிருக்கும் சுவையார்வ பதிவு/பதிவர் விருது. அவருக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த விருதினை நானும் கொடுக்கவேண்டுமே.....
1 .பிரபா (விழியும் செவியும்) இவர் தனது வலைப்பதிவிலே நல்ல கவிதைகளை தொகுத்து பதிவிடுவதோடு சிந்தனை கருத்துக்களையும். பல அறிவுபூர்வமான பதிவுகளையும் தந்து வரும் ஒருவர். இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்திலும் பல அறிவுபூர்வமான பல நிகழ்சிகளோடு ஒரு தொழிநுட்பக் கலைஞராகவும் வலம் வருபவர். நேரத்தை இவர் தேடிப்பிடிக்க வேண்டி இருக்கிறது.
2 யாழினி (நிலவில் ஒரு தேசம்) இவர் பல கவிதைகளையும் பல அறிவுபூர்வமான கட்டுரைகளையும் தரும் ஒருவர்.
3. கானா பிரபா (றேடியோஸ்பதி) இவர் வித்தியாசமான முறையிலே இசைத்துறை சார்ந்ததாகவும் பல்வேறு பட்ட பதிவுகளையும் வழங்கி வருகின்றார். சினிமாப் பாடல்கள் பற்றிய பரந்த அறிவு கொண்டவர் என்று சொன்னால் அது மிகையாகாது. வளர்ந்து வரும் அறிவிப்பாளர்களுக்கு ஒரு சினிமாத் தகவல் களஞ்சியம் என்று சொல்லலாம்.
4. சிந்துகா (சிந்து) இவர் பல கவிதைகளோடு கட்டுரைகள் சிந்தனைக் கருத்துக்களையும் தமது பதிவுகளிலே வழங்கி வருகின்றார்.
5 .டொக்டர்.எம்.கே.முருகானந்தன் (ஹாய் நலமா) இவர் தனது வலைப்பதிவின் மூலமாக பல்வேறுபட்ட மருத்துவத்தகவல்களோடு பல ஆக்கபூர்வமான கட்டுரைகளையும் வழங்கி வரும் ஒருவர்.
6 .கலை (கலை-இராகலை) இவரும் மலையகம் சார்ந்த பல கட்டுரை கவிதைகளோடு பல நல்ல கருத்தாழமிக்க கட்டுரைகளையும் வழங்கி வருகிறார்.
தொடருங்கள் நண்பர்களே இன்னும் பல நல்ல விடயங்களை பதிவுகளாகத் தர வேண்டும் என்பதே எனது அவா...
53 comments: on "கடந்து வந்த பாதையை மறக்கலாமா... 50 வது பதிவு..."
வாழ்த்துகள் விருதுக்கும், ஐம்பதாவது பதிவிற்கும்
வாழ்த்துகள் விருது பெற்றதற்கும், ஐம்பதாவது இடுகைக்கும்...
ஒரு சிறிய விளக்கம்...
blog - பதிவு, வலைப் பதிவு
post - இடுகை
(நன்றி : நண்பர் பழமைப்பேசி..)
தமிழிஷ், தமிழ்மணம் இரண்டிலும் இடுகை என்றுதான் சொல்லுவார்கள்...
விருது பெற்ற உமக்கும் நீங்க அளித்த நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள், உங்களுக்கும் விருது பெற்ற அனைவருக்கும், உங்கள் ஐம்பதாவது பதிவிற்கும்.
//சங்கா கூறியது...
வாழ்த்துகள் விருதுக்கும், ஐம்பதாவது பதிவிற்கும்//
உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி சங்கா
//இராகவன் நைஜிரியா கூறியது...
வாழ்த்துகள் விருது பெற்றதற்கும், ஐம்பதாவது இடுகைக்கும்...
ஒரு சிறிய விளக்கம்...
blog - பதிவு, வலைப் பதிவு
post - இடுகை
(நன்றி : நண்பர் பழமைப்பேசி..)
தமிழிஷ், தமிழ்மணம் இரண்டிலும் இடுகை என்றுதான் சொல்லுவார்கள்...//
உங்கள் வருகைக்கும், கருத்துக்களுக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி இராகவன்
//தமிழரசி கூறியது...
விருது பெற்ற உமக்கும் நீங்க அளித்த நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்//
உங்கள் வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி தமிழரசி
//Subankan கூறியது...
வாழ்த்துக்கள், உங்களுக்கும் விருது பெற்ற அனைவருக்கும், உங்கள் ஐம்பதாவது பதிவிற்கும்.//
உங்கள் வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி சுபாங்கன்..
வாழ்த்துக்கள் சந்ரு விருது பெற்ற உங்களுக்கும் உங்களிடம் விருது பெற்ற மற்றவர்களுக்கும்......
//பிரியமுடன்.........வசந்த் கூறியது...
வாழ்த்துக்கள் சந்ரு விருது பெற்ற உங்களுக்கும் உங்களிடம் விருது பெற்ற மற்றவர்களுக்கும்......//
உங்கள் வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி வசந்த்
விருது பெற்ற தங்களுக்கும், தங்களிடமிருந்து விருது பெற்றவர்களுக்கும் வாழ்த்துகள். ஐம்பதாவது இடுகைக்கும் வாழ்த்துகள்.மேலும் பல நூறு இடுகைகள் படைக்க வாழ்த்துகள்.
//குடந்தை அன்புமணி கூறியது...
விருது பெற்ற தங்களுக்கும், தங்களிடமிருந்து விருது பெற்றவர்களுக்கும் வாழ்த்துகள். ஐம்பதாவது இடுகைக்கும் வாழ்த்துகள்.மேலும் பல நூறு இடுகைகள் படைக்க வாழ்த்துகள்.//
உங்கள் வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி குடந்தை அன்புமணி
வாழ்த்துக்கள் தம்பி.. இதற்கெல்லாம் நன்றி சொல்லத் தேவையில்லை.. எனது கடமையைத் தான் செய்தேன்.
உங்கள் நன்றிகளுக்கும், எனக்களித்த பட்டாம்பூச்சி விருதுக்கும் நன்றிகள்..
அரைச் சதத்துக்கு வாழ்த்துக்கள்
50 வது பதிவுக்கும்,விருது பெற்றமைக்கும் வாழ்த்துக்கள் சந்ரு!!விருது பெற்ற மற்ற பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்!!
//LOSHAN கூறியது...
வாழ்த்துக்கள் தம்பி.. இதற்கெல்லாம் நன்றி சொல்லத் தேவையில்லை.. எனது கடமையைத் தான் செய்தேன்.
உங்கள் நன்றிகளுக்கும், எனக்களித்த பட்டாம்பூச்சி விருதுக்கும் நன்றிகள்..
அரைச் சதத்துக்கு வாழ்த்துக்கள்//
நன்றி லோஷன் அண்ணா உங்கள் வருகைக்கும், கருத்துக்களுக்கும், வாழ்த்துக்களுக்கும்...
//Mrs.Menagasathia கூறியது...
50 வது பதிவுக்கும்,விருது பெற்றமைக்கும் வாழ்த்துக்கள் சந்ரு!!விருது பெற்ற மற்ற பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்!!//
உங்கள் வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி Mrs.Menagasathia
50 வது பதிவில் அவார்டை தொங்க விட்டுடிங்க
வாழ்த்துக்கள்!
//வால்பையன் கூறியது...
50 வது பதிவில் அவார்டை தொங்க விட்டுடிங்க
வாழ்த்துக்கள்!//
ஆமாங்க...
உங்கள் வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி வால்
உங்கள் ஐம்பதாவது பதிவுக்கு
என் மனமார்ந்த வாழ்த்துகள். உங்களுக்கு
கொடுத்தவர்க்கும் நீங்கள்
கொடுத்தவர்களுக்கும் நன்றியும் வாழ்த்துகளும்
ரி.கே
சந்ரு
மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது,உங்களைப் போன்ற இளையவர்கள் தொடர்ந்தும் எழுதவேண்டும். அன்புக்கும் விருதுக்கும் நன்றி
உங்களுக்கும் விருது பெற்ற அனைவருக்கும்... உங்கள் ஐம்பதாவது பதிவிற்கும் வாழ்த்துககள..:-)))
வாழ்த்துக்கள் சந்ரு.
உங்கள் ஐம்பதாவது இடுகைக்கு, புதிய விருதுக்கு அப்புறம் உங்கள் தொடர் முயற்சிக்கு. இன்னும் சிறப்பாக வளர மனப் பூர்வமான வாழ்த்துக்கள்.
// பெயரில்லா கூறியது...
உங்கள் ஐம்பதாவது பதிவுக்கு
என் மனமார்ந்த வாழ்த்துகள். உங்களுக்கு
கொடுத்தவர்க்கும் நீங்கள்
கொடுத்தவர்களுக்கும் நன்றியும் வாழ்த்துகளும்
ரி.கே//
உங்கள் வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி ரி.கே
//கானா பிரபா கூறியது...
சந்ரு
மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது,உங்களைப் போன்ற இளையவர்கள் தொடர்ந்தும் எழுதவேண்டும். அன்புக்கும் விருதுக்கும் நன்றி//
உங்கள் வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி அண்ணா....
//கார்த்திகைப் பாண்டியன் கூறியது...
உங்களுக்கும் விருது பெற்ற அனைவருக்கும்... உங்கள் ஐம்பதாவது பதிவிற்கும் வாழ்த்துககள..:-))//
உங்கள் வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி கார்த்திகைப் பாண்டியன்..
//சுசி கூறியது...
வாழ்த்துக்கள் சந்ரு.
உங்கள் ஐம்பதாவது இடுகைக்கு, புதிய விருதுக்கு அப்புறம் உங்கள் தொடர் முயற்சிக்கு. இன்னும் சிறப்பாக வளர மனப் பூர்வமான வாழ்த்துக்கள்.//
உங்கள் வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி சுசி
வாழ்த்துக்கள் சந்ரு.....
இன்னும் நிறைய உங்களிடம் இருந்து எதிர் பார்க்கிறோம்.....
வாழ்த்துக்கள் சந்ரு!
ஒரு தொடர்பதிவு விருதாக எனது வலைப்பூவான, காலடி-க்கு 'The Interesting Blog' அவார்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது! என்னை ஊக்குவிக்கும் விதமாக உங்கள் வலைப்பதிவைக் காண்கிறேன். அதற்கு என் அன்பு மற்றும் நன்றிகள்! உங்கள் வலைப்பூவைப் பற்றி இந்த இடுகையில் குறிப்பிடுவதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்!
//ஜெகநாதன் கூறியது...
வாழ்த்துக்கள் சந்ரு!
ஒரு தொடர்பதிவு விருதாக எனது வலைப்பூவான, காலடி-க்கு 'The Interesting Blog' அவார்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது! என்னை ஊக்குவிக்கும் விதமாக உங்கள் வலைப்பதிவைக் காண்கிறேன். அதற்கு என் அன்பு மற்றும் நன்றிகள்! உங்கள் வலைப்பூவைப் பற்றி இந்த இடுகையில் குறிப்பிடுவதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்//
முதலிலே விருது பெறும் உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்....
உங்கள் இடுகையிலே என்னைப்பற்றி குறிப்பட்டமைக்கு நன்றிகள். அதனையும்விட உங்களுக்கு பிடித்த பதிவ்ர்களுக்குள்ளே நானும் இருக்கின்றேன் என்பதில் சந்தோசம். உங்கள் தாராள மனப்பான்மையை பாராட்டுகிறேன்.
உங்கள் பதிவுகள் எல்லொரும்விரும்பக்கூடிய பதிவுகள்.தொடருங்கள்..வாழ்த்துக்கள்...
வருகைக்கு, கருத்துக்களுக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றிகள்...
//சப்ராஸ் அபூ பக்கர் கூறியது...
வாழ்த்துக்கள் சந்ரு.....
இன்னும் நிறைய உங்களிடம் இருந்து எதிர் பார்க்கிறோம்.....//
வருகைக்கு, கருத்துக்களுக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றிகள் சப்ராஸ் ...
50க்கும்
விருதுக்கும்
வாழ்த்துகள்!
பெற்ற மற்றவர்களுக்கும் வாழ்த்துகள்.
//நட்புடன் ஜமால் கூறியது...
50க்கும்
விருதுக்கும்
வாழ்த்துகள்!
பெற்ற மற்றவர்களுக்கும் வாழ்த்துகள்.//
உங்கள் வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி
ஜமால்
வாழ்த்துக்கள்
ஐம்பதாவது பதிவிற்கும் விருதுக்கும் என் வாழ்த்துக்கள். உங்கள் பதிவுகளை பற்றி நாங்கள் சொல்ல என்ன இருக்கின்றது. பின்னூட்டங்களும் வாக்குகுகளும் விருதுகளுமே அதற்க்கு சான்று.
//sakthi கூறியது...
வாழ்த்துக்கள்//
உங்கள் வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி sakthi
//sshathiesh கூறியது...
ஐம்பதாவது பதிவிற்கும் விருதுக்கும் என் வாழ்த்துக்கள். உங்கள் பதிவுகளை பற்றி நாங்கள் சொல்ல என்ன இருக்கின்றது. பின்னூட்டங்களும் வாக்குகுகளும் விருதுகளுமே அதற்க்கு சான்று.//
உங்களிடம் இருந்தும் இன்னும் நிறையவே எதிர் பார்க்கிறோம்.
வருகைக்கு, கருத்துக்களுக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றிகள் சதீஸ் ...
நன்றி சந்ரு, "வலையுலகில் விரைவாக கற்றுகொண்டவர் " என்ற விருதை உருவாக்கினால் அதை முதலில் உங்களுக்கு தரலாம்,,,,,,,, எப்படி வசதி.....
ஐம்பதாவது பதிவிற்கும் விருதுக்கும் என் வாழ்த்துக்கள்.
//பிரபா கூறியது...
நன்றி சந்ரு, "வலையுலகில் விரைவாக கற்றுகொண்டவர் " என்ற விருதை உருவாக்கினால் அதை முதலில் உங்களுக்கு தரலாம்,,,,,,,, எப்படி வசதி.....//
உண்மைதான் பிரபா நான் வலையுலகத்துக்கு வந்து கற்றுக்கொண்டவை ஏராளம். உங்களுக்குத்தான் நன்றி சொல்லவேண்டும்....
வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி பிரபா...
//gayathri கூறியது...
ஐம்பதாவது பதிவிற்கும் விருதுக்கும் என் வாழ்த்துக்கள்.//
வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி gayathri
வாழ்த்துக்கள், சந்ரு
//jothi கூறியது...
வாழ்த்துக்கள், சந்ரு//
வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி jothi
vaazhththukkal:)
//இரசிகை கூறியது...
vaazhththukkal:)//
வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி இரசிகை...
Thanks Santhru anna, Nice post..
We also remember u all the way we travel. I'm at home, so I can't read ur all posts; I'll read and comment soon.
//Sinthu கூறியது...
Thanks Santhru anna, Nice post..
We also remember u all the way we travel. I'm at home, so I can't read ur all posts; I'll read and comment soon.//
உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி சிந்து...
50வது பதிவை எட்டியிருக்கும் நீங்கள் இன்னும் நிறையப் பயனுள்ள பதிவுகளுடன் பயணிக்க வாழ்த்துக்கள். எனக்கும் விருது அளித்தமைக்கு எனது நன்றிகள். மகிழ்ச்சி.
//டொக்டர்.எம்.கே.முருகானந்தன் கூறியது...
50வது பதிவை எட்டியிருக்கும் நீங்கள் இன்னும் நிறையப் பயனுள்ள பதிவுகளுடன் பயணிக்க வாழ்த்துக்கள். எனக்கும் விருது அளித்தமைக்கு எனது நன்றிகள். மகிழ்ச்சி.//
வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி டொக்டர்.எம்.கே.முருகானந்தன்
நன்றி சந்ரு தங்கள் மூலமாக எனக்கு இவ்வாறானதொரு விருது கிடைத்ததையிட்டு மிகுந்த மகிழ்ச்சி. தாமதத்திற்கு மன்னிக்கவும். இன்று நான் எனது விருது தொடர்பான ஆக்கத்தை சமர்ப்பிக்கவுள்ளேன். மீண்டும் மீண்டும் நன்றிகள் சந்ரு...
வாழ்த்துக்கள்!! :-)
50.
//யாழினி கூறியது...
நன்றி சந்ரு தங்கள் மூலமாக எனக்கு இவ்வாறானதொரு விருது கிடைத்ததையிட்டு மிகுந்த மகிழ்ச்சி. தாமதத்திற்கு மன்னிக்கவும். இன்று நான் எனது விருது தொடர்பான ஆக்கத்தை சமர்ப்பிக்கவுள்ளேன். மீண்டும் மீண்டும் நன்றிகள் சந்ரு...//
உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்...
//Karthik கூறியது...
வாழ்த்துக்கள்!! :-)
50.//
உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்...
Post a Comment