Saturday 25 July 2009

பதிவர்கள் தங்களுக்குள்ளே விருது வழங்குவது சரியா?

இன்று பதிவுலகிலே பரவலாகப் பேசப்படுகின்ற விடயம் விருதுகள் பற்றித்தான். பதிவர்களே தங்களுக்குள் கருத்து மோதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த கருத்து மோதல்களால் கிடைக்கின்ற இலாபம் என்னவென்று சொல்லத்தெரியவில்லை.

இக கருத்து மோதல்கள் மூலம் விருது வழங்குதல், போட்டிகள் நடத்துதல். இவற்றை திரட்டிகள் செய்யலாம். பதிவர்கள் தங்களுக்குள் விருதுகளை பரிமாறுதல் போன்ற விடயங்கள் பற்றி பதிவர்களுக்குள்ளே பலதரப்பட்ட ஆதரவான, எதிரான கருத்துக்கள் வந்து கொண்டு இருக்கின்றன..

]இந்த கருத்து மோதல்கள் வெறுமனே பதிவர்களுக்குள்ளே வெறும் பகைமையினை வளர்ப்பதனை விடுத்து நல்லதொரு தீர்வு கிடைப்பதற்கு வித்திடுமாயின் அது சந்தோசப்பட வேண்டிய விடயமே.

எது எப்படி இருப்பினும் சில விடயங்களை பார்க்கவேண்டி இருக்கின்றது. இன்று விருதுகள் பற்றி இடுகைகள் இடாத பதிவர்கள் குறைவு என்றே சொல்லவேண்டும். அந்த அளவிற்கு விருதுகள் பெரும்பாலான பதிவர்களைச் சென்றடைந்து விட்டது.
பதிவுலகத்துக்கு நானும் ஒரு புதியவன்தான். பதிவர்களுகுள்ளே விருது வழங்குதல் என்பது. புதிய பதிவர்களை ஊக்கப்படுத்தும் ஒன்றாக இருக்கின்றது. பதிவர்களுக்கு விருது கொடுப்பதற்காக ஒரு அமைப்பு இல்லை என்கின்ற போது ( நான் புதிய பதிவர் நான் இருப்பதாக அறியவில்லை இருந்தால் மன்னிக்கவும்)பதிவர்களுக்குள்ளே விருது வழங்குவதில் தப்பே இல்லை. புதிய பதிவர்கள் இதனை பதிவுலகில் தங்களுக்கு கிடைத்த ஒரு அங்கிகாரமாகவே பார்க்கின்றனர்.

இந்த விருதுகளை பெறுகின்ற பதிவர்கள் அதனை தமது வலைப்பதிவுகளிலே பொறித்து விட்டு சந்தோசப் படுகிறார்களே தவிர தமது பெயருக்கு முன்னாலோ அல்லது பின்னாலோ போடுகிறார்களா. இல்லையே. அல்லது ஒரு வேலைவாய்ப்புகோ வேறு ஏதாவது நேர்முக பரிட்சைக்கோ போகும் போது நான் இந்த விருதெல்லாம் பெற்று இருக்கிறேன் என்று சொல்கின்றார்களா இல்லையே. தமது வலைப்பதிவில் பொறித்து தமக்கு பதிவுலகில் கிடைத்த ஒரு அங்கிகாரமாக நினைத்து சந்தோசப்படுவது மட்டுமே.

பதிவர்களுக்கு விருது வழங்குவதற்கென ஒரு அமைப்போ அல்லது திரட்டியோ முன்வருமாக இருந்தால் அது வரவேற்கத்தக்க விடயமே. எவரும் முன் வராதபோது பதிவர்களே விருது வழங்குவதில் தப்பு இருப்பதாக தெரியவில்லை.

இன்று விருது பெற்ற பல புதிய பதிவர்கள் தங்களுக்கு விருது கிடைத்துவிட்டது. தாங்கள் இன்னும் நிறையவே எழுத வேண்டுமென்று உற்சாகத்துடன் செயற்படுவதை காண முடிகின்றது.
விருது வழங்குவதட்கு தனி ஒரு அமைப்பு இல்லாதவிடத்து பதிவர்களுக்குள்ளே விருது வழங்குவதில் இந்த தப்பும் இல்லை. இது புதிய பதிவர்களை மாத்திரமன்றி பல பதிவர்களை உற்சாகப் படுத்தும் ஒன்றாகவே அமைகின்றது

Post Comment

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

32 comments: on "பதிவர்கள் தங்களுக்குள்ளே விருது வழங்குவது சரியா?"

geethappriyan said...

நண்பர் சந்ரு நல்ல பதிவு இட்டமைக்கு நன்றிகள்
உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை ஒட்டு போட்டாச்சு.
தொடர்ந்து நட்பில் இருப்போம்.

Admin said...

//கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும்.. கூறியது...
நண்பர் சந்ரு நல்ல பதிவு இட்டமைக்கு நன்றிகள்
உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை ஒட்டு போட்டாச்சு.
தொடர்ந்து நட்பில் இருப்போம்.//

உண்மையாகவே இந்த விருதுவழங்கல் பிரட்சனை பதிவர்களுக்கிடையே பகைமையை வளர்ப்பதை தவிர வேறு எதுவும் நடக்கப் போறதில்லை.

வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி நண்பரே...

நட்புடன் ஜமால் said...

வாழ்த்துகள்!
வாழ்த்துகள்!

நிச்சியமா இது இரு அங்கீகாரத்துடன் உடைய ஊக்கம் தான் ...

Admin said...

//நட்புடன் ஜமால் கூறியது...
வாழ்த்துகள்!
வாழ்த்துகள்!

நிச்சியமா இது இரு அங்கீகாரத்துடன் உடைய ஊக்கம் தான் ...//

வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி நண்பரே...

சப்ராஸ் அபூ பக்கர் said...

நல்ல ஒரு கருத்து சந்ரு.... உண்மையில் பெறுகின்ற விருது ஏதோ இன்னும் எங்களை தேடலின் பக்கம் இழுத்துச் செல்கிறது. விருது வழங்குவதில் எந்தத் தப்பும் இல்லை. யாரு சொன்னது தப்புன்னு சொல்லி?.... அவரைக் கொண்டு வந்து என் கண் முன்னே நிறுத்துங்கள். (ஆனால் அவரை என்ன பண்ணப் போறேன்னு இனித் தான் யோசிக்கப் போறேன்.... ஐ.... லொள்..... கும்தலகடி கானா......)

வாழ்த்துக்கள் சந்ரு......

Admin said...

//சப்ராஸ் அபூ பக்கர் கூறியது...
நல்ல ஒரு கருத்து சந்ரு.... உண்மையில் பெறுகின்ற விருது ஏதோ இன்னும் எங்களை தேடலின் பக்கம் இழுத்துச் செல்கிறது. விருது வழங்குவதில் எந்தத் தப்பும் இல்லை. யாரு சொன்னது தப்புன்னு சொல்லி?.... அவரைக் கொண்டு வந்து என் கண் முன்னே நிறுத்துங்கள். (ஆனால் அவரை என்ன பண்ணப் போறேன்னு இனித் தான் யோசிக்கப் போறேன்.... ஐ.... லொள்..... கும்தலகடி கானா......)

வாழ்த்துக்கள் சந்ரு......//

வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி நண்பரே...

Praveenkumar said...

உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை.....!!!!!
வாழ்த்துக்கள்!!!

Admin said...

//பிரவின்குமார் கூறியது...
உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை.....!!!!!
வாழ்த்துக்கள்!!!//

வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும், கருத்துக்களுக்கும் நன்றி நண்பா...

குறை ஒன்றும் இல்லை !!! said...

//இன்று பதிவுலகிலே பரவலாகப் பேசப்படுகின்ற விடயம் விருதுகள் பற்றித்தான்//
அட விடுங்க .. நாம பெருசாகணும்னா, நம்மல கவனிக்கணும்னா இது மாதிறி நிறைய எழுதுவாங்க...

Nathanjagk said...

//தமது பெயருக்கு முன்னாலோ அல்லது பின்னாலோ போடுகிறார்களா//
ஏங்க,​நெசமாத்தான் சொல்றீங்களா? எம் ​பேருக்குப் பின்னாடி இபிஅ ​போட்டா அவ்வளவு நல்லாவா இருக்கும்??
//பதிவர்களுக்கு விருது வழங்குவதற்கென ஒரு அமைப்போ அல்லது திரட்டியோ //
அய்யோ.. அய்யோ.. இருக்கிற தமிழ்மணம், தமிலீஷ் பண்ற அக்கப்போர் பத்தாதுன்னு இன்னும் ​வேணுங்கிறாரே சந்ரு?? ஓட்டு​போடறதுல தில்லுமுல்லுன்னு நம்மாளுங்க மல்லுக்கட்டிக்கிட்டு இருக்காங்க.. இதில அவார்ட்டுக்குன்னு ஸ்பெஷல் ப்ராஞ்ச் ஓபன் பண்ணுனா, பிராண்டிக்கிட மாட்டாங்களா???

நிலாமதி said...

இந்த முயற்சி மேலும் மேலும் ஊக்கப்படுத்தும் என்பது என் பணிவான கருத்து. நானும் புதுசு தாங்க. இன்னும் அரிவரியில் உள்ளேன். இன்னும் கொஞ்ச காலம் பொறுங்க நானும் ஜமாய்ச்சிடமாடேனா ?

அ.மு.செய்யது said...

நல்ல அலசல்..

விருதுகளுக்கு அப்பாற்பட்டு,பதிவர்களுக்கான பிரத்யேக அங்கீகாரங்கள் வெகுஜன பத்திரிக்கைகள்
வாயிலாக தொடர்ந்து வந்து கொண்டு தானிருக்கின்றன தோழரே !!!

Admin said...

//குறை ஒன்றும் இல்லை !!! கூறியது...
//இன்று பதிவுலகிலே பரவலாகப் பேசப்படுகின்ற விடயம் விருதுகள் பற்றித்தான்//
அட விடுங்க .. நாம பெருசாகணும்னா, நம்மல கவனிக்கணும்னா இது மாதிறி நிறைய எழுதுவாங்க...//

அப்போ நீங்க எல்லாம் தெரிந்தவரெண்டு சொல்லுங்க... வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி நண்பா..

Admin said...

//ஜெகநாதன் கூறியது...
//தமது பெயருக்கு முன்னாலோ அல்லது பின்னாலோ போடுகிறார்களா//
ஏங்க,​நெசமாத்தான் சொல்றீங்களா? எம் ​பேருக்குப் பின்னாடி இபிஅ ​போட்டா அவ்வளவு நல்லாவா இருக்கும்??
//பதிவர்களுக்கு விருது வழங்குவதற்கென ஒரு அமைப்போ அல்லது திரட்டியோ //
அய்யோ.. அய்யோ.. இருக்கிற தமிழ்மணம், தமிலீஷ் பண்ற அக்கப்போர் பத்தாதுன்னு இன்னும் ​வேணுங்கிறாரே சந்ரு?? ஓட்டு​போடறதுல தில்லுமுல்லுன்னு நம்மாளுங்க மல்லுக்கட்டிக்கிட்டு இருக்காங்க.. இதில அவார்ட்டுக்குன்னு ஸ்பெஷல் ப்ராஞ்ச் ஓபன் பண்ணுனா, பிராண்டிக்கிட மாட்டாங்களா???//

விருது வழங்க ஒரு அமைப்பு இருந்தால் நல்லது இன்று நினைத்தேன். நீங்க சொல்வதும் சரிதான்.

வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி நண்பா....

Admin said...

//பிரியமுடன்.........வசந்த் கூறியது...
நல்ல சிந்தனை//

வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி நண்பா....

Admin said...

//நிலாமதி கூறியது...
இந்த முயற்சி மேலும் மேலும் ஊக்கப்படுத்தும் என்பது என் பணிவான கருத்து. நானும் புதுசு தாங்க. இன்னும் அரிவரியில் உள்ளேன். இன்னும் கொஞ்ச காலம் பொறுங்க நானும் ஜமாய்ச்சிடமாடேனா ?//

வாழ்த்துக்கள்...

வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி நிலாமதி...

Admin said...

//அ.மு.செய்யது கூறியது...
நல்ல அலசல்..

விருதுகளுக்கு அப்பாற்பட்டு,பதிவர்களுக்கான பிரத்யேக அங்கீகாரங்கள் வெகுஜன பத்திரிக்கைகள்
வாயிலாக தொடர்ந்து வந்து கொண்டு தானிருக்கின்றன தோழரே !!!//

உண்மைதான் இன்று வெகுஐன ஊடகங்கள் பதிவர்களுக்கு உரிய அந்தஸ்தை கொடுக்கின்றன.... ஆனால் பதிவர்கள் நாம் முட்டி மோதுவதா....

வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி நண்பா....

சுசி said...

நல்ல பதிவு சந்ரு.

Admin said...

//சுசி கூறியது...
நல்ல பதிவு சந்ரு.//

வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி சுசி..

ஆ.ஞானசேகரன் said...

நீங்க சொன்னா தப்பேயில்லை நண்பரே

Admin said...

//ஆ.ஞானசேகரன் கூறியது...
நீங்க சொன்னா தப்பேயில்லை நண்பரே//

வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி நண்பா....

இது நம்ம ஆளு said...

பதிவர்களுக்கு விருது வழங்குவதற்கென ஒரு அமைப்போ அல்லது திரட்டியோ முன்வருமாக இருந்தால் அது வரவேற்கத்தக்க விடயமே

இன்று விருது பெற்ற பல புதிய பதிவர்கள் தங்களுக்கு விருது கிடைத்துவிட்டது. தாங்கள் இன்னும் நிறையவே எழுத வேண்டுமென்று உற்சாகத்துடன் செயற்படுவதை காண முடிகின்றது

உண்மையான உண்மை!

Admin said...

//இது நம்ம ஆளு கூறியது...
பதிவர்களுக்கு விருது வழங்குவதற்கென ஒரு அமைப்போ அல்லது திரட்டியோ முன்வருமாக இருந்தால் அது வரவேற்கத்தக்க விடயமே

இன்று விருது பெற்ற பல புதிய பதிவர்கள் தங்களுக்கு விருது கிடைத்துவிட்டது. தாங்கள் இன்னும் நிறையவே எழுத வேண்டுமென்று உற்சாகத்துடன் செயற்படுவதை காண முடிகின்றது

உண்மையான உண்மை!//

வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி நண்பா....

முனைவர் கல்பனாசேக்கிழார் said...

உண்மையான செய்தி.....வாழ்த்துக்கள்.

Admin said...

//முனைவர் சே.கல்பனா கூறியது...
உண்மையான செய்தி.....வாழ்த்துக்கள்.//

வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி முனைவர் சே.கல்பனா அவர்களே....

என்.கே.அஷோக்பரன் said...

விருதுக்கு ஓர் அமைப்பு பற்றிய தங்கள் கருத்தைக் கண்டேன். இன்று தமிழிஷில் சேர்க்கப்பட்டுள்ள பதிவ ஒன்றில் தமிழ் வலைப்பதிவுக்கு விருத தொடுாபான பதிவு ஒன்றைக் கண்டேன் - அதன் முகவரி - http://tamilblogawardsinternational.blogspot.com/ முதலாவது விருதுகளை வழங்கியிருக்கிறார்கள் - ஆனால் எனது கருத்து யாதெனில் இதெல்லாம் இல்லாமல் ஒரு நட்புறவான சூழலைப் பதிவர்கள் ஏற்படுத்தலாம் என்பது தான்.

Admin said...

//என்.கே.அஷோக்பரன் கூறியது...
விருதுக்கு ஓர் அமைப்பு பற்றிய தங்கள் கருத்தைக் கண்டேன். இன்று தமிழிஷில் சேர்க்கப்பட்டுள்ள பதிவ ஒன்றில் தமிழ் வலைப்பதிவுக்கு விருத தொடுாபான பதிவு ஒன்றைக் கண்டேன் - அதன் முகவரி - http://tamilblogawardsinternational.blogspot.com/ முதலாவது விருதுகளை வழங்கியிருக்கிறார்கள் - ஆனால் எனது கருத்து யாதெனில் இதெல்லாம் இல்லாமல் ஒரு நட்புறவான சூழலைப் பதிவர்கள் ஏற்படுத்தலாம் என்பது தான்.//

நானும் அந்த வலைப்பதிவைப் பார்த்தேன். நீங்கள் சொல்வது உண்மைதான். முதலில் பதிவர்களுக்குள்ளே ஒரு புரிந்துணர்வு ஏற்பட வேண்டும்.

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி நண்பா...

Anonymous said...

சந்ரு ! நரம்பில்லாத நாக்கால் பலதையும்,பத்தையும் பேசுவார்கள்,
நாம் தான் ‘அன்னப்பறவை’ மாதிரி வாழக் கற்றுக்கணும்

ரி.கே

Anonymous said...

நல்ல கருத்தை நன்றே அலசியிருக்கீங்கப்பா....

Admin said...

//பெயரில்லா கூறியது...
சந்ரு ! நரம்பில்லாத நாக்கால் பலதையும்,பத்தையும் பேசுவார்கள்,
நாம் தான் ‘அன்னப்பறவை’ மாதிரி வாழக் கற்றுக்கணும்

ரி.கே//

நீங்கள் சொல்வதும் சரிதான்... நரம்பில்லா நாக்கால் எதையும் பேசலாம்... எழுதலாமோ.........

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி ரி.கே.....

Admin said...

//தமிழரசி கூறியது...
நல்ல கருத்தை நன்றே அலசியிருக்கீங்கப்பா....//

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி தமிழரசி....

Post a Comment