Monday 6 July 2009

நம் சிறுவர்களுக்காக ஒன்றிணைவோம்.....

இன்று சிறுவர்களைப்பொறுத்தவரை பல்வேறு இன்னல்களுக்கு ஆழாகி வருகின்றனர் அதிலும் குறிப்பாக இலங்கையை பொறுத்தவரை பல்வேறு காரணங்களினால் சிருவர்கள் பதிக்கபட்டு வருகின்றனர்.

இன்று இலங்கையை பொறுத்தவரை நாட்டில் இடம் பெற்ற யுத்தம் காரணமாக பல சிறுவர்கள் தமது தாய் தந்தையரை இழந்த நிலையில் பல்வேஇன்றைய நிலையில் நாம் எமது சிறுவர்களின் எதிர்காலம் பற்றி சிந்திக்க வேண்டி இருக்கின்றது. எமது இளம் சந்ததியினரின் எதிர்கால நிலை என்ன?. அவர்களது நலன் தொடர்வில் பல ஆய்வுகளை மேற்கொண்டு இருக்கின்றார்கள் களுதாவளை கல்வி அபிவிருத்தி ஒன்றியத்தினர். அந்த ஆய்வின் அடிப்படையில் பல்வேறு செயத்திட்டங்களை மேற்கொள்ள உத்தேசித்து இருக்கின்றார்கள். இதட்காக பல துறை சார்ந்தவர்களையும் இணைத்துக்கொள்ள தீர்மானித்து இருக்கின்றனர்று பிரட்சனைகளை எதிர் நோக்கி வருகின்ற அதே வேளை அவர்கள் சொந்தங்களை இழந்து சிறுவர் இல்லங்களிலே வாழ்ந்து வருகின்றனர்.. இன்னும் சிலர் பல்வேரு வழிகளில் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.


இன்று சிறுவர்கள் பல்வேறு வழிகளில் பதிப்படைவதாலும் சொந்தங்களை இழந்ததாலும் தமது கல்வியினை இடை நடுவில் விடுகின்ற நிலைக்கு தள்ளப்படுகின்றனர். அவர்கள் இடை விலகுவதற்கான காரணங்கள் அதனைத்தடுப்பதட்கான வழிகள் என்பவற்றை ஏற்கனவே கேள்விக்குறியாகும் சிறுவர்களின் எதிர்காலம் பதவிலே தந்து இருக்கிகிறேன்.

இந்தப்திவு அதன் தொடராகவே இடம்பெறுகின்றது. கடத்த ஒரு தசாப்த காலமாக பல்வேறு பட்ட சமுகப்பணிகளிலே ஈடுபட்டு வரும் களுதாவளை கல்வி அபிவிருத்தி ஒன்றியத்தினர் பாடசாலையை விட்டு விலகியசிறுவர்கள் தொடர்பான ஆய்வினை மேற்கொண்டு அவற்றை நிவர்த்தி செய்வது தொடர்பான பல திடங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

இரவு நேர இலவச வகுப்புக்கள், வரியா மாணவர்களுக்கு கல்வி நடவடிக்கைக்குரிய பல வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்தல் போன்ற பல திட்டங்களை செயற்படுத்தி வருவதோடு. சிறுவர்களின் பெற்றோரையும் இத்திட்டங்களிலே இணைத்து கொள்வது ஒரு சிறப்பு அம்சமாகும். கிராமப்புறங்களிலே இருக்கின்ற கல்வி அறிவு குறைவான பெற்றோருக்கு பல்வேறு பட்ட விழிப்புணர்வுக் கருத்தரங்குகளை நடாத்தி வருவதோடு பெற்றோரையும் சிறுவர்கள் இடை விலகுவதை தடுப்பதற்குரிய வழிவகைகளை மேற்கொண்டு வருகின்றது.



இன்றைய நிலையில் நாம் எமது சிறுவர்களின் எதிர்காலம் பற்றி சிந்திக்க வேண்டி இருக்கின்றது. எமது இளம் சந்ததியினரின் எதிர்கால நிலை என்ன?. அவர்களது நலன் தொடர்வில் பல ஆய்வுகளை மேற்கொண்டு இருக்கின்றார்கள் களுதாவளை கல்வி அபிவிருத்தி ஒன்றியத்தினர். அந்த ஆய்வின் அடிப்படையில் பல்வேறு செயத்திட்டங்களை மேற்கொள்ள உத்தேசித்து இருக்கின்றார்கள். இதட்காக பல துறை சார்ந்தவர்களையும் இணைத்துக்கொள்ள தீர்மானித்து இருக்கின்றனர்

இத்திட்டங்களிலே சமுக சேவை நோக்கம் கொண்ட எவரும் இணைந்து தமது ஆலோசனைகளையும் ஒத்துழைப்பினையும் வழங்க முடியும். எமது எதிர்கால சந்ததிக்காக மேட்கொள்ளப்பட்டு வருகின்ற இந்த திட்டங்களுக்கு உள் நாட்டில் மட்டுமல்லாமல் வெளி நாட்டில் இருக்கின்ற சமுக சேவை நோக்கம் கொண்ட எவரும் இணைந்து தமது ஆலோசனைகளையும், ஒத்துழைப்பையும் வழங்க முடியும்.

இவர்களது எதிர்கால திட்டங்கள் தொடர்பாகவும் அடுத்தடுத்த பதிவுகளிலே தர இருக்கின்றேன். இந்த அமைப்பானது பதிவு செய்யப்பட்டு தமது உறுப்பினர்களின் நிதியிலேயே பல திட்டங்களை ஒரு தசாப்த காலத்துக்கு மேலாக செய்து வருகின்றது. என்பதும் குறிப்பிடத்தக்கது.

பல வெளி நாட்டுப்பிரதி நிதிகள் இந்த அமைப்பிலே இணைந்து தமது ஆலோசனைகளையும், ஒத்துழைப்பினையும் வழங்கி வருகின்றார்கள். நீங்களும் இவர்களோடு இணைந்து. ஆலோசனைகளையும், ஒத்துழைப்புக்களையும் வழங்கி எமது எதிர்கால சமூகத்துக்காக முன்னெடுக்கப்படும் செயத்திட்டங்களில் உங்கள் பங்களிப்பினையும் வழங்கலாமே.

தமிழர்கள் மாத்திரமல்ல சமுக சேவை நோக்கம் உள்ள எவரும் இணைந்து கொள்ள முடியும்.

அண்மையிலே ஜப்பானை சேர்ந்த ஜோன் ரிசி என்பவர் இந்த அமைப்பின் செயற்பாடுகளை அறிந்து. தானும் இணைந்து கொள்ள விருப்பம் கொண்டு தனது நண்பரை இங்கே அனுப்பி வைத்திருக்கின்றார். மாணவர்களுக்கு கற்பித்தல் நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்லக்கூடிய வகையில் பல பெறுமதி வாய்ந்த உபகரணங்களையும் அனுப்பி வைத்துள்ளார்.





மேலே உள்ள படம் ஜப்பானைச் சேர்ந்த ஜோன் ரிசி அவர்களினால் அனுப்பி வைக்கப்பட்ட ஜோன் ரிசியின் நண்பர் கல்வி அபிவிருத்தி ஒன்றிய பணியாளர்களில் ஒரு தொகுதியினரோடு எடுத்துக்கொண்ட படம். இதிலே நானும் இருக்கிறேன் கண்டு பிடியுங்களன் பார்க்கலாம்.

நீங்களும் இணைந்து இந்த சமூகப்பணிகளில் பங்கு கொள்ள விரும்பினால் www.kaluthavalaieds5@yahoo.com எனும் மின்னஞ்சல் முகவரியோடு தொடர்பு கொள்ள முடியும். அல்லது 094778548295 அல்லது 094772858340 அல்லது 094776180614 எனும் தொலைபேசி இலக்கங்களுக்கு அழைக்க முடியும்.


எமது எதிர்கால சந்ததியினர் பாதுகாக்க வேண்டியது எமது ஒவ்வொருவரது பொறுப்பும் அல்லவா. இன்றே ஒன்றினைவோம்....

Post Comment


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

2 comments: on "நம் சிறுவர்களுக்காக ஒன்றிணைவோம்....."

சுசி said...

உங்கள் பணிக்கு வாழ்த்துக்கள் சந்ரு. எழுதவே கூச்சமா இருக்குங்க. நான் எந்தவிதமான பங்களிப்பையும் செய்ய முடியாத ஒரு நிர்ப்பந்தத்தில இருக்கேன். மனமிருந்தும் வழி இல்லை.

Admin said...

//சுசி கூறியது...
உங்கள் பணிக்கு வாழ்த்துக்கள் சந்ரு. எழுதவே கூச்சமா இருக்குங்க. நான் எந்தவிதமான பங்களிப்பையும் செய்ய முடியாத ஒரு நிர்ப்பந்தத்தில இருக்கேன். மனமிருந்தும் வழி இல்லை.//







நன்றி சுசி உங்கள் வருகைக்கு....

அவர்களை பொறுத்தவரை பண, பொருள் உதவி என்பதைவிட எப்படி எமது சிறுவர்களை மீட்டெடுக்கலாம். என்று சிந்தித்துக்கொண்டு பல ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். எல்லோரது ஆலோசனைகளையுமே எதிர் பார்க்கின்றனர். உங்களுக்கு நல்ல மனமிருக்கிறது ஆனால் வழி இல்லை. உங்கள் நல்ல மனது, ஆலோசனைகளும் அவர்களுக்கு ஒரு உற்சாகத்தை ஊட்டும்.

Post a Comment