Sunday 5 July 2009

வீதியோர நவின பிச்சைக்காரர்கள்.....

இந்தப்பதிவிநூடாக நான் எவர் மனதினையும் புண்படுத்தவில்லை. என் கண்ணனில் பட்ட சம்பவங்களை பதிவிடுகிறேன். அவ்வளவுதான்...


இன்று இலங்கையின் பல பிரதேசங்களிலும் தெருவோர பிச்சைக்காரர்கள் தொல்லை அதிகரித்து விட்டது. இந்தப்பதிவிநூடாக நான் உண்மையான பிச்சைக்காரர்களை பற்றி அல்ல போலி பிச்சைக்காரர்களை பற்றியே குறிப்பிடுகிறேன்...


இன்று எங்கு பார்த்தாலும் போலி பிச்சைகாரர்களின் தொல்லைதான் தாங்க முடியவில்லை. பொது இடங்கள், குறிப்பாக வாகனங்களில் பிரயாணம் செயும்போது பிரயாணிகள் படும்பாடு....


உண்மையிலேயே உழைக்க முடியாத ஒருவருக்க பிச்சை கொடுப்பது நியாயமே. ஆனால் நன்றாக உளைக்கக்கூடியவர்கள் போலி சாட்டுக்களை வைத்து பிச்சை எடுக்கின்றார்கள். இவர்கள் உண்மையிலேயே உழைக்க முடியாமல் இருக்கும் உண்மையான பிச்சைக்காரர்களின் பிளைப்பில்கூட மண் அள்ளி போடுகின்றார்கள்.


ஆனால் நன்கு உளைக்கக்கூடியவர்கள் பல்வேறு வேசமிட்டு மக்களை ஏமாற்றி வருகின்றனர். அண்மையில் நான் கண்ட சிலவற்றை தருகிறேன்.....


நான் அடிக்கடி வாகனத்திலே பிரயாணம் செய்பவன். இப்படிப்பட்ட போலி பிச்சைக்காரர்களின் தொல்லை வாகனங்களிலேயே அதிகமாக இருக்கும். பெண்களாக இருந்தால்குட மனமிரங்கி ஏதாவது செய்யலாம் ஆனால் நன்கு உளைக்கக்கூடிய இளைஜர்களே கைகளில் கால்களில் கட்டுப்போட்டுக்கொண்டு கால் கைகள் இல்லாதவர்கள் போல் நடித்து பிச்சை எடுக்கின்றனர். எதற்காக. என்று பார்த்தால் குடிப்பதற்காக....


என்னும் சில பெண்கள் கைக்குளந்தைகலுடன் பிச்சை எடுப்பார்கள். அவர்களை பார்த்தால் மனத்தாபபடுவோம் அனால் பிச்சை எடுக்கும் பணம் போதைப்போருளுக்கே பயன்படுத்துகின்றனர். பிச்சை எடுப்பவர்களில் அதிகமானவர்கள் பிச்சை எடுப்பது வரும் வருமானத்தை கொண்டு போதைப்பொருள் வாங்குவதற்கே.



ஒரு பேருந்து தரிப்பிடத்திலே ஒரு வயது போன அம்மா பிச்சை எடுப்பார் நான் அவருக்கென்று தினமும் குறிபிட்ட தொகை ஒன்றை கொண்டுபோய் கொடுப்பேன். ஒரு நாள் பின்னேரம நான் வந்த வாகனத்திலே ஏறினார் அவரோ மதுபான சாலையில் இறங்கி விட்டார் நான் அன்று முதல் அவருக்கு பணம் கொடுப்பதை நிறுத்தி விட்டேன்...


இன்று அவர்கள் புதிய முறை ஒன்றை பயன் படுத்துகின்றனர். அவர்களும் நவின உலகுக்குள் நுழைந்து விட்டார்கள். எத்தனைதரம்தான் அம்மா, தாயே என்பது அச்சடிக்கப்பட்ட கடதாசிகளை வாகனங்களிலே இருப்பவர்களிடம் கொடுப்பது அதிலே தங்களது குடும்ப நிலை தனது நிலை என்பன இருக்கும். இதில் அச்சடிக்கப்பட்டிருக்கும் விடயங்கள் உண்மை இல்லை என்பது ஒரு புறமிருக்க எல்லா பிச்சைக்காரர்களுமே இதனையே கொப்பி எடுத்து வைத்து இருப்பார்கள்...


சிறுவர்களை பொறுத்தவரை பிச்சை எடுப்பார்கள் ஆனால் அவர்கள் பிச்சை எடுப்பது அவர்களை சென்றடைவதில்லை அவர்களை வழிநடத்த வேறு ஒருவர் இருப்பார். அவருக்கே எல்லாம் சென்றடையும்....



சிறுவர்களை பொறுத்தவரை பிச்சை எடுப்பார்கள் ஆனால் அவர்கள் பிச்சை எடுப்பது அவர்களை சென்றடைவதில்லை அவர்களை வழிநடத்த வேறு ஒருவர் இருப்பார். அவருக்கே எல்லாம் சென்றடையும். இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்


இவர்கள் எல்லோரையும் ஏமாற்றி பிழைப்பு நடத்துவதுடன் உண்மையாக உழைக்க முடியாதவர்களின் பிழைப்பை கெடுத்துக்கொண்டு இருக்கின்றனர்.

Post Comment


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

6 comments: on "வீதியோர நவின பிச்சைக்காரர்கள்....."

Muruganandan M.K. said...

நல்ல பதிவு.நான் கடவுள் சினிமாவில் அவர்கள் எவ்வாறு வியாபாரப் பொருள்கள் ஆக்கப்பட்டுள்ளார்கள் என்பதையும், அவர்களது வாழ்வின் கோலங்களையும் பார்க்க முடிந்தது.

Admin said...

//டொக்டர்.எம்.கே.முருகானந்தன் கூறியது...
நல்ல பதிவு.நான் கடவுள் சினிமாவில் அவர்கள் எவ்வாறு வியாபாரப் பொருள்கள் ஆக்கப்பட்டுள்ளார்கள் என்பதையும், அவர்களது வாழ்வின் கோலங்களையும் பார்க்க முடிந்தது.//


உங்கள் வருகைக்கு நன்றி.....

உண்மையிலேயே இன்று சிறுவர்கள் வியாபாரப்பொருளாக்கப்பட்டுள்ளார்கள்...

யாழினி said...

ஆமாம் இப்பொழுது பிச்சை எடுப்பவர்கள் துண்டுப் பிரசுரங்களுடன் தங்களை அடையாளப் படுத்தி பிச்சை எடுப்பது அதிகரித்து விட்டது. அப்பொழுது தான் மக்கள் தங்களை நம்புவார்கள் அதிக பணம் சேரும் என்பதற்காக இவ்வாறு செய்கிறார்கள். ஆனால் அதில் பாதிப் பேர் போலியானவர்களே.

Admin said...

//யாழினி கூறியது...
ஆமாம் இப்பொழுது பிச்சை எடுப்பவர்கள் துண்டுப் பிரசுரங்களுடன் தங்களை அடையாளப் படுத்தி பிச்சை எடுப்பது அதிகரித்து விட்டது. அப்பொழுது தான் மக்கள் தங்களை நம்புவார்கள் அதிக பணம் சேரும் என்பதற்காக இவ்வாறு செய்கிறார்கள். ஆனால் அதில் பாதிப் பேர் போலியானவர்களே.//


உங்கள் வருகைக்கு நன்றி யாழினி....

அவர்கள் கொண்டு வரும் பிரசுங்களை பார்த்தால் தலை சுற்றி வரும்.எல்லோரது பிரசுங்கலும் ஒன்றைத்தான் சொல்லும்....

சுசி said...

மிகவும் மன வருத்தம் தரும் ஒரு விடயம் சந்ரு. உண்மையிலேயே உதவி தேவைப் படுவோரும் உழைக்கப் பிடிக்காமல் இந்த வழியை பின்பற்றுபவர்களால் தவிர்க்கப்படுகிறார்கள். அதிலும் சிலர் விடாமல் பின்னே துரத்தி கொண்டு வருவதும், தூர நின்று திட்டுவதும்... என்ன செய்வது?
இங்கு பிச்சைக்காரர்களுக்கு எதுவும் கொடுக்கக் கூடாது. அவர்களை தொடர்ந்து அந்த தொழிலுக்கு தூண்டி விடும் என்பதால் அந்த நடைமுறை.

Admin said...

///சுசி கூறியது...
மிகவும் மன வருத்தம் தரும் ஒரு விடயம் சந்ரு. உண்மையிலேயே உதவி தேவைப் படுவோரும் உழைக்கப் பிடிக்காமல் இந்த வழியை பின்பற்றுபவர்களால் தவிர்க்கப்படுகிறார்கள். அதிலும் சிலர் விடாமல் பின்னே துரத்தி கொண்டு வருவதும், தூர நின்று திட்டுவதும்... என்ன செய்வது?
இங்கு பிச்சைக்காரர்களுக்கு எதுவும் கொடுக்கக் கூடாது. அவர்களை தொடர்ந்து அந்த தொழிலுக்கு தூண்டி விடும் என்பதால் அந்த நடைமுறை...//


சரியாக சொன்னிங்க சுசி உண்மையாகவே இன்று பலர் இந்த பிச்சை எடுப்பதனால் சோம்பேறிகளாகி விட்டார்கள்.....

Post a Comment