Tuesday, 7 July 2009

இலக்கியம் கற்க ஒரு வலைப்பதிவு.....


ஓரிரு நாட்களாக நான் இணையத்தோடு தொடர்ச்சியாக எனது பொழுதுகளை கழித்து வருகின்றேன். காரணம் நான் இலக்கியத்திலும் ஓரளவு ஆர்வமுள்ளவன். நான் இணையத்திலே தேடிக்கொண்டிருந்தபோது எனது கண்ணிலே ஒரு வலைப்பதிவு பட்டது. அந்த வலைப்பதிவு என்னை கட்டிப்போட்டு விட்டது என்றுதான் சொல்லவேண்டும்.

இன்று இலக்கியங்களை படிப்பதில் இன்றைய இளம் சமூகத்தினர் சற்று பின்னிக்கின்றனர். இருந்த போதும் சில இலக்கிய ஆர்வமுள்ளவர்கள் தேடிப்படித்துக்கொண்டுதான் இருக்கின்றனர். எனக்கும் ஆரம்பத்திலே இலக்கியத்திலே ஆர்வம் குறைவாகவே இருந்தது. ஆனால் நான் எனது கிராமத்தைச் சேர்ந்த கலாபூசனம் ஆறுமுகம் அரசரெத்தினம் அவர்களுடன் பழகக்கிடைத்தது. அதன் முலமே எனக்கு இலக்கியத்தில் ஆர்வம் ஏற்பட்டது. இன்று அந்த ஆர்வம் அதிகரித்து விட்டது.

அது வேறு எதுவும் இல்லை முனைவர் இரா.குணசீலன் அவர்களுடைய வேர்களைத்தேடி என்னும் வலைப்பதிவே என் கண்ணில் பட்டது. இந்த வலைப்பதிவிலே தமிழர் நம் இலக்கியம் தொடர்பாகவும். நமது புலவர்கள் தொடர்பாகவும். இனிய எளிய நடையிலே எல்லோருக்கும் விளங்கக்கூடிய வகையிலே பதிவிட்டு இருக்கின்றார் முனைவர் இரா.குணசீலன் அவர்கள். அவரின் இந்த தமிழ் பணியினை ஒவ்வொரு தமிழனும் பாராட்ட வேண்டும்.



இவரது இந்த வேர்களைத்தேடி எனும் வலைப்பதிவிலே தமிழ் ஆய்வுகள், சங்ககால இலக்கிய ஆய்வுகள், சங்க இலக்கிய நுண்ணாய்வுகள், சங்ககால்புலவர்கள், சங்ககால இலக்கியங்கள்..... இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். இவரது தமிழ் பணியின் முலமாக உயர் கல்வி கற்கின்ற பல மாணவர்கள் நன்மை அடைவர் என்பது உண்மை. இந்த வலைப்பதிவுக்கு வந்தால் தமிழ் இலக்கியம் தொடர்பான பல விடயங்களை அறிந்து கொள்ள முடியும்.


நீங்களும் இவரது இணையத்தளத்துக்கு செல்ல இங்கு கிளிக் பண்ணி பயன்பெறுங்கள்.




இலக்கியம் தொடர்பாக கற்றுக்கொள்ள ஆசைப்பட்ட நான். இலக்கியம் தொடர்பான ஒரு வலைப்பதிவை உங்களோடு பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி. நீங்களும் பயன் பெறுங்கள்.

Post Comment


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

6 comments: on "இலக்கியம் கற்க ஒரு வலைப்பதிவு....."

முனைவர் இரா.குணசீலன் said...

மிக்க மகிழ்ச்சி நண்பரே........
எனது பதிவினை அளவுக்கு அதிகமாகவே புகழ்ந்துவிட்டீர்கள் எனறு எண்ணுகிறேன்....

நான் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்ட காலத்தில் இணையத்தில் தமிழாய்வு தொடர்பாக தேடியபோது நான் தேடிய தமிழாய்வுச் செய்திகள் கிடைக்கவில்லை..

இனி வரும் தலைமுறையினராவது பயன் பெறட்டுமே என்ற சிந்தனையில் இவ்வலைப்பதிவை மேம்படுத்தி வருகிறேன்.....

தங்கள் பதிவு மேலும் ஊக்கமளிப்பதாகவுள்ளது....

மிக்க மகிழ்ச்சி.......
தமிழால் இணைவோம்....

Admin said...

உங்கள் வருகைக்கு நன்றி இரா. குணசீலன் அவர்களே...

உண்மையிலேயே இன்று எமது இலக்கியங்களை படிப்பதற்குரிய வசதிகள் குறைவு என்றே சொல்லவேண்டும.

உங்களது இந்தப்பணியினைப்பாராட்ட வேண்டும்.
தொடருங்கள். வாழ்த்துக்கள்....

முனைவர் இரா.குணசீலன் said...

தங்கள் வலைப்பதிவை அறிந்து கொண்டதிலும், தங்களை அறிந்து கொண்டதிலும் மிக்க மகிழ்ச்சி....

Admin said...

முனைவர்.இரா.குணசீலன் கூறியது...
தங்கள் வலைப்பதிவை அறிந்து கொண்டதிலும், தங்களை அறிந்து கொண்டதிலும் மிக்க மகிழ்ச்சி....

நானும் உங்கள் வலைப்பதிவினையும் உங்களையும் அறிந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி . தொடருங்கள் நிறையவே எதிர் பார்க்கிறேன் தமிழ் இலக்கியம் தொடர்பாக....

Admin said...

//இரசிகை கூறியது...
nantringa..//


உங்கள் வருகைக்கு நன்றி இரசிகை......

Post a Comment