Showing posts with label இலங்கை. Show all posts
Showing posts with label இலங்கை. Show all posts

Saturday, 2 June 2012

தமிழீழ ஆதரவாளர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக போர்க்கொடி

தமிழீழமே எமது மூச்சு என்றிருந்த தமிழரசுக் கட்சியினரின் அண்மைக்கால செயற்பாடுகள் மற்றும் தமிழரசுக் கட்சியினரின் 14வது தேசிய மாநாடு என்பன தமிழீழ ஆதரவாளர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கின்றன. இவ்விடயம் குறித்த செய்தியினை அப்படியே தருகிறேன்.


விடுதலைப் புலிகளையும், போராட்டத்தையும் களங்கப்படுத்திய தமிழரசுக் கட்சியின் மாநாடு!

"விடுதலைப் புலிகள் இயக்கத்தின் வளர்ச்சியும் மறைவும் எமக்கு உணர்த்தி நிற்பது என்னவெனில் - எவ்வளவுதான் பலம் வாய்ந்ததாக இருந்தாலும் எவ்வளவுதான் தர்மத்தின் பாற்பட்டதாக இருந்தாலும் தமிழர்கள் இந்தத் தீவில் வன்முறை அரசியல் செய்வது நடைமுறைச் சாத்தியமானதாக என்றைக்குமே இருக்கப் போவதில்லை என்பதாகும், அத்தோடு இராணுவ பலத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு உலக ஓட்டத்திற்கு ஒத்திசைவு இல்லாத அரசியல் கோட்பாட்டின் ஊடாகக் கட்டி எழுப்பப்படும் எந்த ஒரு போராட்டமும் நின்று நிலைக் காது என்பதுமாகும். இவ்வாறு தனது மாநாட்டு கொள்கை விளக்க உரையில் தெரிவித்துள்ளார்". சம்மந்தர் அவர்கள் அவர் மேலும் தெரிவிக்கையில்...

"தத்தமது தேச நலன்களை மட்டுமே மையப்படுத்தி உலக ஒழுங்கை வகுத்துச் செல்லும் உலகப் பெரும் சக்திகளின் சூட்சுமங்களைப் புரிந்து அதற்கேற்ப மட்டுமே நாங்கள் இனி காய்களை நகர்த்திச் செல்ல வேண்டும் என்பதுதான் - கடந்த 60 ஆண்டு காலப் போராட்டம் குறிப்பாக கடந்த 30 ஆண்டு கால வன்முறை வடிவிலான ஆயுதப் போராட்டம் எமக்குக் கற்பித்துச் சென்றிருக்கும் வரலாற்றுப் பாடம். என்று தனது உரையில் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை வன்முறை கலந்த போராட்டம்" என்று விமர்சித்துள்ளார் தமிழரசுக் கட்சியின் தலைவர் சம்மந்தன். விடுதலைப் புலிகள் தொடர்பாக மேலும் குறிப்பிடுகையில்..



"நீண்ட ஆயுதப் போராட்டமும், அது நடத்தப்பட்ட விதமும் - எமது மக்களுக்கு இழப்பையும் அழிவையும் களைப்பையும் சலிப் பையும் ஏற்படுத்தியிருக்கலாம், ஆனால் போர் முடிந்ததன் பின்னான நிகழ்வுகள் எமது மக்களுக்கு விரக்தியையும் சினத்தையும் சீற்றத்தையுமே கொடுத்தபடி உள்ளன என்பதை இந்த உலகம் தெளிவாக விளங்கிக்கொள்ள வேண்டும்".


"விடுதலைப் புலிகள் இயக்கத்தின் வளர்ச்சியும் மறைவும் எமக்கு உணர்த்தி நிற்பது என்னவெனில் - எவ்வளவுதான் பலம் வாய்ந்ததாக இருந்தாலும் எவ்வளவுதான் தர்மத்தின் பாற்பட்டதாக இருந்தாலும் தமிழர்கள் இந்தத் தீவில் வன்முறை அரசியல் செய்வது நடைமுறைச் சாத்தியமானதாக என்றைக்குமே இருக்கப் போவதில்லை என்பதாகும், அத்தோடு இராணுவ பலத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு உலக ஓட்டத்திற்கு ஒத்திசைவு இல்லாத அரசியல் கோட்பாட்டின் ஊடாகக் கட்டி எழுப்பப்படும் எந்த ஒரு போராட்டமும் நின்று நிலைக் காது என்பதுமாகும். அந்த வகையில் தான் - அனைத்துலகப் பரிமாணங்களுடன் பிறந்திருக்கின்ற தற்போதைய புதிய சூழலில் அந்தச் சூழலுக்கு ஏற்ற வகையான நெகிழ்வுத் தன்மைகளுடன் சர்வதேச சமூகத்தின் அனுசரணையுடனும் பக்கபலத்துடனும் எமது உரிமைப் போராட்டத்தை நகர்த்திச் செல்லும் புதிய வழிமுறைகளை நாம் கையாளத் தொடங்கியுள்ளோம்". என்று தனது பாணியில் சர்வாதிகாரிபோல் தெரிவித்துள்ளார்.



"எவ்விதமாக ஆறு தசாப்தங்களுக்கு முன்னர் எமது கட்சிக்கு வரலாறு ஓர் அரசியல் பிறப்பைத் தந்ததோ அதே விதமாகவே பத்தாண்டுகளுக்கு முன்னர் எமது இனத்தின் விடுதலைப் போராட்டம் இருந்த அன்றைய காலச் சூழலுக்கு இசைவாக வரலாறு எமது கட்சிக்கு ஒரு புதிய அரசியற் பாத்திரத்தையும் தந்தது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற குடையின் கீழ் கொள்கை ரீதியாக ஒன்றிணைந்த தமிழ் அரசியல் கட்சிகளைத் தலைமையேற்று வழி நடத்தும் பாத்திரமே அது. அந்தத் தலைமைப் பாத்திரம் என்பது கூட எமது கட்சியின் வரலாறு பாரம்பரியம் தனித்துவம் என்பவற்றின் அடிப்படையிலிருந்துதான் வந்தது. அந்தப் புதிய கூட்டமைப்பின் தலைமைக் கட்சியாக இலங்கைத் தமிழரசுக் கட்சியே இன்றுவரை விளங்கி வருகின்றது, அவ்வாறே அது என்றும் விளங்கி வரும்".  என்றும் சம்மந்தர் தெரிவித்துள்ளார்.


"ஆயுதப் போராட்டத்தின் வீழ்ச்சிக்குப் பின்னரான தற்போதைய சூழலில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமையிலான தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் ஆகிய நாம்தான் தமிழ் மக்களின் முதன் மைப் பிரதிநிதிகள். முற்றுமுழுதான சிறீலங்காப் படை மயமாக்கத்தின் கீழ் சிறீலங்கா அரசாங்கத்தின் முழுமையான ஆளுகையின் கீழ் பலவிதமான அழுத்தங்களுக்கு மத்தியிலும் - துணிவுடனும் உறுதியு டனும் தெளிவுடனும் - வாக்களித்த தமிழ் மக்களால் சுதந்திரமாகத் தேந்தெடுக்கப்பட்ட தனிப் பெரும் கட்சி எமது கட்சி. அந்த வகையில் இப்போது - நாம்தான் தமிழர்களின் அதிகாரபூர்வமான பிரதிநிதிகள். எவ்விதமான ஆயுதப் பின்னணிகளும் அற்ற - வன்முறைப் போராட்ட வடிவங்களை என்றைக்கும் நிராகரித்த - நீண்ட ஜனநாயகப் பண்பு களைத் தன்னகத்தே கொண்ட - நடைமுறைச் சாத்தியமான தீர்வுத் திட்டங்களையே எப்போதும் முன்வைத்த - இலங்கைத் தமிழரசுக் கட்சியான எமக்குத்தான்; - அதிகூடிய இராஜீய அங்கீகாரமும் அனைத்துலக சமூகத்தால் வழங்கப்படுகின்றது. இந்த இராஜீய அங்கீகாரம் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் ஏற்புடையதாகவும் உரித்துடையதாகவும் கூட பரிணமித்துள்ளது". என்றும் சம்மந்தர் தனதுரையில் குறிப்பிட்டுள்ள கருத்துக்கள் கண்டிக்கப்பட வேண்டியவை.


தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் முற்றுமுழுதாக அழிக்கப்பட்டு விட்டதாகவும், ஒரு தோற்றப்பாட்டை உருவாக முனைகிறார். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் இல்லாத இடத்தில் தமிழரசுக் கட்சியை பிரதிநிதித் துவப்படுத்தும் நோக்கில் இவர்களில் செயற்பாடுகள் நகர்வதை அவதானிக்க முடிகிறது. தமிழர்களின் ஒன்றுபட்ட சக்தியாக உருவாக்கப்பட்டு தமிழர்கள் அனைவராலும் பெரும் நம்பிக்கையுடன் வரவேற்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஒரு பேசுபொருளாக வைத்துக்கொண்டு, தமிழரசுக் கட்சியை வளர்க்கவே இவர்கள் முனைகின்ற விடையம் சம்மந்தர் அவர்களின் மாநாட்டு உரையின் ஊடாக தெளிவாக அம்பலமாகியுள்ளது.


இவரின் உரையினை ஆராய்ந்து பார்க்கும் பொழுது தமிழரசுக் கட்சியின் தலைமைகளும் இந்தியாவுடன் இணைந்து தமிழீழ விடுதலைப் போராட்டத்தை அழிக்க துனைபோயிருப்பார்களா? என்றும் சந்தேகம் கொள்ளவும் வைக்கிறது.


இவர்களின் இந்த திட்டங்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். தமிழ்த் தேசியக் கூடமைப்புக்கான தலைமைப் பதவி சுழற்சி முறையில் தெரிவு செய்யப்பட வேண்டும். அத்தோடு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆரம்பகாலத்தில் மக்களால் தெரிவுசெய்யப்பட்டு பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்து, பின்னர் சம்மந்தர் குழுவினால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள் அனைவரும் மீண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இணைக்கப்பட வேண்டும். இவர்களை மீண்டும் கட்சியில் இணைப்பதின் ஊடாக சம்மந்தர் அவர்கள் தான் ஒரு தமிழ்த் தேசியப் பற்றாளன் என்பதையும், தானொரு ஜனநாயகவாதி என்பதையும் நிரூபிக்க வேண்டும்.


ஐயா பெரியவர்களே! இன்றைய சூழலில் அனைவரும் ஒவ்வெரு கருத்துக்களுடன் தமிழர்களுக்கான தீர்வாக சிங்களம் போடுவதை பெற்றுக்கொள்ள முனைகிறார்கள். அந்தவகையில்தான் ஐயா சம்மந்தர் அவர்களும் "அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வு" என்றும், "ஒன்றுபட்ட இலங்கைக்குள் சமஉரிமை"என்றும் கூறிக்கொண்டு 40 ஆயிரத்திற்கும் அதிகமான மாவீரர்களின் மாபெரும் தியாகங்களின் ஊடாக கண்ணியமான முறையில் தமிழர்களின் கலாச்சார பண்பாடுகளுடன் கட்டி வளர்க்கப்பட்ட தமிழீழ விடுதலைப் போராட்டத்தை தமிழரசுக் கட்சியின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மாநாடு ஒன்றில் மனச்சாட்சியின்றி திட்டமிட்ட வகையில் களங்கப்படுத்தியுள்ளார்.

நன்றிகள் - இணையம்
read more...

Saturday, 14 April 2012

கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழரா முஸ்லிமா முதலமைச்சர் பகுதி -01

இன்று கிழக்கிலே எல்லோராலும் பரவலாகப் பேப்படுகின்ற விடயம் கிழக்கு மாகாணசபைக் கலைப்பும் மாகாணசபைத் தேர்தலும் முதலமைச்சர் தமிழரா அல்லது முஸ்லிமா என்கின்ற விடயமுமாகும். இன்றைய கால கட்டத்தில் இவ்விடயங்களை கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த தமிழ் மக்கள் சிந்தித்து செயற்பட வேண்டும்.
கிழக்கு மாகாணசபை கலைப்பும் தொடர்ந்து இடம்பெறும் தேர்தலும் முதலமைச்சர் தெரிவுமே கிழக்கு தமிழர்களின் தலைவிதியை தீர்மானிக்கின்ற ஒன்றாக அமைய இருக்கின்றது. இம் மாகாணசபைத் தேர்தலானது தமிழ் மக்களிடையே சாவால் நிறைந்த ஒன்றாகவும் கிழக்கு வாழ் தமி்ழ் மக்களின் தலைவிதியினைத் தீர்மானிக்கின்ற ஒரு தேர்தலாகவும் அமைய இருக்கின்றது.
இத் தேர்தலில் முதலமைச்சரை தீர்மானிப்பதில் பல சவால்களை கிழக்கு தமிழ் மக்கள் எதிர்நோக்க இருக்கின்றனர். கடந்த மாகாணசபை தேர்தலையும் இன்றைய கால சூழ்நிலைகளையும் அரசியல் நிலைமைகளையும் நாம் ஆராய்ந்து பார்க்கவேண்டி இருக்கின்றது. கடந்த மாகாணசபைத் தேர்தலிலே முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனா அல்லது ஹிஸ்புல்லாவா என்று தீர்மானிப்பதிலே பல சவால்களை எதிர்நோக்கி தமிழ் மக்கள் வெற்றி பெற்று இருந்தனர் சிவநேசதுரை சந்திரகாந்தன் முதலமைச்சராக தெரிவு செய்யப்பட்டார்.
சந்திரகாந்தன் அவர்கள் முதலமைச்சராக தெரிவு செய்யப்பட்டதன் வெளிப்பாடுதான் இன்றை கிழக்கின் துரித அபிவிருத்தியாகும். ஹஸ்புல்லாவோ அல்லது வேறு ஒருவரோ அன்று முதலமைச்சராக பதவி ஏற்றிருந்தால் கிழக்கு மாகாணம் குறிப்பாக தமிழர் பிரதேசங்கள் இந்தளவிற்கு அபிவிருத்தியினைக் கண்டிருக்க முடியாது.
அன்று மாகாணசபைத் தேர்தல் இடம்பெற்ற சூழ்நிலைக்கும் இன்றைய சூழ்நிலைக்கும் பாரிய வேறுபாடுகளும ;தமிழ் மக்களுக்கு பாரிய சவால்களும் இருக்கின்றன. அன்று மாகாணசபை தேர்தல் இடம்பெற்றபோது தமிழ் கட்சிகளுக்கிடையே போட்டி இருக்கவில்லை தமிழ் மக்கள் அனைவரும் ஒரு கட்சிக்கே வாக்களித்திருந்தனர். அனைவரும் ஒருமித்து ஒரு கட்சிக்கு வாக்களித்தும் கூட தமிழ் முதலமைச்சரை தீர்மானிப்பதிலே பல சவால்கள் நிறைந்திருந்தன.
அன்றை நிலையைவிட இன்றைய நிலை மிக மோசமான பல சவால்கள் நிறைந்ததாக அமைய இருக்கின்றது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு உட்பட தமிழ் கட்சிகள் பல இத் தேர்தலிலே போட்டியிட தீர்மானித்திருப்பதாக அறிய முடிகின்றது. இதனால் தமிழ் மக்களின் வாக்குகள் சிதறடிக்கப்பட இருக்கின்றது. இதன் காரணமாக தமிழ் முதலமைச்சரை இழக்கக்கூடிய துப்பாக்கிய நிலையினை தமிழ் மக்கள் பெறப்போகின்றார்கள்.
பல கட்சிகள் போட்டியிட்டு தமிழர்களின் வாக்குகள் சிதறடிக்கப்பட்டு தமிழ் முதலமைச்சரை பெற முடியாமல் போகின்றபோது. நேரடியாகவே ஒரு முஸ்லிம் வேட்பாளர் முதலமைச்சராக வரப் போகின்றார். இதனால் அபிவிருத்தி கண்டு வரும் தமிழ் பிரதேசங்களின் அபிவிருத்திகள் தடைப்பட வாய்ப்புக்கள் இருக்கின்றன. இவ்வாறு பல பிரச்சினைகள் இருக்கின்றன.
இவ்வாறான பிரச்சினைகளை தமிழ் கட்சிகள் உணராமலும் இல்லை. கூட்டமைப்பு உட்பட பல தமிழ் கட்சிகள் கிழக்கில் ஒரு தமிழ் முதலமைச்சர் வரக்கூடாது என்பதற்காகவே தமிழர்களின் வாக்குகளை சிதறடிப்பதற்காக தேர்தலில் போட்டியிட தீர்மானித்திருக்கின்றனர்.
மறு புறத்தில் முஸ்லிம்கள் தாங்கள் முதலமைச்சரை பெற வேண்டும் என்பதற்காக ஒன்று பட்டு செயற்படுகின்றனர்.
தொடரும்..

read more...

Sunday, 8 April 2012

மட்டுநகர் சிலை உடைப்புக்கும் சில அரசியல்வாதிகளி்ன் செயற்பாடுகளுக்கும் கிழக்கிலங்கை மாற்றத்திற்கான மக்கள் அமைப்பு கண்டனம்



மாற்றத்திற்கான மக்கள் அமைப்பு
People Organisation for Change (POC)
மட்டக்களப்பு நகரிலுள்ள மகாத்மா காந்தியின் திருவுருவச்சிலையும், சாரணியத்தின் தந்தை என போற்றப்படும் பேடன் பவுலின் சிலையும், கிழக்கிலங்கைக்கு புகழ்சேர்த்த சுவாமி விபுலானந்த அடிகளின் சிலையும், மட்டக்களப்பிற்கு புகழ் சேர்த்த மண்டூர் பெரியதம்பிப்புலவரின் சிலையும்   (06.04.2012) வெள்ளிக்கிழமை அதிகாலை விஷமிகளால் உடைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளைமையை நாம் வண்மையாகக் கண்டிக்கின்றோம்.

கிழக்கு மாகாண மக்கள் பல தசாப்தங்களின் பின்னர் நிம்மதிப்பெருமூச்சு விட்டு வாழ்ந்துவரும் காலம் இது. யுத்தத்தால் சின்னாபின்னமாக்கப்பட்ட கிழக்கு துரிதமாக வளர்ச்சி அடைந்துவரும் இவ்வேளையில் கிழக்கு மக்களின் நிம்மதியான வாழ்க்கையையும் கிழக்கின் துரித அபிவிருத்தியையும் பொறுத்துக் கொள்ள முடியாத ஒரு கும்பலின் செயற்பாடே இது.

இச்சிலை உடைப்பு விவகாரத்தினை அரசியலாக்க நினைக்கும் யோகேஸ்வரன் போன்றோரின் செயற்பாடுகளையும் நாம் வண்மையாகக் கண்டிக்கின்றோம். குற்றவாளிகளை பிடிப்பதற்குரிய முயற்சிகளை செய்வதனை விடுத்து. வெறுமனே பிள்ளையான் குழு செய்தது என்று மக்களை குளப்பி அரசியல் இலாபம் தேட முயலும் யோகேஸ்வரன் போன்றோர் மக்களை குளப்பி அரசியல் நடாத்தும் கைங்கரியங்களை விடுத்து மக்களுக்காக செயற்பட முன்வர வேண்டும்.

இச் சிலைகள் யார் உடைத்தாலும் அவர்கள் மீது பாரபட்சமின்றி காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்விடயத்தை ஒருவர்மீது ஒருவர் குற்றம்சாட்டி அரசியல் நடாத்துவதை விடுத்து குற்றவாளிகளை பிடிப்பதற்கு அரசியல்வாதிகள் ஒன்றிணைந்து செயற்பட முன்வரவேண்டும்.

மாற்றத்திற்கான மக்கள் அமைப்பு
கிழக்கிலங்கை 
read more...

Friday, 6 April 2012

மட்டக்களப்பில் காந்தி சிலை உட்பட நான்கு சிலைகள் உடைப்பு பின்னணி என்ன?

மட்டக்களப்பு நகரிலுள்ள மகாத்மா காந்தியின் திருவுருவச்சிலையும்இ சாரணியத்தின் தந்தை என போற்றப்படும் பேடன் பவுலின் சிலையும்இ கிழக்கிலங்கைக்கு புகழ்சேர்த்த சுவாமி விபுலானந்த அடிகளின் சிலையும்இ மட்டக்களப்பிற்கு புகழ் சேர்த்த மண்டூர் பெரியதம்பிப்புலவரின் சிலையும்  இன்று (06.04.2012) வெள்ளிக்கிழமை அதிகாலை விஷமிகளால் உடைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளது.

இன்று மட்டக்களப்பு சிலை உடைப்பு வரலாறுகள் தொடர்கதையாக மாறி வருகின்றது. அதுவும் மக்களால் போற்றப்படுகின்ற மகான்களின் சிலைகள் உடைக்கப்படுவது வருந்தத்தக்க விடயம். இன்று அதிகாலை இச் சிலைகள் உடைக்கப்பட்டதன் நோக்கம் என்ன? யாரால் உடைக்கப்பட்டது?

இவ்வாறான சம்பவங்கள் தொடர் கதையாக இருக்கக்கூடாது. முதன் முதலில் ஆரையம்பதியில் சுவாமி விவேகானந்தருடைய சிலை உடைக்கப்பட்டபோது சிலை உடைப்பு விடயத்தில் கைது செய்யப்பட்டவருக்கு உரிய தண்டனை வழங்கப்பட்டிருந்தால் இவ்வாறான சிலை உடைப்பு சம்பவங்கள் தொடர் கதையாக இருக்க வாய்ப்புக்கள் குறைவானதாகவே அமைந்திருக்கும்.

முன்னர் சுவாமி விவேகானந்தரின் சிலையினை உடைத்து பாரிய குற்றத்தினை புரிந்தவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டதன் நோக்கம் என்ன? இன்று நான்கு சிலைகளும் உடைக்கப்பட்டதன் நோக்கம் என்ன?

அதுவும் இன்று உடைக்கப்பட்ட  சிலைகள் நகரின் மத்திய பகுதி என்பது குறிப்பிடத்தக்கது. அத்தோடு நான்கு சிலைகள் உடைக்கப்பட்டிருக்கின்றன. கிழக்கு மாகாண மக்கள் நிம்மதியாக வாழ்ந்து வரும் இவ்வேளையில் மக்களை குழப்பமடையச் செய்யும் முயற்சியா?

இந்த நான்கு சிலைகளையும் உடைத்த குற்றவாளிகளையாவது காவல்துறையினர் கைது செய்து உரிய தண்டனை வழங்குவார்களா? 

சிலை தொடர்பில் நேற்று நான் எதிர்வு கூறிய என் பதிவு

சுவாமி விவேகானந்தரின் கை கால்கள் உடைக்கப்பட்ட வரலாறு தொடருமா?








read more...

Thursday, 5 April 2012

சுவாமி விவேகானந்தரின் கை கால்கள் உடைக்கப்பட்ட வரலாறு தொடருமா?



கடந்த ஒரிரு மாதங்களுக்கு முன்னர் மட்டக்களப்பு ஆரையம்பதி - காத்தான்குடி எல்லைப்பிரதேசத்தில் ஆரையம்பதி பிரதான வீதியில் சுவாமி விபுலானந்தருடைய சிலை வைக்கப்பட்டது. சிலை வைக்கப்பட்டு ஒருசில மணித்தியாலங்களில் இனம் தெரியாதோரால் உடைக்கப்பட்டது.

சிலை உடைக்கப்பட்டு சில தினங்களில் ஒருவர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டார். அவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டார். 

இப்பொழுது மீண்டும் புதிய சிலை ஒன்று அதே இடத்தில் வைக்கப்படுகின்றது. மீண்டும் இச் சிலை உடைக்கப்படமாட்டாது என்பதற்கு என்ன உத்தரவாதம் இருக்கின்றது. சுவாமி விவேகானந்தருடைய சிலை உடைப்பு என்பது மிகவும் பாரதூரமான செயல் மட்டுமல்ல சம்பந்தப்பட்டவர்களுக்கு தகுந்த தண்டனை வழங்க வேண்டிய ஒரு செயலாகும். 

இச் சிலை உடைப்பானது தமிழ் முஸ்லிம் சமூகத்தினரிடையே பாரிய இன விரிசலை ஏற்படுத்தக்கூடிய ஒரு செயலாகும். உலகமே போற்றும் ஒரு மகானின் சிலையை உடைத்தமை இரு சமூகங்களுக்கிடையே விரிசலை ஏற்படுத்த முயற்சித்தமை. என்று குறித்த நபர்மீது பல குற்றங்களை அடுக்கிக்கொண்டே போகலாம் அப்படிப்பட்ட ஒருவரை பிணையில் விடுதலை செய்வது சரியா?

இச் சிலை உடைப்பிலே தொடர்பு பட்டவருக்கு தண்டனை வழங்காமல் பிணையில் விட்டமையானது. இன்னும் பலரை இச் செயலை செய்துவிட்டு தப்பிக் கொள்ளலாம் என்று எண்ணத்தோற்றப்பாட்டை தோற்றுவிக்கலாம்.

அது ஒரு புறமிருக்க முஸ்லிம்களின்  இஸ்லாம் சார்ந்த ஒரு சின்னம் இவ்வாறு உடைக்கப்பட்டிருந்தால் அல்லது ஒரு புத்தர்சிலை இவ்வாறு உடைக்கப்பட்டிருந்தால். எந்தளவிற்கு பிரச்சினையாகி இருக்கும். குறித்த நபர் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருப்பாரா?

உடைக்கப்பட்ட சிலை







read more...

Sunday, 1 April 2012

கிழக்கு மாகாண மக்கள் யார் பின்னால்



கிழக்கு மாகாணம் மூவின மக்களும் ஒற்றுமையாக அன்று தொட்டு வாழ்ந்துவரும் ஒரு பிரதேசமாகும். இவ்வாறு ஒற்றுமையாகவும் நிம்மதியாகவும் வாழ்ந்து வரும் கிழக்கு மக்களை இன மத ரீதியாக பிரித்து குழப்பங்களை ஏற்படுத்தி அதன் ஊடாக அரசியல் நடாத்தும் தீய சக்திகள் அவ்வப்போது கிழக்கிலே வாழ்கின்ற மூவின மக்களையும் மோதவிட்டு வேடிக்கை பார்த்து இலாபம் தேடிக்கொண்டிருக்கின்றனர்.

இனங்களுக்கிடையிலான பிரிவினைகளை தோற்றுவிப்பது ஒருபுறமிருக்க கிழக்கிலே வாழ்கின்ற தமிழ் மக்களை தாழ்த்தப்பட்டவர்களாக பார்க்கின்ற யாழ்ப்பாண மேலாதிக்க சக்திகளின் கிழக்கு மக்களை ஏமாற்றுகின்ற அடக்கியாளுகின்ற கைங்கரியங்களை மிக சுலபமாக செய்வதற்கு கிழக்கிலே இருக்கின்ற மக்கள் தலைவர்கள் என்று தங்களை தாங்களே சொல்லிக்கொள்கின்ற கிழக்கு மாகாணத்தை நேசிப்பதாகச் சொல்லிக் கொள்கின்ற சிலர் கிழக்கு மாகாணத்திற்கும் கிழக்கு மக்களுக்கும் வரலாற்றுத் தரோகங்களை செய்து வருகின்றனர்.

யாழ்ப்பாண மேலாதிக்க சக்திகளானது கிழக்கு மாகாணத் தமிழர்கள் ஒற்றுமையாக இருக்கக்கூடாது ஒற்றுமையாக இருந்தால் கிழக்குத் தமிழர்கள் வலுப்பெற்று தங்களைவிட வலுவானவர்களாக தோற்றம் பெற்று விடுவார்கள் என்கின்ற நோக்கத்தின் காரணமாக கிழக்கத் தமிழர்களுக்கிடையே பிரிவினைகளை மறைமுகமாக ஏற்படுத்திவரும் பல வரலாற்றுப் பாடங்கள் எங்களுக்கு படிப்பினைகளை தந்திருக்கின்றன.

எது எப்படி இருப்பினும் கிழக்கு மக்களின் ஒற்றுமையினை சிதறடிப்பதென்பது இலகுவான விடயமல்ல. இருந்தபொதிலும் தமிழ் பற்று தமிழ் உணர்வு என்பன கிழக்குத் தமிழர்களை உணர்ச்சிவசப் படத்தக்கூடியவை. தமிழ் தேசியக் கூட்டமைப்பினரும் கிழக்கு மக்களை காலங்காலமாக ஏமாற்ற நினைப்பவர்களும் கிழக்குத் தமிழர்களை தங்கள் வசம் கட்டிப் பொடுவதற்கு பயன் படுத்திய ஆயுதம் உணர்ச்சி வார்த்தைகளும் அடய முடியாத இலக்கு நோக்கிய பயணமுமாகும்.

அனாலும் கிழக்கு மக்கள் கிழக்கு மண்மீது அதிக பற்றுறுதி கொண்டவர்கள். கிழக்கு மக்களை ஒற்றுமையாக வாழ விடாமல் பிரித்தாள நினைக்கின்ற் வடக்கு மேலாதிக்கத் தலைமைகளினதும் தழிழ் தேசியக் கூட்டமைப்பினரதும் செயற்பாடுகளுக்கும் அப்பால் கிழக்கின் தனித்தவத்திற்காக கிழக்கு மக்கள் ஒற்றுமைப்பட்டு இருக்கின்றார்கள். தமிழ் உணர்வு தமிழ் பற்று அதிகம் கொண்டவர்களாக கிழக்கு மக்கள் இருக்கின்றபோதிலும் கிழக்கின் தனித்துவம் என்று வருகின்றபோது கிழக்கு மண்ணை நேசிப்பவர்களாக ஒற்றுமைப்பட்ட வரலாறுகள் கிழக்கு மக்களை தொடர்ந்தும் ஏமாற்று முடியாது எனும் படிப்பினைகளை கிழக்கை மேலாதிக்க சிந்தனையோடு பார்க்கின்ற வடக்குத் தலைமைகளுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு போன்றவர்களுக்கு தெரியும்.

விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து கருணா பிரிந்து வந்தபோது கிழக்கு மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு வடக்கு தலைமைக்கு எதிராக செயற்பட்டதை எவராலும் மறுக்க முடியாது. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை தெய்வம்போல் தங்களின் உயிரக்கு இணையாக போற்றியவர்கள் கிழக்கு மக்கள். கிழக்கு மாகாணம் புறக்கணிக்கப் படகின்றது கிழக்கக்கான தனித்துவம் நிலை நாட்டப்பட வேண்டம் எனும் கருத்து வலுப்பெற்ற அவ் வேளையில் தங்களின் உயிரிலும் மேலாக மதிக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் உருவப்படங்களுக்கு செருப்பு மாலை போடடவர்களும் கிழக்கு மக்களே. இதற்கு காரணம் கிழக்கு மக்களுக்கு தமிழ் உணர்வுடன் தேசப் பற்றும் இரத்தத்தில் ஊறிய ஒன்றாகிவிட்டது. கிழக்கு மக்கள் கிழக்கின் தனித்துவத்தை விரும்புகின்றவர்கள். ஆனாலும் கிழக்கு மக்களின் ஒற்றுமை பிரதேசப்பற்று கிழக்கின் தனித்துவம் எனும் உதிரத்தில் ஊறிய உணர்வுகள் அவ்வப்போது பல சதிகளினாலும் உணர்ச்சி வார்த்தைகளாலும் தகர்த்தெறியப் படுகின்றன. 

இன்று கிழக்கு மக்கள் உண்மைகளையும் கிழக்கு மக்கள் மீது கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட வரலாற்றுத் துரோகங்களையும் உணர்ந்த மக்களாக கிழக்கின் தனித்தவத்தை நோக்கி ஒன்றுபட்டிருக்கின்றனர். கடந்த 18.03.2012 அன்று தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முதலாவது தேசிய மாநாடு மட்டக்களப்பு கல்லடி சிவானந்த விளையாட்டரங்கில் இடம் பெற்றது. இம் மாநாட்டின்போது கிழக்கிலே திருப்புமுனை ஏற்பட்டிருப்பதனை உணர முடிந்தது. அம் மாநாட்டிற்கு 15000 க்கு மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டனர். எவருமே இந்தளவிற்கு மக்கள் வருவார்கள் என்று கனவிலும்கூட எதிர்பார்க்கவில்லை.

மாநாட்டினை நடாத்திய தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினர்கூட இந்தளவிற்கு மக்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கவில்லை. 5000 க்கு உட்பட்ட மக்கள்தான் வருவார்கள் என தாம் எதிர் பார்த்ததாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் குறிப்பிட்டார். இம் மாநாட்டிற்கு வந்த மக்கள் தாமாகவே வந்தவர்கள் கட்டாயத்தின்பேரில் எவரும் அழைக்கப்படவில்லை. கிழக்கு மாகாணத்திலே அதிகளவு மக்கள் கலந்துகொண்ட ஒரு கட்சியின் தேசிய மாநாடு இதுவாகும்.

இம் மாநாட்டில் இவ்வளவு மக்கள் தாமாகவே கலந்துகொண்டமை கிழக்கிலே இடம்பெறுகின்ற அபிவிருத்தித் திடடங்களையும் பாரிய மாற்றங்களையும். நிம்மதியான வாழ்க்கையினையும் விரும்பும் மக்களாகவும். கிழக்கிற்கான தனித்துவத்தினையும் விரும்பும் மக்களாகவே தாமாக இம் மாநாட்டில் பங்குபற்றினர் என்பது வெளிப்படை.

இந்தளவு மக்கள் ஒரு அரசியல் கட்சியின் தேசிய மாநாட்டில் பங்குபற்றுவதென்பது கிழக்கு அம் மக்கள் குறித்த கட்சிக்கு ஒரு திடமான அங்கிகாரத்தை வழங்கி இருக்கின்றார்கள் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி கிழக்கு மாகாணசபையை பொறுப்பெடுத்ததன் பின்னர் கிழக்கிலே துரிதமாக அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கிழக்கு மாகாணசபை உருவாக்கத்தின் பின்னரே கிழக்கு மக்கள் நிம்மதியாக வாழ்கின்றனர் இதுவரை அறுபது வருடங்களாக போராடி பல இழப்புக்களையும் உயிர்களையும் பறிகொடுத்து தமிழருக்கு எந்தவிதமான உரிமையும் கிடைக்காத நிலையில். மாகாணசபை முறைமை மூலம் படிப்படியாக உரிமைகளை வென்றெடுத்துவருவதுடன் அறுபது வருடங்களாக உரிமை உரிமை என்று தமிழ்ர்களை உசுப்பேற்றி தமிழர்களின் அழிவிற்கு காரணமான தமிழ் தேசியக் கூட்டமைப்பினரையே மாகாணசபை முறைமை மூலமே தீர்வுகளை பெற்றுக்கொள்ள முடியும் சிந்திக்க வைத்த தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் கொள்கைகள் செயற்பாடுகளில் நம்பிக்கை கொண்டதன் வெளிப்பாடேயாகும்.

எவரும் எதிர்பாராத விதமாக சிறப்பாக இம் மாநாடு இடம்பெற்றது. கிழக்கு மக்களையும் கிழக்கின் அபிவிருத்தியினையும் கிழக்குக்கான தலைமைத்தவத்தினையும் பொறுத்துக்கொள்ள முடியாத  வடக்கத் மேலாதிக்கத் தலைமைகளின் ஊது குழல்;களாக செயற்பட்டுக் கொண்டிருக்கின்ற தமிழ் ஊடகங்கள் இம்மாநாடு தொடர்பாக செய்திகளை சரியாக வெளிப்படுத்தாமை தமிழ் ஊடகங்களின் மேலாதிக்க சிந்தனையையும் காட்டுகின்றது. 

ஒரு யானை பள்ளத்தில் விழுந்தாலே பிரதான செய்தியாக்ககின்ற தமிழ் ஊடகங்கள் 15000 க்கு மேற்பட்ட மக்கள் கலந்து கொண்ட ஒரு கட்சியின் தேசிய மாநாட்டினைப் பற்றி செய்திகளை வெளியிடாமை ஒட்டு மொத்த கிழக்கு மக்களும் வேதனைப்பட வேண்டிய விடயமாகும். ஊடகங்கள் இவ்வாறு தொடர்ச்சியாக செயற்பட்டு வருகின்றமை கிழக்கிற்கான தனியான ஒரு ஊடகத்தின் தேவை உணரப்பட்டிருக்கின்றது. கிழக்கின் உண்மை நிலைகளையும் உண்மைசெய்திகளையும் வெளியிடுவதற்கென்று ஒரு ஊடகம் இல்லாதநிலை தோன்றியிருக்கின்றது.

அத்தோடு சமூக நல்லுறவைப் பேணுவதிலும் ஊடகங்களின் பங்கு அளப்பெரியது. ஆனால் ஊடகங்கள் சிறிய விடயங்களை பெரிதாக காட்டி சமூகங்களிடையே பிரச்சினைகளை ஏற்படுத்திய பல சம்பவங்களை நாம் சந்தித்திருக்கின்நோம். எனவே கிழக்கிலே துரித அபிவிருத்தியும் சமூக நல்லுறவும் கட்டியெழுப்பப்பட்டு வரும் இவ்வேளையில் கிழக்கிற்கான தனி ஒரு ஊடகத்தின் தேவை உணரப்பட்டிருக்கின்றது. 

கிழக்கின் அபிவிருத்தியிலே அக்கறையோடு செயற்படுகின்ற கிழக்கு மாகாண முதலமைச்சர் அவர்களும் அரசாங்கமும் கிழக்கிலே கிழக்கிற்கான ஊடகம் ஒன்றினை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே கிழக்கு மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கின்றது.

read more...

Monday, 12 March 2012

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தேசிய மாநாடு ஒரு பார்வை

கிழக்கு மாகாணசபை உட்பட மட்டக்களப்பு மாவட்டத்தின் பல உள்ளூராட்சி மன்றங்களையும் தன் வசம் வைத்துள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முதலாவது தேசிய மாநாடு எதிர்வரும் 18 மார்ச் 2012 கல்லடி சிவானந்தா விளையாட்டர்கில் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.

இம் மாநாடு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியன் முதலாவது மாநாடு. இம் மாநாடு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு மாநாடு மட்டுமல்லாமல். தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சிக்கும் கிழக்கு மக்களுக்கும் ஒரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வாகும். இவ் வேளையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியையும் அதன் செயற்பாடுகள் இம் மாநாட்டின் மூலம் கட்சியின் பலம் தொடர்பாகவும் ஆராயப்பட வேண்டும்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியானது கிழக்கு மாகாணத்தை தலைமைத்துவமாகக் கொண்டு கிழக்கு மாகாண மக்களுக்கு குரல் கொடுக்கும் ஒரு கட்சியாக உருவாக்கப்பட்ட ஒரு கட்சியாகும். இக் கட்சி எந்த நோக்கத்துக்காக உருவாக்கப்பட்டதோ அந்த நோக்கத்திலிருந்து விலகிச் செல்லாமல் கிழக்கு மாகாண மக்களின் தனித்துவக் கட்சியாக கிழக்கின் துரித அபிவிருத்தியில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது.

இக் கட்சியானது பல சவால்களுக்கும் பல உயிர்ப்பலிகளுக்கும் மத்தியில் உருவாக்கப்பட்ட கட்சி. தற்பொது கிழக்கு மாகாணத்தில் இடம்பெறும் துரித அபிவிருத்தித் திட்டங்கள் முதலமைச்சரின் தூர நோக்கிலான சிந்தனை செயற்பாடு கட்சியின் கொள்கைகள் என்பவற்றால் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியினர் கிழக்கிலே பலமான ஒரு கட்சியாக வேருன்றி வருகின்றனர். தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி கிழக்குக்கான ஒரு தலைமைத்துவம் வேண்டும் கிழக்கிற்கு தனியான ஒரு கட்சி வேண்டும் எனும் அடிப்படையில் உருவாக்கப்பட்ட கட்சி. அதன் அடிப்படையில் கிழக்கு மாகாணசபை தேர்தலிலும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலிலும் போட்டியிட்டு கிழக்கு மாகாணசபையை கைப்பற்றியதுடன் பல உள்ளுராட்சி மன்றங்களையும் கைப்பற்றி கிழக்கு மாகாணசபை மூலம் கிழக்கு மாகாணம் தூரிதமாக அபிவிருத்தி அடைந்து வருகின்றது.

இக் கட்சியின் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த முதலாவது தேசிய மாநாட்டுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வரும் இவ் வேளையில் கட்சியின் உருவாக்கத்திற்கு பக்க பலமாக இருந்து கிழக்கினதும் கட்சியினதும் முன்னேற்றத்தின் பக்க பலமாக இருந்து செயற்பட்ட படுகொலை செய்யப்பட்ட கட்சியின் முன்னாள் தலைவர் குமாரசாமி நந்தகோபன்(ரகு) அவர்கள் இவ் வேளையில் நினைவு கூரப்படவேண்டும். குமாரசாமி நந்தகோபன் அவர்கள் படுகொலை செய்யப்பட்டாலும் தற்போதைய கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான சந்திரகாந்தன் அவர்கள் கட்சியை மக்கள் மயப்படுத்தும் முயற்சியில் பல திட்டங்களை செயற்படுத்தி வருகின்றார்.

கட்சி உருவாக்கப்பட்ட ஆரம்பகாலத்தில் கட்சிக்கு பெரும் வரவேற்பு இருந்தாலும் பின்னர் படிப்படியாக மக்கள் ஆதரவு குறைந்திருந்தது. இதற்கான காரணம் கருணா பிள்ளையான் இருவருக்குமிடையிலான கருத்து முரண்பாடும் பிரிவுமாகும். இதனை சாதகமாகப் பயன்படுத்திய தமிழ் ஊடகங்கள் கட்சி தொடர்பாகவும் முதலமைச்சர் தொடர்பாகவும் தவறான கருத்துக்களை வெளியிட்டன. கருணா அம்மான் புலிகள் அமைப்பிலிருந்து விலகி வந்தபோது அவர் பிரிவிற்கான காரணத்தை சொன்னபோது கிழக்கு மக்கள் அவரை 100 வீதம் நம்பினர். அவர் அன்று சொன்ன விடயங்கள் கிழக்கு மக்கள் வடக்கு தலைமைகளால் ஏமாற்றப்படுகின்றார்கள் கிழக்குக்கு ஒரு தலைமைத்துவம் வேண்டும் கிழக்கில் ஒரு கட்சி வேண்டும் என்று சொன்னவர் தனது நோக்கத்திலிருந்து விலகி அரசுடன் இணைந்து கொண்டதனால் மக்கள் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியையும் கருணாவையும் ஒன்றென நினைத்துவிட்டனர்.

இது ஒரு புறமிருக்க கருணா அம்மானின் குழுவைச் சேர்ந்தவர்களின் அடாவடித்தனங்கள் மலிந்திருந்தன. அவர்கள் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் எனும் பெயரில் இயங்கியவர்கள் என்பதனால் கருணா குழுவினர் செய்யும் அடாவடித்தனங்கள் அனைத்தும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்தான் செய்கின்றனர் எனும் தப்பான அபிப்பிராயம் மக்கள் மத்தியில் இருந்தன. ஊடகங்களும் இதனை மிகப்படுத்தி பரப்புரை செய்ய ஆரம்பித்தன. இக்கால கட்டத்தில்தான் பாராளுமன்றத் தேர்தல் இடம்பெற்றன அப்போது பல சவால்களுக்கு மத்தியில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி போட்டியிட்டாலும் 25 ஆயிரத்தக்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்றிருந்தனர். இத் தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி போட்டியிட்டிருக்க வில்லை எனில் முஸ்லிம்களின் பாராளுமன்றப் பிரதிநிதித்தும் அதிகரித்திருக்கும்.

தொடர்ந்தும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தமது கட்சியினை வலுப்பெற செய்வதில் பல முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வருகின்றனர். தமது கட்சியின் நிலைப்பாடுகள் தொடர்பாக கட்சியின் ஆதரவாளர்களுக்கும் மக்களுக்கும் தெளிவுபடுத்தப்பட்டு வருகின்றது. அத்துடன் கட்சியானது முற்றிலும் மக்கள் மயப்படுத்தப்பட்டு மக்கள் கட்சியாக மாற்றம் பெற்றிருக்கின்றது. கட்சியில் கிழக்கைச் சேர்ந்த பல படித்த புத்தியீவிகள் இணைக்கப்பட்டுள்ளதுடன் கட்சியில் உள்வாங்கப்பட்டு இளைஞர்களுக்கு பதவிகள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.

மறு புறத்திலே சர்வதேச ரீதியிலும் தமது கட்சியின் கொள்கைகள் நிலைப்பாடுகள் தொடர்பாகவும் கிழக்கிலே இடம்பெறுகின்ற அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாகவும் தெளிவு படுத்தும் செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.அண்மையில் முதலமைச்சர் மற்றும் மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் உள்ளிட்ட குழுவினர் இரண்டுவார கால ஐரோப்பிய நாடுகளுக்கான விஜயத்தினை மேற்கொண்டிருந்தனர். பிரான்ஸ், ஜேர்மன், டென்மார்க் போன்ற நாடுகளில் வாழும் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்களை சந்தித்து தமது கட்சியின் கொள்கைகள நிலைப்பாடுகள் கிழக்கிலே இடம்பெற்று வரும் அபிவிருத்திகள் தொடர்பாகவும் பேசப்பட்டிருக்கின்றது.

இச்சந்திப்புக்களில் புலம்பெயர் கிழக்கு மாகாண முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொண்டிருக்கின்றனர். இவர்கள் கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்திக்கு தமது பங்களிப்பினை வழங்குவதாக உறுதியளித்துள்ளனர். அத்துடன் பல முக்கியமான விடயங்கள் தொடர்பாக பேசப்பட்டதாகவும் மாகாண சபை உறுப்பினர் பூ. பிரசாந்தன் தெரிவித்தார். அத்துடன் தாம் எதிர்பார்த்ததைவிட அதிக வரவேற்பு தமக்கு கிடைத்ததாகவும் புலம்பெயர் கிழக்கு மாகாண மக்கள் கிழக்கு மாகாணம் அபிவிருத்தி செய்யப்படவேண்டும் எனும் நிலைப்பட்டில் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

இது ஒரு புறமிருக்க மத்திய கிழக்கு நாடுகளிலும் வாழும் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்களிடமும் கட்சியின் கொள்கைகள் நிலைப்பாடுகள் கிழக்கின் அபிவிருத்தி தொடர்பாகவும் தெளிவு படத்தப்பட்டு வருவதாக அறிய முடிகின்றது. கடந்த வருடம் கட்டாரில் கிழக்கு மாகாண தமிழர்கள் இருக்கும் இடங்களில் குறிப்பிட்ட சிலரால் கட்சியின் கொள்கைகள் நிலைப்பாடுகள் கிழக்கில் இடம்பெறும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாகவும் விளக்கமளிக்கப்பட்டதாகவும் அறிய முடிகிறது. கட்டாரில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் ஆதரவாளர்கள் பலர் இருப்பதாவும் இவர்களால் இச் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அறிய முடிகின்றது.

முதலமைச்சரின் அபிவிருத்தித் திட்டங்களின் தொகுப்பாக வெளியிடப்பட்ட இறுவட்டக்கள் இரண்டு பகுதிகளும் கட்டாரில் கிழக்கு மாகாணத்தவர்கள் வாழும் இடங்களில் அதிகம் உலாவுவதாகவும் அறிய முடிகின்றது.தொடர்ந்து கட்சியை மக்கள் மயப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட இருப்பதாகவும் அறிய முடிகின்றது.

இவ்வாறு சென்று கொண்டிருக்க கட்சி மாநாட்டிற்கான வேலைகள் துரிதமாக இடம்பெற்று வருகின்றன. இம் மாநாடு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கு மட்டுமல்லாது கிழக்கு மாகாணத்தில் இருக்கின்ற ஒட்டுமொத்த மக்களுக்கும் ஒரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வாக அமைய இருக்கின்றது. கிழக்கு மாகாணத்துக்காக உருவாக்கப்பட்ட ஒரு கட்சி. கிழக்கு மாகாணத்தை ஆட்சி செய்கின்ற கிழக்கு மாகாணத்தை துரித அபிவிருத்திப் பாதைக்கு இட்டுச் செல்கின்ற ஒரு கட்சியின் மாநாடு இடம்பெற இருக்கின்றது. அதுவும் இதுவரை கிழக்கு மாகாணத்திலே இடம் பெறாத அளவிற்கு சிறப்பாக இம் மாநாடு இடம்பெறுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக அறிய முடிகின்றது.

இம் மாநாடானது கட்சியால் ஏற்பாடு செய்யப்பட்டது என்பதனைவிட கிழக்கு மாகாண மக்களால் ஏற்பாடு செய்யப்பட்டது என்று சொல்வது பொருத்தமானது என்று நினைக்கின்றேன். காரணம் மாநாட்டுக்கான ஏற்பாடுகளை கிழக்கு மாகாண மக்களும், கிழக்கு மாகாணத்திலே இருக்கின்ற பல சமூக அமைப்புக்களுமே  செய்து வருகின்றனர். இம் மாநாட்டுக்கான மக்கள் பங்களிப்பு என்பது அதிகமாக இருக்கின்றது.

இம் மாநாட்டை கிழக்கு மாகாண மக்கள் எதிர்பார்ப்புடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். பலரது மனங்களிலே ஏதோ ஒரு எதிர்பார்ப்பு தென்படுகின்றது.

அடுத்த பகுதியில் இம் மாநாடு கிழக்கு மக்களுக்கும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கும் எவ்வாறான நன்மைகளை பெற்றுத்தரப் போகின்றன இம் மாநாட்டின் பின்னர் கிழக்கு மாகாணத்தின் தலைவிதி எவ்வாறு மாற்றமடையும் போன்ற விடயங்களை ஆராய்வோம்.

தொடரும்
read more...

Sunday, 19 February 2012

வடக்கு கிழக்கு தமிழர்கள் பற்றி விக்கிலீக்ஸ் என்ன சொல்கிறது

வட மாகாணத் தமிழர்கள் குறித்து கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் சேகரித்து வைத்திருக்கின்ற தகவல்கள் மிகவும் சுவையானவையும், சுவாரஷியம் நிறைந்தவையும் ஆக உள்ளன.
வட மாகாண தமிழர் – பெருமை பிடித்தவர்கள் என்கிற உப தலைப்பில் இத்தகவல்கள் எழுதப்பட்டு உள்ளன
பரந்த விரிந்த சமுதாய நோக்கின்படி வட மாகாண தமிழர்களுக்கும், கிழக்கு மாகாண தமிழர்களுக்கும் இடையில் மிக நீண்ட காலமாகவே பதற்ற நிலை காணப்பட்டு வருகின்றது
பொதுவாக இந்து உயர் சாதியைச் சேர்ந்த வட மாகாண தமிழர்கள் அதிகம் படித்தவர்கள், நகரவாசிகள். கிழக்கு மாகாண தமிழர்கள் பொதுவாக வறியவர்கள், கிராமவாசிகள்.
இலங்கையில் யாழ்ப்பாணம்தான் தமிழர்களின் கலாசார அடையாளத்தின் மையமாக விளங்குகின்றது என்று காலம் காலமாக சொல்லி வருகின்றனர். பெருமை பிடித்தவர்கள்.
கல்வியில் உயர்ந்தவர்கள் என்று சுயம் பெருமைப்பட்டுக் கொள்கின்றனர். ஏராளமான பாடசாலைகள் யாழ்ப்பாணத்தில் உள்ளன. அமெரிக்க சபைகளினால் 19 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பல பாடசாலைகள் இங்கு உள்ளன.
கல்வித் தகைமைகள் காரணமாக பிரித்தானியர் ஆட்சியிலும் வட மாகாண தமிழர்கள் பயன் பெற்றனர். குறிப்பாக எழுதுவினைஞர் பதவி உட்பட பல பதவிகளிலும் அமர்த்தப்பட்டனர். வட மாகாண தமிழர்கள் என்கிறபோது இந்து வெள்ளாளர்களை குறிக்கின்றோம்.
யாழ்ப்பாண தமிழர்களில் பலர் கொழும்பில் மிகவும் வசதியாக உள்ளனர், வர்த்தகம் செய்கின்றார்கள். வெளிநாடுகளில் செல்வச் செழிப்புடன் வசிக்கின்ற இலங்கைத் தமிழர்களில் அநேகர் யாழ்ப்பாணத்தார்.
இலங்கையில் 23 சதவீதமானவர்கள் தமிழர்கள் என்றால் 18 சதவீதமானவர்கள் இலங்கைத் தமிழர், 05 வீதமானவர்கள் மலையகத் தமிழர். இலங்கைத் தமிழரில் மூன்றில் இரண்டு பங்கினர் யாழ்ப்பாணத்தார்.
வட மாகாண தமிழர்களில் அநேகர் அகம்பாவமும், தற்பெருமையும் பிடித்தவர்கள் என்பதை வட மாகாணத்தார் இயல்பாகவே ஏற்றுக் கொள்கின்றனர்.
யாழ்ப்பாணத்தார் எங்குல்லாம் போகின்றனரோ அங்கு சொத்துக்களை வாங்கி குட்டிப் பிரபுக்கள் போல் வாழ்கின்றனர், இவர்களின் தலைக் கனத்தை விளங்கிக் கொள்ள முடிகின்றது என யாழ்ப்பாண கத்தோலிக்க பாதிரியார் நிக்கொலஸ் தெரிவித்தார்.
ஆளப் பிறந்தவர்கள் என்கிற உணர்வு வட மாகாண தமிழர்களுக்கு உள்ளது, இலங்கையில் தமிழ் சமுதாயத்தை கட்டாயம் தலைமை தாங்கி நடத்த வேண்டியவர்கள் என்கிற உணர்வை பிறப்புரிமையாக கொண்டு இருக்கின்றனர் என்று சுரேஸ் பிறேமச்சந்திரன் கூறினார்.
தூதரகத்தில் இருந்து 2004 ஆம் ஆண்டு மார்ச் 17 ஆம் திகதி அமெரிக்க வெளியுறவு அமைச்சுக்கு அனுப்பப்பட்ட ஆவணம் ஒன்றில் இருந்து விக்கிலீக்ஸ் மூலம் இவ்விபரங்கள் கிடைத்து உள்ளன.
read more...

Friday, 10 February 2012

உனக்கில்லடி உபதேசம் ஊருக்குத்தாண்டி பதிவர்கள் நிலைப்பாடும் இதுதானா? புலம்பெயர் உறவுகளிடம் அன்பான வேண்டுகோள்







நாம் ஒவ்வொருவரும் வலைப்பதிவு எழுத வந்ததன் நோக்கம் ஒருவருக்கொருவர் வேறுபடலாம். ஒருவர் பொழுதுபோக்குக்காக எழுத வந்திருக்கலாம். சிலரோ சமூகத்துக்காக எழுத வந்திருக்கலாம். ஆனாலும் நாம் சமூகத்துக்காக ஏதாவது செய்ய வேண்டும்.

இன்று பதிவர்கள் நாம் சமூகம் சமூகம் தமிழன் தமிழன் என்றெல்லாம் கோசம் எழுப்பிக் கொண்டிருக்கின்றோம். இவையெல்லாம் உனக்கில்லடி உபதேசம் ஊருக்குத்தாண்டி என்பதுபோல் வெறும் வேசம் என்று எண்ணத் தோன்றுகின்றது.

நாம் வலைப்பதிவு எழுத வந்து சமூகத்தக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைப்பவன் நான். சமூகத்துக்கு ஏதாவது செய்ய வேண்டும் எனும் நோக்குடன் வலைப்பதிவு எழுத வந்தவன் நான். மிகவும் கவலைக்கிடமாக இருக்கின்ற ஒரு மாணவனுக்கு இருதய சத்திர சிகிச்சைக்காக உதவும்படி  கடந்த இரு மாதங்களாக அடிக்கடி பதிவிட்டு வருகின்றேன். இதுவரை அந்த மாணவனுக்கு ஒரு சதக்காசுகூட எவராலும் வழங்கப்படவில்லை.

ஒரு உயிரைக்காக்க எவரும் முன்வராதிருப்பது கவலைப்பட வேண்டிய விடயம். இன்று எத்தனையோ பதிவர்கள் நாம் பதிவிட்டுக்கொண்டிருக்கின்றோம். தினம் எவ்வளவோ பணத்தினை செலவு செய்கின்றோம். ஒரு பதிவர் 100ரூபா உதவி வழங்கினாலே பெருந்தொகைப் பணம் வரும். சமூகம் சமூகம் என்று எழுதிக் கொண்டிருப்பதெல்லாம் வெறும் வேசம்தானா என்று எண்ணத் தோன்றுகின்றது. ஒரு உயிரைக் காக்க உதவ முடியாத நாம் சமூகம் சமூகம் என்று எழுத வேண்டிய அவசியமில்லை.

சரி உதவத்தான் பணம் இல்லை என்றாலும். ஒரு பதிவாவது இட முடியாதா? நாம் ஒருவரை ஒருவர் பாராட்டி புகழ்ந்து எழுதுவதனைவிட உயிரைக்காக்க ஒரு பதிவு எழுதுங்கள். ஒரு உயிரைக் காக்க உதவாத பதிவுலகம் தமிழ் பதிவுலகம். அதற்குள் நான் பெரிது நீ பெரிது என்ற சண்டைகளும் சச்சரவுகளும். 

பதிவர்கள் மீது இருந்த நம்பிக்கை எல்லாம் பொய்விட்டது. பதிவுகளை படிக்கின்ற தனவந்தர்கள் சமூக சேவை நோக்கம் கொண்டவர்கள். புலம்பெயர் தமிழர்கள் உதவ முன்வாருங்கள் குறித்த மாணவன் மிகவும் வறிய குடும்பத்தைச் சேர்ந்தவன் அவனுக்கு உடனடியாக சத்திர சிகிச்சை செய்ய வேண்டும். இல்லையேல் அவரது உடல்நிலை கவலைக்கிடம்..


முன்னைய பதிவு


நண்பர்களே ஒரு மாணவனின் உயிரைக் காப்பாற்ற உதவுங்கள் என்று இரண்டு பதிவுகள் போட்டும் சிலர் உதவுவதாக சொல்லி இருக்கின்றனர். இருந்தும் எந்த உதவியும் இதுவரை கிடைக்கவில்லை விரைவில் குறித்த மாணவனுக்கு சத்திரசிகிச்சை செய்ய வேண்டிய நிலையில் இருக்கின்றார். முந்திய பதிவை அப்படியே தருகிறேன்.

வலைப்பதிவு எழுதும் நாம் எழுத்துக்களுடன் நின்று விடாது சமூகத்திற்காக ஏதாவது செய்ய வேண்டும். சில பதிவர்கள் இதனைச் செய்து வருகின்றனர். நானும் சமூக சேவை செய்து வருபவன் எனும் வகையில் உங்களிடம் ஒரு கோரிக்கையை முன்வைக்கின்றேன். 

 தற்போது உயர்தரம் படித்துக் கொண்டிருக்கும் ஒரு மாணவனுக்கு இருதய நோய் இருக்கின்றது. உடனடியாக இருதய சத்திரசிகிச்சை செய்ய வேண்டிய நிலையில் இருக்கின்றார். உடனடியாக சத்திரசிகிச்சை செய்யாவிட்டால் உயிராபத்து ஏற்படும் நிலையில் இருக்கின்றார். இருதய சத்திர சிகிச்சைக்காக இலங்கை ரூபா ஐந்து இலடசத்திற்குமேல் செலவாகும்.


ஆனாலும் அம்மாணவனின் குடும்பம் மிகவும் வறிய நிலையில் இருக்கின்றது. நல்ல எண்ணம் கொண்டவர்கள் இவரின் உயிரைக் காக்க உதவி செய்யுங்கள். இவர் மட்டக்களப்பு களுதாவளையைச் சேர்ந்தவர் பெயர் இராஜேந்திரம் நிமல்ராஜ் மட்களுதாவளை மகா வித்தியாலயத்தில் உயர்தரம் படிக்கின்றார். மாணவனின் உயிரைக்காக்க உதவ நினைப்பவர்கள் என்னைத் தொடர்பு கொள்ளுங்கள் நேரடியாக குறித்த மாணவனுடன் தொடர்புபடுத்தி விடுகிறேன்.

எனது மின்னஞ்சல் :-shanthruslbc@gmail.com
 தொலைபேசி இலக்கம் : - 0094778548295






சில நண்பர்கள் உதவுவதாக தெரிவித்தனர் அவர்கள் விரைவு படுத்துமாறு கேட்டுக்கொள்கினறேன். பதிவிட்ட நண்பர்களுக்கும் நன்றிகள். அத்துடன் மதிசுதா அவர்கள் பதிவிட்டதுடன் பல நடவடிக்கைகளை மேற்கொண்டார். அவருக்கு நன்றிகள் அவரின் நடவடிக்கைகளை துரிதப்படுத்தமாறும் அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன். எனது இந்தப் பதிவினைப் பார்த்து பதிவர்கள் என்மிது கோபப்பட்டால் அது என்னை ஒன்றும் செய்யப் போவதில்லை. குறித்த மாணவன் தன் நிலை தொடர்பாக நேற்று என்னிடம் மிகவும் கவலையுடன் கூறியபோது என்னை அறியாமலே என் கண்ணில் கண்ணீர் வந்தது. 
read more...

Monday, 6 February 2012

இலங்கையின் சகல பாகங்களிலும் புலி ஆதரவாளர்களுக்கு மரண தண்டனை எச்சரிக்கை பெயர்களும் வெளியிடப்பட்டிருக்கின்றன

இலங்கையில் நாடு பூராகவும் ஒரு துண்டுப் பிரசுரம் வெளியிடப்பட்டள்ளது. அதில்  தாய்நாட்டின் நற்பெயருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்துகின்ற வகையிலும், நாட்டின் அபிவிருத்தியை மந்தமடையச் செய்கின்ற வகையிலும் செயற்படுகின்ற புலிகளுக்கும் அவர்களின் உள்நாட்டு , வெளிநாட்டு ஆதரவாளர்களுக்குமான மரணதண்டனையை நிறைவேற்றப்போவதாக நாம் இலங்கையர் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது. அது இறுதி எச்சரிக்கை என தெரிவித்து நாடுபூராகவும் வெளியிட்டுள்ள துண்டுப்பிரசுரத்தில் கடந்த காலத்தில் நாட்டுக்கு எதிராக செயற்பட்ட பலருக்கு தமது படையணி மரண தண்டனையை வழங்கியிருந்ததாகவும் தெரிவித்துள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் இதோ..


நாட்டைக் காக்கும் தமிழர் கூட்டமைப்பு

புலி ஆதரவாளர்களே உங்களுக்கு இறுதி எச்சரிக்கை


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விடுதலைப்புலி ஆதரவாளர்களை இறுதியாக எச்சரிக்கின்றோம்

இலங்கை மண்ணில் மாணவர் போராட்டம் மக்கள் போராட்டம் ஊடகப்போர் மக்கள் எழுச்சி என்ற பெயரில் பயங்கரவாதிகளுடன் இணைந்து நாசகார வேலைகளில் ஈடுபட்ட

தமிழ் மாணவர் ஒன்றிய உறுப்பினர்களான நிலக்சன், குணேந்திரன் மக்கள் படை உறுப்பினர்கள் (ஜனா, அனுதீபன், ரஜீவன், நிதன்) மதகுருக்கள் நாடாளுமன்ன உறுப்பினர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கும் (ரஜீவன்) ஆகியோருக்கு எம்மால் மரண தணடனைகள் வழங்கப்பட்டன 

2009 ஆம் ஆண்டில் விடுதலைப் விடுதலைப் புலிகளும் அவர்களின் முட்டாள்தனமான ஈழ விடுதலைப் போராட்டமும் முள்ளிவாய்க்காலில் புதைக்கப்பட்டு இன்று ஐக்கிய இலங்கைக்குள்இரண்டாம் இனமாக வாழ தமிழர்கள் முற்பட்டுக்கொண்டிருக்கின்றனர். இவ்வேளையில் யாழ் பல்கலைக்கழகம் மற்றும்பாடசாலைகளில் பயங்கரவாதத்தை தூண்டுவது மற்றும் புலம்பெயர் நாடுகளில் இலங்கை அரசுக்கு எதிராக செயற்படுபவர்களை நாங்கள் அவதானித்துக்கொண்டிருக்கின்றோம்.

இணையத்தளங்களில் இலங்கை அரசு சம்மந்தமாக பொய்ப்பிரசாரம் செய்வது முகப்புத்தகங்களில், டுவிட்டர்,சமூக வலைத்தளங்களில்இலங்கை அரசுக்கு எதிராக எழுதுவது, இலங்கையின் கெளரவ அமைச்சர்கள் மீதும் அவதூறு ஏற்படும் வகையில் போராட்டம் மற்றும் வழக்குகளைப் போட்டு இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் மீது அவதூறு எற்படுத்துவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அனைவரையும் இறுதியாக எச்சரிக்கின்றோம்.

குறிப்பாக - தினகரன் திவாகரன், கிரிசாந், திவாகரன் மற்றும் குருபரன் (யாழ்ப்பாணம்) அருளினியன், கஜேந்திரகுமார், குமரன் தேனுகாந்தன் (இந்தியா) தனம், கண்ணன், றஞ்சன், அங்கஜன்,சந்துரு (லண்டன்) சிவகுரு, ஆறுமுகம், நிசாந்தன் (கனடா), செல்வம், ரவி, சாச ராசன், தனு (பிரான்ஸ்)போன்றவர்களையும் இவர்களுடன் இணைந்து செயற்படம் புலி ஆதரவாளர்களையும் கடுமையாக எச்சரிக்கின்றோம். உங்களுக்குரிய தண்டனை மரண தண்டனை என்பதனை உறுதியாகக் கூறிக்கொள்ள விரும்மபுகின்றோம்.

இனப்பிரச்சினை முடிவிற்கு வந்து இரண்டு வருடங்கள் கடந்துவிட்ட நிலையில் ஐக்கிய இலங்கைக்குள் இரண்டாம் இனமாக தமிழர்கள் வாழ முற்பட்டு வருகின்றார்கள். மீண்டும் ஈழ விடுதலை என்ற பெயரில் பலம்பெயர் தமிழர்களால் மேற்கொள்ளப்படம் நடவடிக்கைகள் ஒட்டுமொத்த தமிழினத்தின் அழிவிற்கு வித்திடும் என்றும் எச்சரிக்கின்றோம்

நாட்டைக் காக்கும் தமிழர் கூட்டமைப்பு 
நாம் இலங்கையர் பாதுகாப்பு படை


read more...

Friday, 3 February 2012

மாகாணசபைக்கு பொலிஸ் காணி அதிகாரங்கள் தேவை ஆதரிக்கும் பிள்ளையான் எதிர்க்கும் கருணா

இன்று பரவலாகப் பேசப்படுகின்ற விடயம் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் - தமிழ் தேசியக் கூட்டமைப்பு பேச்சுவார்த்தை தொடர்பான விடயமும் மாகாண சபைகளுக்கான பொலிஸ் காணி அதிகாரங்கள் தொடர்பான விடயமுமாகும். 01.01.2012 அன்று கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கு கடிதம் ஒன்றினை அனுப்பியிருந்தார். அக் கடிதத்தில் அரசு - கூட்டமைப்பு பேச்சுக்களின்போது வடக்கு கிழக்கு இணைப்பு தவிர்ந்த மாகாணசபைகளுக்கான பொலிஸ் காணி அதிகாரங்கள் பற்றி பேசப்படுமானால் தாம் அதற்கு ஆதரவு வழங்குவதாகவும் இவ்விடயம் தொடர்பில் தாம் கூட்டமைப்புடன் பேச தயாராக இருப்பதாகவும் அக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. சரியான நேரத்தில் முதலமைச்சர் அவர்கள் நல்ல முடிவினை எடுத்திருப்பது பாராட்டப்பட வேண்டிய விடயம்

முதலமைச்சரின் இக் கடிதமும் முதலமைச்சரின் நிலைப்பாடு தொடர்பிலும் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் ஆதரவு கிடைத்தது. ஆனாலும் குறுகிய நோக்கம் கொண்ட சிலர் இவ்விடயத்தை எதிர்ப்பது கவலைக்குரிய விடயம். ஒரு சமூகத்தைப் பிரதிநிதிப் படுத்துகின்ற தலைவர்கள் அம் மக்கள் தொடர்பாக எடுக்கப்படுகின்ற நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்க வேண்டிய கடப்பாடு இருக்கின்றது. இவ்விடயத்தில் கட்சிகளுக்கிடையில் கருத்து வேறுபாடு இருப்பினும் மக்களுக்கான நல்ல திட்டங்கள் யாரால் முன் வைக்கப்பட்டாலும் அதற்கு ஆதரவு வழங்க வேண்டியது அச் சமூகம் சார்ந்த தலைவர்களின் கடமையாகும்.

கிழக்கு மாகாண சபை உருவாக்கப்பட்டதன் பின்னரே கிழக்கு மாகாணம் துரித அபிவிருத்தி கண்டு வருகின்றது. ஆனாலும் மாகாண சபைக்கு பல அதிகாரங்கள் இல்லை. பல விடயங்களில் தீர்மானம் எடுக்கும் அதிகாரம் முதலமைச்சரின் கையில் இல்லை. இவ்வாறு பல பிரச்சினைகள் இருக்கின்றன. பொலிஸ் காணி அதிகாரங்கள் இல்லாமையால் மாகாணசபை பல சவால்களுக்கு முகங்கொடுக்க வேண்டி இருக்கின்றது.

பல உயிர் உடமை இழப்புக்களுக்குப்பின் தமிழருக்கு கிடைத்திருக்கும் தீர்வு மாகாணசபை முறமைதான். கிடைத்திருக்கும் மாகாணசபை முறமை மூலம் இன்னும் பல சலுகைகளையும் தீர்வுகளையும் பெற்றுக்கொள்ள தமிழர்களும் தமிழ் தலைவர்களும் ஒன்றுபட வேண்டிய நேரமிது.

இன்று மாகாண சபைக்கு பொலிஸ் காணி அதிகாரங்கள் வழங்கப்படுதல் தொடர்பாக பேசப்படுவது தமிழர்கள் சந்தோசப்படவேண்டிய விடயம். ஆனாலும் அற்ப சலுகைகளுக்காக இதனை சில தமிழ் தலைவர்கள் எதிர்ப்பது கவலைக்குரிய விடயமாகும்.

நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பிரதி அமைச்சர் வினாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) அவர்கள் மாகாண சபைகளுக்கு பொலிஸ் காணி அதிகாரங்கள் தேவையில்லை எனவும் சிறுபிள்ளைத்தனமான விளக்கங்களையும் கொடுத்திருக்கின்றார். இவரின் இவ்வாறான செயற்பாடுகளும் கருத்துக்களும் தமிழர்களுக்கு கிடைக்க இருக்கின்ற தீர்வுகளை இல்லாமல் செய்யலாம்.

இவருடைய செயற்பாடுகள் தமிழ் மக்கள் நலன் சார்ந்ததாக இருக்கின்றதா என்றால் கேள்விக்குறிதான். இவர் புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்து வரும்போது இவர் என்ன சொன்னார்? கிழக்குக்கென்று ஒரு தலைமைத்துவம் வேண்டும். கிழக்குக்கென்று ஒரு கட்சி வேண்டும் என்று புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்து வந்தவர். பிரிந்து வந்தபோது அவரை கிழக்கு மாகாண மக்கள் அனைவரும் அவரை நம்பினார்கள். பிரிந்து வந்தபோது புலிகளின் தலைமைப்பீடத்திற்கு எதிராக கிழக்கு மக்கள் வீதியில் இறங்கினார்கள். ஆனால் அவரை நம்பிய மக்களை நட்டாற்றில் விட்டுவிட்டு தான் எதற்காக புலிகளில் இருந்து பிரிந்து வந்தாரோ அந்த நோக்கத்தை கைவிட்டு சலுகைகளுக்காக அரசுடன் இணைந்தார். அன்றுமுதல் இன்றுவரை தமிழர்களுக்கு தீர்வுத்திட்டங்கள் கிடைக்க இருக்கும் தருணத்தில் அவ்வப்போது வந்து குறுக்கிட்டுக் கொண்டிருக்கின்றார்.

மறு புறத்தில் முதலமைச்சர் அவர்கள் பல சவால்களுக்கு மத்தியில் மாகாணசபை மூலம் கிழக்கினை துரிதமான அபிவிருத்திப் பாதைக்கு இட்டுச் செல்கின்றார். வடக்கு கிழக்கில் இ்ன்றைய தேவை என்ன? யுத்தத்தால் அழிவடைந்த எமது தேசத்தை கட்டி எழுப்ப வேண்டும். எதிர்க்கட்சி ஆசனத்தில் இருந்தால் எந்த அபிவிருத்தியும் நடக்கப்போவதில்லை. அரசுடன் பேரம்பேசி அரசுக்கு நிபந்தனைகளுடன் ஆதரவு வழங்கி எமது பிரதேசத்தை அபிவிருத்தி செய்ய வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு தமிழ் அரசியல்வாதிகளுக்கும் இருக்க வேண்டும்.

அதற்காக தமிழர்களின் உரிமைகளை விட்டுக்கொடுக்கக்கூடாது. இங்கு முதலமைச்சர் அரசாங்கத்துடன் இருந்தாலும் எடுத்திருக்கும் முடிவு பாராட்டப்பட வேண்டியது. அரசுடன் இருந்தாலும் எமது மக்களின் நலனையும் கருத்தில் கொள்ள வேண்டும். முதலமைச்சர் அவர்கள் அரசுடன் இருந்தாலும் பல தடவை அரசுடன் முரண்பட்டு வந்த சந்தர்ப்பங்கள் இருக்கின்றன. மாகாணசபைகளுக்கான பொலிஸ் காணி அதிகாரங்கள் தொடர்பிலும் பல சவால்களுக்கு மத்தியிலும் குரல்கொடுப்பது நல்ல விடயமே.

தமிழர்களுக்கான தீர்வு விடயத்தில் தமக்கு வழங்கப்படும் அற்ப சலுகைகளுக்காக விலை போகாமல் ஒவ்வொரு தமிழ் தலைவர்களும் செயற்படுவது நல்லது.

read more...

Monday, 30 January 2012

கிழக்கை ஆள்வது அரசியல்வாதிகளா? அதிகாரிகளா?

அண்மையில் கிழக்கிலங்கையில் இடம்பெற்ற ஆசிரியர் இடமாற்றம் தொடர்பில் கிழக்கிலங்கை மாற்றத்துக்கான மக்கள் அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது அதனை அப்படியே தருகின்றேன்.

கிழக்குமாகாணத்தில் தற்போது பொதுவாக ஆசிரியர்கள் மத்தியில் காணப்படும் பெரும் குழப்பமான நிலை முன்னொருபோதும் இல்லாத அளவுக்கு எல்லை மீறி சென்றிருக்கின்றது. காரணம் சொல்லவே தேவையில்லை. இடமாற்றப்பிரச்சினைதான். ஆசிரியர்களுக்கான இடமாற்றமானது புள்ளித்திட்ட அடிப்படையில் வரையப்பட்டிருந்தமையானது மிகவும் சிறப்பானதொரு முடிவாகவே எல்லோராலும் நோக்கப்பட்டது. 


ஆனால் பிரச்சினை எங்கே வெடித்திருக்கிறதென்றால், கல்வித்திணைக்கள அதிகாரிகளுக்கு வேண்டப்பட்டவர்களின் இடமாற்றத்தில்தான். மாகாண கல்விப்பணிமனையில் இருந்து மட்டக்களப்பு ஆசிரியர் ஒருவருக்கு திருகோணமலை மாவட்டத்திற்கு இடமாற்றம் கிடைத்திருந்தது. ஆனால் அவர் தனக்கு தெரிந்த அதிகாரி ஒருவர் மூலமாக இடமாற்றத்தை இரத்துச்செய்துள்ளார். அதேபோன்று சில ஆசிரியர்கள்  இந்த இடமாற்றத்தை வாய்ப்பாக பயன்படுத்தி விரும்பிய இடங்களுக்கு இடமாற்றம் பெற்றுள்ளனர். விடயம் அறிந்த ஆசிரியர்களின் ஒரே புலம்பல் “ வலயக்கல்விப்பணிப்பாளர்களுக்கு வேண்டியவர்கள் விரும்பிய இடத்திற்கு இடமாற்றம் பெற்றுள்ளார்கள். ஆனால் எங்களின் நிலைதான் பரிதாபத்துக்குள்ளாகியுள்ளது” என்பதுதான். முதலமைச்சரிடம் மேன்முறையீட்டுக்கு சென்ற ஆசிரியர்களின் கோரிக்கையை தகுந்த காரணங்களால் நிறைவேற்ற மறுத்தமை பாராட்டுக்குரிய விடயமே.  

 இதில் என்ன வேடிக்கையென்றால் அவர்கள் அனைவரும் அதிகாரிகள் மூலமாக தங்களது கோரிக்கையை வென்றெடுத்துவிட்டார்கள். இந்தவிடயம் திரிபடைந்து, முதலமைச்சரால் என்னத்துக்கு இயலும்? என்று ஆசிரியர் ஒருவர் ஏளனமாக கேட்கும் நிலைமையும் ஏற்பட்டிருக்கின்றது. இது கிழக்குமாணத்திற்கு ஏற்பட்டுள்ள மிகவும் அபாயகரமான சாபக்கேட்டின் ஆரம்பமாகும். “நியாயமான முறையில் இடமாற்றங்கள் இடம்பெறவேண்டும். அதில் நான் எந்த குறுக்கீடும் செய்யமாட்டேன்” என்று கிழக்கு முதல்வர் கூறியமையையிட்டு நாம் பெருமையடைகிறோம். அதேவேளை அதிகாரிகள் மூலம் முதல்வரின் சிந்தனை சின்னாபின்னமாக்கப்படுவதையிட்டு பெரும் வேதனையடைகிறோம். இது கல்வித்திணைக்களத்தில் மட்டுமல்ல ஏனைய அனைத்து திணைக்களங்களிலும் இந்நிலைமை பரவலாக காணப்படுகிறது. 

எனவே இந்த கறைபடிந்த செயற்பாடுகளை தடுப்பதற்கு கிழக்கு முதல்வர் எப்படிப்பட்ட நடவடிக்கை எடுத்தாலும் மக்கள் மனமுவந்து ஏற்றுக்கொள்வார்கள். உண்மையில் இந்த பிரச்சினைக்கு முழுவதுமாக முற்றுப்புள்ளி வைக்கவேண்டுமென்றால் குறிப்பிட்ட அதிகாரிகளின் மனமாற்றத்தினால் மட்டுமே முடியும். ஆனால் அதற்கான  சாத்தியப்பாடு கிழக்கு புத்திஜீவிகளிடம் மிகவும் அரிதாகவே காணப்படுவதாக நாம் உணர்கிறோம். விரைவில் இதற்கான தீர்வை முதல்வர் வரையாவிட்டால், அவரது ஆதரவாளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள சலசலப்பையும் தீர்க்க முடியாமல் போகும் என்பதே திண்ணம். ஒரு நிருவாக கட்டமைப்பில்  அடிமட்டத்தில் செய்யப்படும் தவறு அதன் தலைமையே தாக்கும் என்பதை கிழக்கின் நிலைமை எடுத்தியம்புகின்றது. ஒரு சில அதிகாரிகளின் தவறு நல்ல அரசியலையும் தலைவர்களையும்  சாக்கடைக்குள் தள்ள முனைவது விபரீதத்தின் உச்சமே. “எல்லோரும் சமம்” என்கின்ற கொள்கையே நல்லாட்சியின் அடையாளம். இவ்வடையாளத்தை நிலைநிறுத்த கிழக்கு முதல்வர் என்ன செய்ப்போகின்றார் என்பதை நாம் உன்னிப்பாக அவதானித்துக்கொண்டிருப்போம்.

 எம்மக்கள் மத்தியில், மிக நீண்ட காலத்திற்கு பிற்பாடு அரசியல் அறிவுடன் நல்ல பாதையில் பயணிக்கின்ற உணர்வு ஏற்பட்டுள்ளது. இது நிரந்தரமாக இருக்கவேண்டும் என்பதே எங்களது அவாவாகும். அணைக்கட்டு பலமாக இருக்கின்றபோதும் ஏதோ ஒரு மூலையில் ஏற்படும் அரிப்பு முழு அணையையுமே அழித்துவிடும். அதிகாரிகளின் இச்செயற்பாடு அணையின் அரிப்புக்கு ஒப்பானதே. விரைவில் மாற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கையுடன்…..

மாற்றத்திற்கான மக்கள் அமைப்பு – கிழக்கிலங்கை
read more...

கிழக்கு மாகாண முதலமைச்சர் சந்திரகாந்தனின் ஐரோப்பிய விஜயம் படங்கள் இணைப்பு

கிழக்கின்  முதல்வர்  சந்திரகாந்தன் ஐரோப்பிய  விஜமொன்றை மேற்கொண்டு உள்ளார் .
சுவிஸ் வாழ் கிழக்குமாகாண புலம்பெயர் மக்களுடான சந்திப்பு சனியன்று இடம்பெற்றது .

நேற்றைய தினம் சுவிஸ்லாந்தில் பெருந்திரளான  மக்களின் மத்தியில் 
 கிழக்குமாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலை
புலிகள் கட்சியின் தலைவருமாகிய சந்திரகாந்தன் உரையாற்றினர் .
அங்கு புலம்பெயர்ந்த  மக்களின் மத்தியில் முதலமைச்சர் உரையாற்றுகையில் 
கிழக்கில் இடம்பெறும் அபிவிருத்தியும் மற்றும் கட்சியின் கொள்கைகளையும் விளக்கினார் ,
தொடந்து அங்கு சமுகமளித்திருந்த சுவிஸ் வாழ் புலம்பெயர் மக்களும் 
கல்விமான்களும் ,,புத்திஜீவிகளும் கிழக்கு மாகாண முதலமைச்சருக்கு 
பாராட்டுகளையும் ,முதலமைசரினால் மேற்க்கொள்ள படும்  சகல அபிவிருத்திக்கும் ,தமிழ் மக்கள் விடுதலைப்புகள் கட்சியின் வளர்ச்சிக்கும்   சுவிஸ் வாழ் கிழக்கு புலம் பெயர் மக்களால்  சகல பங்களிப்பையும் தருவதாகவும் உறுதியளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த பதிவில் மேலும்பல விபரங்களை எதிர்பாருங்கள்




read more...

Sunday, 29 January 2012

பம்மாத்தும் பகடமணியும்


மட்டக்களப்பில் பேச்சுத்தமிழில் பயன்படத்தப்படும் சொற்கள்தான் பம்மாத்து பகடமணி.  இச் சொற்கள் தொடர்பில் பதிவிட இருக்கின்றேன். இப்போது கூட்டமைப்பினர் செய்து வருவதுதான் பம்மாத்து பகடமணி.

கடந்த 2008ம் ஆண்டு மே மாதம் 10 ந்திகதி இடம்பெற்ற கிழக்கு மாகாண சபைக்கான தேர்தலில் அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் திரு ரணில் விக்கிரமசிங்கா அவர்களுடன் இணைந்து கிழக்கு மாகாண சபையின் நிர்வாகத்தினை தங்களது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரும் நோக்குடன் ஸ்ரீ.ல.முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ஜனாப் ரவூப் ஹக்கீம் அவர்களையும் தம்முடன் இணைத்துக்கொண்டு தோதலில் களமிறங்கியவர்கள்தான் மேற்கூறிய முக்கூட்டணியினர். ஆனால் அவர்களின் தேர்தல் வியூகம் தோல்வியைத் தழுவியதன் காரணமாக மாகாண சபையின் ஆட்சி அதிகாரம் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியினரால் கைப்பற்றப்பட்டு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் திரு சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் முதலமைச்சராக (16.05.2008ல்) பதவியேற்றார்.

இந்நிலையிலேதான் கிழக்கு மாகாணத்தின் ஓர் மாவட்டமாக அமைந்துள்ள திருகோணமலை மாவட்டத்தின் தமிழ் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவாகியிருந்தவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், சட்டமா மேதை என தம்மை அறிமுகப்படுத்திக்கொண்டிருப்பவருமான திரு சம்பந்தன் அவர்களை சந்தித்து கிழக்கு மாகாண நிர்வாகம் தொடர்பாகவும் அதற்கான அதிகாரங்களை அரசுடன் இணைந்து உரியமுறையில் பெறும் நோக்குடன் கிழக்கின் முதலமைச்சர் திரு சந்திரகாந்தன் அவாகளும் அவரது ஊடகப் பிரிவின் செயலாளரான ஜனாப் ஆசாத் மெளலானா அவர்களும் இணைந்து சம்பந்தனின் கொழும்பிலுள்ள வாசஸ்தலத்தில் சந்திப்பதற்கான அனுமதியினை அவரிடம் பெற்றுக்கொண்டு அங்கு சென்றிருந்தபோதே திரு சம்பந்தன் அவர்கள் நான் கிழக்கு மாகாணத்தையோ, அதன் முதலமைச்சரையோ ஏற்றுக்கொள்ளவில்லை என்னும் தமது கருத்தினைக்கூறி அவர்களை திருப்பி அனுப்பியிருந்தார்.
கிழக்கு மாகாண சபையினையோ, அன்றி அதன் முதலமைச்சரையோ நிராகரிப்பதற்கான காரணங்கள் எதனையும் அவரால் அன்று கூறமுடியவில்லை. அதற்கான பிரதான காரணம் அவர் ஒரு மாவட்டத்தின் வாக்காளர்களால் மட்டும் தெரிவுசெய்யப்பட்டவராகவும், திரு சந்திரகாந்தன் அவர்கள் ஒரு மாகாணத்தில் வாழ்ந்த மக்களில் பெரும்பாலானவர்களின் விருப்பிற்கேற்ப தெரிவாகியிருந்தமையே யதார்த்தமாகும். அதேவேளை சட்டத் துறையின் ஒரு சிறிய பகுதியினை மட்டுமே தாம் கற்றறிந்துள்ளமையை சம்பந்தன் தமது நடவடிக்கையின்மூலம் அன்று வெளிக்காட்டியிருந்தமை இங்கு முக்கிய விடயமாகும். கிழக்கு மாகாணத்தில் வாழ்ந்த வாக்காளர்களான (982.721) வாக்காளர்களில் (645.456 ) அதாவது (65.78%) வீதமான வாக்காளர்கள் வாக்களித்த நிலையில் அமைக்கப்பட்ட மாகாண சபையின் நிர்வாகத்தினை அங்கீகரிக்க தாம் தயாரில்லை என சம்பந்தன் கூறினார்.
குறிப்பு –இங்கு வாக்களித்த மூவினத்தையும்சார்ந்த வாக்காளர்கள் இலங்கையின் ஏனைய மாகாணங்களைப்போன்று தாம் வாழும் மாகாணமும் தனித்துவமான நிர்வாகத்தின்கீழ் செயற்படவேண்டும் என்பதனை வலியுறுத்திய நிலையிலேயே தமது வாக்குகளை வழங்கியிருந்தனர். இதுவிடயம் திரு பிரபாகரன் அவர்களின் தயவில் அரசியலுக்குள் மீண்டும் நுழைந்த திரு சம்பந்தன் அவர்களால் மட்டும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. காரணம் தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதி பிரபாகரன் மட்டுமே என பட்டமளிப்புச் செய்த அவரால் தமது வாக்குறுதியினை மீறமுடியவில்லை. அவ்வாறு மீறுவதானால் வன்னியில் அவருக்கென கொள்வனவு செய்யப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த சவப்பெட்டியினுள்ளேயே அவரது இறுதியான வாழ்க்கை முடிவுற்றிருக்கும்.
அதேவேளை தாம் முதன்முதலாக பாராளுமன்றத் தேர்தலில் களமிறங்கியபோது அவரது தொகுதியில் அவருக்கு மக்களால் அளிக்கப்பட்ட வாக்குகள் எத்தனை வீதம் என்பதனை அவர் மறந்துவிட்டார்போலும்.
அன்றைய திருமலை மாவட்ட வாக்காளர்களின் மொத்த எண்ணிக்கை (35.778) ஆகவும் மொத்தமாக வாக்களித்தவர்களின் எண்ணிக்கை (29.379) ஆக பதிவுசெய்யப்பட்டிருந்த நிலையில் திரு சம்பந்தனுக்கு அளிக்கப்பட்ட வாக்குகள் ஆக மொத்தம் (15.144 மட்டுமே) அதாவது (51.76%) வீதமான மக்கள் மட்டுமே வாக்களித்திருந்தனர். அதுவும் மேற்படி தேர்தல் தமிழீழக் கோரிக்கையினை முன்வைத்து தமிழர் விடுதலைக் கூட்டணியினரால் தேர்தலில் களமிறங்கிய நிலையிலேயே சம்பந்தனுக்கு கிடைத்த வாக்குகள் (51.76%) வீதமாக அமைந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த லட்சணத்திற்குள் (65.78%) வீதமான வாக்காளர்கள் பங்குகொண்ட கிழக்கு மாகாண சபையினை தம்மால் ஏற்றுக்கொள்ளமுடியாதென சம்பந்தன் தெரிவித்தமை சம்பந்தன் ஒரு பயங்கரவாதியா? ஜனநாயகவாதியா என்பதனை மக்களே தீர்மானிக்கலாம். புலம்பெயர் நாடுகளில் வாழும் சில புலிகளின் அடிவருடிப் பினாமிகள்தான் இன்று சம்பந்தனுக்கு ஏனைய அரசியல்வாதிகளினால் அனுபப்படும் மடல்களுக்கு பதில் கூறும் புத்திசாலிகளாக முளைவிட்டுள்ளனர்.
கிழக்கு மாகாண சபையினை நான் ஏற்பதற்கு தயாரில்லை என அன்று முழக்கமிட்ட திரு சம்பந்தன் அவாகள் கிழக்கு மாகாண அதிகாரத்தின்கீழ் நிர்வகிக்கப்படும் நகரசபைகளிலும், பிரதேச சபைகளிலும் தமது கட்சியின் வேட்பாளர்களை களமிறக்கியதன் மர்மமென்ன? இதன்மூலம் அவர் ஒரு (Money Maker) ரே தவிர மக்களின் பணியாளன் அல்ல என்பது தெளிவாகியுள்ளது. அதற்கமைய (17.03.2011ல்) கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்ற உள்ளுராட்சி தேர்தலில் திரு சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் பெற்ற வாக்குகள் ஆக மொத்தம் (54.542) வாக்ககள் மட்டுமே இதனை அங்கீகரிப்பதற்கு சம்பந்தன் தயாரா?
உள்ளுராட்சித் தேர்தல் முடிவுகள் கிழக்கு மாகாணம்
நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் (17.03.2011—23.07.2011) மாநகர சபை, நகர சபை, பிரதேச சபை கிழக்கு மாகாணத்தில் பிரதான அரசியல் கட்சிகள் எனக்கூறப்படும் கட்சியினர் பெற்ற வாக்குகளும், அவர்களுக்கான உறுப்பினர்களின் விபரங்களும் பின்வருமாறு அமைந்துள்ளது.
கிழக்கு மாகாணத்தில் மேற்குறிப்பிட்ட திகதிகளில் இடம்பெற்ற உள்ளுராட்சிச் சபைகளுக்கான தேர்தலில் (1) மாநகர சபை, (3) நகர சபைகள், (29) பிரதேச சபைகள் உள்ளடக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் கிழக்கில் மொத்தமாக வாக்களித்த மக்களின் எண்ணிக்கையான (394.293) வாக்குகளில் அங்கு தேர்தலில் களமிறங்கிய ஒவ்வொரு கட்சிகளும் பெற்ற வாக்குகளும், அவர்களுக்கான உறுப்பினர்கள் மற்றும் கைப்பற்றிய சபைகள் தொடர்பான விபரங்கள் பின்வருமாறு அமைந்துள்ளது.

கிழக்கு மாகாணத்தில் மேற்குறிப்பிட்ட திகதிகளில் இடம்பெற்ற உள்ளுராட்சிச் சபைகளுக்கான தேர்தலில் (1) மாநகர சபை, (3) நகர சபைகள், (29) பிரதேச சபைகள் உள்ளடக்கப்பட்டிருந்தன. இவற்றில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் (45) உறுப்பினர்களைப் பெற்று (1) நகர சபையினையும் (6) பிரதேச சபைகளையும் கைப்பற்றியுள்ளனர். அதேவேளை கிழக்கில் மொத்தமாக வாக்களித்த வாக்காளர்களின் எண்ணிக்கையான (394.293) வாக்குகளில் (54.542) வாக்குகளை மட்டுமே த.தே.கூட்டமைப்பினர் பெற்ற நிலையில் இத்தொகை அளிக்கப்பட்ட வாக்குகளில் (13.82%)மான வாக்குகளை மட்டுமே தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் பெற்றுள்ளனர்
மேற்படி தகவல்கள் தொடர்பில் விமர்சனங்களை முன்வைக்க முன்வரும் புலம்பெயர் புலிப் பினாமிகளிடம் அரசியல் அறிவு அல்லது முதுகெலும்பு இருக்குமாயின் எமக்கே நேரடியாக தமது விமர்சனங்களை முன்வைக்கலாம் நாம் பதிலளிக்கவும், தமது கட்டுரையுடன் பிரசுரிக்கவும் தயாராகவுள்ளோம். அ. குமாரதுரை ஆசிரியர் மஹாவலி.கொம். எமது மின்னஞ்சல் முகவரி –Kumarathurai@kumarathurai.com

அன்றும், இன்றும்

த.ம.வி.பு கட்சியுடன் பேச்சு நடத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானம் –தமிழ்மிரர்
வியாழக்கிழமை 26 ஜனவரி 2012 04:55
(யொஹான் பெரேரா)

அதிகார பகிர்வு தொடர்பில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு விரைவில் பேச்சு நடத்தவுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனுடன் அதிகார பகிர்வு தொடர்பில் பேச்சு நடத்துவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
‘முதலமைச்சர் சந்திரகாந்தனால் பேச்சு நடத்துவது தொடர்பில் விடுக்கப்ட்ட வேண்டுகோளையடுத்து தேசிய பிரச்சினை தொடர்பில் பேச்சு நடத்தி அரசியல் தீர்வு தொடர்பில் ஒர் இணக்கப்பாட்டுக்கு வர தீர்மானித்துள்ளோம்’ என சம்பந்தன் தெரிவித்தார். இப்பேச்சு தொடர்பிலான திகதி இதுவரை தீர்மானிக்கப்படவி;ல்லை. பேச்சுக்கான திகதியை தீர்மானிப்பது தொடர்பில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியினருடன் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாக அவர் குறிப்பிட்டார்.
அதிகார பகிர்வு தொடர்பில் இணக்கப்பட்டுக்கு வருவதற்கும் பேச்சு நடத்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு முதலமைச்சர் சந்திரகாந்தன் அண்மையில் அழைப்பு விடுத்திருந்தார். வடக்கு கிழக்கு இணைப்பு தவிர்ந்த காணி மற்றும் காவல்துறை அதிகாரங்களை வழங்குவது தொடர்பில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியும் தங்களுடன் ஒருமித்த கருத்துடனேயே உள்ளோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரான இரா.சம்பந்தனுக்கு கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சி.சந்திரகாந்தன் அண்மையில் கடிதம் அனுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நன்றிகள்-  www.mahaveli.com
read more...