Sunday 1 April 2012

கிழக்கு மாகாண மக்கள் யார் பின்னால்



கிழக்கு மாகாணம் மூவின மக்களும் ஒற்றுமையாக அன்று தொட்டு வாழ்ந்துவரும் ஒரு பிரதேசமாகும். இவ்வாறு ஒற்றுமையாகவும் நிம்மதியாகவும் வாழ்ந்து வரும் கிழக்கு மக்களை இன மத ரீதியாக பிரித்து குழப்பங்களை ஏற்படுத்தி அதன் ஊடாக அரசியல் நடாத்தும் தீய சக்திகள் அவ்வப்போது கிழக்கிலே வாழ்கின்ற மூவின மக்களையும் மோதவிட்டு வேடிக்கை பார்த்து இலாபம் தேடிக்கொண்டிருக்கின்றனர்.

இனங்களுக்கிடையிலான பிரிவினைகளை தோற்றுவிப்பது ஒருபுறமிருக்க கிழக்கிலே வாழ்கின்ற தமிழ் மக்களை தாழ்த்தப்பட்டவர்களாக பார்க்கின்ற யாழ்ப்பாண மேலாதிக்க சக்திகளின் கிழக்கு மக்களை ஏமாற்றுகின்ற அடக்கியாளுகின்ற கைங்கரியங்களை மிக சுலபமாக செய்வதற்கு கிழக்கிலே இருக்கின்ற மக்கள் தலைவர்கள் என்று தங்களை தாங்களே சொல்லிக்கொள்கின்ற கிழக்கு மாகாணத்தை நேசிப்பதாகச் சொல்லிக் கொள்கின்ற சிலர் கிழக்கு மாகாணத்திற்கும் கிழக்கு மக்களுக்கும் வரலாற்றுத் தரோகங்களை செய்து வருகின்றனர்.

யாழ்ப்பாண மேலாதிக்க சக்திகளானது கிழக்கு மாகாணத் தமிழர்கள் ஒற்றுமையாக இருக்கக்கூடாது ஒற்றுமையாக இருந்தால் கிழக்குத் தமிழர்கள் வலுப்பெற்று தங்களைவிட வலுவானவர்களாக தோற்றம் பெற்று விடுவார்கள் என்கின்ற நோக்கத்தின் காரணமாக கிழக்கத் தமிழர்களுக்கிடையே பிரிவினைகளை மறைமுகமாக ஏற்படுத்திவரும் பல வரலாற்றுப் பாடங்கள் எங்களுக்கு படிப்பினைகளை தந்திருக்கின்றன.

எது எப்படி இருப்பினும் கிழக்கு மக்களின் ஒற்றுமையினை சிதறடிப்பதென்பது இலகுவான விடயமல்ல. இருந்தபொதிலும் தமிழ் பற்று தமிழ் உணர்வு என்பன கிழக்குத் தமிழர்களை உணர்ச்சிவசப் படத்தக்கூடியவை. தமிழ் தேசியக் கூட்டமைப்பினரும் கிழக்கு மக்களை காலங்காலமாக ஏமாற்ற நினைப்பவர்களும் கிழக்குத் தமிழர்களை தங்கள் வசம் கட்டிப் பொடுவதற்கு பயன் படுத்திய ஆயுதம் உணர்ச்சி வார்த்தைகளும் அடய முடியாத இலக்கு நோக்கிய பயணமுமாகும்.

அனாலும் கிழக்கு மக்கள் கிழக்கு மண்மீது அதிக பற்றுறுதி கொண்டவர்கள். கிழக்கு மக்களை ஒற்றுமையாக வாழ விடாமல் பிரித்தாள நினைக்கின்ற் வடக்கு மேலாதிக்கத் தலைமைகளினதும் தழிழ் தேசியக் கூட்டமைப்பினரதும் செயற்பாடுகளுக்கும் அப்பால் கிழக்கின் தனித்தவத்திற்காக கிழக்கு மக்கள் ஒற்றுமைப்பட்டு இருக்கின்றார்கள். தமிழ் உணர்வு தமிழ் பற்று அதிகம் கொண்டவர்களாக கிழக்கு மக்கள் இருக்கின்றபோதிலும் கிழக்கின் தனித்துவம் என்று வருகின்றபோது கிழக்கு மண்ணை நேசிப்பவர்களாக ஒற்றுமைப்பட்ட வரலாறுகள் கிழக்கு மக்களை தொடர்ந்தும் ஏமாற்று முடியாது எனும் படிப்பினைகளை கிழக்கை மேலாதிக்க சிந்தனையோடு பார்க்கின்ற வடக்குத் தலைமைகளுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு போன்றவர்களுக்கு தெரியும்.

விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து கருணா பிரிந்து வந்தபோது கிழக்கு மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு வடக்கு தலைமைக்கு எதிராக செயற்பட்டதை எவராலும் மறுக்க முடியாது. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை தெய்வம்போல் தங்களின் உயிரக்கு இணையாக போற்றியவர்கள் கிழக்கு மக்கள். கிழக்கு மாகாணம் புறக்கணிக்கப் படகின்றது கிழக்கக்கான தனித்துவம் நிலை நாட்டப்பட வேண்டம் எனும் கருத்து வலுப்பெற்ற அவ் வேளையில் தங்களின் உயிரிலும் மேலாக மதிக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் உருவப்படங்களுக்கு செருப்பு மாலை போடடவர்களும் கிழக்கு மக்களே. இதற்கு காரணம் கிழக்கு மக்களுக்கு தமிழ் உணர்வுடன் தேசப் பற்றும் இரத்தத்தில் ஊறிய ஒன்றாகிவிட்டது. கிழக்கு மக்கள் கிழக்கின் தனித்துவத்தை விரும்புகின்றவர்கள். ஆனாலும் கிழக்கு மக்களின் ஒற்றுமை பிரதேசப்பற்று கிழக்கின் தனித்துவம் எனும் உதிரத்தில் ஊறிய உணர்வுகள் அவ்வப்போது பல சதிகளினாலும் உணர்ச்சி வார்த்தைகளாலும் தகர்த்தெறியப் படுகின்றன. 

இன்று கிழக்கு மக்கள் உண்மைகளையும் கிழக்கு மக்கள் மீது கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட வரலாற்றுத் துரோகங்களையும் உணர்ந்த மக்களாக கிழக்கின் தனித்தவத்தை நோக்கி ஒன்றுபட்டிருக்கின்றனர். கடந்த 18.03.2012 அன்று தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முதலாவது தேசிய மாநாடு மட்டக்களப்பு கல்லடி சிவானந்த விளையாட்டரங்கில் இடம் பெற்றது. இம் மாநாட்டின்போது கிழக்கிலே திருப்புமுனை ஏற்பட்டிருப்பதனை உணர முடிந்தது. அம் மாநாட்டிற்கு 15000 க்கு மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டனர். எவருமே இந்தளவிற்கு மக்கள் வருவார்கள் என்று கனவிலும்கூட எதிர்பார்க்கவில்லை.

மாநாட்டினை நடாத்திய தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினர்கூட இந்தளவிற்கு மக்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கவில்லை. 5000 க்கு உட்பட்ட மக்கள்தான் வருவார்கள் என தாம் எதிர் பார்த்ததாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் குறிப்பிட்டார். இம் மாநாட்டிற்கு வந்த மக்கள் தாமாகவே வந்தவர்கள் கட்டாயத்தின்பேரில் எவரும் அழைக்கப்படவில்லை. கிழக்கு மாகாணத்திலே அதிகளவு மக்கள் கலந்துகொண்ட ஒரு கட்சியின் தேசிய மாநாடு இதுவாகும்.

இம் மாநாட்டில் இவ்வளவு மக்கள் தாமாகவே கலந்துகொண்டமை கிழக்கிலே இடம்பெறுகின்ற அபிவிருத்தித் திடடங்களையும் பாரிய மாற்றங்களையும். நிம்மதியான வாழ்க்கையினையும் விரும்பும் மக்களாகவும். கிழக்கிற்கான தனித்துவத்தினையும் விரும்பும் மக்களாகவே தாமாக இம் மாநாட்டில் பங்குபற்றினர் என்பது வெளிப்படை.

இந்தளவு மக்கள் ஒரு அரசியல் கட்சியின் தேசிய மாநாட்டில் பங்குபற்றுவதென்பது கிழக்கு அம் மக்கள் குறித்த கட்சிக்கு ஒரு திடமான அங்கிகாரத்தை வழங்கி இருக்கின்றார்கள் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி கிழக்கு மாகாணசபையை பொறுப்பெடுத்ததன் பின்னர் கிழக்கிலே துரிதமாக அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கிழக்கு மாகாணசபை உருவாக்கத்தின் பின்னரே கிழக்கு மக்கள் நிம்மதியாக வாழ்கின்றனர் இதுவரை அறுபது வருடங்களாக போராடி பல இழப்புக்களையும் உயிர்களையும் பறிகொடுத்து தமிழருக்கு எந்தவிதமான உரிமையும் கிடைக்காத நிலையில். மாகாணசபை முறைமை மூலம் படிப்படியாக உரிமைகளை வென்றெடுத்துவருவதுடன் அறுபது வருடங்களாக உரிமை உரிமை என்று தமிழ்ர்களை உசுப்பேற்றி தமிழர்களின் அழிவிற்கு காரணமான தமிழ் தேசியக் கூட்டமைப்பினரையே மாகாணசபை முறைமை மூலமே தீர்வுகளை பெற்றுக்கொள்ள முடியும் சிந்திக்க வைத்த தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் கொள்கைகள் செயற்பாடுகளில் நம்பிக்கை கொண்டதன் வெளிப்பாடேயாகும்.

எவரும் எதிர்பாராத விதமாக சிறப்பாக இம் மாநாடு இடம்பெற்றது. கிழக்கு மக்களையும் கிழக்கின் அபிவிருத்தியினையும் கிழக்குக்கான தலைமைத்தவத்தினையும் பொறுத்துக்கொள்ள முடியாத  வடக்கத் மேலாதிக்கத் தலைமைகளின் ஊது குழல்;களாக செயற்பட்டுக் கொண்டிருக்கின்ற தமிழ் ஊடகங்கள் இம்மாநாடு தொடர்பாக செய்திகளை சரியாக வெளிப்படுத்தாமை தமிழ் ஊடகங்களின் மேலாதிக்க சிந்தனையையும் காட்டுகின்றது. 

ஒரு யானை பள்ளத்தில் விழுந்தாலே பிரதான செய்தியாக்ககின்ற தமிழ் ஊடகங்கள் 15000 க்கு மேற்பட்ட மக்கள் கலந்து கொண்ட ஒரு கட்சியின் தேசிய மாநாட்டினைப் பற்றி செய்திகளை வெளியிடாமை ஒட்டு மொத்த கிழக்கு மக்களும் வேதனைப்பட வேண்டிய விடயமாகும். ஊடகங்கள் இவ்வாறு தொடர்ச்சியாக செயற்பட்டு வருகின்றமை கிழக்கிற்கான தனியான ஒரு ஊடகத்தின் தேவை உணரப்பட்டிருக்கின்றது. கிழக்கின் உண்மை நிலைகளையும் உண்மைசெய்திகளையும் வெளியிடுவதற்கென்று ஒரு ஊடகம் இல்லாதநிலை தோன்றியிருக்கின்றது.

அத்தோடு சமூக நல்லுறவைப் பேணுவதிலும் ஊடகங்களின் பங்கு அளப்பெரியது. ஆனால் ஊடகங்கள் சிறிய விடயங்களை பெரிதாக காட்டி சமூகங்களிடையே பிரச்சினைகளை ஏற்படுத்திய பல சம்பவங்களை நாம் சந்தித்திருக்கின்நோம். எனவே கிழக்கிலே துரித அபிவிருத்தியும் சமூக நல்லுறவும் கட்டியெழுப்பப்பட்டு வரும் இவ்வேளையில் கிழக்கிற்கான தனி ஒரு ஊடகத்தின் தேவை உணரப்பட்டிருக்கின்றது. 

கிழக்கின் அபிவிருத்தியிலே அக்கறையோடு செயற்படுகின்ற கிழக்கு மாகாண முதலமைச்சர் அவர்களும் அரசாங்கமும் கிழக்கிலே கிழக்கிற்கான ஊடகம் ஒன்றினை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே கிழக்கு மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கின்றது.

Post Comment


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "கிழக்கு மாகாண மக்கள் யார் பின்னால்"

Post a Comment