Showing posts with label ஊடகங்கள். Show all posts
Showing posts with label ஊடகங்கள். Show all posts

Monday, 6 February 2012

இலங்கையின் சகல பாகங்களிலும் புலி ஆதரவாளர்களுக்கு மரண தண்டனை எச்சரிக்கை பெயர்களும் வெளியிடப்பட்டிருக்கின்றன

இலங்கையில் நாடு பூராகவும் ஒரு துண்டுப் பிரசுரம் வெளியிடப்பட்டள்ளது. அதில்  தாய்நாட்டின் நற்பெயருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்துகின்ற வகையிலும், நாட்டின் அபிவிருத்தியை மந்தமடையச் செய்கின்ற வகையிலும் செயற்படுகின்ற புலிகளுக்கும் அவர்களின் உள்நாட்டு , வெளிநாட்டு ஆதரவாளர்களுக்குமான மரணதண்டனையை நிறைவேற்றப்போவதாக நாம் இலங்கையர் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது. அது இறுதி எச்சரிக்கை என தெரிவித்து நாடுபூராகவும் வெளியிட்டுள்ள துண்டுப்பிரசுரத்தில் கடந்த காலத்தில் நாட்டுக்கு எதிராக செயற்பட்ட பலருக்கு தமது படையணி மரண தண்டனையை வழங்கியிருந்ததாகவும் தெரிவித்துள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் இதோ..


நாட்டைக் காக்கும் தமிழர் கூட்டமைப்பு

புலி ஆதரவாளர்களே உங்களுக்கு இறுதி எச்சரிக்கை


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விடுதலைப்புலி ஆதரவாளர்களை இறுதியாக எச்சரிக்கின்றோம்

இலங்கை மண்ணில் மாணவர் போராட்டம் மக்கள் போராட்டம் ஊடகப்போர் மக்கள் எழுச்சி என்ற பெயரில் பயங்கரவாதிகளுடன் இணைந்து நாசகார வேலைகளில் ஈடுபட்ட

தமிழ் மாணவர் ஒன்றிய உறுப்பினர்களான நிலக்சன், குணேந்திரன் மக்கள் படை உறுப்பினர்கள் (ஜனா, அனுதீபன், ரஜீவன், நிதன்) மதகுருக்கள் நாடாளுமன்ன உறுப்பினர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கும் (ரஜீவன்) ஆகியோருக்கு எம்மால் மரண தணடனைகள் வழங்கப்பட்டன 

2009 ஆம் ஆண்டில் விடுதலைப் விடுதலைப் புலிகளும் அவர்களின் முட்டாள்தனமான ஈழ விடுதலைப் போராட்டமும் முள்ளிவாய்க்காலில் புதைக்கப்பட்டு இன்று ஐக்கிய இலங்கைக்குள்இரண்டாம் இனமாக வாழ தமிழர்கள் முற்பட்டுக்கொண்டிருக்கின்றனர். இவ்வேளையில் யாழ் பல்கலைக்கழகம் மற்றும்பாடசாலைகளில் பயங்கரவாதத்தை தூண்டுவது மற்றும் புலம்பெயர் நாடுகளில் இலங்கை அரசுக்கு எதிராக செயற்படுபவர்களை நாங்கள் அவதானித்துக்கொண்டிருக்கின்றோம்.

இணையத்தளங்களில் இலங்கை அரசு சம்மந்தமாக பொய்ப்பிரசாரம் செய்வது முகப்புத்தகங்களில், டுவிட்டர்,சமூக வலைத்தளங்களில்இலங்கை அரசுக்கு எதிராக எழுதுவது, இலங்கையின் கெளரவ அமைச்சர்கள் மீதும் அவதூறு ஏற்படும் வகையில் போராட்டம் மற்றும் வழக்குகளைப் போட்டு இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் மீது அவதூறு எற்படுத்துவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அனைவரையும் இறுதியாக எச்சரிக்கின்றோம்.

குறிப்பாக - தினகரன் திவாகரன், கிரிசாந், திவாகரன் மற்றும் குருபரன் (யாழ்ப்பாணம்) அருளினியன், கஜேந்திரகுமார், குமரன் தேனுகாந்தன் (இந்தியா) தனம், கண்ணன், றஞ்சன், அங்கஜன்,சந்துரு (லண்டன்) சிவகுரு, ஆறுமுகம், நிசாந்தன் (கனடா), செல்வம், ரவி, சாச ராசன், தனு (பிரான்ஸ்)போன்றவர்களையும் இவர்களுடன் இணைந்து செயற்படம் புலி ஆதரவாளர்களையும் கடுமையாக எச்சரிக்கின்றோம். உங்களுக்குரிய தண்டனை மரண தண்டனை என்பதனை உறுதியாகக் கூறிக்கொள்ள விரும்மபுகின்றோம்.

இனப்பிரச்சினை முடிவிற்கு வந்து இரண்டு வருடங்கள் கடந்துவிட்ட நிலையில் ஐக்கிய இலங்கைக்குள் இரண்டாம் இனமாக தமிழர்கள் வாழ முற்பட்டு வருகின்றார்கள். மீண்டும் ஈழ விடுதலை என்ற பெயரில் பலம்பெயர் தமிழர்களால் மேற்கொள்ளப்படம் நடவடிக்கைகள் ஒட்டுமொத்த தமிழினத்தின் அழிவிற்கு வித்திடும் என்றும் எச்சரிக்கின்றோம்

நாட்டைக் காக்கும் தமிழர் கூட்டமைப்பு 
நாம் இலங்கையர் பாதுகாப்பு படை


read more...

Monday, 9 January 2012

கிழக்கு மாகாண வலைப்பதிவர்கள் எழுத்தாளர்கள் சந்திப்புக்கான அவசியம் என்ன?


கிழக்கு மாகாணத்தில் இருக்கின்ற வலைப்பதிவர்கள் மற்றும் எழுத்தாளர்கள் சந்திப்பு ஒன்று மட்டக்களப்பில் இடம்பெற இருக்கின்றது என்று பதிவு போட்டதும் பலரும் ஆதரவு தெரிவித்திருக்கின்றனர். இச் சந்திப்புத் தொடர்பான இன்னும்பல விடயங்களை இப் பதிவினூடாக தருகின்றேன்.

கிழக்கு மாகாணத்தில் அதிலும் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பதிவர் சந்திப்பு ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என்பது எனது ஆசை . காரணம் கிழக்கு மாகாணத்திலிருந்து பதிவு எழுதுபவர்கள் மிக மிகக் குறைவு இதற்குக் காரணம் வலைப்பதிவு தொடர்பாக பலருக்கு தெரியாது அல்லது வலைப்பதிவு எழுதுவது தொடர்பாக போதிய அறிவு இன்மை. வலைப்பதிவர் சந்திப்பொன்றை செய்கின்றபோது இன்னும் பலரை பதிவுலகத்திற்குள் உள்வாங்கலாம் என்பது என் நோக்கம்.

இன்று பலர் கிழக்கு மாகாணத்தில் வலைப்பதிவெழுதுகின்றனர். ஆனாலும் விரல்விட்டு எண்ணக்கூடிய சிலரே வெளி உலகிற்கு தெரியும்படி இருக்கின்றனர். இவ்வாறான சந்திப்புக்கள் மூலம் அவர்களை  வெளிக்கொண்டு வரமுடியும். அதிகமான பதிவர்கள் வெளி உலகிற்கு தெரியாமல் இருப்பதற்குக் காரணம் வலைப்பதிவு மற்றும் தொழிநுட்பங்கள் தொடர்பான போதிய அறிவின்மையாகும். பலருக்கு திரட்டிகளில் இணைக்கக்கூட தெரியாது. 

நான் பல புதிய பதிவர்களை உருவாக்கியிருக்கின்றேன் அவர்கள் இடைநடுவில் பதிவெழுதாமல் விடவேண்டிய நிலையில் இருக்கின்றனர். பலருக்கு எழுதவேண்டும் என்ற ஆர்வம் இருக்கின்றது. ஆனாலும் பதிவிடுதல் சார்ந்த தொழிநுட்ப அறிவு இன்மையால் அக்கறை இல்லாதவர்களாக இருக்கின்றனர்.

அடுத்து கிழக்கு மாகாணத்தில் அதிகமான எழுத்தாளர்கள் கலைஞர்கள் இருக்கின்றனர். இவர்களுக்கு தமது படைப்புக்களை இணையத்தில் பகிர்வது தொடர்பாக எந்தவித அறிவுமற்றவர்களாக பலர் இருக்கின்றனர். கிழக்கிலே இருக்கின்ற வலைப்பதிவர்களையும் எழுத்தாளர்களையும் கலைஞர்களையும் ஒன்று திரட்டி  சந்திப்பொன்றை ஏற்பாடு செய்வதன் மூலம் கிழக்கு மாகாணத்தில் இணைய எழுத்தாளர்களை அதிகரிக்க முடியும்.

கிழக்கு மாகாணம் என்ற வரையறை எதற்கு?

மட்டக்களப்பில் பதிவர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்ய வேண்டுமென்பது எனது அவாவாக இருந்தது. கிழக்கு மாகாணத்தில் வலைப்பதிவு எழுதுபவர்கள் மிகக் குறைவு பதிவர் சந்திப்புடனான கருத்தரங்கு ஒன்றினை மட்டக்களப்பில் செய்யலாமா என்று இலங்கையில் இருக்கின்ற சில பதிவர்களிடம் ஆலோசனை கேட்டு மின்னஞ்சல் அனுப்பியிருந்தேன் ஒரிரு பதிவர்கள் பதில் அனுப்பியிருந்தனர் நான் எதிர்பார்த்தவர்கள் பதில் அனுப்பவில்லை.

இலங்கை வலைப்பதிவர் குழுமத்தில் விரைவில் பதிவர் சந்திப்பொன்றை நடாத்துவது நல்லதென கேட்டிருந்தேன்  குழுமத்தில் இருப்பவர்களில் பலர் பதில் போடவில்ல. ஒரு சிலரது கருத்துக்களிலும் பதிவர் சந்திப்பு சாத்தியமற்றது என்பது போல் இருந்ததனை உணர்ந்தேன். 

உடனடியாக கிழக்கிலே இருந்து பதிவெழுதும் மற்றும் இணைய எழுத்தாளர்கள் ஒரு சிலரிடம் மட்டக்களப்பில் பதிவர் சந்திப்பினை நடாத்துவது தொடர்பாக பேசினேன் அவர்கள் பூரண ஆதரவு தெரிவித்ததுடன் கட்டாயம் செய்வதற்குரிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டனர். மட்டக்களப்பில் பதிவர் சந்திப்பை செய்வோமா என்று நான் முதலாவதாக கேட்ட மட்டக்களப்பு பதிவர் சொன்ன பதில் இதற்குமுதல் பதிவர் சந்திப்பில் எதனைச் சாதித்தீர்கள் என்பதாகும். 

அதே போன்று கிழக்கு மாகாண செய்திகளை உடனுக்குடன் தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கும் மட்டக்களப்பு செய்திகள் இணையத்தள நிர்வாக நண்பருடன் தொடர்பு கொண்டு பதிவர் சந்திப்பு தொடர்பாக பேசியபோது அவர் தனது பூரண ஆதரவினையும் ஏற்பாடுகளை செய்வதற்கு தானும் முன்வருவதாக சொன்னார். பின்னர் பிரபாவுடன் தொடர்பு கொண்டேன் அவரும் பச்சைக்கொடி காட்டினார். 

கிழக்கு மாகாணத்திலே இருக்கின்ற பதிவர்கள் எழுத்தாளர்கள் கலைஞர்கள் விபரங்களை திரட்டிவருகின்றோம். கிழக்கு மாகாணத்தில் இருக்கின்ற பதிவர்கள் எழுத்தாளர்கள் கலைஞர்கள் எம்முடன் தொடர்பு கொள்ளுங்கள்.

இச் சந்திப்பானது வெறுமனே சந்திப்பாக மாத்திரம் அமையாது. பயனுள்ள விதத்திலே வடிவமைக்கப்பட வேண்டும் என்பதில் நாம் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றோம். இச் சந்திப்பின் நோக்கம் பல புதிய பதிவர்களை பதிவுலகிற்குள் உள்வாங்கிக் கொள்வதாகும். எனவே உங்கள் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்க்கின்றோம்.

கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த பதிவர்கள் மற்றும் எழுத்தாளர்கள்  கலைஞர்கள் தொடர்பு கொள்ளுங்கள் (வெளிநாட்டில் உள்ளவர்களும்)

தொடர்புகளுக்கு :- 

info@battinews.com
shanthruslbc@gmail.com

read more...

ஊடக அதர்மம் - 01


ஊடகங்கங்கள் பக்கம்சாராது நடுநிலையாக செயற்பட வேண்டிய பொறுப்பு இருக்கின்றது. ஆனாலும் இன்று இலங்கையைப் பொறுத்தவரை ஊடகங்கள் நடுநிலையுடன் செயற்படுகின்றனவா? என்றால் அது கேள்விக்குறிதான். இது ஒரு புறமிருக்க இலங்கையின் தமிழ் ஊடகங்கள் தமிழர்களை மூட்டாள்களாக நினைத்துக்கொண்டிருப்பது வேதனைக்குரிய விடயம். இலங்கையின் சில தமிழ் ஊடகங்கள் தமிழை வளர்ப்பதாக சொல்லிக்கொண்டு தமிழை அழிக்கும் கைங்கரியங்களை செய்து கொண்டு வருகின்றனர். இத் தொடர் மூலம் இலங்கையின் தமிழ் ஊடகங்கள் மக்களை மடையர்களாக நினைத்து செயற்படும் விடயங்களை உடனுக்குடன் சுட்டிக்காட்ட இருக்கின்றேன். 


சரி... ஊடகங்கங்களை பிழை பிடிக்க உனக்கு அருகதை இருக்கிறதா? தகுதி இருக்கிறதா என்று சில மேதாவிகள் கேட்பது புரிகிறது. நான் உங்கள் போல் பெரிய மனுஷன் இல்லதான். சாதாரண ஒரு மனிதனும் பிழை பிடிக்க முடியும். இருந்தாலும் இத் தொடரில் ஊடகத்துறையின் மறு பக்கங்களையும் புரட்டிப்போட இருப்பதனால் என்னைப் பற்றியும் சில விடயங்களைக் குறிப்பிடுகிறேன். காரணம் எதிர்காலத்தில் என்னுடன் சண்டை பிடிக்க இருப்பவர்களுக்கு அந்த நேரத்தில் சொல்ல வேண்டியதை இப்போதே சொல்கின்றேன்.


2004 ஆம் ஆண்டு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் அறிவிப்பாளராக காலடி எடுத்து வைத்தவன். எனக்கென ஒரு இரசிகர் கூட்டம் இருக்கின்றது. அதனைவிட இலங்கை மற்றும் சர்வதேச ஊடகங்கள் சிலவற்றின் ஊடகவியலாளனாக இருக்கின்றேன். இத் தொடர் எழுதுவதற்கு தகுதியானவன் என்று நினைக்கின்றேன். தகுதியற்றவன் என்று சொன்னால் அப்போது நிருபிக்கின்றேன். 


என்னுடைய வானொலி நிகழ்ச்சிகளை ஒருபோதும் நான் ஒலிப்பதிவு செய்யவில்லை. இருந்தாலும் எனது மடிக்கணிணியில் திறந்த வெளியில் வைத்து ஒலிப்பதிவு செய்யப்பட்ட எனது குரலை கேளுங்கள். நான் அறிவிப்பாளனாக இருப்பதற்கு தகுதியற்றவன்தானே? சில அறிவிப்பாளர்களின் மறு பக்கங்கள்கூட புரட்டப்பட இருக்கின்றது. அப்போது நீ அறிவிப்பாளனுக்கு தகுதியானவனா என்று கேட்காமல் இருப்பதற்காக இதனைக் கேளுங்கள்.


வெளிநாடுகளில் இருந்து வீர வசனம் பேசி மக்களை மீண்டும் அழிவுப்பாதைக்கு இட்டுச்செல்ல வேண்டாம் by puthiyavidiyal
ஊடகங்களினால் தமிழ் கொலை செய்யப்பட்டுக் கொண்டிருக்கும் அதே வேளை ஒரு சில ஊடகத்துறை சார்ந்தவர்கள் சமூகத்தை சீரழித்துக் கொண்டிருக்கின்றனர். எப்படி எல்லாம் சீரழிக்கின்றனர்? ஒரு சிலர் செய்யும் செயலால் ஒட்டுமொத்த அறிவிப்பாளர்களையும் சமூகம் தவறான கண்ணோட்டத்தில் பார்க்கும் நிலை இருக்கின்றது. இவற்றை கண்டும் காணாதவர்களாக உயர் அதிகாரிகள் இருப்பதும் அவர்களை மட்டுமல்ல புதியவர்களையும் ஏன் என்பது தெரியவில்லை. 

இலங்கையின் தனியார் வானொலி தொலைக்காட்சிகள் தமிழர்களை முட்டாள்களாக நினைத்துக்கொண்டு செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன. தமிழர்களுக்கு நாம் எதனைக் கொடுத்தாலும் ஏற்றுக் கொள்வார்கள் என்ற நிலையில் இருக்கின்றது. 

தமிழ் மொழியினை இல்லாதொழித்து தமிழர்களின் கலை கலாசாரங்களையும் குழி தோண்டிப் புதைக்கும் முயற்சியில் சக்தி தொலைக்காட்சி மற்றும் சக்திவானொலியும் செயற்பட்டு வருகின்றது. இவர்கள் தங்களுக்கு தங்களே கொடுத்திருக்கும் அடைமொழி தமிழ் மொழியின் சக்தி. தமிழ் மொழியின் சக்தியாக இருந்து இவர்கள் என்ன செய்கின்றனர்? தமிழ் மொழியை கொலை செய்து வருவதுடன் இலங்கையில் தமிழ் மொழி என்றொரு மொழி இல்லாமல் தமிழ் மொழியும் ஆங்கில மொழியும் கலந்த புதிய ஒரு மொழியை கொண்டுவரவும் தமிழர்களின் கலை கலாசார பாரம்பரியங்களை இல்லாதொழிக்கவும் பாரிய வேலைத்திட்டங்களை செய்து வருகின்றனர்.

இன்று சக்தி தொலைக்காட்சி மற்றும் சக்தி வானொலியில் கடமையாற்றும் எத்தனை அறிவிப்பாளர்களுக்கு அறிவிப்பாளருக்குரிய தகுதி இருக்கின்றது??????? எங்கள் வீட்டில் சக்தி தொலைக்காட்சி போட நான் தடை விதித்துவிட்டேன்  ஆனாலும் நான் இல்லாத நேரத்தில் போடுவார்கள். சக்தி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்க்கும்போது என்னை அறியாமலே கோபம் வருவதுண்டு. அவர்கள் பயன்படுத்துவது தமிழா???? பார்ப்பவர்களை அருவருப்பூட்டக்கூடியவிதமான பேச்சுகளும் நளினங்களும். 

இலங்கையில் திறமையானவர்கள் நன்கு தமிழல் பேசக்கூடியவர்கள் இல்லையா? அவர்கள் நிகழ்ச்சிகளுக்கு பெயரே ஆங்கிலத்தில்தானே வைத்திருக்கின்றனர். அப்படி இருக்கிறது நிலை ஆனால் தமிழ் மொழியின் சக்தி எனும் அடைமொழி வேறு. சில வேளைகளில் மாலை நேரங்களில் பார்ப்பதுண்டு ஒரு அறிவிப்பாளர்  நேயர்களோடு  பேசுவார் வாய்க்குள் ஏதோ வைத்தக்கொண்டு பேசுவதுபோன்று பேசுவார் என்ன பேசுகின்றார் என்பதே புரிவதில்லை. பதது வீதமான சொற்கள்கூட தமிழல் பயன்படுத்தமாட்டார். இப்படியானவர்களை எதற்காக சேர்த்தக் கொண்டனர்? 

அடுத்தடுத்த பதிவுகளில் அலசுவோம் அதுவரை இதனையும் பாருங்கள்.


தமிழ் மொழி தமிழ் மொழியாகவே இருக்கிறதா? தமிழா நீ பேசுவது தமிழா?


நான் இப்போது அடிக்கடி கேட்கும் பாடல் ஒன்று இது மட்டக்களப்பைச் சேர்ந்த இளம் கலைஞர் ஒருவரின் படைப்பு இது.



..
read more...

Friday, 7 May 2010

ஊதுகுழலாக செயற்படும் சில தமிழ் ஊடகங்கள்

இன்று இலங்கையிலே இருக்கின்ற பல தமிழ் ஊடகங்கள் உண்மைக்கு புறம்பான பக்க சார்பான  விடயங்களை வெளியிட்டு வருகின்றன. இந்த நிலை அச்சு, இலத்திரனியல் இரு ஊடகங்களிலும் இருக்கின்றது. ஒரு ஊடக நிறுவனமோ,  ஊடகவியலாளனோ  நடுநிலையாக செயற்பட வேண்டும். ஆனால் இன்று பக்க சார்பின்றி எத்தனை ஊடக நிறுவனகள், ஊடகவியலாளர்கள் செயற்படுகின்றார்கள்?

ஒரு அரசியல் கட்சியை அல்லது ஒரு தலைவரை சார்ந்து செயட்படுகின்ற பலர் இருக்கின்றனர். இது ஊடக தர்மமல்ல. ஒரு கட்சியை அல்லது ஒரு தலைமைத்துவத்தை சார்ந்து செயற்பட வேண்டும் என்பதற்காக உண்மைகளை மறைத்து உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிடுகின்ற அல்லது உண்மைகளை வெளியிடத் தயங்குகின்ற பல ஊடகங்கள் இருக்கின்றன.

சின்ன, சின்ன விடயங்களுக்கெல்லாம் பக்கம், பக்கமாக எழுதுகின்ற, பல தடவை ஒளி, ஒலிபரப்பு செய்கின்ற சில ஊடக நிறுவனங்கள் சில முக்கிய விடயங்களை வெளியிடுவதிலே தயக்கம் காட்டுகின்றன. ஏன் இந்த நிலை?

சில தமிழ் ஊடகங்கள் பக்கம் சார்ந்து செயத்படுகின்றன என்பதனை எவராலும்  மறுக்க முடியாது. இன்று நடைபெறுகின்ற விடயங்களை ஆராய்ந்து பார்க்கின்றபோது இது புலனாகின்றது.

இன்று கிழக்கு மாகாண சபை மூலம் பல்வேறு பட்ட அபிவிருத்தித் திட்டங்கள் மேட்கொள்ளப்பட்டு  வருகின்றது. மக்களுக்கான அத்தியாவசிய சேவைகள், உதவிகள் என்று நாள்தோறும் பல்வேறுபட்ட சேவைகள் மக்கள் நலனுக்காக செய்யப்பட்டுக்கொண்டிருக்கின்றன.

இவைகளைப் பற்றி பேசாத பல ஊடகங்கள் உண்மைக்குப் புறம்பான நடைபெறாத  விடயங்களையும். பொய் பிரசாரங்களையும் மேட்கொள்வது ஏன்? மாகாண சபை மூலமாக, அல்லது முதலமைச்சரால்   மக்களின் நன்மை கருதி ஒரு வைத்திய முகாம் செய்தால் கூட அதனை மக்களுக்கு தெரியப்படுத்துவதட்கு கூட சில ஊடக நிறுவனங்கள் தயங்குவது ஏன்?

இன்று கிழக்கு மாகாணத்திலே பல்வேறுபட்ட அபிவிருத்தித் திட்டங்கள் மேட் கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த அபிவிருத்தித் திட்டங்களைக் கூட பொய்யான தகவல்களாக வெளியிடுகின்ற பல ஊடகங்கள் இருக்கின்றன, பல இணையத் தளங்கள் இருக்கின்றன.

அந்த ஊடக நிறுவனங்களிடமும், இணையத்தள உரிமையாளர்களிடமும் கேட்கின்றேன் கிழக்கு மாகாணம் அபிவிருத்தி அடைவது பிடிக்கவில்லையா? இன்று தமிழர்களுக்கு கிடைத்திருக்கின்ற ஒரேயொரு உரிமை கிழக்கு மாகாண சபை மட்டுமே. கிழக்கு மாகாண சபை மூலமாக எத்தனை அபிவிருத்தி திட்டங்கள் செய்யப்படுகின்றன என்பதனை நேரில் வந்து பார்த்துவிட்டு பேசுங்கள். உண்மைகளை மறைக்காதீர்கள்.

பல காலமாக அபிவிருத்தி இன்றி இருக்கின்ற எமது பிரதேசங்கள் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் என்ற நோக்கோடு செயட்பட்டுக்கொண்டிருக்கின்றார் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன். ஆனால் ஊடகங்கள் என்ன சொல்கின்றன உண்மைக்கு புறம்பான பொய்களை  எழுதிக் கொண்டிருக்கின்றன.

இன்று சில விடயங்களுக்கு அரசாங்கத்தோடு சேர்ந்துதான் போகவேண்டி இருக்கின்றது. அப்போதுதான் கிழக்கு மாகாணசபை மூலமாக எமது அபிலாசைகளை வென்றெடுக்க முடியும்.

அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்குகிறார்கள் என்பதற்காக ஊடகங்கள் எதனையும் எழுதிவிட முடியாது. தமிழீழம், தமிழீழம் என்று வீர வசனம் பேசிக்கொண்டிருந்த தமிழரசுக் கட்சியே இன்று அரசாங்கத்தோடு சேர்வதற்கு தயாராகிக் கொண்டிருக்கின்றார்கள்.

அன்று தொட்டு இன்றுவரை எத்தனை வட பகுதி தமிழர்கள் ஆளும் கட்சியோடு இருந்திருக்கின்றார்கள். அப்போது அவர்களை தமிழின துரோகி என்று யாராவது சொன்னார்களா? அல்லது இன்று அரசாங்கத்தோடு பேச்சுவார்த்தை நடாத்தவும் தயாராக இருக்கின்ற தமிழரசுக் கட்சியினருக்கு தமிழினத் துரோகி பட்டம் யாராவது வழங்கினார்களா?

உண்மைகளை உண்மையாக வெளிப்படுத்தவேண்டிய பொறுப்பு ஒவ்வொரு ஊடகவியலாளனுக்கும் உண்டு. அதனைவிடுத்து ஒரு கட்சி சார்ந்தோ, ஒரு தலைவர் சார்ந்தோ செயற்படுவதை தவிர்ப்பது நல்ல விடயமே.

நான் இதனை எழுதியதனால் நீங்கள் தமிழின துரோகி பட்டம் வழங்குவீர்கள். பிரதேச வாதம் பேசுகின்றான் என்பீர்கள். உண்மைகளை எழுத வேண்டும் உண்மைகளை எழுத நான் ஒருபோதும் தயங்கியவன் அல்ல.
read more...

Monday, 19 October 2009

கிழக்கை நேசிக்கும் ஊடகங்கள்.

வறட்சியில் கிழக்கு மக்கள்

இன்று கிழக்கு மாகாணத்தில் மழையின்றி மக்கள் பெரும் கஸ்ரங்களை அனுபவித்து வருகின்றனர். குளங்கள் மட்டுமல்லாமல், கிணறுகள்கூட வற்றிவிட்டன. இதனால் சில பிரதேசங்களிலே மக்கள் குடி நீரைப்பெறுவதிலே பல்வேறுபட்ட சிக்கல்களை எதிர்நோக்கி வருகின்றனர்.


அத்தோடு விவசாயிகளின் நிலை கேள்விக்குறியாகிக்கொண்டு இருக்கின்றது. அதிலும் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்திலே விவசாயத்திலே முன்னிலையில் இருக்கின்ற களுதாவளை தேத்தாத்தீவு போன்ற விவசாயக் கிராமங்களிலே நீர் தட்டுப்பாட்டினால் விவசாயிகள் பல சிரமங்களை எதிர் நோக்கி வருகின்றனர். இப்பிரதேசங்களிலே நீர் உவர் நீராக மாறிவருவது வேறு விடயம்.


கிழக்கை நேசிக்கும் ஊடகங்கள்.

அண்மைக்காலமாக மட்டக்களப்பு மாவட்டத்திலே சில வானொலி, தொலைக்காட்சிகள் போட்டி போட்டுக்கொண்டு தொடர் இசை நிகழ்சிகளை நடாத்தினார்கள். முன்னொரு காலத்திலேயே இசை நிகழ்சி என்றாலே மக்கள் பாரிய எதிர் பார்ப்புக்களோடு இருப்பார்கள். ஆனால் இந்த இசை நிகழ்சிகளை பார்க்கச் சென்று ஏமாற்றமடைந்த மக்கள் இன்று இசைக்குழுக்களையே வெறுக்குமளவில் இருக்கின்றனர்.


ஒரு இசை நிகழ்சியின் விறுவிறுப்பானது அறிவிப்பாளரின் பேச்சுத்திறனிலே தங்கி இருக்கின்றது . நானும் எனது நண்பர்களும் எங்கு இசை நிகழ்சி நடாந்தாலும் சென்று விடுவோம். சென்றால் ஆட்டம் போடாமல் வந்த நாள் இல்லை. ஒரு வானொலியின் இசை நிகழ்சிக்கு அறிவிப்புச் செய்ய வந்த அறிவிப்பாளருக்கு தமிழைவிட வேறு வார்த்தைகளே அதிகம் தெரியும் போன்று இருந்தது. ஒரு சிங்களவர் இதனைவிட நன்றாக தமிழிலே அறிவிப்புச் செய்வார் என்றார் எனது நண்பர்.


எனது கிராமத்திலே பத்துக்கு அதிகமான இசை நிகழ்சிகளை ஒரு மாதத்தில் செய்துவிட்டனர். ஒரு நாள் இரு வானொலிகள் ஒரு விளையாட்டு மைதானத்திலே ஒரே நேரத்தில் இசை நிகழ்சி நடாத்தவந்து இருவருக்குமிடையில் வாய்த தகராறு ஏறபட்டதுமுண்டு.


இன்னுமொரு வானொலி கிழக்கில் நுளம்புகளை ஒழித்தல் எனும் ஒரு நிகழ்சியினை பல இடங்களிலும் செய்தனர். நுளம்புகள் பற்றி மக்களுக்கு அறிவூட்டப்பட்டதோடு பல போட்டிகளையும் நடாத்தி நல்ல பரிசுகளையும் வழங்கினர். இப்படியான நிகழ்சிகள் வரவேற்கப்படுகின்றன.


இந்த நிறுவனங்கள் மக்களை தன் பக்கம் இழுத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்துக்குமப்பால் இம்மக்களது பிரச்சனைகளை வெளி உலகுக்கும் எடுத்துச் சொல்லுகின்ற ஊடகங்களாக அமையவேண்டும்.


இவர்கள் இசை நிகழ்சிகளை நடாத்தும்போது அந்தந்தப்பிரதேசங்களிலே இருக்கின்ற இசைக்குழுக்களைக் கொண்டு நடாத்தலாமல்லவா அப்போது அந்தந்தப்பிரதேசக் கலைஞர்கள் ஊக்கப்படுத்தப்படுவதோடு. அவர்களின் திறமைகள் வெளி உலகிற்கு கொண்டுவரப்படலாமல்லவா.



கிறுக்கல்கள்.....



அன்று உன்
இதயத்தில் எனக்கோர்
இடம் கேட்டேன்
மறுத்துவிட்டாய் - இன்று
என் இதயத்தில்
ஓரிடம் கேட்கின்றாய்
என்னால் தரமுடியவில்லை
என் இதயம் இன்று
வேறோருத்தியிடம்
இருக்கின்றது.

read more...