Monday 9 January 2012

ஊடக அதர்மம் - 01


ஊடகங்கங்கள் பக்கம்சாராது நடுநிலையாக செயற்பட வேண்டிய பொறுப்பு இருக்கின்றது. ஆனாலும் இன்று இலங்கையைப் பொறுத்தவரை ஊடகங்கள் நடுநிலையுடன் செயற்படுகின்றனவா? என்றால் அது கேள்விக்குறிதான். இது ஒரு புறமிருக்க இலங்கையின் தமிழ் ஊடகங்கள் தமிழர்களை மூட்டாள்களாக நினைத்துக்கொண்டிருப்பது வேதனைக்குரிய விடயம். இலங்கையின் சில தமிழ் ஊடகங்கள் தமிழை வளர்ப்பதாக சொல்லிக்கொண்டு தமிழை அழிக்கும் கைங்கரியங்களை செய்து கொண்டு வருகின்றனர். இத் தொடர் மூலம் இலங்கையின் தமிழ் ஊடகங்கள் மக்களை மடையர்களாக நினைத்து செயற்படும் விடயங்களை உடனுக்குடன் சுட்டிக்காட்ட இருக்கின்றேன். 


சரி... ஊடகங்கங்களை பிழை பிடிக்க உனக்கு அருகதை இருக்கிறதா? தகுதி இருக்கிறதா என்று சில மேதாவிகள் கேட்பது புரிகிறது. நான் உங்கள் போல் பெரிய மனுஷன் இல்லதான். சாதாரண ஒரு மனிதனும் பிழை பிடிக்க முடியும். இருந்தாலும் இத் தொடரில் ஊடகத்துறையின் மறு பக்கங்களையும் புரட்டிப்போட இருப்பதனால் என்னைப் பற்றியும் சில விடயங்களைக் குறிப்பிடுகிறேன். காரணம் எதிர்காலத்தில் என்னுடன் சண்டை பிடிக்க இருப்பவர்களுக்கு அந்த நேரத்தில் சொல்ல வேண்டியதை இப்போதே சொல்கின்றேன்.


2004 ஆம் ஆண்டு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் அறிவிப்பாளராக காலடி எடுத்து வைத்தவன். எனக்கென ஒரு இரசிகர் கூட்டம் இருக்கின்றது. அதனைவிட இலங்கை மற்றும் சர்வதேச ஊடகங்கள் சிலவற்றின் ஊடகவியலாளனாக இருக்கின்றேன். இத் தொடர் எழுதுவதற்கு தகுதியானவன் என்று நினைக்கின்றேன். தகுதியற்றவன் என்று சொன்னால் அப்போது நிருபிக்கின்றேன். 


என்னுடைய வானொலி நிகழ்ச்சிகளை ஒருபோதும் நான் ஒலிப்பதிவு செய்யவில்லை. இருந்தாலும் எனது மடிக்கணிணியில் திறந்த வெளியில் வைத்து ஒலிப்பதிவு செய்யப்பட்ட எனது குரலை கேளுங்கள். நான் அறிவிப்பாளனாக இருப்பதற்கு தகுதியற்றவன்தானே? சில அறிவிப்பாளர்களின் மறு பக்கங்கள்கூட புரட்டப்பட இருக்கின்றது. அப்போது நீ அறிவிப்பாளனுக்கு தகுதியானவனா என்று கேட்காமல் இருப்பதற்காக இதனைக் கேளுங்கள்.


வெளிநாடுகளில் இருந்து வீர வசனம் பேசி மக்களை மீண்டும் அழிவுப்பாதைக்கு இட்டுச்செல்ல வேண்டாம் by puthiyavidiyal
ஊடகங்களினால் தமிழ் கொலை செய்யப்பட்டுக் கொண்டிருக்கும் அதே வேளை ஒரு சில ஊடகத்துறை சார்ந்தவர்கள் சமூகத்தை சீரழித்துக் கொண்டிருக்கின்றனர். எப்படி எல்லாம் சீரழிக்கின்றனர்? ஒரு சிலர் செய்யும் செயலால் ஒட்டுமொத்த அறிவிப்பாளர்களையும் சமூகம் தவறான கண்ணோட்டத்தில் பார்க்கும் நிலை இருக்கின்றது. இவற்றை கண்டும் காணாதவர்களாக உயர் அதிகாரிகள் இருப்பதும் அவர்களை மட்டுமல்ல புதியவர்களையும் ஏன் என்பது தெரியவில்லை. 

இலங்கையின் தனியார் வானொலி தொலைக்காட்சிகள் தமிழர்களை முட்டாள்களாக நினைத்துக்கொண்டு செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன. தமிழர்களுக்கு நாம் எதனைக் கொடுத்தாலும் ஏற்றுக் கொள்வார்கள் என்ற நிலையில் இருக்கின்றது. 

தமிழ் மொழியினை இல்லாதொழித்து தமிழர்களின் கலை கலாசாரங்களையும் குழி தோண்டிப் புதைக்கும் முயற்சியில் சக்தி தொலைக்காட்சி மற்றும் சக்திவானொலியும் செயற்பட்டு வருகின்றது. இவர்கள் தங்களுக்கு தங்களே கொடுத்திருக்கும் அடைமொழி தமிழ் மொழியின் சக்தி. தமிழ் மொழியின் சக்தியாக இருந்து இவர்கள் என்ன செய்கின்றனர்? தமிழ் மொழியை கொலை செய்து வருவதுடன் இலங்கையில் தமிழ் மொழி என்றொரு மொழி இல்லாமல் தமிழ் மொழியும் ஆங்கில மொழியும் கலந்த புதிய ஒரு மொழியை கொண்டுவரவும் தமிழர்களின் கலை கலாசார பாரம்பரியங்களை இல்லாதொழிக்கவும் பாரிய வேலைத்திட்டங்களை செய்து வருகின்றனர்.

இன்று சக்தி தொலைக்காட்சி மற்றும் சக்தி வானொலியில் கடமையாற்றும் எத்தனை அறிவிப்பாளர்களுக்கு அறிவிப்பாளருக்குரிய தகுதி இருக்கின்றது??????? எங்கள் வீட்டில் சக்தி தொலைக்காட்சி போட நான் தடை விதித்துவிட்டேன்  ஆனாலும் நான் இல்லாத நேரத்தில் போடுவார்கள். சக்தி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்க்கும்போது என்னை அறியாமலே கோபம் வருவதுண்டு. அவர்கள் பயன்படுத்துவது தமிழா???? பார்ப்பவர்களை அருவருப்பூட்டக்கூடியவிதமான பேச்சுகளும் நளினங்களும். 

இலங்கையில் திறமையானவர்கள் நன்கு தமிழல் பேசக்கூடியவர்கள் இல்லையா? அவர்கள் நிகழ்ச்சிகளுக்கு பெயரே ஆங்கிலத்தில்தானே வைத்திருக்கின்றனர். அப்படி இருக்கிறது நிலை ஆனால் தமிழ் மொழியின் சக்தி எனும் அடைமொழி வேறு. சில வேளைகளில் மாலை நேரங்களில் பார்ப்பதுண்டு ஒரு அறிவிப்பாளர்  நேயர்களோடு  பேசுவார் வாய்க்குள் ஏதோ வைத்தக்கொண்டு பேசுவதுபோன்று பேசுவார் என்ன பேசுகின்றார் என்பதே புரிவதில்லை. பதது வீதமான சொற்கள்கூட தமிழல் பயன்படுத்தமாட்டார். இப்படியானவர்களை எதற்காக சேர்த்தக் கொண்டனர்? 

அடுத்தடுத்த பதிவுகளில் அலசுவோம் அதுவரை இதனையும் பாருங்கள்.


தமிழ் மொழி தமிழ் மொழியாகவே இருக்கிறதா? தமிழா நீ பேசுவது தமிழா?


நான் இப்போது அடிக்கடி கேட்கும் பாடல் ஒன்று இது மட்டக்களப்பைச் சேர்ந்த இளம் கலைஞர் ஒருவரின் படைப்பு இது.



..

Post Comment


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "ஊடக அதர்மம் - 01"

Post a Comment