மட்டக்களப்பு ஆரையம்பதி RKM பாடசாலையில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்படடு தங்கியிருந்த மக்களுக்காக ஒதுக்கப்பட்ட நிவாரணப் பொருட்கள் மக்களுக்கு வழங்கப்படாமல் பதுக்கிவைக்கப்பட்டிருந்ததை அறிந்து ஒன்று கூடிய பொதுமக்கள் அவசரபொலிசிற்கு அறிவித்ததையடுத்து அங்கு விரைந்த காத்தான்குடி பொலிசார் ஒரு தொகைப் பொருட்களைக் கைப்பற்றினர். இங்கு கருத்துத் தெரிவித்த பொதுமக்கள் சுனாமியனர்த்தத்தின்போதும் இவ்வாறான முறைகேடுகள் தங்களால் கண்டறியப்பட்டபோதும் சரியான நடவடிக்கைகள் உரிய அதிகாரிகளால் எடுக்கப்படவில்லை அதனாலேயே மென்மேலும் இவ்வாறான நடவடிக்கைகள் தொடர்கின்றன. எனவே இதற்குத் தகுந்த நடவடிக்கைகள் உரிய அதிகாரிகளால் கட்டாயம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றனர்.
Post Comment
0 comments: on "வெள்ள நிவாரணப் பொருட்களை பதுக்கிய கும்பல் பொலிசாரின் வலையில்"
Post a Comment