கொம்புமுறி விளையாடலாம் வாங்க.. பகுதி - 01
கொம்புமுறி விளையாடலாம் வாங்க.. பகுதி 02
1897ம் ஆண்டு ஒப்பந்தத்தில் முண்டந்திருகி கிடுகி கட்டிக்கொள்வது பற்றியும் சுள்ளிக் கொம்பு கட்டிக் கொள்வது பற்றியும் வசந்தன் கூத்து ஆடிக் கொள்வது தேர்க்கல்யாணத்துக்கு கப்பல் யானை கட்டிக்கொள்வது பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் கொம்பு வெற்றியிலும் தேர் அழுக்கின்ற தினத்திலும் வெடி வாணம் கொழுத்திக் கொள்ளலாம். தேரிழுத்து 15 நாட்களுக்குள் அம்மன் எழுந்தருளப்பண்ணி பொங்கிப்போட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கோம்பு முறி விழையாட்டு வன்னிமையின் அனுமதி பெற்று விதானைமார் கடுக்கண்டவர்களின் உத்தரவாதத்துடன் எழுத்து மூலமான உடன்படிக்கையின்படி நடைபெற்றுள்ளது. வேற்றியீட்டிபோர் தோல்வியுற்றோரின் மனித உரிமைகளை மதித்து மானஈனம் ஏற்படாத வகையில் வெற்றி கொண்டாட வேண்டும். ஏந்த வாரத்தினராவது கொம்புமுறி விழையாட்டை இடை நடுவில் குழப்பித் தடை பண்ணினால் மற்றைய வாரத்திற்கு நட்டஈடு கட்டுதல் வேண்டும். பேரியவர்களோ சிறு பிள்ளைகளோ எவராயினும் சரி ஒழுங்கு முறையாக நடந்து கொள்ளத் தவறினால் அந்தந்த வாரத்துக்குரியவர்கள் குற்றவாளியாகக் கருதப்படுவர்.
தத்தமது வாரத்துக்குரிய மக்கள் அனைவரையும் கட்டுப்படுத்தும் ஆற்றலும் ஆளுமையும் செல்வாக்கும் நிறைந்தவர்களே கடுக்கண்டவர் என்ற பெயர் பெற்றனர். ஊர்ப் பெரியார் என்றும் ஊர்ப்போடி என்றும் இவர்கள் குறிப்பிடப்பட்டிருக்கின்றனர்.
களுதாவளையில் இப்பொழுதும் கடுக்கண்டவர் எனும் கௌரவ உத்தியோகம் இன்றும் நிலைத்துள்ளது. இப்பொழுது களுதாவளையில் கோவில் உரிமை முறையில் ஆறு குடும்பங்கள் நிருவாகம் நடாத்துகின்றன. குடும்பம் என்பதனை அதிகமாக குடி என்றே சொல்கின்றனர். ஓவ்வொரு குடும்பத்துக்கும் ஒவ்வொருவர் வண்ணக்கர் எனும் பெயரில் கௌரவ உத்தியோகம் பார்த்து வருகின்றனர்.
கோவிற் திருவிழா பூசை முதலியவற்றுக்கு அந்தந்த குடும்பத்தின் வண்ணக்கரே பொறுப்பு. வண்ணக்கரைப் போன்றே ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒவ்வொரு கடுக்கண்டவர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். கோவில் விடயங்களில் தமது குடும்ப வண்ணக்கரின் உதவியாளர் போன்றும் ஊர்க்கடமைகளில் தலைமை வகித்தும் இவர்கள் செயலாற்றுகின்றனர்.
ஊர்க் கடமைகள் எனும்போது மரணவீடு புதுமனை புகுதல் பூப்பூ நீராட்டுவிழா பிறந்தநாள் வழா என்பனவற்றில் நடைபெறவேண்டிய சில ஒழுங்குகளாகும். அந்நாளின் வழக்கத்தினையும் மரபினையும் சம்பிரதாயத்தினையும் பேணிப்பாதுகாத்து கடுக்கண்டவர் பதவி களுதாவளையில் இன்றும் நிலைத்துள்ளது.
கோம்புமுறி விழையாட்டு பயபக்தியுடன் கூடிய கலை கலாசாரம் சம்பந்தப்பட்ட நிகழ்வு விக்கினங்கள் தீர்க்கும் விநாயகப் பெருமானையும் கற்புக் கனலாம் கண்ணகையினையும் பணிந்து போர்த் தேங்காய் அடித்தலுடன் கொம்புமுறி விழையாட்டு ஆரம்பமாகும்.
பொது மக்கள் அனைவரும் ஒன்று கூடுவதற்கு வசதியான ஊருக்கு மத்தியான இடத்திலேயே கொம்புமுறி விழையாட்டு இடம்பெறும். களுதாவளையில் இராமகிரு~;ண வித்தியாலயமும் பள்ளியங்கட்டில் என்றும் கொம்புச்சந்தி அம்மன் என்றும் சொல்லப்படுகின்ற அம்மன் ஆலயமும் அமைந்துள்ள இடம் முன்னர் நிழல்தரு பெரு மரங்கள் நிறைந்த ஒரு இடமாகவும் வசதியான இடமாகவும் ஊருக்கு மத்தியில் இருப்பதனாலும் இவ்விடத்திலே தேர்ப்புரைக்கட்டி தேரிழுத்து கொம்பு முறித்து விழையாடினர். முடிவில் பள்ளியங்கட்டிலில் கண்ணகையம்மனை எழுந்தருளப்பண்ணி பொங்கல் திருக்குளிர்த்தி என்பனவும் நடாத்தினர்.
புள்ளியங்கட்டில் என்பது கோவில் அமைப்புடையது. எனினும் இங்கே மூல விக்கிரகங்கமோ எழுந்தருளி விக்கிரகமோ இல்லை. சுக்தி பூசை வழிபாட்டுக்குரிய இடமாக இது கருதப்படுகின்றது. களுதாவளைப் பிள்ளையார் ஆலயத்துக்கோ அல்லது களுதாவளை திருநீற்றுக்கேணி சிவசக்தி ஸ்ரீ முருகன் ஆலயத்துக்கோ காவடி வேலாயுதம் முதலிய நேர்கடன்களை நிறைவேற்றுவோர் இங்கிருந்துதான் எடுத்துச் செல்கின்றனர்.
இவ்விடம் கொம்புச் சந்தி எனும் பெயரினாலேயே அழைக்கப்படுகின்றது. கோம்புமுறி விழையாட்டு இங்கே இடம்பெற்றமையினாலேயே இப்பெயர் வரக் காரணமாயிற்று. கொம்புமுறி கண்ணகையம்மனுக்குரியது. தேர்க்கல்யாணம் நடாத்தி முடிந்தபின்பு அம்மனை எழுந்தருளப்பண்ணி பொங்கல் நடாத்த வேண்டும் என்பது கொம்புமுறி விழையாட்டுக்குரிய உடன்படிக்கையின் ஒரு சரத்து. இவ்விடத்திலே செட்டிபாளையம் கண்ணகையம்மன் களுதாவளை கோம்புமுறி விழையாட்டுடன் சம்பந்தப்படுகின்றார்.
தோடர்ந்து விளையாடலாம்….
0 comments: on "கொம்புமுறி விளையாடலாம் வாங்க.. பகுதி 03"
Post a Comment