Showing posts with label இருக்கிறம். Show all posts
Showing posts with label இருக்கிறம். Show all posts

Thursday, 5 November 2009

எல்லோராலும் அவதானிக்கப்படும் இலங்கைப் பதிவர்கள்

கடந்த இரண்டாம் திகதி இருக்கிறம் சஞ்சிகையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற வலைப்பதிவர்களுக்கும், அச்சு, இலத்திரனியல் ஊடகவியலாளர்களுக்குமிடயிலான சந்திப்பினைப் பற்றி பலரும் பதிவிட்டுவிட்டார்கள் நான் இன்றுதான் மட்டக்களப்புக்கு வந்து சேர்ந்திருக்கின்றேன்.



இன்று விவாதத்துக்குள்ளாகி இருக்கின்ற இந்தச் சந்திப்பானது, பதிவர் சந்திப்பு அல்ல இருக்கிறம் சஞ்சிகை ஏற்பாடு செய்திருக்கின்ற பதிவர்களுக்கும் அச்சு இலத்திரனியல் ஊடகவியலாலருக்குமிடயிலா சந்திப்பு என்றுதான் வந்தி தெளிவாகப் பதிவிட்டு இருந்தார். நானும் அவ்வாறே பதிவிட்டிருக்கின்றேன். பலரும் புரிந்துகொண்ட விதம் வேறாகிவிட்டது.



வந்தி என்னோடு தொலைபேசியில் பேசும்போது இது ஒரு ஒன்றுகூடலாகத்தான் அமைய இருக்கின்றது என்ற விபரங்களையும் சொல்லி இருந்தார்.

இருந்தாலும் எனக்கு எதிர்பார்ப்புக்கள் அதிகமாகவே இருந்தன. காரணம் நான் எமது முதலாவது வலைப்பதிவர் சந்திப்புக்கு போகாததுதான். நான் இதுவரை சந்திக்காத எனது வலையுலக நண்பர்களை சந்திக்கப்போகின்றேனே என்ற சந்தோசம் ஒரு பக்கம்.

எப்போ அந்த 3 மணி வருதில்லையே என்ற எதிர்பார்ப்புவேறு. அடிக்கடி வந்தி, மற்றும் சதிஷ் இருவருக்கும் தொலைபேசியில் அழைப்பெடுத்து எத்தனை மணிக்கு வருகிறீர்கள் என்று கேட்டுக்கொள்வேன். நான் இரண்டு மணிக்கு முன்னரே போய்விட்டேன். நான்தான் முதலில் சென்ற வலைப்பதிவர் என்று நினைக்கின்றேன்.

ஒருசில பதிவர்கள் வர ஆரம்பித்துவிட்டனர். அப்போது ஒரு பதிவரிடம் நீங்கள்தானே யோகா என்று கேட்டேன். அவர் நான் இல்லை என்று பக்கத்திலே இருந்தவரைக் காட்டினார். யோகாவின் புகைப்படத்துக்கும் நேரில் பார்ப்பதுக்கும் நிறையவே வித்தியாசம் இருந்தமைதான் காரணம். யோகா மட்டுமல்ல என்னும் இருக்கிறார்கள் பலர்.

என்னை நான் அறிமுகப்படுத்தியபோது அவனா நீ, நீயா அவன் என்ற கேள்விக்குறிகள், ஆச்சரியக் குறிகள் என்று வர ஆரம்பித்துவிட்டன.

பதிவுகளைப் பார்த்து ஒவ்வொருவரும் எப்படி, எப்படி இருப்பார்கள் என்று நான் கற்பனை பண்ணி இருந்ததற்கும் நேரில் பார்த்தபோது அந்தப் பதிவுக்கு சொந்தக்காரர் இவரா என்று ஆச்சரியப்பட வைத்தது.


நான் எப்போதும் வந்தி என்றுதான் சொல்வேன். இப்போ வந்தி அண்ணா என்று சொல்ல நினைத்திருக்கின்றேன். எல்லோரும் வந்தியை (............) என்று சொல்வார்கள் நான் அப்படிச் சொல்லமாட்டேன். கனககோபி வயசில தம்பிதான் ஆனா உருவத்தைப் பார்த்தா தாத்தா என்று சொல்ல தோன்றுது. சுபாங்கன் எல்லோருக்கும் தம்பியாக இருக்கலாம்.

பல நண்பர்களை நேரில் சந்தித்து பேசிய சந்தோசம். மற்றும்படி எல்லோருமே நடந்தவிடயங்களை பதிவிட்டு விவாதித்தும் விட்டனர் நானும் அவற்றை பேசுவது பொருத்தமற்றது.

இந்த ஒனறுகூடலின்போதும், அதன் பின்னரும் இடம்பெறுகின்ற கருத்து மோதல்களின் பின்னர் எனக்குள் எழுந்த சந்தேகங்களை உங்களிடம் முன்வைக்கின்றேன்.

ஊடகவியலாலர்களையும், வலைப்பதிவர்களையும் இணைக்கும் ஒரு சந்திப்பாக சிலர் குறிப்பிடுகின்றனர். ஊடகவியலாளர்கள் வேறு வலைப்பதிவர்கள்வேறா? (பல வலைப்பதிவர்கள் ஊடகவியலாளர்கள் என்பது வேறு விடயம்) வலைப்பதிவர்கள் ஊடகவியலாளர்களுக்குள் அடக்கமுடியாதா?


நாம் அச்சு, இலத்திரனியல் ஊடகமென்று சொல்கின்றோம். இணையம், ஊடகம் இல்லையா? வலைப்பதிவு ஊடகமில்லையா? நாம் ஏன் வலைப்பதிவர்களை ஊடகங்களிலிருந்து தனியாக்க நினைக்கின்றோம். இங்கே ஊடகம் என்பதன் வரையறை என்ன?

இன்று இலங்கை வலைப்பதிவர்களை இலங்கையில் மட்டுமல்ல பலரும் கவனித்துக்கொண்டிருக்கின்றனர் என்பது இந்த ஒன்றுகூடல்மூலம் புலனாகின்றது எமது ஒவ்வொரு நகர்வுகளையும் பலர் கவனித்துக்கொண்டிருக்கின்றனர்.

விரைவிலே எமது இரண்டாவது பதிவர் சந்திப்பு இடம்பெறவேண்டும் என்பதே எனது அவா எப்போ, எங்கே அடுத்த சந்திப்பு என்பதே பலரது கேள்வியும். என்னைப் பொறுத்தவரை அதிகமான பதிவர்கள் கொழும்பிலே இருப்பதால் கொழும்பிலே ஏற்பாடு செய்வது நல்லது. நான் எங்கே ஏற்பாடு செய்தாலும் வருவதற்கும் தயார்.

சில நண்பர்கள் அடுத்த சந்திப்புக்கான நடவடிக்கையிலே இறங்கியிருப்பதாக அறியமுடிகின்றது அவர்களோடு கைகோர்ப்போம்.
read more...

Sunday, 1 November 2009

எங்கள் சந்திப்பு நேரடி ஒலி, ஒளிபரப்பு.... பார்க்க மறந்திடாதிங்க.

இருக்கிறம் சஞ்சிகை ஏற்பாடு செய்திருக்கின்ற வலைப்பதிவர்களுக்கும், அச்சு, இலத்திரனியல் ஊடகங்களுக்குமிடையிலான சந்திப்பு நாளை பிற்பகல் மூன்று மணிக்கு இடம்பெற இருப்பது அனைவரும் அறிந்ததே.



இந்தச் சந்திப்பானது நேரடியாக ஒலி, ஒளிபரப்புச் செய்யப்பட இருக்கின்றன. இதன் மூலம் பார்வையாளர்களும் தமது கருத்துக்களை பரிமாறிக்கொள்ள முடியும்.


நேரடி ஒளிபரப்புக்கான சுட்டி இதோ




இருக்கிறம் அலுவலகத்துக்கு வருவதற்கான வரைபடம்


read more...

Saturday, 31 October 2009

எவரும் மறந்திடவேண்டாம்.


என்ன நண்பர்களே இருக்கிறம் சஞ்சிகையின் அச்சு, இலத்திரனியல் ஊடகவியலாளர்களுக்குமிடையிலான சந்திப்புக்கு வருவதற்கு தயாராகிவிட்டீர்களா? நாட்களை எண்ணிக்கொண்டிருந்த நான் இப்போது மணித்தியாலங்களை எண்ணிக்கொண்டு இருக்கின்றேன்.

முதலாவது பதிவர் சந்திப்புக்கு போகவில்லையே என்ற கவலை இன்னும் போகவில்லை அதுதான் இந்த எதிர்பார்ப்பு. இந்தச் சந்திப்பிலே வலைப்பதிவினூடாக கருத்துக்களை பரிமாறிக்கொண்ட நண்பர்களை நேரடியாக சந்திக்கப்போகின்றேனே என்ற சந்தோசத்தில் இருக்கின்றேன்.

இருக்கிறம் நிர்வாகத்தால் அனுப்பப்பட்ட மின்னஞ்சலிலே சில விடயங்களும், இருக்கிறம் சஞ்சிகை நிறுவனத்தைச் சென்றடைவதற்கான வரைபடமும் அனுப்பப்பட்டிருக்கின்றன. அந்த மின்னஞ்சலிலே குறிப்பிடப்பட்டிருக்கின்ற விடயங்களையும், இருக்கிறம் சஞ்சிகை நிறுவனத்தை சென்றடைவதற்கான வரைபடத்தினையும் தருகின்றேன்.

இருக்கிறம் சஞ்சிகையின் ஏற்பாட்டில் நடைபெறவிருக்கும் அச்சுவலைச் சந்திப்புக்கு தமது வருகையை உறுதிப்படுத்திய வலைப்பதிவர்களுக்கு எமது நன்றிகள். வருகையை உறுதிப்படுத்திய அனைவருக்கும் அழைப்பிதழ்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. அழைப்பிதழ் கிடைக்காதவர்கள் எம்முடன் தொடர்பு கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள். மேலும் இருக்கிறம் அலுவலகத்துக்கு வருவதற்கான வரைவுப்படமொன்றை இங்கே தந்திருக் கின்றோம். இதில் குறிப்பிடப்பட்டுள்ள இலக்க பஸ்களில் வந்து சேரலாம்.


முக்கிய குறிப்பு: இரவு 10 மணியுடன் பாதுகாப்பு காரணங்களை முன்னிட்டு பொளத்தாலோக மாவத்தையின் வீதி மூடப்படுவதால் மாலை 3 மணியிலி ருந்து இரவு 8 மணிவரையுமே எமது நிகழ்ச்சிக்கான ஒழுங்கு வரையறுக்கப்பட்டுள்ளது என்பதையும். உங்களுக்கான போக்குவரத்து ஒழுங்குகளை நீங்களே மேற்கொள்ள வேண்டுமென்பதையும் அறியத் தருகின்றோம்.




மேலதிக விபரங்களுக்கு.

"IRUKIRAM"
Ego Publication House (Pvt) Ltd
03, Torington Avenue, Colombo -07
T.P - 0113150836
Fax : 011 2585190
Email : irukiram@gmail.com
Website: www.irukkiram.tk

சரி எல்லோரும் மறந்திடாம வந்திடுங்க... நல்ல பல விடயங்கள் இச் சந்திப்பிலே இடம்பெற இருப்பதாக அறியக்கூடியதாக இருக்கின்றது.
read more...

Monday, 26 October 2009

மீண்டும் சந்திப்போம், சிந்திப்போம்


இருக்கிறம் சஞ்சிகையின் ஏற்பாட்டில் எதிர் வரும் நவம்பர் 2ந்திகதி திங்கட்கிழமை மாலை 3 மணிக்கு வலைப் பதிவர்களுக்கும் அச்சு, இலத்திரனியல் ஊடகங்களுக்கும் இடையிலான சந்திப்பு இடம்பெற இருக்கின்றது.



இஷ சந்திப்பில் கலந்துகொள்ள விரும்புகின்றவர்கள் இருக்கிறம் சஞ்சிகையின் இணை ஆசிரியர் திரு. சஞ்சீத் அவர்களை எதிர்வரும் புதன் கிழமைக்கு முன்னர் தொடர்புகொண்டு தமது வருகையினை உறுதிப்படுத்திக்கொள்ளவும்.




சந்திப்பு நிகழும் இடம் இருக்கிறம் அலுவலகம், இல 3, டொரிங்டன் அவெனியூ , கொழும்பு 7. (ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்திற்க்கு முன்னால் உள்ள வீதி).


மேலதிக விபரங்களுக்கு :திரு. சஞ்சீத்

தொலைபேசி: 0113150836

மின்னஞ்சல் : irukiram@gmail.com

சந்திப்போம், சிந்திப்போம்
read more...