Thursday 5 November 2009

எல்லோராலும் அவதானிக்கப்படும் இலங்கைப் பதிவர்கள்

கடந்த இரண்டாம் திகதி இருக்கிறம் சஞ்சிகையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற வலைப்பதிவர்களுக்கும், அச்சு, இலத்திரனியல் ஊடகவியலாளர்களுக்குமிடயிலான சந்திப்பினைப் பற்றி பலரும் பதிவிட்டுவிட்டார்கள் நான் இன்றுதான் மட்டக்களப்புக்கு வந்து சேர்ந்திருக்கின்றேன்.



இன்று விவாதத்துக்குள்ளாகி இருக்கின்ற இந்தச் சந்திப்பானது, பதிவர் சந்திப்பு அல்ல இருக்கிறம் சஞ்சிகை ஏற்பாடு செய்திருக்கின்ற பதிவர்களுக்கும் அச்சு இலத்திரனியல் ஊடகவியலாலருக்குமிடயிலா சந்திப்பு என்றுதான் வந்தி தெளிவாகப் பதிவிட்டு இருந்தார். நானும் அவ்வாறே பதிவிட்டிருக்கின்றேன். பலரும் புரிந்துகொண்ட விதம் வேறாகிவிட்டது.



வந்தி என்னோடு தொலைபேசியில் பேசும்போது இது ஒரு ஒன்றுகூடலாகத்தான் அமைய இருக்கின்றது என்ற விபரங்களையும் சொல்லி இருந்தார்.

இருந்தாலும் எனக்கு எதிர்பார்ப்புக்கள் அதிகமாகவே இருந்தன. காரணம் நான் எமது முதலாவது வலைப்பதிவர் சந்திப்புக்கு போகாததுதான். நான் இதுவரை சந்திக்காத எனது வலையுலக நண்பர்களை சந்திக்கப்போகின்றேனே என்ற சந்தோசம் ஒரு பக்கம்.

எப்போ அந்த 3 மணி வருதில்லையே என்ற எதிர்பார்ப்புவேறு. அடிக்கடி வந்தி, மற்றும் சதிஷ் இருவருக்கும் தொலைபேசியில் அழைப்பெடுத்து எத்தனை மணிக்கு வருகிறீர்கள் என்று கேட்டுக்கொள்வேன். நான் இரண்டு மணிக்கு முன்னரே போய்விட்டேன். நான்தான் முதலில் சென்ற வலைப்பதிவர் என்று நினைக்கின்றேன்.

ஒருசில பதிவர்கள் வர ஆரம்பித்துவிட்டனர். அப்போது ஒரு பதிவரிடம் நீங்கள்தானே யோகா என்று கேட்டேன். அவர் நான் இல்லை என்று பக்கத்திலே இருந்தவரைக் காட்டினார். யோகாவின் புகைப்படத்துக்கும் நேரில் பார்ப்பதுக்கும் நிறையவே வித்தியாசம் இருந்தமைதான் காரணம். யோகா மட்டுமல்ல என்னும் இருக்கிறார்கள் பலர்.

என்னை நான் அறிமுகப்படுத்தியபோது அவனா நீ, நீயா அவன் என்ற கேள்விக்குறிகள், ஆச்சரியக் குறிகள் என்று வர ஆரம்பித்துவிட்டன.

பதிவுகளைப் பார்த்து ஒவ்வொருவரும் எப்படி, எப்படி இருப்பார்கள் என்று நான் கற்பனை பண்ணி இருந்ததற்கும் நேரில் பார்த்தபோது அந்தப் பதிவுக்கு சொந்தக்காரர் இவரா என்று ஆச்சரியப்பட வைத்தது.


நான் எப்போதும் வந்தி என்றுதான் சொல்வேன். இப்போ வந்தி அண்ணா என்று சொல்ல நினைத்திருக்கின்றேன். எல்லோரும் வந்தியை (............) என்று சொல்வார்கள் நான் அப்படிச் சொல்லமாட்டேன். கனககோபி வயசில தம்பிதான் ஆனா உருவத்தைப் பார்த்தா தாத்தா என்று சொல்ல தோன்றுது. சுபாங்கன் எல்லோருக்கும் தம்பியாக இருக்கலாம்.

பல நண்பர்களை நேரில் சந்தித்து பேசிய சந்தோசம். மற்றும்படி எல்லோருமே நடந்தவிடயங்களை பதிவிட்டு விவாதித்தும் விட்டனர் நானும் அவற்றை பேசுவது பொருத்தமற்றது.

இந்த ஒனறுகூடலின்போதும், அதன் பின்னரும் இடம்பெறுகின்ற கருத்து மோதல்களின் பின்னர் எனக்குள் எழுந்த சந்தேகங்களை உங்களிடம் முன்வைக்கின்றேன்.

ஊடகவியலாலர்களையும், வலைப்பதிவர்களையும் இணைக்கும் ஒரு சந்திப்பாக சிலர் குறிப்பிடுகின்றனர். ஊடகவியலாளர்கள் வேறு வலைப்பதிவர்கள்வேறா? (பல வலைப்பதிவர்கள் ஊடகவியலாளர்கள் என்பது வேறு விடயம்) வலைப்பதிவர்கள் ஊடகவியலாளர்களுக்குள் அடக்கமுடியாதா?


நாம் அச்சு, இலத்திரனியல் ஊடகமென்று சொல்கின்றோம். இணையம், ஊடகம் இல்லையா? வலைப்பதிவு ஊடகமில்லையா? நாம் ஏன் வலைப்பதிவர்களை ஊடகங்களிலிருந்து தனியாக்க நினைக்கின்றோம். இங்கே ஊடகம் என்பதன் வரையறை என்ன?

இன்று இலங்கை வலைப்பதிவர்களை இலங்கையில் மட்டுமல்ல பலரும் கவனித்துக்கொண்டிருக்கின்றனர் என்பது இந்த ஒன்றுகூடல்மூலம் புலனாகின்றது எமது ஒவ்வொரு நகர்வுகளையும் பலர் கவனித்துக்கொண்டிருக்கின்றனர்.

விரைவிலே எமது இரண்டாவது பதிவர் சந்திப்பு இடம்பெறவேண்டும் என்பதே எனது அவா எப்போ, எங்கே அடுத்த சந்திப்பு என்பதே பலரது கேள்வியும். என்னைப் பொறுத்தவரை அதிகமான பதிவர்கள் கொழும்பிலே இருப்பதால் கொழும்பிலே ஏற்பாடு செய்வது நல்லது. நான் எங்கே ஏற்பாடு செய்தாலும் வருவதற்கும் தயார்.

சில நண்பர்கள் அடுத்த சந்திப்புக்கான நடவடிக்கையிலே இறங்கியிருப்பதாக அறியமுடிகின்றது அவர்களோடு கைகோர்ப்போம்.

Post Comment


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

15 comments: on "எல்லோராலும் அவதானிக்கப்படும் இலங்கைப் பதிவர்கள்"

தங்க முகுந்தன் said...

ஊருக்கப் போய் உடனடியாகவே பதிவு போட்டுவிட்டீரே! வாழ்த்துக்கள்! இன்றுதான் இந்துவைப் பார்த்தேன்! அதற்கும் தனியாக பின்னர் கருத்துச் சொல்கிறேன்!

தங்க முகுந்தன் said...

இப்போது - இணையத்தில் எழுதுபவர்கள் எழுத்தாளர்களா? - என்ற கட்டுரையை தமிழ் வெளியில் - கண்டு படித்தேன். உங்களுக்கும் இது உதவியாக இருக்கும்! விரும்பினால் பாருங்கள் - http://www.aganazhigai.com/2009/11/blog-post.html

வேந்தன் said...

இரண்டாவது சந்திப்பு பலத்த எதிர் பார்ப்பை ஏற்ப்படுத்தி இருக்கு, சிறப்பாக நடக்க முன் கூட்டிய வாழ்த்துக்கள்.

சுசி said...

சந்திப்பு சிறப்பாக நடந்தமைக்கு வாழ்த்துக்கள் (விவாதங்களை பின்வைப்போமே)

படங்கள் போட்டிருக்கலாம் :)))

அடுத்த சந்திப்பில் கவனம் எடுங்கள்.

Unknown said...

என்னைத் தாத்தா என்று அழைத்தமைக்காக Blue cross இல் சீ சீ... மனித உரிமை நிறுவகத்தில் முறையிடப் போகிறேன்...
என்னப் பாத்தா 10 வயசுப்பிள்ளை உணர்வு வரேலயா?

சந்திப்புப் பற்றி நான் விரிவாகப் பதிவட்டுவிட்டு நிறைய இடங்களில் பின்னூட்டம் இட்டுக் களைத்துவிட்டேன்....

உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சியே...

யோ வொய்ஸ் (யோகா) said...

கடகட வென எழுதும் சந்ரு, நேரில் பேச கொஞ்சம் சுச்ச சுபாவம் உள்ளவரென தெரிந்து கொண்டேன். உங்களை கதைக்க வைக்க சுபாங்கனும், கோபியும் ரொம்ப பிரயத்தனப்பட்டார்கள் என நினைக்கிறேன்.

எனக்கு சந்திப்பில் கிட்டிய ஏமாற்றத்தை ஒதுக்கிவிட்டு உங்களில் பலரது முகம் காண கிடைத்த மகிழ்ச்சியோடு வந்து சேர்ந்தேன்..

SShathiesh-சதீஷ். said...

நிச்சயமாக உங்களை பார்த்து நான் அவனா நீங்கள் என நினைத்தேன். என் கற்பனையில் இருந்த நீங்கள் வேறு ஒருமாதிரி இதுதான் சந்த்ரு என அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டேன். அப்பாடா lol

Subankan said...

உங்களைப் பார்த்ததும் நம்ப முடியவில்லைத்தான். உங்களை சந்தித்தது மகிழ்ச்சி. இப்படிக்கு அன்புத் தம்பி

ஆ.ஞானசேகரன் said...

பகிர்வுக்கு நன்றி நண்பா

ilangan said...

சரியாச் சொன்னீங்க தாத்தா மேட்டர்.
இன்றிலிருந்து தாத்தா என அன்போடு பதிவர் கோபி அழைக்கப்படுவார்.
இதை பச்சிளம் பாலகர் சங்கத்துக்கும் பகிரங்கமாக அறிவிக்கிறோம்.
ஒருவேளை கோபி சங்கத்திலிருந்து நீக்கப்படும் வாய்ப்பும் அதிகம் உண்டு.ஃ

thiyaa said...

சரியாச் சொன்னீங்க

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

பகிர்வுக்கு நன்றி

Muruganandan M.K. said...

பதிவிற்கு நன்றி

ஸ்ரீராம். said...

அன்பானவர்கள் சந்திப்பில் அனுபவங்கள் வளர்ந்து நட்பு மலர்ந்து மேலும் மேலும் அனுபவ மலர்கள் பூக்கட்டும்.

Unknown said...

// ilangan கூறியது...
சரியாச் சொன்னீங்க தாத்தா மேட்டர்.
இன்றிலிருந்து தாத்தா என அன்போடு பதிவர் கோபி அழைக்கப்படுவார்.
இதை பச்சிளம் பாலகர் சங்கத்துக்கும் பகிரங்கமாக அறிவிக்கிறோம்.
ஒருவேளை கோபி சங்கத்திலிருந்து நீக்கப்படும் வாய்ப்பும் அதிகம் உண்டு. //

எனக்கெதிராக ஒரு குழுவே கிளம்பியிருக்கிறதே....

என் சங்கத்திலிருந்து என்னை விலக்குவதா?
ஒரே நகைச்சுவை போங்கள்.....

Post a Comment