Sunday, 22 November 2009

இப்படியெல்லாம் நடக்கிறது..

திருந்தாத திருட்டுப் பதிவார்கள்...


 என் வலைப்பதிவிலே நான் இடுகையிட்டு சில மணி நேரத்திலே அப்படியே வேறொரு வலைப்பதிவிலே திருடிப்போடப்படுகின்றன. அவரிடம் பல தடவை அப்படி செய்யவேண்டாம் என்று சொல்லியும் எந்த பயனும் இல்லை இன்னும்   திருட்டு நடந்துகொண்டுதான் இருக்கிறது.

இந்த பதிவுத்திருட்டு தொடர்பிலே எனக்கு இருக்கும் சந்தேகத்தை உங்களிடம் கேட்கிறேன். பதிவை திருடுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியுமா? அதற்கு ஏதாவது நடை முறைகள் இருக்கின்றதா? (நான் சட்ட நடவடிக்கை எடுக்க இல்லை அறிந்து கொள்வதற்காக கேட்கிறேன்)

என்னடா இவர் பெரிய பதிவு போடுறாரு திருடுறவங்களுக்கு சட்ட நடவடிக்கை எடுக்கப்போகிறார் என்று யோசிக்காதிங்க   அப்படியெல்லாம் ஒன்றும்  இல்லை. இன்று பதிவார்கள் எதிர் நோக்கும் முக்கிய பிரச்சனை என்பதனால் இது தொடர்பான விபரங்களை அறிந்து கொண்டால் பிரயோசனமாக இருக்கும்  என்றுதான்.

திருட்டுப் பதிவார்கள் மிது சட்ட நடவடிக்கை எடுக்க முடியுமா? இது தொடர்பிலே ஏதாவது பிரமாணங்கள் இருக்கிறதா? உங்கள் கருத்துக்களை எதிர் பார்க்கிறேன்.

இப்படியும் அதிகாரிகள்....

சிறுவர்களின் கல்வி நடவடிக்கையிலே பல்வேறு செயத்திட்டன்களை மேற்கொண்டு வரும் ஒரு சமுக சேவை அமைப்பு ஒரு பாராளுமன்ற உறுப்பினரிடம். அவர்களின் செயத்திட்டங்களுக்காக சில உதவிகள் பல பல தடவைகள் கேட்டதன் பயனாக அந்த பாராளுமன்ற உறுப்பினர் இவர்களின் தொல்லை தாங்க முடியாமல் ஒரு கணணி உபகரணம் வாங்குவதற்கு  வரவு செலவுத்திட்ட நிதியிலிருந்து குறிப்பிட்ட தொகையை ஒதுக்கியிருந்தார்.

இந்த சமுக சேவை அமைப்பானது. வறிய, பின்தங்கிய மாணவர்களுக்கு உதவி செய்தல், பாடசாலையை விட்டு மாணவர்கள் இடை விலகுதல் தொடர்பான ஆய்வினை மேற்கொண்டு இடை விலகிய மாணவர்களை மீண்டும் பாடசாலையில் சேர்த்தல் போன்ற பல செயற்பாடுகளிலே இடுபட்டு வருகின்றது. அத்தோடு தினமும் 300 மாணவர்களுக்கு இரவு நேர வகுப்புக்களையும் நடாத்தி வருகின்றது. இவை அத்தனைக்குரிய செலவையும் அந்த அமைப்பின் உறுப்பினர்களே செய்து வருகின்றனர். இந்த விடயங்கள் அனைத்தையும் அறிந்த ஒரு பாராளுமன்ற உறுப்பினர். ஒதுக்கிய நிதி வெறும் 80000 ரூபாதான் . இந்த அமைப்பின் மாதாந்த செலவு அதைவிட அதிகம்.

இது இவ்வாறிருக்க பாராளுமன்ற உறுப்பினரால் பணம் ஒதுக்கப்பட்டு இரண்டரை மாதங்களுக்கு மேலாகிவிட்டது. இன்னும் பிரதேச செயலக அதிகாரிகள் கணணி இயந்திரம் வாங்கித் தருவதாக இல்லை. திங்கட்கிழமை வாருங்கள், திங்கட்கிழமை போனால் புதன்கிழமை வாருங்கள் என்று ஏமாற்றி வருகின்றனர்.

பாராளுமன்ற உறுப்பினரால் பணம் வழங்கப்பட்டு இரண்டரை மாதமாகியும் இன்னும் கணணி உபகரணம் வாங்கி கொடுக்கப்படாததன் காரணம் என்ன? இதிலே சில சுத்து மாத்துக்கள் இருப்பதுபோன்று தோன்றுகின்றது.

வீதி அபிவிருத்தியும் சுருங்கும் வீதிகளும்.

இன்று மகிந்த சிந்தனைத் திட்டத்தில் பல்வேறுபட்ட செயற்திட்டங்கள் முன்னெடுத்து வரப்படுகின்றன. அதிலும் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்திலே துரிதமாக வீதி அபிவிருத்தி இடம் பெற்று வருகின்றன.

உள் வீதிகள் கொங்கிரீட் வீதிகளாக மாறி வருகின்றன. நல்ல விடயமாக இருந்தாலும். இந்த வீதிகள் 10 அடி அகலத்திலே போடப்படுகின்றன. ஆரம்பத்தில் இந்த வீதிகள் 20 அடிக்கும் மேல் இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. 20 அடி அகலமான வீதி 10 அடியாகக் குறைக்கப்படுகின்றது. இதனால் வாகனங்கள் பிரயாணம் செய்வதிலே பல சிக்கல்கள் இருக்கின்றன.


இரண்டு வாகனங்கள் ஒன்றை ஒன்று முந்தி செல்வது, எதிரெதிராக வரும் வாகனங்கள் செல்ல முடியாத நிலை என்பன ஏற்படுகின்றன. இது தொடர்பிலே உரிய அதிகாரிகள் கவனம் செலுத்துவது நல்லதே.


இங்கேயும் போகலாம்..

பேசாத பிள்ளைகளை பேச வைப்பவர்

Post Comment


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

15 comments: on "இப்படியெல்லாம் நடக்கிறது.."

கனககோபி said...

பதிவுத் திருட்டு சம்பந்தமாக எனக்குத் தெரியவில்லை....
அடுத்த பதிவர் சந்திப்பில் சிலவேளை ஆராயப்படலாம்...

அரசியல்வாதிகளைப் பற்றிக் கதைத்து ஒன்றும் செய்ய முடியாது...
நீங்கள் அரசியலில் குதிக்க மாட்டீர்களா? :P

மற்றை விடயத்தை நான் வபாசிக்கவில்லை...
தொடக்கப் பெயரே பயமாய் இருக்கிறது... :)

அக்பர் said...

சந்ரு எனக்கும் சட்டம் இருக்கிறதா என்று தெரியவில்லை. ஆனால் அவர் காப்பி அடிக்கிற அளவுக்கு உங்க எழுத்து பிரபலம் அடைந்ததை நினைத்து பெருமையாக இருக்கிறது.

பிரியமுடன்...வசந்த் said...

பாவம் சந்ரு..

திருடிப்போட்டா போட்டுட்டு போகட்டும் சந்ரு பாவம் விட்ருங்க பிழைச்சிப்போகட்டும்

Dr.எம்.கே.முருகானந்தன் said...

பதிவுகளைத் திருடுவது ஒரு முக்கிய பிரச்சனைதான். இதை எப்படி எதிர் கொள்வது என்பது புரியவில்லை.

எனது பதிவுகளை பலர் எடுத்து தங்கள் தளங்களில் போடுகிறார்கள்.

ஆனால் பெரும்பாலானவர்கள் எழுதிய எனது பெயரையும் போடுவதால் பிரச்சனை இல்லை. யாருக்வாவது பயன்படுகிறதே எனத் திருப்தி கொள்வேன்.

ஆனால் உங்கள் பிரச்சனை வேறு. பதிவுகளைத் திருடித் தங்கள் பெயரில் போடுவது கொள்கை ரீதியாக மட்டுமின்றி சட்ட ரீதியாகவும் தவறு என்றே கருதுகிறேன்.

பித்தனின் வாக்கு said...

திருடட்டும் சந்ரு, சொந்தமாக எழுத முடியாமலும், உங்களின் பதிவின் தரம் திருடும் அளவுக்கு இருப்பதாலும் தான் திருடுகின்றார்கள் என்று நினைத்துக் கொள்ளுங்கள். அவரிடம் திருடினாலும் பரவாயில்லை என்றும், ஹேட்டல் டம்ளர் மாதிரி இது சந்ருவின் இடுகையில் திருடியது என்று போடச் சொல்லுங்கள் போதும். நன்றி.

Subankan said...

உங்கள் எழுத்துக்கள் நன்றாக இருப்பதால்தானே திருடுகிறார்கள். இது சந்தோசமான விடயம்தானே? மற்றபடி இதைத் தடுப்பதற்கு என்னதான் குத்தி முறிந்தாலும் தொழில்நுட்பத்தால் திருடுவதைத் தடுக்க முடியாது. இணையத்தில் இட்டுவிட்டால் அது பொதுச்சொத்து ஆகிவிடும். திருடுபவரைக் கவனிக்காமல் விட்டுவிடுங்கள். நானே அடங்கிவிடுவார்கள்.

ஆ.ஞானசேகரன் said...

திருடிதானெ போடுகின்றார்கள்.. போனா போகட்டும் விட்டுவிடுங்கள்

SShathiesh said...

பதிவு திருட்டு எனக்கும் நடந்தது தான், என்ன செய்வது இவர்களை கண்டு கொள்ளாமல் விடுவதே நல்லம், காரணம் நாம் இதை பெரிது படுத்தினால் அது அவர்களுக்கு விளம்பரமாக் அமைந்து விடும்.

யோ வொய்ஸ் (யோகா) said...

உங்களது பதிவு திருடுமளவிற்கு காத்திரமானது என சந்தோஷ படுங்கள் சந்ரு.

பதிவுகளை திருடுவதை தடுக்க சட்டமில்லை, ஆனால் தொழிநுட்பம் மூலம் திருடுவதை தடுக்கலாம் என நினைக்கிறேன். ஆனாலும் திருடனாய் பார்த்து ஒழியா விட்டால் திருடனை ஒழிக்க முடியாது

Kala said...

ஆமாம்!நானும் அங்கு சென்று பார்த்தேன்
உங்கள் பதிவு எந்த ஒரு மாற்றமும்
இல்லாமல் அப்படியே இடம்பெற்றிருந்த்து

வலைத் தளம் தேவை ஆனால் ,...சொந்தமாய்
சிந்தித்து எந்த ஒரு இடுகையும் இடத் தெரியாமல்..
திருடி போடுவது, அவரின் “”அறிவை”” உலகமெல்லாம்
பறைசாற்றுகிறது.அவரல்லவோ வெட்கப்பட வேண்டும்

S.Gnanasekar said...

என் வலைப்பதிவிலே நான் இடுகையிட்டு சில மணி நேரத்திலே அப்படியே வேறொரு வலைப்பதிவிலே திருடிப்போடப்படுகின்றன. அவரிடம் பல தடவை அப்படி செய்யவேண்டாம் என்று சொல்லியும் எந்த பயனும் இல்லை இன்னும் திருட்டு நடந்துகொண்டுதான் இருக்கிறது.

இதுக்குபோய் ஏன் வருத்தப்படுகிறேர்கள் சந்ரு.
சந்தோசப்படுங்கள் அவரின் இடுகையின் மூலம் உங்கள் படைப்பை மற்றவருக்கும் போய் சேர்கிறது.

சுசி said...

சந்தோஷப்படுங்க சந்ரு... இந்த கொடுப்பினை எல்லா பதிவர்களுக்கும் கிடைக்கிறதில்ல...

எனக்கென்னமோ நீங்க அரசியல்ல தொபுக்கடீர்னு குதிக்கப் போறீங்கன்னு தோணுது.

ஜோதிஜி. தேவியர் இல்லம். said...

நண்பரே சட்ட உரிமைகளை நினைத்து கவலைப் படாதீர்கள். நீங்கள் உங்கள் கருத்துக்கள் திருடப்படுகின்றது என்றால் பலருக்கு நீங்கள் ஆசானாக இருக்கிறீர்கள் என்று தானே அர்த்தம். இங்கு யார் சுயம்? 3000 ஆண்டுகளில் சிறிது சிறிதாக கடன் வாங்கி வந்து இன்று தானே சற்று பரவிக்கொண்டு இருக்கிறது.
தவறா? சரியா?

உங்கள் பெயர் போட்டாலும் போடாவிட்டாலும் உங்கள் பணியை வேறு யாரோ அவர்கள் பெயர் போட்டு தொடரட்டும் விட்டு விடுங்கள்.

எப்போதும் போல நீங்கள் என் கடன் பணி செய்து கிடப்பதே என்று தொடருங்கள்.

தர்ஷன் said...

நம்ம பதிவுகளும் திருடு போகணும்னா எப்படி எழுதணும் சந்துரு

வால்பையன் said...

பதிவை காப்பி செய்யமுடியாத படி செய்ய வழி இருக்கிறது!

Post a Comment