எப்பொழுதோ எழுத நினைத்தது நேரம் இடம் கொடுக்காததால் இன்று இடுகையாக வருகின்றது.
அண்மையிலே நண்பர் சதீஸ் லோஷனுடன் அந்தரங்கம். பகுதி- 1 எனும் தலைப்பிலே ஒரு பதிவிட்டிருந்தார். இப்பதிவிலே ஒலி, ஒளிபரப்பாளரும், வலைப்பதிவருமாகிய லோஷன் அவர்களை பேட்டி கண்டு இருந்தார் சதீஸ். இதிலே லோஷன் தன்னைப் பற்றிய பல விடயங்களைப் சொல்லி இருந்தார்.
இந்த இடுகைக்கு சில அனானிகள் திட்டித் தீர்த்து இருந்தனர். தலைப்பு தவறானது என்றும் வேறு அர்த்தத்தினைக் கொடுப்பதாகவும் குறிப்பிட்டு இருந்தனர். அவர்கள் அந்தரங்கம் என்பதனை தவறான கண்ணோட்டத்தில் பார்க்கின்றனர் என்பதனை மட்டும் என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. எல்லோரும் ஆவலோடு எதிர் பார்த்த லோஷன் பற்றிய தொடர் பதிவு இன்னும் வரவில்லை.
அந்தரங்கம் என்பது என்ன? இந்த இடத்திலே பயன் படுத்தப்பட்டது சரியா? தவறா? என்னைப் பொறுத்தவரை இதனை தீர்மானிக்க வேண்டியது சதீஸ், மற்றும் லோஷன் இருவருமே இதில் நாம் அந்தரங்கம் எனும் சொல் பயன்படுத்த முடியாது என்று சொல்ல முடியாது.
அந்தரங்கம் என்பது வெளியிடப்படாத, வெளிவராத தகவல்களாக அமையலாம். இது எந்தத் தகவலாகவும் அமையலாம். அந்தரங்கம் எனும்போது நாம் தவறான எண்ணத்தோடு நோக்குவது தவறானது. நல்ல பல விடயங்கள் இதுவரை வெளியிடப்படாத விடயங்கள் வெளியிடப்பட்டிருக்கலாமல்லவா? இங்கே அந்தரங்கம் என்பது லோஷனால் இதுவரை வெளியிடப்படாத விடயங்கள் இந்த பேட்டியிலே வெளியிடப்பட்டிருக்கலாம். அது எந்த விடயமாகவும் அமையலாம்.
அப்பதிவுக்கு பின்னூட்டமிட்டிருப்போரின் பின்னூட்டத்தைப்பார்க்கும்போது. அந்தரங்கம் என்பதை வேறு விதமாக நோக்கியிருந்தனர். அப்படியானால் ஒருவரின் அந்தரங்க செயலாளர் எனும்போது நாம் தவறான கண்னோட்டத்தில் பார்ப்பதில்லையே. அப்படி இருக்கும்போது ஏன் இங்கே மட்டும் தவறான கண்ணோட்டத்தில் பார்க்கின்றோம்.
இத் தலைப்பு தவறானது என்று சொல்வோர் அந்தரங்கம் என்பதற்கான வரைவிலக்கணத்தினைச் சொல்லவும்.
நண்பர் சதீஸிசிடமிருந்து லோஷன் பற்றிய தொடர் பதிவையும் விரைவில் எதிர்பார்க்கின்றேன்