Monday, 3 August 2009

நினைவுகளின் ஏக்கம்...

அள்ளி எறிந்து
துள்ளித் திரிந்து
"துச்சாதனன்"
ஆனகாலம்...

பாதையோர பைங்கிளி
காண "டயர்" தேயா
பாதை தேய்ந்த காலம்....


பள்ளி மாடி
மண்டபத்தில் மங்கை
மடியில் நண்பனவன்
மனம் விட்டுப் பேசியதை
மறைவில் நின்று
ரசித்த காலம்...


போனது போகட்டும்
முதல் பரிட்சைதானே
என்றெண்ணி பரீட்சை
மண்டபம் போக
மறுத்தவேளை
வகுப்பாசிரியை -எம்
கை பிடித்து வந்து
பரீட்சை எழுத
வைத்த காலம்...


மாலைப் பொழுதில்
கடல் மணல்
மேட்டில் "தேன்"
எனச் சொல்லி
நண்பனவன்
தந்த போதையில்
மூழ்கிய காலம்...


நண்பனவன் காதலில்
நீயும் நானும்
ஒவ்வொருவர்
இனி "நாம் ஒருவர்"
என்று அவர்கள் இருக்க
அதற்கு துணை
நின்றநாம் நண்பனவன்
காதலியின் தந்தையைக்கண்டு
தலை தெறிக்க
ஓடிய காலம்..


கோவில் திருவிழா
ஆண்டுப்பெருவிழா
காண வந்த
பக்தையின் கரத்தைப்
பற்றிய நண்பனவன்
முதுகில் - அவள்
அம்மா "ஐவிரல் கோலம்"
போட்ட காலம்..


மட்டில்லாமல்
எட்டிப்பார்க்கும்
இளமை நினைவுகளை
கட்டிலில் கிடந்தது
மீட்டுப் பார்த்தாலும்
மீண்டும் வருமா
அந்தக் காலம்...
நன்றி - தயா

Post Comment


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

37 comments: on "நினைவுகளின் ஏக்கம்..."

S.A. நவாஸுதீன் said...

மலரும் நினைவுகள் அருமை. இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

shaf said...
This comment has been removed by the author.
நட்புடன் ஜமால் said...

நடப்பு காலங்கள் விட்டு
நட்பு காலங்களுக்கு சென்று வருவது
ஒரு சுகம் தான்


நண்பர்கள் தின நல் வாழ்த்துகள்.

யோ வொய்ஸ் (யோகா) said...

நங்கள் எல்லோரும் கடந்து வந்த பாதை ஒன்றே தான், எங்கள் பயணத்தின் தொடக்கம் முடிவு எல்லாமுமே வேறு வேறு ஆக இருந்தாலும் நாம் நமது பள்ளி நாட்களில் நட்பு என்கிற பேரூந்தில் மிக்க மகிழ்ச்சியுடன் பயணித்திருக்கிறோம், என்ன தான் தொழில், வாழ்க்கை நமக்கு நண்பர்களை சேர்த்து தந்திருந்தாலும், நமது பள்ளி நாட்களில் நமக்கு கிடைத்த நண்பர்கள் தான் எந்த காரணமும் இல்லாமல் கிடைத்தவர்கள், மற்றைய எல்லா நண்பர்களுடன் எதாவது ஒரு காரணத்துக்காக தான் நாம் நண்பராகிறோம்.

நண்பர்கள் தின வாழ்த்துகள் நண்பரே!!!

துபாய் ராஜா said...

நல்லதொரு நினைவு பதிவு.

வாழ்த்துக்கள்.

சப்ராஸ் அபூ பக்கர் said...

///நண்பனவன் காதலில்
நீயும் நானும்
ஒவ்வொருவர்
இனி "நாம் ஒருவர்"
என்று அவர்கள் இருக்க
அதற்கு துணை
நின்றநாம் நண்பனவன்
காதலியின் தந்தையைக்கண்டு
தலை தெறிக்க
ஓடிய காலம்.. ////

என்னோட காதலிக்கு அப்பா இல்லாததினால் பயப்படாமல் உங்களை நம்பி இறங்கலாம் சந்ரு..... (லொள்.....)

அருமையாக இருந்தது... (தயாவுக்கும் இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள சொல்லி விடுங்க சந்ரு......)

நேசமித்ரன் said...

இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

Admin said...

//S.A. நவாஸுதீன் கூறியது...
மலரும் நினைவுகள் அருமை. இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்//



உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள் நண்பரே..

நண்பர்கள் தின வாழ்த்துக்கள் நண்பரே...

Admin said...

//நட்புடன் ஜமால் சொன்னது…
நடப்பு காலங்கள் விட்டு
நட்பு காலங்களுக்கு சென்று வருவது
ஒரு சுகம் தான்//


உண்மைதான் நண்பரே...

உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள் நண்பரே..

நண்பர்கள் தின வாழ்த்துக்கள் நண்பரே...

Admin said...

//யோ (Yoga) சொன்னது…
நங்கள் எல்லோரும் கடந்து வந்த பாதை ஒன்றே தான், எங்கள் பயணத்தின் தொடக்கம் முடிவு எல்லாமுமே வேறு வேறு ஆக இருந்தாலும் நாம் நமது பள்ளி நாட்களில் நட்பு என்கிற பேரூந்தில் மிக்க மகிழ்ச்சியுடன் பயணித்திருக்கிறோம், என்ன தான் தொழில், வாழ்க்கை நமக்கு நண்பர்களை சேர்த்து தந்திருந்தாலும், நமது பள்ளி நாட்களில் நமக்கு கிடைத்த நண்பர்கள் தான் எந்த காரணமும் இல்லாமல் கிடைத்தவர்கள், மற்றைய எல்லா நண்பர்களுடன் எதாவது ஒரு காரணத்துக்காக தான் நாம் நண்பராகிறோம்.

நண்பர்கள் தின வாழ்த்துகள் நண்பரே!!!//


பாடசாலைப் பருவ நினைவுகள் ஒரு சுகமானதல்லவா..
உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள் நண்பரே..

நண்பர்கள் தின வாழ்த்துக்கள் நண்பரே...

Admin said...

//துபாய் ராஜா கூறியது...
நல்லதொரு நினைவு பதிவு.

வாழ்த்துக்கள்.//


வாங்க ராசா... வாங்க...

உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள் நண்பரே..

நண்பர்கள் தின வாழ்த்துக்கள் நண்பரே...

Admin said...

//சப்ராஸ் அபூ பக்கர் கூறியது...
///நண்பனவன் காதலில்
நீயும் நானும்
ஒவ்வொருவர்
இனி "நாம் ஒருவர்"
என்று அவர்கள் இருக்க
அதற்கு துணை
நின்றநாம் நண்பனவன்
காதலியின் தந்தையைக்கண்டு
தலை தெறிக்க
ஓடிய காலம்.. ////

என்னோட காதலிக்கு அப்பா இல்லாததினால் பயப்படாமல் உங்களை நம்பி இறங்கலாம் சந்ரு..... (லொள்.....)

அருமையாக இருந்தது... (தயாவுக்கும் இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள சொல்லி விடுங்க சந்ரு......)//

ஆஹா உங்கள அறியாமலேயே உண்மைய சொல்லிட்டிங்களே... அப்போ ஏற்கனவே நீங்க காதலிச்ச பெண் கைவிட்டுடிச்சா..

தயாவிடம் சொல்லி விட்டால் போச்சு...

உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள் நண்பரே..

நண்பர்கள் தின வாழ்த்துக்கள் நண்பரே...

Admin said...

//நேசமித்ரன் கூறியது...
இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்//


உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பரே...

உங்களுக்கும் இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்..

Starjan (ஸ்டார்ஜன்) said...

நினைவுகளின் ஏக்கம் உங்கள் கவிதை பிரதிபலிக்கிறது

அருமையான கவிதைகள்

அன்புடன் அருணா said...

மலரும் நினைவுகள்!!!நல்லாருக்கு!

Admin said...

//Starjan ( ஸ்டார்ஜன் ) கூறியது...
நினைவுகளின் ஏக்கம் உங்கள் கவிதை பிரதிபலிக்கிறது

அருமையான கவிதைகள்//


உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள் நண்பரே..

நண்பர்கள் தின வாழ்த்துக்கள் நண்பரே...

Admin said...

//அன்புடன் அருணா கூறியது...
மலரும் நினைவுகள்!!!நல்லாருக்கு!//

யாருக்குத்தான் மலரும் நினைவுகள் இல்லை..

உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள் அருணா...

நண்பர்கள் தின வாழ்த்துக்கள் அருணா...

சப்ராஸ் அபூ பக்கர் said...

சந்ரு கூறியது...

////ஆஹா உங்கள அறியாமலேயே உண்மைய சொல்லிட்டிங்களே... அப்போ ஏற்கனவே நீங்க காதலிச்ச பெண் கைவிட்டுடிச்சா.. ///

ஐயோ..... தப்பு பண்ணிட்டேனே...... சந்ரு யாருகிட்டயும் சொல்லிராதீங்க.....

sakthi said...

கோவில் திருவிழா
ஆண்டுப்பெருவிழா
காண வந்த
பக்தையின் கரத்தைப்
பற்றிய நண்பனவன்
முதுகில் - அவள்
அம்மா "ஐவிரல் கோலம்"
போட்ட காலம்..

அது !!!!

அழகான கவிதை

ஆ.ஞானசேகரன் said...

நல்ல நினைவலைகள் வாழ்த்துகள் தோழா

Nathanjagk said...

//"டயர்" தேயா
பாதை தேய்ந்த // ​பெரிய கதையா இருக்கும் போல! "காதல் காவலாளியா" பெரிய அனுபவம் இருக்கும் போல! வாழ்த்துக்கள் சந்ரு!

Anonymous said...

மலரும் நினைவுகள் அருமை. இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

kiru said...

கலகிட்ட சந்ரு super கவிதை
நண்பர்கள் தின நல் வாழ்த்துக்கள்///

ப்ரியமுடன் வசந்த் said...

கவிதை அழகு

நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

Admin said...

சப்ராஸ் அபூ பக்கர் கூறியது...
சந்ரு கூறியது...

//////ஆஹா உங்கள அறியாமலேயே உண்மைய சொல்லிட்டிங்களே... அப்போ ஏற்கனவே நீங்க காதலிச்ச பெண் கைவிட்டுடிச்சா.. ///

ஐயோ..... தப்பு பண்ணிட்டேனே...... சந்ரு யாருகிட்டயும் சொல்லிராதீங்க.....//

நான் சொல்லமாட்டேன் அத மட்டும் நான் சொல்லமாட்டேன்...

Admin said...

//sakthi கூறியது...
கோவில் திருவிழா
ஆண்டுப்பெருவிழா
காண வந்த
பக்தையின் கரத்தைப்
பற்றிய நண்பனவன்
முதுகில் - அவள்
அம்மா "ஐவிரல் கோலம்"
போட்ட காலம்..

அது !!!!

அழகான கவிதை//

உண்மையைச் சொல்லி இருக்கிறேன்...
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி சக்தி..
நண்பர்கள் தின வாழ்த்துக்கள்...

Admin said...

//Tamilmoviecenter கூறியது...
super


வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி....
நண்பர்கள் தின வாழ்த்துக்கள்...

Admin said...

//ஆ.ஞானசேகரன் கூறியது...
நல்ல நினைவலைகள் வாழ்த்துகள் தோழா//


வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள் நண்பா...

நண்பர்கள் தின வாழ்த்துக்கள்...

Admin said...

//ஜெகநாதன் கூறியது...
//"டயர்" தேயா
பாதை தேய்ந்த // ​பெரிய கதையா இருக்கும் போல! "காதல் காவலாளியா" பெரிய அனுபவம் இருக்கும் போல! வாழ்த்துக்கள் சந்ரு//

நிறைய அனுபவம் இருக்கிறது. எவரிடமும் சொல்ல வேண்டாம்..

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள் நண்பா...

நண்பர்கள் தின வாழ்த்துக்கள்...

Admin said...

//கடையம் ஆனந்த் கூறியது...
மலரும் நினைவுகள் அருமை. இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்//


வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள் நண்பா...

நண்பர்கள் தின வாழ்த்துக்கள்...

Admin said...

//kiru கூறியது...
கலகிட்ட சந்ரு super கவிதை
நண்பர்கள் தின நல் வாழ்த்துக்கள்///

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள் நண்பா...

நண்பர்கள் தின வாழ்த்துக்கள்...

Admin said...

//பிரியமுடன்.........வசந்த் கூறியது...
கவிதை அழகு

நண்பர்கள் தின வாழ்த்துக்கள்//


வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள் நண்பா...

நண்பர்கள் தின வாழ்த்துக்கள்...

SShathiesh-சதீஷ். said...

ஞாபகம் வருகிறதோ? ம்ம்ம்ம் ஞாபகங்கள் தாலாட்டும் தானே.

Anonymous said...

சுகமான நினைவுகளை சுருதியோடு மீட்டியிருக்கீங்க....சுகமான காலம் இக்காலம்...

Admin said...

//SShathiesh கூறியது...
ஞாபகம் வருகிறதோ? ம்ம்ம்ம் ஞாபகங்கள் தாலாட்டும் தானே.//


வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள் நண்பா...

Admin said...

// தமிழரசி கூறியது...
சுகமான நினைவுகளை சுருதியோடு மீட்டியிருக்கீங்க....சுகமான காலம் இக்காலம்...//


வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்

Post a Comment