இவ் அரங்கத்துக்கு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி உறுப்பினர்கள் பலரும் தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் ஆனந்த சங்கரி, தமிழர் தேசிய ஜனநாயகக் கூட்டமைப்பு சார்பாக சிவாஜிலிங்கம், ஈழம்கள் ஜனநாயகக் கட்சி சார்பில் சந்திரகுமார் மற்றும் இராசமாணிக்கம், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி பத்மநபா அணி சார்பாக துரைரெட்ணம், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி சார்பாக சதானந்தம் இராகவன் மற்றும் தனபாலசிங்கம், ஈழ ஏதிலிகள் மறுவாழ்வுக் கழகத் தலைவர் சந்திரகாசன், ஈரோஸ் சார்பாக உதயவேல் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு அமைப்பு விடுக்கப்பட்டும் கலந்து கொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
கடந்த தமிழ் கட்சிகளின் இரங்கத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கமைய தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு விடுக்கப்பட்ட அமைப்புக்கு
அவர்கள் உத்தியோகபூர்வமான பதிலளிக்காமையினையிட்டு அரங்த்தில் கவலை வெளியிடப்பட்டுள்ளது.
இன்றைய தமிழ் கட்சிகளின் அரங்கத்தில் தமிழ் மக்கள் எதிர் நோக்குகின்ற உடனடித் தேவைகள் குறித்து ஆராயப்பட்டுள்ளதாகவும், அரசாங்கத்தின் கவனத்துக்கு கொண்டு சென்று சாத்தியமான வழியில் விரைவாகத் தீர்வை பெற்றுக் கொடுப்பது குறித்து தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அவைகளாவன....
1. அர்த்தமுள்ள மீள் குடியேற்றம்.
2. உட்கட்டமைப்புடன் கூடிய மீள் கட்டுமானம்.
3. உயர் பாதுகாப்பு வலயங்கள். மீள் குடியேற்றங்கள்.
4. மக்களின் வாழ்விடங்களில் அமைக்கப்படும் இராணுவக் குடியேற்றங்கள்.
5. முழுமையான சிவில் நிர்வாகத்தினை ஏற்படுத்தல்.
6. ஆயுதப் போராட்டத்தினால் உடமைகளை உறவுகளை அங்கங்களை இழந்த மக்களுக்கு நட்ட ஈடுகளைப் பெற்றுக் கொடுத்தல்.
7. வடகிழக்கு உட்பட தமிழ் பேசும் பகுதிகளில் இனப்பரம்பலில் மாற்றத்தை ஏற்படுத்தும் செயற்பாடுகளைத் தடுத்து நிறுத்தல்.
8. யுத்தம் இடம் பெற்ற காலப்பகுதியில் கடைப்பிடிக்கப்பட்ட பாதுகாப்பு நடைமுறைகளைத் தளர்த்துதல்.
9. மீள் குடியேற்றத்தினை வெளிப்படையாகச் செய்வதுடன் அதை மக்கள் பிரதிநிதிகள் சர்வதேச உள்ள+ர் தொண்டு நிறுவனங்களின் பங்களிப்பை பெற்றுக் கொள்ளல்.
10. இனப்பிரசிசினை தீர்வுக்கு மாகாண சபைகளுக்கென பரிந்துரை செய்யப்பட்டிருக்கின்ற அரசியல் அமைப்பிலுள்ள 13 வது அரசியல் அதிகாரங்களை
முழுமையாக அமுல் படுத்துதல் ஆரோக்கியமான முன் முயற்சியாக அமையும்.
11. அடுத்து வரும் கட்டங்களில் தமிழ் கட்சிகளின் அரங்கத்தில் முஸ்லிம் மலையக கட்சிகளை இணைப்பது குறித்து ஆராயப்படும்.
12. தடுத்து வைக்கப்பட்டிருக்கின்ற அரசியல் கைதிகள் இறுதி யுத்த நடவடிக்கையின்போது சரணடைநடத கைது செய்யப்பட்ட போராளிகளின் விபரங்களை வெளிப்படுத்துவதுடன் அவர்களின் விடுதலைக்கு ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுத்தல்.
5 comments: on "தமிழ்க்கட்சிகளின் அரங்கம்"
ஏன் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் கலந்து கொள்ளவில்லை.
இவர்களால் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்படுமா?
welcome back
//பெயரில்லா கூறியது...
ஏன் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் கலந்து கொள்ளவில்லை.
இவர்களால் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்படுமா?//
தமிழ் தேசிய கூட்டமைப்பினர் கலந்து கொள்ளாதது அவர்களின் சந்தர்ப்பவாத அரசியல்.
எடுக்கப்பட்ட தீர்மானங்கள் நிட்சயம் நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
//சசிகுமார் கூறியது...
welcome back//
வருகைக்கு நன்றிகள்
Please Become A Fan Of
www.facebook.com/srilankannews
Post a Comment