Friday 30 November 2012

மட்டக்களப்பு வாவட்ட HNDA பட்டதாரி பயிலுனர்கள் தாம் திணைக்களங்களில் இணைக்கப்படாமை தொடர்பில் ஜனாதிபதிக்கு கடிதம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் HNDA பட்டதாரிப் பயிலுனர்களை திணைக்களங்களில் இணைத்தக் கொள்ளப்படாமை தொடர்பாக மடமக்களப்பு  HNDA பட்டதாரிகள் கெளரவ ஜனாதிபதிக்கும் அமைச்சர்களுக்கம், அரசியல்வாதிகளுக்கும் கடிதம் ஒன்றினை அனுப்பி வைத்திருக்கின்றனர். 
அக்கடித்தில் குறிப்பிடப்பட்டள்ள விடயங்கள்..
மட்டக்களப்பு மாவட்ட HNDA பட்டதாரி பயிலுனர்கள் அரச திணைக்களங்களுக்கு உள்வாங்கப்படாமை
மேற்படி விடயம் தொடர்பாக எமது மாவட்டத்தில் சுமார் 115 HNDA பட்டதாரி, பட்டதாரிப் பயிலுனர்களாக கடடமையாற்றி வருகின்றோம். எமக்கு தொடர்ச்சியாக விளைவிக்கப்பட்டு வருகின்ற அநீதிகளை தங்களின் மேலான கவனத்திற்கு இத்தால் கொண்டு வருவதன் மூலம் மன உழைச்சலுடன் கூடிய எமது நிலைக்கு தீர்க்கமான முடிவு கிட்டுமென எதிர்பார்க்கின்றோம்.
உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் 46/90 - 111 சுற்ற நிருபப்படி HNDA  பட்டதாரிகள் B.Com பட்டத்திற்கு சமமான பட்டதாரிகள் என அங்கிகரித்து இதுவரை காலமும் பல நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதுடன் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் அங்கிகரிக்கப்பட்ட பட்டம் பெற்றசர்கள் எனும் உரித்துடையவர்களாக இருக்கின்றோம். இருப்பினும் சில அதிகாரிகள் தெளிவின்மை காரணமாக எமது இரண்டு வருட படிப்பினையும் மீதி இரண்டு வருட திணைக்கள பயிற்சியுடனான படிப்பினையும் உதாசினம் செய்வதுபோல் நடந்துகொள்வது மனவருத்தத்தினைத் தருகின்றது. மேலும் எமக்கு இளைக்கப்பட்ட அநீதிகளாக..
01. கணக்கியல் துறைசார் பட்டம் பெற்ற எம்மால் துறைசார் பயிற்சிகள் (பயிலுனர்களாக நியமிக்கப்பட்ட பின்) பெறப்பட்டு திணைக்களங்களுக்கு பெயர்கள் வழங்கப்பட்டிருந்தன தற்போது HNDA பட்டதாரி பயிலுனர் அனைவரின் பெயர்கள் மட்டும் வெட்டப்பட்டு விளம்பரப் பலகைகளில் காட்சிப் படுத்தப்பட்டுள்ளது.
02. மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டும் இவ்விடயம் இவ்வாறு இடம்பெற்றுள்ளது. வேறு மாவட்டங்களில் முற்றிலும் முரணாக காணப்படுவதுடன் திணைக்களங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டு தெரிவுகளும் இடம்பெற்று எமது சக பட்டதாரிகள் வேறு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
03. குறிப்பிட்ட திகதிக்கு முன்னர் (30.11.2012) திணைக்களங்களுக்கான தெரிவுகள் அடங்கிய ஆவணம் தயார் செய்ய வேண்டும் என்பதால் எம்மை வெட்டிய இடங்களுக்கு புதியவர்களின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளது (நாங்கள் பட்டதாரியாக வெளியேறிய திகதிக்குப் பின்னர் வெளியேறிய பட்டதாரிகளின் பெயர்கள்)
04. கடந்த 28.11.2012 ம் திகதி வெளியாகிய பத்திரிகையில் திணைக்களங்களுக்கள் உள்வாங்கப்படாதவர்கள் வெளி மாவட்டங்களுக்க போக வேண்டம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அப்படியாயின் எமது நிலை என்ன? இது திட்டமிட்டு செய்யப்படும் சதியா என வலுப்பெறுகின்றது.
05. இவ்வாறான சூழ்நிலையில் பயிலுனர்களாக கடமை புரியும்போது எமக்கு ஏற்படுகின்ற மன உழைச்சல்கள், தாக்கங்கள் சொல்லி மாள முடியாது. மற்றும் தற்போது  HNDA படித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் பயிற்சி நெறியினைத் தொடர்வதா எனும் ஐயப்பாட்டில் இருப்பதுடன் இவ்விடயத்தில் அவதானிப்புடன் இருக்கின்றனர்.
06. தாங்கள் மற்றும் அனைத்து உயர் அதிகாரிகளும் அறிந்த விடயமே HNDA பட்டதாரிகளுக்கு அரச நிதி நடவடிக்கைகள் நிர்வாக நடவடிக்கையில் உள்ள ஈடுபாடுகள், யாராலும் மறுக்கவொ, மறைக்கவோ முடியாது. இதற்கு ஆதாரமாக பல கணக்காய்வாளர்கள், கணக்காளர்களாக, உயர் அதிகாரிகளாக பதவி வகிக்கின்றனர்.
எனவே எமக்கும் ஏனைய மாவட்டத்தில் இடம்பெறும் திணைக்களங்களுக்கான நியமனம்போல் எமது படிப்பிற்கு மதிப்பளித்து நியமனங்கள் வழங்கப்படுவதையும் எதிர்வரும் காலங்களில் பிரச்சினைகள் வராதவண்ணம் நடவடிக்கை எடுக்கும்படியும் தாழ்மையுடன் உருக்கமாக வேண்டி நிற்கின்றோம். 
இவ்வாறு அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுளள்து.

Post Comment


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "மட்டக்களப்பு வாவட்ட HNDA பட்டதாரி பயிலுனர்கள் தாம் திணைக்களங்களில் இணைக்கப்படாமை தொடர்பில் ஜனாதிபதிக்கு கடிதம்"

Post a Comment