Friday 23 November 2012

பாலியல் தொழிலாளர்களும் வெங்காயங்களும்

இலங்கையில் பாலியல் தொழிலும் சட்டரீதியாக்கப்பட வேண்டும் என்று கருத்து  கருத்து முன்வைக்கப்பட்டது. அக்கருத்தினை முன்வைக்கப்பட்டதும் பாலியல் தொழிலாளர்களுக்கு சட்ட அந்தஸ்து வழங்குவதா இல்லையா என்பதற்கு அப்பால் இவ்விடயம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த சமூக ஆர்வலர் சர்மிளா அவர்களுக்கு எதிராக ஒரு சாரார் போர்க்கொடி தூக்கியிருப்பதுடன் வண்முறையையும் பிரயோகிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.


சர்மிளா அவர்களால் நடாத்தப்படுகின்ற பாலர்பாடசாலை தீயிட்டு எரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. உண்மையில் சர்மிளா என்ன தவறு செய்தார். அவர் தன்னுடைய பேட்டியில் முஸ்லிம்கள் பாலியல்தொழில் செய்ய வேண்டும் என்றா குறிப்பிட்டிருக்கின்றார். அவர் ஒரு சமூக ஆர்வலர். பாலியர் தொழிலாளர் சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினை தொடர்பில் உண்மையின் யதார்த்தங்களை தெளிவாகக் குறிப்பிட்டிருக்கின்றார்.

ஒவ்வொருவருக்கும் கருத்துச் சுதந்திரம் இருக்கின்றது. முஸ்லிம்களுக்கு அல்லது முஸ்லிம் பெண்களுக்கு இன்னொரு சமூகத்தின் யதார்த்த உண்மை நிலைகளைப் பற்றி கருத்துச் சொல்ல கருத்துச் சுதந்திரம் இல்லையா? 

இஸ்லாம் பாலியல் தொழிலை ஏற்றுக் கொள்ளவில்லை என்பது சரி. ஆனால் பாலியல் தொழிலாளர்கள் தொடர்பில் ஒரு சமூக ஆர்வலரான பெண் கருத்துச் சொல்வதை அடக்கி ஒடுக்க நினைப்பது பெண்கள் மீதான கருத்து சுதந்திரத்தை நசுக்கவதாக அமைந்திருப்பதுடன் இது ஒரு பெண் அடிமைத் தனத்தின் வெளிப்பாடாகும்.

இன்று சமூகத் தளங்களில் கண்மூடித்தனமாக சிலர் கருத்துரைத்து வருகின்றனர். சர்மிளாவை கொலை செய்யவேண்டும் என்றகூட சிலர் கருத்துரைத்திருக்கின்றனர். இப்படிச் சொல்பவர்கள் தங்களுக்கள்ளே தாங்களோ நாம் உத்தமர்களா எனும் கேள்வியைக் கேட்டுக் கொள்ளுங்கள். ஒரு சமூகத்தைப் பற்றி யாதார்த்தங்களைப் பேசிய சர்மிளா தண்டிக்கப்பட வேண்டுமாக இருந்தால் பலரை கல்லால் எறிந்தே கொலை செய்திருக்க வேண்டும். 

அப்படியானால் அண்மையில் நடந்த ஒரு சம்பவம் மட்டக்களப்பு  பேருந்து நிலையத்தில் கையடக்கத் தொலைபேசி நடாத்தும் கடை எனும் பேரில் விபச்சாரம் நடாத்தி கையும் மெய்யுமாகப் பிடிக்கப்பட்டு கடையும் சீல் வைக்கப்பட்டது. அப்படியானால் காத்தான்குடியைச் சேர்ந்த அந்த கடை உரிமையாளருக்கு எப்பவே மரணதண்டைன வழங்கியிருக்க வேண்டும்.

விபச்சாரம் நடாத்திய ஒரு ஆண் தொடர்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் விபச்சாரம் செய்யும் பெண்கள் தொடர்பாக தமது கருத்தினைத் தெரிவித்த ஒரு பெண்ணுக்கு எதிராக போர்க்கொடி தூக்குவது பெண் அடக்குமுறைக்கும் கருத்துச் சுதந்திரத்துக்கும் எதிரான உச்சக்கட்ட வெளிப்பாடாகும்.

இன்று சர்மிளாவை அடக்கி வைத்தால் எதிர் காலத்தில் எந்தப் பெண்ணும் துணிந்து தனது கருத்துக்களை முன்வைக்க மாட்டார்கள் சர்மிளாவிற்கு வந்த நிலை தனக்கம் வரும் என்று. 

எல்லோரும் நாம் சரியாகத்தான் நடக்கின்றோமோ? கொலை கொள்ளைகளையும் இஸ்லாம் ஏற்றுக் கொள்ளவில்லை என்று நினைக்கின்றேன். ஆனால் கொலை கொள்ளை இடம்பெறவில்லையா? அமேரிக்காவில் இஸ்லாத்துக்கு எதிராக திரைப்படம் வெளியிட்டால் இலங்கையில் பஸ்ஸில் போகும் அப்பாவி மக்களுக்கு கல்லால் எறியுங்கள் என்று இஸ்லாத்தில் எங்கே சொல்லப்பட்டிருக்கின்றது. முதலில் இவ்வாறு கல்லால் எறிபவர்களை தடுத்து நிறுத்திவிட்டு சமூக சிந்தனையாளர்களின் குரல்களை நசுக்க நினைப்பதை பற்றி சிந்தியுங்கள். இவ்வாறான செயற்பாடுகள் இஸ்லாமியர்கள் தீவிரவாதப் போக்குடையவர்களாகச் சித்தரிக்கின்றது.


ஒரு பெண் வேசியாகிறாள். 18 +

பாலியல் தொழிலாளர்களும் சர்மிளா மீதான நியாயமற்ற குற்றச்சாட்டுக்களும்


தொடரும்...


Post Comment


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "பாலியல் தொழிலாளர்களும் வெங்காயங்களும்"

Post a Comment