Monday 5 November 2012

யார் யாரோ நண்பன் என்று.....

நீண்ட நாட்களாகவே வலைப்பதிவில் எழுதவில்லை. நேரம் கிடைப்பதில்லை என்று பொய் சொல்லவும் விரும்பவில்லை. உண்மையைச் சொல்லப் போனால் பதிவு எழுதும் நிலையில் மனநிலை இல்லை என்பதுதான் உண்மை. பல தடவை எழுத நினைத்தும் எழுத மனம் விடுவதில்லை.

மிகவும் கஸ்ரப்பட்டு வளர்ந்தவன், ஏழைகளின் கஸ்ரத்தையும் எதிர் நோக்கும் பிரச்சினைகளையும் நன்கு உணர்ந்தவன் நான் அதனால் ஏனோ தெரியவில்லை சிறு வயது முதல் சமூகம் சார்ந்தே சிந்திக்க தொடங்கிவிட்டேன். அதனால் இன்று நான் நடுத்தெருவில் நிக்கவேண்டிய நிலையில் என்றுதான் சொல்லவேண்டும்.

சமூகம், சமூகம் பொதுப்பணி என்று ஒவ்வொரு நிமிடமும் சிந்தித்த நான் என்னைப்பற்றி ஒரு நிமிடம்கூட சிந்திக்கவில்லை. என்னுடைய அடுத்தகட்ட நடவடிக்கைகள் என்ன எனது எதிர்காலத்திற்காக நான் என்ன செய்யவேண்டும் என்றுகூட ஒரு நாள்கூட சிந்திக்கவில்லை. 

என் தந்தை எனது பத்து வயதில் இறந்ததும் குடும்ப சுமையை நானே சுமக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டேன். பல கஸ்ரத்தின் மத்தியில் வாழ்க்கையை கொண்டு சென்றநான் ஒரு நாள்கூட எனது எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்காததன் விளைவை இன்று உணர்கின்றேன்.

சிறு வயது முதல் விவசாயம் செய்து கொண்டு படித்தநான் நான் எதிர்காலத்தில் எப்படி இருக்கவேண்டும் என்று என்னிடம் ஒரு திட்டம் இருக்கவில்லை. அதன் பலன் இன்று தெரிகின்றது. என்னடா இவன் உளறுகின்றான் என்று நினைக்கின்றீர்களா உண்மையில் இது ஒரு உளறல்தான்.

என்னுடைய நண்பர்கள் அடிக்கடி சொல்வார்கள் நீ சமூகம் சமூகம் என்று இரு உன்னைப்பற்றி சிந்திக்காதே என்று அவர்களின் கதைகளை நான் கேட்டதில்லை. அடிக்கடி என்னிடம் சிதறல்கள் றமேஸ் சொல்வார் சந்ரு நீங்கள் உங்களையும் உங்கள் எதிர்காலத்தையும் பற்றி சிந்தியுங்கள் என்று அவர் அன்று அவ்வாறு சொல்கின்றபோதெல்லாம் அவரோடு நான் கோபப்பட்டிருக்கின்றேன். அவருடன் சண்டைகூட பிடித்திருக்கின்றேன். அன்று உணராவிட்டாலும் இன்று உணர்கிறேன்.

என்னுடைய காலங்கள் சமூகம், நண்பர்கள் என்று அவர்களுக்காகவே வாழ்ந்த காலமாக உருண்டோடிவிட்டது. இன்று என்னைச்சூழ பல பிரச்சினைகள். யார் யாரோ நண்பன் என்று ஏமாந்து நிற்கும் நேரமிது. யாரெல்லாம் என்னோடு உயிர் நண்பர்களாக இருப்பார்கள் என நினைத்தேனோ அவர்கள் இன்று எனக்கு குழி பறிக்கும் நிலையில். 

அண்மைக் காலத்தில் பல ஏமாற்றங்கள். பலரை நம்பி அளவுக்கு அதிகமாக ஏமாந்துவிட்டேன். காரணம் இதுவரை எனக்காக நான் வாழ்ந்ததில்லை எனக்காக நான் சிந்திக்கவுமில்லை. என் எதிர்காலத்திற்காக நான் எதனையும் செய்யவுமில்லை. (03.12.2012) என் வாழ்க்கையின் கரிநாள் என்னால் ஒருபோதும் மறக்க முடியாதநாள். 

இப்போதுதான் என் எதிர்காலத்தைப் பற்றிச் சிந்திக்கின்றேன் என்னால் அடுத்தகட்ட நடவடிக்கை நோக்கி செல்ல முடியாத நிலை. கையில் 10 ரூபா காசு கூட இல்லாத நிலை....

Post Comment


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

2 comments: on "யார் யாரோ நண்பன் என்று....."

திண்டுக்கல் தனபாலன் said...

எல்லார் வாழ்விலும் உங்கள் நிலை வந்து போகும்... (சிலரைத் தவிர) இருந்தாலும் நம்பிக்கையோடு இருங்கள்... நல்லது நடக்கும்... பணம் மட்டுமே வாழ்க்கையே அல்ல என்பதையும் எப்போதும் மறக்காதீர்கள்... (இரு கோடுகள் தத்துவமும்)

நன்றி...

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/11/blog-post_9356.html) சென்று பார்க்கவும்... நன்றி...

Post a Comment