Sunday 11 November 2012

மட்டக்களப்பில் தொடரும் தற்கொலைகளின் மர்மம்



கிழக்கு மாகாணத்தில் தற்போது தற்கொலைகள் அதிகரித்தவண்ணமிருக்கின்றன. அதிலும் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பல தற்கொலைகள் இடம்பெற்று வருகின்றன.

இவ்வாறு தற்கொலை செய்பவர்களில் அதிகமானவர்கள் இளம் வயதினர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் தற்கொலை செய்வதற்குரிய காரணங்கள் என்ன? இவ்வாறு தொடர்ச்சியாக இடம்பெறுகின்ற தற்கொலைகளையும் தற்கொலை முயற்சிகளையும் எவ்வாறு தடுக்கலாம் என்று நாம் சிந்திக்கவேண்டியிருக்கின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்தவரை பல வழிகளிலும் மரணங்கள் அதிகரித்திருக்கின்ற நிலை காணப்படுகின்றது. புற்றுநோய் மற்றும் புதிய புதிய நோய்களினால் அதிகமானவர்கள் இறக்கின்ற நிலமை காணப்படுகின்றது. இதற்கு மரக்கறிகள் நஞ்சூட்டப்படுவதும் ஒரு காரணமாக இருப்பதாகச் சொல்லப்படுகின்றது. இதில் உண்மையும் இருக்கின்றது. இவ்விடயம் தொடர்பில் தனி ஒரு பதிவிடுகிறேன்.

மட்டக்களப்பில் தற்கொலை செய்து கொண்ட பலரைப் பார்க்கின்றபோது சின்ன சின்ன விடயங்களுக்கு தற்கொலை செய்தவர்களே அதிகம். சிறிய ஒரு விடயத்தைக்கூட தாங்கிக்கொள்ள முடியாமல் தற்கொலை செய்தவர்கள் ஒரு புறமிருக்க தங்களுக்கு ஏதோ ஒரு வகையில் மனத்தாக்கங்கள் வருகின்றபோது. அவர்களுக்கு ஆறுதல் சொல்ல யாரும் இல்லை என்பதனாலும் தற்கொலைக்கு நாடிச் செல்கின்றனர்.

இன்றைய கால கட்டத்தில் தாய் தந்தையர் குழந்தைகளோடு பிள்ளைகளோடு ஒரு ஐந்து நிமிடம் கதைக்கக்கூட நேரம் இல்லாது செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இதனால் பெற்றோர் பிள்ளைகளுக்கிடையில் இடைவெளி அதிகமாக இருக்கின்றது.

பிள்ளைகளைப் பொறுத்தவரை தங்களுக்கு ஏற்படுகின்ற பிரச்சினைகளை மற்றவர்களுடன் பகிர்ந்து ஆறுதல் அடைகின்ற நிலை இல்லாமல் போகின்றது. இதனால் பலர் தற்கொலையை நாடிச் செல்கின்றனர்.

அதேபோன்று யுத்தம் விட்டுச் சென்ற எச்சங்களாகவும் இந்த தற்கொலைகள் இடம்பெறுகின்றன. குடும்பசுமை காரணமாகவும் இளம் பெண்கள் தற்கொலையை நாடிச் செல்கின்றநிலை காணப்படுகின்றது. இவ்வாறான நிலைகள் மாற்றப்பட வேண்டும்.

அரசியல்வாதிகள் வீரவசனம்பேசுவதை தவிர்த்து மட்டக்களப்பு மாவட்டத்திலே இருக்கின்ற விதவைகளின் வாழ்வாதாரம் தொடர்பில் சிந்திக்கவேண்டம். மட்டக்களப்பிலே இருக்கின்ற விதவைகள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டாலே மட்டக்களப்பில் பல பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டுவிடலாம்.

அதே போன்று முடிந்தவரை பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையிலான நெருக்கத்தினை அதிகரிப்பதன் மூலமும் இளம் வயதினர் தற்கொலை செய்வதிலிருந்து தவிர்த்துகொள்ள முடியும்.

தற்கொலை புள்ளி விபரங்கள் தகவல்களோடு மற்றுமொரு பதிவு இட இருக்கின்றேன்...

Post Comment


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "மட்டக்களப்பில் தொடரும் தற்கொலைகளின் மர்மம்"

Post a Comment