Wednesday 21 November 2012

பாலியல் தொழிலாளர்களும் சர்மிளா மீதான நியாயமற்ற குற்றச்சாட்டுக்களும்


பாலியல் தொழிலை சட்டரீதியாக்குவதா இல்லையா என்பதற்கு அப்பால் இன்று சமூக ஆய்வாளரும் சமூக அபிவிருத்திக்கான நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரியுமான சர்மிளா செய்யத் அவர்கள் BBC க்கு பாலியல் தொழில் தொடர்பில்  வழங்கிய பேட்டியின் காரணமாக முஸ்லிம்களும் முஸ்லிம் சமூக அமைப்புக்களும் போர்க்கொடி தூக்கியுள்ளன.

என்னைப் பொறுத்தவரை சர்மிளா அவர்கள் வழங்கிய பேட்டியில் எந்தவிதமான தவறும் இல்லை. சர்மிளா அவர்கள் சமூக ஆய்வாளராகவும்  சமூக அபிவிருத்திக்கான நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரியாகவுமே தமது கருத்தினை தெரிவித்திருக்கின்றார். பின்னர் தனது கருத்து தொடர்பில் எழுந்த எதிர்ப்புக்களின் பின்னர் சரியான விளக்கத்தினையும் கொடுத்திருக்கின்றார்.

விபசாரம் இஸ்லாத்தில் வன்மையாக எச்சரிக்கப்பட்டதும் ஹராமாக்கப்பட்டதும் என்பது உண்மைதான் ஆனால் இங்கே சர்மிளா அவர்கள் தனது தனிப்பட்ட கருத்தை சொல்லவில்லை. இலங்கையில் இருக்கின்ற உண்மையாகன யதார்த்தங்களை சொல்லி இருக்கின்றார். இங்கே அவரை முஸ்லிம் பெண் என்ற ரீதியில் பேட்டி எடுக்கப்படவில்லை சமூக ஆய்வாளரும் சமூக அபிவிருத்திக்கான நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரியும் என்கின்ற ரீதியிலே தமிழ், சிங்கள, முஸ்லிம் சமூகங்களை ஒன்றிணைத்தே அவரது கருத்துக்கள் கேட்கப்பட்டன.

ஒரு சமூக ஆய்வாளரும் சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் பணிப்பாளருமாக இருக்கின்ற ஒருவர் சமூக ரீதியான கருத்துக்களை தெரிவிக்கும்போது தமது மதம், இனம் என்பவற்றிற்கு அப்பால் ஒட்டுமொத்த சமூகத்தின் யதார்த்தத்தையும் உண்மை நிலைகளையும் வெளியிட வேண்டும் அதனடிப்படையிலே சர்மிளா அவர்கள் உண்மையின் யதார்த்தங்களை தனது கருத்தினை தெரிவித்திருக்கின்றார்.




இங்கே இருக்கின்ற அதிகமான பாலியல் தொழிலாளர்கள் தாமாக பாலியல் தொழிலுக்கு வரவில்லை. அவளை சுற்றி இருக்கின்ற சமூகமே அவளை பாலியல் தொழிலாளியாக மாற்றியது. (காரணங்கள் முன்னைய பதிவில் விளக்கமாக இருக்கின்றது)


இன்று வறுமையின் காரணமாக விபச்சாரத் தொழிலுக்கு வந்தவர்களே அதிகம் அவர்கள் சமூகத்தால் வேசி என்று ஓரம் கட்டப்பட்டு சமூகத்திலிருந்து ஒதுக்கப்பட்டிருக்கின்றாள். பாலியல் தொழில் செய்யும் பெண்ணை வேசி என்று ஒதுக்கி வைக்கின்றனர். ஆனால் அந்த வேசியுடன் உறவுகொண்டுவிட்டு வருபவனை வீரனாக வீட்டிற்குள் வைத்திருக்கம் சமூகம். இதில் வேடிக்கை உயர் அந்தஸ்தில் இருப்பவர்கள்தான் (எல்லோருமல்ல) பாலியல் தொழிலாளர்களை அதிகம் நாடுவதாக சொல்லப்படுகின்றது.


இங்கேயும்

தொடரும்....

Post Comment


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "பாலியல் தொழிலாளர்களும் சர்மிளா மீதான நியாயமற்ற குற்றச்சாட்டுக்களும்"

Post a Comment