Friday 17 June 2016

உடைக்கப்படும் பேனாக்களும் சிதைக்கப்படும் உணர்வுகளும்

நல்லாட்சியில் நல்லபல விடயங்கள் நடந்தேறினாலும் கருத்துச் சுதந்திரம் ஊடக சுதந்திரம் என்பது கேள்விக்குறியாகவே இருக்கின்றது . ஊடகவியலாளர்கள் மிரட்டப்படுதும் தாக்கப்படுதும் தொடர்ந்தவண்ணமுள்ளன. அரசியல்  வாதிகளும் அரச அதிகாரிகளும் ஊடக சுதந்திரம் பற்றிப் பேசினாலும் சிலருக்கு உதட்டளவில் மட்டுமே ஊடக சுதந்திரம் இருக்கின்றது.


ஊடகவியலாளர் பெரடி கமகே தாக்கப்பட்டதை கண்டித்தும் ஊடகவியலாளர்களை பாதுகாக்ககோரியும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் ஏற்பாடு செய்த கையெழுத்து போராட்டம் இன்று காந்தி பூங்க முன்னிலையில் இடம்பெற்றது. நீர்கொழும்பு மாநகரசபைக்குள் வைத்து ஊடகவியலாளர் பெரடி கமகே தாக்கப்பட்டார் அவருக்கு நீதி கிடைத்ததா? அவருக்கு சரியான நீதி கிடைக்கவேண்டும். அதற்காக அனைத்து ஊடகவியலாளர்களும் மனிதநேய அமைப்புக்களும் அரசியல்வாதிகளும் குரல்கொடுக்கவேண்டும்.

இந்த கையெழுத்துப் போராட்டத்தில் பல பொது மக்களும் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் கலந்துகொண்டனர். அவர்கள் கலந்துகொண்ட அரசியல்வாதிகள் ஊடகவியலாளர்களின் நலனில் அக்கறையுடன் செயற்படவேண்டும் என்பதே எனது வேண்டுகோள். உனக்கில்லடி உபதேசம் ஊருக்குத்தாண்டி என்ற நிலை இருக்கக்ககூடாது

அது ஒருபுறமிருக்க மட்டக்களப்பில் கருத்துச் சுதந்திரமும் ஊடக சுதந்திரமும் இருக்கின்றதா? ஊடக சுதந்திரம் பற்றி வாய் கிழிய கிழிய பேசும் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் ஊடக சுதந்திரத்தை மதித்து செயற்படுகின்றனரா? 

மட்டக்களப்பில் அரசியல் வாதிகளும் அரச அதிகாரிகளும் விடுகின்ற தவறுகளையும் ஊழல்களையும் சுட்டிக்காட்டுகின்ற ஊடகவியலாளர்கள் மிரட்டப்படுகின்ற பொலிஸ் இல் கொடுத்து மிரட்டப்பட்ட சம்பங்கள் மட்டக்களப்பில் அண்மைக் காலத்தில் இடம்பெற்றிருக்கின்றன. 

அண்மையில் அரச அதிபர் தொடர்பாக செய்தி வெளியிட்டதற்காக ஊடகவியலாளர் எஸ்.நிலாந்தன் அவர்கள் அண்மையில் பொலிஸ் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார். 

அதே போன்று நான் ஒரு பாராளுமன்ற உறுப்பினரைப் பற்றி முகப்புத்தகத்தில் எழுதியதற்காக என்னை பொலிஸ் இல் கொடுக்கப்பட்டு பொலிஸ் அழைத்து மிரட்டப்பட்டிருந்தேன். கருத்து சுதந்திரத்தையும் ஊடகவியலாளர்களையும் பாதுகாக்கவேண்டிய அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் ஊடகவியலாளர்களை குழிதோண்டிப் புதைக்க நினைப்பது வேதனை.

மற்றொரு புறத்தில் எமது மட்டக்களப்பு ஊடகவியலாளர்களிடையே ஒற்றுமை இன்மை நிலவுகின்றது. போட்டி பொறாமை காட்டிக்கொடுப்புக்கள் என்று தொடர்கின்றன. ஊடகத்தைப் பொறுத்தவரை போட்டி அதிகம்தான் ஆனாலும் எமது ஊடகவியலாளரிடையே அதையும் தாண்டிவிட்டது.

ஒரு ஊடகியலாளனுக்கு ஒன்று என்றால் அனைவரும் ஒருமித்து குரல்கொடுக்கவேண்டும் ஆனால் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளனுக்கு எதிராக ஊடகவியலாளர்களே செயற்படும் நிலை காணப்படுகின்றது.

இந்த நிலை வேண்டும். மட்டு ஊடகவியலாளர்கள் அனைவரும் ஒன்றுபட்டு செயற்படவேண்டும். அனைவரும் ஒருமித்து குரல்கொடுக்கவேண்டும்.
மட்டக்களப்பில் சரியான ஒரு ஊடகக் கட்டமைப்பு ஒன்று ஏற்படுத்தப்படவேண்டும். 









Post Comment


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "உடைக்கப்படும் பேனாக்களும் சிதைக்கப்படும் உணர்வுகளும்"

Post a Comment