கிழக்கு மாகாணத்திலே போர், சுனாமி, வறுமை மற்றும் ஏனைய அணர்த்தங்களால் கணவனை இழந்து இருக்கின்ற பெண்களுக்கு அவர்களை வாழ்வாதாரத்தை ஈட்டும் முகமாக கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் இந்திய சேவா பெண்கள் அமைப்புடன் கேட்டுக்கொண்டதற்கு அமைய இந்திய சேவா பெண்கள் அமைப்பானது கிழக்கு மாகாணசபையுடன் இனைந்து கிழக்கு மாகாணத்திலுள்ள விதவைகளின் வாழ்வாதார மேம்பாட்டினை முன்னெடுப்பதற்கு இவர்கள் முன்வந்துள்ளனர்.
(05.07.2011) மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வந்த இந்திய சேவா பெண்கள் அமைப்பின் முக்கியஸ்த்தர்கள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சி.சந்திரகாந்தன் அவர்களின் வாசஸ்தலத்தில் சந்தித்து கலந்துரையாடினர். ஆதன் அடிப்படையில் கிழக்கு மாகாணத்திலே உள்ள விதவைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு பல்வேறு செயற்த்திட்டங்களையும், பயிற்சிகளையும் தாம் வழங்க முன்வந்தமை தொடர்பாக கிழக்கு முதல்வர் சி.சந்திரகாந்தன் அவர்கள் கலந்துரையாடியுள்ளார்.
முதல் கட்டமாக மட்க்களப்பு மாவட்டத்திலே போரினால் பாதிக்கப்பட்ட விதவைகளுக்கு பயிற்சி வழங்குவதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவிலும் இருந்து 40 பயிற்ச்சி போதனா ஆசிரியர்கள் இந்தியா சென்று பயிற்ச்சி பெறும் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டதோடு அப்பயிற்சிநெறி முடிவுற்றதும் உடனடியாக மட்டக்களப்பு மாவட்டத்திலே யுத்தத்தால் பாதிக்கப்பட்ட 800 விதவைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கான பயிற்சி நெறி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2வருட காலங்களை அடிப்படையாக மேற்படி செயற்த்திட்டத்திற்காக கிழக்கு மாகாணத்திலே கணவனை இழந்த விதவைகளுக்கு சுயதொழில் வாய்ப்புக்களை வளங்கமுடியமென கிழக்கு முதல்வர் சி.சந்திரகாந்தன் தெரிவித்தார். மேற்படி செயற்த்திட்டமானது முற்று முழுதாக இனைந்ததாகவே அமைந்திருக்கும் எனவும் இந்திய சேவா பென்கள் அமைப்பின் சார்பில் கலந்து கொண்ட திருமதி.உமாதேவி சுவாமிநாதன் தெரிவித்தார். கிழக்கு மாகாணசபைக்கும் இந்திய சேவா பெண்கள் அமைப்பிற்குமான ஒப்பந்தம் எதிர்வரும் 2 வாரகாலங்களுக்கு மேற்கொள்ளப்படும்.
இந் நிகழ்வில் கிழக்கு மாகாண சமுகசேவை திணைக்கள பணிப்பாளர் மணிவன்னன், இந்திய சேவா பெண்கள் அமைப்பு உமாதேவி சுவாமிநாதன், வயகல் சோடாலியா, வீனா சர்மா மற்றும் முதலமைச்சரின் செயலாளர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டார்கள்.
12 comments: on "கிழக்கு மாகாண விதவைகளுக்கு கைகொடுக்க முன்வந்துள்ள இந்திய சேவா பெண்கள் அமைப்பு"
வரவேற்க்கத்தக்க நிகழ்வு
வடை யாருக்கு ?
உதவி எந்த பக்கமிருந்து வந்தாலும் ஏற்போம்.
வணக்கம் சகோ,
மகிழ்ச்சிக்குரிய செய்தி சகோ,
இவ்வாறான உதவிகள், திட்டங்கள் மூலமாவது எம் நாட்டில் வேலையில்லாப் பிரச்சினை, வறுமை முதலியன நீங்கி, எங்கள் நாட்டில் முன்னேற்றம் ஏற்படும் என நம்புவோம் சகோ.
மனதுக்கு மகிழ்ச்சியான செய்தி
மகிழ்ச்சிக்குரிய, வரவேற்கவேண்டிய விடயம். இப்படியான திட்டங்கள் மூலம் பல பிரச்சினைகள் தீரும்
நல்ல நிகழ்ச்சிகளும் நடக்கிறது நம்மூர்களில் என்கிறீர்கள் சந்ரு !
Thanks 4 sharing..
நல்ல விஷயம்.
மிகவும் சந்தோசமான செய்தி சகொதரா.. ஏதாவத உதவி தேவையானால் கேளுங்கள் முடிந்ததை செய்கிறேன்..
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
என்னைச் செருப்பால் அடித்த இலங்கைப் பதிவர்
வணக்கம் அருமையான் தகவல் சொன்னீர்கள் சகோ.
மனதிற்கு நிறைவாக உள்ளது வாழ்த்துகள் இவர்களது
முயற்சி நல்விதமாய்ப் பயனளிக்க.நன்றி சகோ பகிர்வுக்கு.
முடிந்தால் என் தளத்தில் ஒரு பாடல் பகிர்ந்துள்ளேன்
அதை ஒருமுறை கேட்டுப் பாருங்கள்.
வணக்கம் அன்பு சகோதரரே என் தளத்தில் ஒரு பாடலை இன்று எழுதியுள்ளேன் இதற்கு உங்களின்
கருத்தினையும் எதிர்பார்க்கின்றேன் நேரம் கிடைக்கும்போது முடிந்தால் கருத்திடுங்கள் மிக்க நன்றி ......
Post a Comment