Monday, 15 August 2011

அரசியலாகும் மர்ம மனித விவகாரம்.


படித்து பட்டம் பெற்றும் இலங்கையில் வேலை கிடைக்கவில்லையே என்று வெளிநாடு சென்றால் அங்கேயும் வேலை கிடைப்பதாக இல்லை. ஏமாற்றம்தான் கிடைத்தது. கடந்த மாதம் 10ம் திகதி நாட்டுக்கு வந்துவிட்டேன். தொடர்ந்தும் பதிவுகளோடு சந்திப்போம். 


இன்று பரவலாகப் பேசப்படுகின்ற விடயம் மர்ம மனிதன் விடயம். அவ்விடயம் தொடர்பாக கிழக்கு மாகான முதலமைச்சரின் கருத்துக்கள்.


இது தொடர்பான பல விடயங்களை தனி ஒரு பதிவாக தர இருக்கின்றேன். மர்ம மனிதன் விடயம் அதிகமான வதந்திகளால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கின்றது என்பதுதான் உண்மை.


மர்ம மனிதன் தொடர்பான எனது விரிவான பதிவு வரும்....

தற்போது நாட்டின் பல பாகங்களிலும் கிரீஸ் மனிதன் , மர்ம மணிதன் என்கின்ற ஓர் மாயை தோற்றுவிக்கப்பட்டு குறித்த சில பிரதேசங்களில் இயல்பு நிலை பாதிக்கப்பட்டு இருக்கின்றது. இவ்வாறான சூழலை தங்களுக்கு ஏற்றால் போல் ஒருசில அரசியல்வாதிகள் சாதகமாக்கி மக்களை மீண்டும் பீதியில் உறையச்செய்திருக்கிறார்கள் என கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார். நேற்று  (14.08.2011) மட்டக்களப்பு இருதயபுரம் ஈஸ்;டன் ஸ்டார் விளையாட்டு மைதானத்தின் திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார்.

தோடர்ந்து அவர் பேசுகையில் நாடெங்கிலும் பல பாகங்களிலும் அபிவிருத்திப்பணிகள் துரிதமாக முன்னெடுத்துச் செல்லப்படுகின்றது.  நாட்டின் சகல பாகங்களிற்கும் எந்நேரத்திலும் சென்று வரக்கூடிய ஓர் சமாதான சூழ்நிலை காணப்படுகின்றது. இதனை குழப்புவதற்கான சதிமுயற்சிகளாக கூட இது இருக்கலாம். உன்மையில் பார்த்தால் கடந்த ஒரு சில நாட்களாக மட்டக்களப்பு மாவட்டத்திலே குறிப்பிட்ட சில நிகழ்வுகள் நடந்திருக்கின்றன. இதனால் முற்று முழுதாக இயல்பு நிலை பாதிக்கப்பட்டு சன நடமாட்டம் குறைவடைந்து இரானுவ வீரார்களே தெருக்களெல்லாம் குவிக்கப்பட்டுள்ளார்கள்.
இதனால் மக்கள் மத்தியில் பல்வேறு ஐதீகங்களும் எழுகின்றது. இதனை முதலில் கட்டுப்படுத்தி பூரண தெளிவுபடுத்தலை ஏற்படுத்தி சமாதான நிலையினை கொண்டு வருவதற்கு பாதுகாப்பு தரப்பினர் முதலில் முன்வரவேண்டும். 

நேற்று (13.08.2011) நாவற்குடா என்ற இடத்தில் நடாத்த ஓர் சம்பவம் அதாவது வெளிஊரில் உள்ள ஒரு பையன் தனது உறவினர் வீட்டுக்கு வந்திருக்கிறான், வீடு சரியான முறையில் அடையாளம் காணமுடியாததால் அயலில் உள்ள ஒருவரிடம் விசாரித்து இருக்கின்றனர். அவர் கிரிஸ் மணிதன் என சந்தேகித்து அவரை கடுமையமக தாக்கி கம்பத்திலும் கட்டி வைத்திருக்கின்றார்கள் அதனை அறிந்த பொலிசார் குறித்த ஸ்தலத்திற்கு விரைந்த போது பொலிசாருக்கும் பொதுமக்களுக்கும் முறுவல் கிலை மேற்பட்டு கலவரமாகமாறி பிரச்சனைகள் ஏற்பட்டிருக்கின்றது. குறித்த சம்பவம் அவ்விடத்தில் நடைபெற்றிருக்கும் போது அவ்விடத்திற்கு சென்ற தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் மீண்டும் அங்கொரு முறுவல் நிலை தோற்றுவித்திருக்கின்றார்.

அதாவது உன்மை நிலை என்னவென்று அறியாது அவர் குறித்த நகரை தாக்கியது சரிஎனவா தீட்டு பிரச்சனையை தோற்று வித்திருக்கின்றார்கள்.
எதுவமே அறியாத அந்த அப்பாவி தாக்கப்பட்டிருக்கின்றான். அதனை விசாரிக்காமல் அரசியல் இலாபம் தேடுவதற்கு அவ்விடத்திற்கு சென்று போதைக்காக ஏதும் கதைக்கவேண்டும் என்பதற்காக கதைத்துவிட்டு வந்திருக்கிறார். எனவே இயல்பு வாழ்க்கையரும் குழப்புவதற்கு இடமளிக்கக்கூடாது.

Post Comment


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

4 comments: on "அரசியலாகும் மர்ம மனித விவகாரம்."

நிரூபன் said...

வணக்கம் பாஸ்,
எப்படி இருக்கிறீங்க?
இப்போது மன்னார் வரைக்கும் இந்த கிரிஸ் மனிதன் விவகாரம் வந்து விட்டது,
விரிவான தகவல்களை நீங்கள் பகிருவீங்க என எதிர்பார்க்கிறேன்.

koodal bala said...

வாங்க மாப்ள ....ரொம்ப நாளைக்கப்புறம் .........மீண்டும் கலக்குங்கள் ..

மைந்தன் சிவா said...

ஹாய் பாஸ்..என்ன ஊருக்கே வந்திட்டீங்களா??
ம்ம்ம்
கவனம் கிரீஸ் மனிதன்!!!

ஸ்ரீராம். said...

இன்றுதான் இங்கும் செய்தித் தாள்களில் படித்தேன்.

Post a Comment