Monday 26 July 2010

திருந்தாத ஜென்மங்களை திருத்த புறப்பட்டு விட்டோம்.

மனிதர்களிடையே உயர்ந்த சாதிக்காரன் குறைந்த சாதிக்காரன் என்று சாதி வேற்றுமை பார்க்கின்ற ஒரு குட்டம் ஒருபுறமிருக்க. ( இது பற்றி விரிவான ஒரு பதிவு பின்னர் வரும்) சில விடயங்களிலே தனது மேலாதிக்கம் நிலைத்திருக்க வேண்டும் என்று சிலர் எதனை செய்யவும் தயங்கமாட்டார்கள். 

பல விடயங்களை எழுதவேண்டும் என்று நினைத்தாலும் இப்போது எங்கள் கிராமத்திலே களுதாவளை திருநீற்றுக்கேணி சிவசக்தி சிறி முருகன்  ஆலயத்திலே திருவிழா நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. அதனால் நேரம் என்பது கிடைப்பதில்லை. காரணம் நானும் எனது நண்பர்களும் சமுக சேவைக்கென்றே எங்களை அர்ப்பணித்த வர்களாகிவிட்டோம்.  எமது சமுக சேவைகளில் சிலவற்றை இங்கே சென்று பார்க்கவும்



பல சமுக சேவைகளை செய்து வருகின்ற நாம் எமது மற்றுமொரு முயற்சியாக எங்கெல்லாம் எங்களால் உணவு கொடுக்க முடியுமோ (அன்னதானம்)  இயற்கை அழிவு மக்கள் இடம்பெயர்வு, ஆலயங்கள் போன்றவற்றில் உணவு வழங்குவதற்கு தீர்மானித்திருந்தோம். 


அதன் முதல் கட்ட நடவடிக்கையாக இந்த ஆலயத்திலே ஆலயத்துக்கு வரும் அடியார்களுக்கு  அன்னதானம் வழங்குவதற்குரிய ஏற்பாடுகளை செய்தோம் அப்போதுதான் பிரச்சினை ஆரம்பமானது.

நாங்கள் ஆலயத்திலே அன்னதானம் வழங்கப்போகின்றோம் என்ற விடயத்தை ஆலய நிர்வாகத்திடம் சொன்னபோது.  அந்த ஆலயத்திலே வருடம்தோறும் அன்னதானம் வழங்குகின்ற ஒரு குழுவினர் எங்களை அன்னதானம் கொடுக்கக் கூடாது தாங்கள் மட்டுமே இங்கே அன்னதானம் கொடுக்க வேண்டும் என்று  எங்களோடு வாக்குவாதப்பட ஆரம்பித்துவிட்டனர்.  


இந்த விடயத்தில் ஆலய நிர்வாக சபையும் ஆலயத்திலே வேறு எவரும் அன்னதானம் வழங்கக் கூடாது என்று சொல்லிவிட்டனர்.  


இன்று பல இடங்களிலே இவ்வாறுதான் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது.  சில உரிமைகளை தாங்களே வைத்துக் கொண்டிருக்க வேண்டும். என்று நினைக்கின்றனர். பல ஆலயங்களிலே இது போன்ற நிகழ்வுகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன அவை பற்றி பின்னர் விரிவாக எழுத இருக்கின்றேன்.  இங்கே ஒரு சிலரிடம் மட்டுமே சில உரிமைகள் இருக்கவேண்டும் தாங்கள் பெயரெடுக்கவேண்டும் என்ற நிலை இருக்கின்றது. 


இந்த ஆலயத்தைப் பொறுத்தவரை பிரசித்தி பெற்ற ஒரு ஆலயம். பல அடியவர்கள் வருகின்ற ஆலயம்.  இங்கே இன்னொருவர் அன்னதானம் கொடுக்க முடியாத நிலைக்கு வைத்திருக்கின்றார்கள் என்பதனை நினைக்கும்போது கவலையாக இருக்கின்றது.


யார் தடுத்தாலும் பரவாயில்லை என்று நாங்கள் பல எதிர்ப்புகளுக்கும் மத்தியில் அன்னதானம் கொடுப்பதென முடிவெடுத்துவிட்டோம்.  திருந்தாதவர்களை திருத்த வேண்டும்.  இத்தனைக்கும் மேல் நாம் எவருடைய உதவி பெற்றும் அன்னதானம் கொடுக்க நினைக்கவில்லை எங்களது பணத்தைக் கொண்டுதான் இந்த ஏற்பாடுகளை செய்கின்றோம். 


ஒரு ஆலயத்திலே ஒரு பக்தன் அன்னதானம் கொடுப்பதையே தடை செய்யும் மனிதர்கள் உண்மையிலே மனிதர்களா?

Post Comment


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

2 comments: on "திருந்தாத ஜென்மங்களை திருத்த புறப்பட்டு விட்டோம்."

Anonymous said...

யார் தடுத்தாலும் பரவாயில்லை என்று நாங்கள் பல எதிர்ப்புகளுக்கும் மத்தியில் அன்னதானம் கொடுப்பதென முடிவெடுத்துவிட்டோம். திருந்தாதவர்களை திருத்த வேண்டும். இத்தனைக்கும் மேல் நாம் எவருடைய உதவி பெற்றும் அன்னதானம் கொடுக்க நினைக்கவில்லை எங்களது பணத்தைக் கொண்டுதான் இந்த ஏற்பாடுகளை செய்கின்றோம்."

நல்ல முடிவு சந்துரு ..இப்பவாது அவங்க திருந்துவாங்களோ என்று பாப்போம் இல்லே ?

கனககோபி said...

ithellaam oru pathivaa????

naaye!

Post a Comment