Saturday 19 June 2010

இன்றைய கல்வி சமுகத்தின் நகைப்புக்கிடமான செயற்பாடுகள்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் வந்தாறுமூலையில் அமைந்திருக்கின்ற மிகப் பிரபல்யமான கிழக்கு பல்கலைக்கழக விடுதியிலே 17.06.2010 அன்று இரவு இரு மாணவ குழுக்களிடையே ஏற்பட்ட தகராறு மிகவும் பூதாகரமாக வெடித்துள்ளது.
 கடந்த காலங்களோடு ஒப்பிடுகின்ற போது கிழக்கு பல்கலைக்கழகத்திலே மூவின மாணவர்களும் கல்வி பயின்று வருவது விசேட அம்சமாகும். கடந்த காலங்களில் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக தமிழ் பேசும் மாணவர்களே இப்பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்று வந்தார்கள். அனால் தற்போது நாட்டில் சாதாரண சூழலால் சமூக மேம்பாட்டு அபிவிருத்திக்காக பெரும்பான்மை இன மக்களும் சிறுபான்மை இன மக்களோடு இணைந்து கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடுவது பாராட்டுக்குரியது. எது எவ்வாறாயினும் சில கசப்பான சம்பவங்கள் கல்விச் சமூகத்தின் மத்தியிலிருந்து ஏற்படுவது வேடிக்கையான விடயமே ஆகும்.

கடந்த 17.06.2010 அன்று கிழக்கு பல்கலைக்கழகத்தின் ஆண் மாணவர்களின் விடுதியில் நடந்த சம்பவத்திற்கான உண்மை காரணங்கள் தொடர்பாக எமக்கு தெரிய வந்தவைகளை உங்களோடு பகிர்ந்து கொள்கின்றேன். குறித்த சம்பவம் நடந்த போது விடுதியி;ல் சுமார் 17 சிங்கள மாணவர்கள் இருந்திருக்கின்றார்கள். இவர்கள் அனைவரும் வர்த்தக பிரிவு மாணவர்கள். இங்கு கல்வி கற்கின்ற சிங்கள மாணவர்கள் ஓரிரு வாரங்களுக்கு முன்னர் போயா தின (பொஷன்) நிகழ்வினை சிறப்பித்து அனுஷ்ட்டிப்பதற்காக மாணவர்கள் மத்தியில் நிதி வசூலித்திருக்கின்றார்கள். அதற்கு அனைத்து மாணவர்களும் ஒத்துளைப்பு வழங்கினார்கள். ஆனால் இந் நிதி அதற்காக பயன்படுத்தவில்லை என தமிழ் மாணவர்கள் தெரிவித்திருக்கின்றார்கள். உண்மையிலேயே குறித்த இந்நிதியானது போர் வீரர்களின் வெற்றியினை கொண்டாடுவதற்காகவே அறவிடப்பட்டது என ஒரு சிலர் குறிப்பிடகின்றார்கள். குறித்த அன்றிரவு பெரம்பான்மை இன மாணவர்கள் மது போதையுடன் கூடிய ஓர் விருந்துபசாரத்தினையும்; ஏற்பாடு செய்திருந்தார்கள். இவ் மதுவிருந்துபசாரம் எதற்காக ஏற்பாடு செய்யப்பட்டது என்பதிலேயே இப்பிரச்சினை ஆரம்பித்திருக்கின்றது.

உண்மையிலேயே வட பகுதி மாணவர்கள் ஒரு சிலர் போராட்டத்தின் கொடுமையில் நேரடியாக பாதிக்கப்பட்டவர்கள் அதாhவது தாய் தந்தை சகோதரங்களை இழந்தவர்கள் இவர்கள் அவ் மதுவிருந்துபசாரத்தினை ஏற்பாடு செய்த மாணவர்களிடம் கூறியிருக்கின்றார்கள். “நீங்கள் எது வேண்டுமானாலும் செய்யுங்கள் ஆனால் எங்களது அறைக்கு வராமல்” ஆனால் அச்சிங்கள மாணவர்கள் அன்றிரவு பெரும் கூச்சலிட்டு ஆரவாரம் பண்ணியிருக்கின்றார்கள். எனவே இதனை பொறுக்காத ஒரு சில மாணவர்கள் அவர்களுடன் வார்த்தைகளால் மோதியிருக்கின்றார்கள் இதனால் முறுகல் நிலை கைகலப்பு வரை செல்லுமளவுக்கு சூடானது. ஆனால் கைகலபு; இடம்பெறவில்லை. பின்னர் பல்கலைக்கழக நிர்வாகமும் பொலிசாரும் தலையிட்டு பிரச்சினையினை தீர்வுக்கு கொண்டுவந்தனர்.

இதனூடாக வெளிப்படுவது உண்மையில் இரண்டு விடயங்கள், அதாவது அக்குறித்த சிங்களன மாணவர்கள் வேண்டுமென்றே இதனை செய்திருந்தால் போராட்டத்தின் வலியினை நேரடியாக தாங்கிய தமிழ் மாணவர்களுக்கு வேதனையளித்திருக்கும். அத்தோடு குறிபிபிட்ட ஒரு சில சிங்கள மாணவர்கள் பெருந்தொகையாக இருக்கின்ற தமிழ் மாணவர்களுக்கு எதிராக செயற்பட்டமை என்பது வேதனையே. போரின் வடுக்கள் இன்னும் அழியாத நிலையில் இப்படியான போர் வெற்றியினை அதில் நேரடியாக ஈடுபடாதவர்கள் அதே ஒரு பெரும் கல்விச் சமூகம் பாதிக்கப்பட்ட மாணவர்கள் இருக்கின்ற இடத்தில் கொண்டாடுவதென்பது உண்மையில் வேதனையே, ஆனால் இராணுவ வீரர்களோ அதன் பங்காளர்களோ அதனை கொண்டாடுவது நியாயம் என ஒரு புறம் இருந்தாலும், இவ்வாறான நன்கு கற்ற சமூகம் ஒரு புரிந்துணர்வுடன் செயற்படாமை வேதனையளிக்கின்றது.

அடுத்தது என்னவெனில் குறித்த சிங்கள மாணவர்கள் இங்கிருந்து இடமாற்றம் பெற்றுச் செல்ல வேண்டும் என்பதற்காகவும் இதனை ஒரு பெரிய பிரச்சினையாகக்கியிருக்கலாம் எனவும் எண்ண தோன்றுகின்றது. எது எவ்வாறாயினும் படித்த ஒரு சமூகம்தான் சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டியவர்கள் அவர்களே தங்களுக்குள் தாங்கள் புரிந்துணர்வின்றி செயற்படவது உண்மையில் வெட்கமாக இருக்கின்றது. இது முடிந்தவை முடிந்தவையாக இருக்கட்டும் இனி வருங் காலங்களில் இது போன்ற தவறுகளை விடாமல் மாணவர் சமூகங்கள் ஒரு சமூகத்தின் விருப்பு வெறுப்புக்களுக்கு அப்பாற்பட்ட சமூகத்தின் ஒற்றுமைக்கான தோற்றுவாயாக அமைய வேண்டும் என நான் எதிர்பார்க்கின்றேன்.

மீன்மகளுக்காக,
நரசிம்மன்.

நன்றி மீன்மகள்

Post Comment


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

3 comments: on "இன்றைய கல்வி சமுகத்தின் நகைப்புக்கிடமான செயற்பாடுகள்."

Anonymous said...

//இங்கு கல்வி கற்கின்ற சிங்கள மாணவர்கள் ஓரிரு வாரங்களுக்கு முன்னர் போயா தின (பொஷன்) நிகழ்வினை சிறப்பித்து அனுஷ்ட்டிப்பதற்காக மாணவர்கள் மத்தியில் நிதி வசூலித்திருக்கின்றார்கள்.//
இந்த நிதி வசூலிப்பு என்பதே தவறானது. நிதி வசூலிப்பு என்ற லாபகரமான தொழிலுக்காகவே தேசிய ஆதரவாளர்கள் என்போர் தமிழீழ இறுதி போர் என்ற பெயரில்வெளி நாடுகளில் இலங்கையில் அழிவை ஏற்படுத்துவதற்காக வெளி நாடுகளில் நிதி வசூலிப்பு நடத்தி கொள்ளை லாபம் சம்பாதித்தனர் என்பதை மறக்க கூடாது.

Admin said...

//பெயரில்லா கூறியது...
//இங்கு கல்வி கற்கின்ற சிங்கள மாணவர்கள் ஓரிரு வாரங்களுக்கு முன்னர் போயா தின (பொஷன்) நிகழ்வினை சிறப்பித்து அனுஷ்ட்டிப்பதற்காக மாணவர்கள் மத்தியில் நிதி வசூலித்திருக்கின்றார்கள்.//
இந்த நிதி வசூலிப்பு என்பதே தவறானது. நிதி வசூலிப்பு என்ற லாபகரமான தொழிலுக்காகவே தேசிய ஆதரவாளர்கள் என்போர் தமிழீழ இறுதி போர் என்ற பெயரில்வெளி நாடுகளில் இலங்கையில் அழிவை ஏற்படுத்துவதற்காக வெளி நாடுகளில் நிதி வசூலிப்பு நடத்தி கொள்ளை லாபம் சம்பாதித்தனர் என்பதை மறக்க கூடாது.//

உண்மைதான் தமிழீழம் தமிழீழம் என்று வெளிநாடுகளில் பெருந்தொகைப் பணங்களை சுருட்டியவர்கள் பலருண்டு. யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கென்று நிதி வசூலித்து தமது சொந்த வங்கிக் கணக்குகளில் போட்டவர்களும் பலர் உண்டு. தமிழீழம் என்ற வார்த்தையை வைத்தே இலட்சாதிபதிகளாகியோர் பலர்

Praveenkumar said...

அருமையான கட்டுரையாகவும் ஆழமாக சிந்திக்கவைக்கும் வகையிலும் எழுதியிருக்கீங்க.. திருடனாய் பார்த்து திருட்டை ஒழிக்க முடியாது என்பதுபோல் இதுபோன்ற நிகழ்வுகள் ஏற்படுத்தும் மோசடி கும்பல்கள் அவர்களாக திருந்தும் வரை இது தொடர்கதைதான்.....

Post a Comment