Friday 11 June 2010

திருந்துவார்களா இந்த ஜென்மங்கள்?

அண்மையில் நான் ஒரு வங்கிக்கு சென்றிருந்தேன். அங்கே என்னுடன் படித்த ஒரு நண்பி வேலை செய்கின்றார்.
எனக்கு ஆச்சரியமாக இருந்தது. காரணம் அந்த நண்பி என்னுடன் உயர் தரத்திலே வணிகப் பிரிவிலே படித்திருந்தார். ஆனால் அவர் எந்தப் பாடங்களுமே உயர் தரத்தில் சித்தி அடையவில்லை.

அவர் அந்த பதவிக்கு தகுதியானவரும் இல்லை எனக்கு ஆச்சரியமாக இருந்தது. எப்படி இவருக்கு வேலை கிடைத்தது என்பதனை அறிய வேண்டும் என்று ஆவலாக இருந்தது. அப்போது அந்த வங்கியில் வேலை செய்கின்ற ஒரு, சில ஊழியர்களிடம் இவரைப் பற்றி விசாரித்தேன்.

அப்போது அவர்கள் சொன்ன விடயங்கள். இவர் பணம் கொடுத்துத் தான் வேலையில் சேர்ந்தார் என்றும். வங்கிக் கணக்கு திறப்பதட்குரிய விண்ணப்ப படிவத்தை நிரப்புவதட்குக் கூட முடியாதவராக இருக்கின்றார் என்று சொன்னார்கள். அப்போதுதான் எனக்கு ஞாபகம் வந்தது அவருடைய எழுத்தை அவரே எழுத முடியாத அளவுக்கு மோசமானதே அவரது எழுத்து என்று.

இதை நான் எழுதுவது அவரை  தாழ்த்துவதற்காக  அல்ல. இன்று இலங்கையிலே இதுதான் இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றது. அரச துறையாக இருக்கட்டும், தனியார் துறையாக இருக்கட்டும். வேலை வாய்ப்பு இருக்கின்றபோது ஆட்செர்ப்புக்காக விளம்பரப் படுத்துகின்றார்கள். ஆனால் வேறு வழிகளிலே பேரும் தொகை பணத்தைக் கொடுத்து வேலைகளை விற்கின்றனர். இந்த நிலை மாற்றப்படவேண்டும்.

இதனால் என்ன நடக்கிறது. திறமையானவர்கள் வெளியிலே இருக்க திறமையற்றவர்கள் உள்வாங்கப்படுகின்றனர். திறமையற்றவர்கள் உள்வாங்கப்பட்டால் அவர்கள் ஒழுங்காக வேலை செய்கின்றனரா. அந்த வேலைக்குரிய தகைமை இல்லாததனால் அவரது வேலை மந்த கதியில் செல்கின்றது எதனால் எத்தனை தாமதங்கள், பாதிப்புக்கள் இடம் பெறுகின்றன.

இது ஒருபுறமிருக்க இதனால் பாதிக்கப் படுவது பணவசதி குறைந்தவர்களே ஆகும். பணவசதி இல்லாதவர்கள் கஸ்ரப் பட்டு படித்து நல்ல நிலைக்கு வந்து நல்ல தொழில் தகுதியோடு இருப்பார்கள். அத்தனை வேலை வாய்ப்புக்கான நேர்முகப் பரீட்சைகளுக்கும் செல்வார்கள். ஆனால் எதிலும் தெரிவு செய்யப்படமாட்டார்கள்.
தகுதி அற்ற பணக்கார வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் நேர்முகப் பரீட்சைக்கு வராமலேயே பணத்தினைக் கொடுத்து வேலையே பெற்றுக் கொள்வார்கள்.

இந்த நிலை மாறவேண்டும், மாற்றப்படவேண்டும். மாறுமா????????????

Post Comment


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

12 comments: on "திருந்துவார்களா இந்த ஜென்மங்கள்?"

GEETHA ACHAL said...

உண்மையான உண்மை...மாற்றப்பட வேண்டும் என்று நாம் நினைத்து செய்பட்டாலும் அதில் அவ்வளவாக வெற்றி தான் கிடைக்க மாட்டேனுங்குது...என்ன செய்ய...எப்பொழுது தான் நிலை மாறுமோ...

Admin said...

//Geetha Achal கூறியது...
உண்மையான உண்மை...மாற்றப்பட வேண்டும் என்று நாம் நினைத்து செய்பட்டாலும் அதில் அவ்வளவாக வெற்றி தான் கிடைக்க மாட்டேனுங்குது...என்ன செய்ய...எப்பொழுது தான் நிலை மாறுமோ...//

மனிதன் பணம், பணம் என்று அழியும்வரை மாற்றுவது கஸ்ரம் என்றுதான் நினைக்கிறேன்.

வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிகள்.

பனித்துளி சங்கர் said...

நம்பிக்கை வைப்போம் ஒரு நாள் இவர்கள் எல்லோரும் திருந்துவார்கள் இல்லை என்றால் திருத்தப்படுவார்கள் .

Admin said...

//!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ கூறியது...
நம்பிக்கை வைப்போம் ஒரு நாள் இவர்கள் எல்லோரும் திருந்துவார்கள் இல்லை என்றால் திருத்தப்படுவார்கள் .//

பணத்தைக் கண்டவர்கள் திருந்துவது கஸ்ரம். திருத்தவேண்டும்..

வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிகள்.

Menaga Sathia said...

இந்த நிலை சீக்கிரம் மாறும் என்று நம்புவோம்...

அன்புடன் நான் said...

உங்களுடையது... நேமையான ஆதங்கம்..... தீர்வு??????

அமுதா கிருஷ்ணா said...

இது எல்லா இடங்களிலும் நடக்கிறது.கல்வி துறையிலேயே நடக்கிறது ஒரு சமுகத்தினையே பாழாக்குகிறது...

Admin said...

//Mrs.Menagasathia கூறியது...
இந்த நிலை சீக்கிரம் மாறும் என்று நம்புவோம்...//

வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிகள்.

Admin said...

//சி. கருணாகரசு கூறியது...
உங்களுடையது... நேமையான ஆதங்கம்..... தீர்வு??????//

வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிகள்.

Admin said...

//அமுதா கிருஷ்ணா கூறியது...
இது எல்லா இடங்களிலும் நடக்கிறது.கல்வி துறையிலேயே நடக்கிறது ஒரு சமுகத்தினையே பாழாக்குகிறது...//

வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிகள்.

Unknown said...

இன்றைய டாப் ஐம்பது வலை பதிவுகளை WWW.SINHACITY.COM இல் வாசியுங்கள்

Mugundan | முகுந்தன் said...

சந்ரு,

தகுதியற்றவர்கள் காசு கொடுத்து வேலை
வாங்குவது உலக வியாதி.இதில் ஐ,நா கூட‌
அடங்கும்.

Post a Comment