Thursday, 24 June 2010

ஏமாற்றுக்காரர்களின் மறு பக்கம் தொடர்கிறது

தமிழர் நம் வரலாறு சொல்லும் கதைகள் பகுதி 18

இதன் பின்னர் எந்த யு.என்.பி. கட்சி பண்டா – செல்வா ஒப்பந்தத்த கிழிக்க மூலகாரணமாயிற்றோ அதே யு.என்.பி யுடன் 1965 ஆண்டு ஒரு அமைச்சு பதவிக்காக தமிழரசுக்கட்சி கூட்டுச்சேர்ந்தது. இதே யு.என்.பி. இல் 1947 ஆம் ஆண்டில் அமைச்சுப் பதவி பெற்றுக்கொண்டு ஆட்சியல் பங்கெடுத்த ஜீ.ஜீ.பொன்னம்பலத்தின் முடிவினை கடுமையாக ஆட்சேபித்து அவருடன் முரண்பட்டுத்தான் இந்த தமிழரசுக்கட்சிக்கு வழிகாட்டும் எஸ்..ஜே.வி.செல்வநாயகம் வெளியேறியிருந்தார் என்பதும் அதன் பின்னரே தமிழரசுக்கட்சி தோற்றம் பெற்றது என்பதும் குறிப்படத்தக்க விடயங்களாகும்.


ஆனால் அதே துரோகத் தனத்தை இந்த செல்வநாயகமும் 1965 ஆம் ஆண்டு அமைச்சுப் பதவிக்காக செய்திருந்தார். 1956 ஆம் ஆண்டின் பின்னர் ஜீ.ஜீ.பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் காங்கிரஸ் மக்களிடையே பலம் இழந்து வந்தது. அதேவேளை செல்வநாயகத்தின் தலைமையிலான தமிழரசுக்கட்சியானது படிப்படியாக வளர்ச்சி கண்டு மக்களிடையே செல்வாக்குப்பெற ஆரம்பித்தது. இதன்காரணமாக தமிழ் காங்கிரசுக்கு பேராதரவு கொடுத்துவந்த கொழும்பை அடிப்படையாகக் கொண்ட யாழ்ப்பாணத்து மொத்த வியாபாரிகளும் நடுத்தர வர்க்கமும் தமது ஆதரவினை தமிழரசுக் கட்சியின் பால் மாற்றிக்கொண்டனர்.


இவர்களது செல்வாக்கு தமிழரசுக்கட்சியில் அதிகரிக்கத்தொடங்கியது. இது போன்று பலவழிகளிலும் ஏகாதிபத்தியத்தினை காப்பாற்றும் யு.என்.பி. உடனான கூட்டு மட்டும் அல்ல ஏகாதிபத்தியத்தினை தக்கவைக்க தமிழரசுக்கட்சியினர் நேரடியாகவும் குரல்கொடுக்க ஆரம்பித்தனர். இவர்களது மொழி அபிமானமும், தேச அபிமானமும் சந்தி சிரிக்கும் வகையில் தொடர்ந்து வந்த காலங்களில் இவர்கள் நடந்துகொண்டார்கள். இலங்கை சுதந்திரமடைந்த பின்னர் காலணித்துவ ஆட்சியாளர்களின் எச்சசொச்சங்களை தேசவுடமையாக்க முனைந்த பண்டாரநாயக்காவின் செயற்திட்டங்களை தமிழரசுக்கட்சியினர் பகிரங்கமாக எதிர்த்தனர்.


தமிழரசுக்கட்சியின் தலைவர் செல்வநாயகம் திருகோணமலைத் துறைமுகத்தினை விட்டு ஆங்கிலேயர் வெளியேறவேண்டும் எனும் கோரிக்கையை பகிரங்கமாக எதிர்த்தார். இதுபோன்ற காரணங்களினாலேயே தமிழ் அரசியல்வாதிகளையும் அவர்கள் பிரதிநிதித்துவப் படுத்திய தமிழர்களையும் ஏகாதிபத்தியத்தின் எடுபிடிகள் என்று சிங்கள மக்கள் கருத ஆரம்பித்தனர். அதுமட்டும் அன்றி சிங்கள மக்களிடையே இருந்த முற்போக்குச் சக்திகளும் கூட தமிழ் தலைமைகள் மீது சந்தேகம் கொள்ள மேற்படி செயற்பாடுகள் வலுச்சேர்த்தன எனலாம்.


1965 ஆம் ஆண்டு தேர்தல் வரை தமிழரசுக்கட்சியின் “ஸ்ரண்ட்” அரசியல் வடகிழக்குப் பகுதிகளில் அதிகமாகவே களைகட்டியது. சத்தியாக்கிரகப் போராட்டம் (1961), தமிழரசு தபால் சேவைப் போராட்டம் (1961), 1964 இல் சிறிமா சாஸ்திரி ஒப்பந்த எதிர்ப்புப் போராட்டம் என்று பெரும் கலக சூழல் ஒன்றை வடகிழக்குப் பகுதிகளில் இவர்கள் ஏற்படுத்தினர்.


ஆனால் இவை அனைத்துமே இந்த போராட்டங்களில் மையங்கொண்டிருந்த அரசியல் கோரிக்கைகளைவிட தேர்தலை ஒட்டிய வாக்கு சேகரிப்பு நாடகங்களாகவே உண்மையில் இருந்தன. ஒவ்வொரு தேர்தலின் பின்னரும் இப்போராட்டங்கள் எல்லாம் மூட்டை கட்டப்பட்டு ஒரு மூலைக்குள் போடப்படும். அதைத்தொடர்ந்து அமைச்சு பதிவிகளுக்காகவும், தாம் சார்ந்த வர்க்கத்தினரின் சலுகைகளைப் பெற்றுக்கொள்வதற்காகவும் யு.என்.பி. அரசுடன் கொஞ்சுக் குலாவி வந்ததன் மூலம் இதனை அறிந்துகொள்ள முடியும்.


1965 இல் பெற்றுக்கொள்ளப்பட்ட வெற்றியை வைத்து யு.என்.பி. இன் சார்பில் அரசமைக்கவிருந்த டட்லி சேனநாயக்காவுடன் தமது சலுகைகளை உறுதித் படுத்திக்கொள்வதற்காக இரவிரவாக ரகசியப் பேச்சுக்களில் தமிழ் தலைவர்கள் ஈடுபட்டனர். இதன்பலனாக கொழும்பில் செனட்டராக வாழ்ந்து வந்த திருச்செல்வம் என்பவரை அமைச்சராக்குவதற்காக டட்லி சேனநாயக்காவிடம் இருந்து உறுதி வாங்கிக் கொண்டனர். அதற்கு கைமாறாக யு.என்.பி. அரசு அமைவதற்கு தமிழரசுக் கட்சி எம.பிக்கள் ஆதரவு தெரிவிப்பதற்கு உறுதி கொடுத்தனர்.


தமது ஆதரவு சக்திகாளாய் இருந்த கொழும்பு கனவான் ஒருவரை அமைச்சராக்குவதற்காக தமிழ் மக்களை உணர்ச்சி பீறிட வைத்து தெருவில் இறக்கி சத்தியாக்கிரகம் செய்தவர்கள் அனைத்தையும் கைவிட்டனர். தமிழரசும் அதனது தபால் முத்திரைகளும் குப்பைக் கூடைக்குள் போனது. தமக்குத் தேவையானபோது வடகிழக்கில் வந்து மக்களைத் தெருவில் இறக்குவதும் அந்த ஆதரவுத் தளத்தினை காட்டி தமக்கான அரசியல் பேதங்களை சிங்கள அரசுகளுடன் விலைபேசிக்கொள்வதும் அதன் பின்னர் தெருவில் இறங்கிய மக்களை அம்போவென்று மறந்து விடுவதும் தமிழரசுக் கட்சியினரின் வழக்கமாய்ப்போனது.
தொடரும்....

Post Comment


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

4 comments: on "ஏமாற்றுக்காரர்களின் மறு பக்கம் தொடர்கிறது"

சுரேஷ் said...

சந்த்ரு உங்கள் துணிச்சலையும், உண்மைகளை வெளிக்கொண்டு , உண்மைகளை வெளிக்கொண்டு வரவேண்டும் என்ற ஆதங்கத்தையும் பாராட்டுகிறேன். சிலர் இதை எதிர்த்தாலும் பலர் இந்த தொடரை வாசிப்பதற்கு இருக்கின்றார்கள் நீங்கள் தொடர்ந்து எழுதுங்கள்.


உங்கள் வாசகன்.

சுரேஷ்

நடேசன் - வேப்பவட்டுவான் said...

என்ன தனிக் கடையிலை தேநீர் போடுறீங்கள்?பதிவை நீங்களே எழுதி விட்டு கருத்துரையினையும் எப்படி நீங்களே எழுதலாம்>

சந்ரு said...

//நடேசன் - வேப்பவட்டுவான் கூறியது...
என்ன தனிக் கடையிலை தேநீர் போடுறீங்கள்?பதிவை நீங்களே எழுதி விட்டு கருத்துரையினையும் எப்படி நீங்களே எழுதலாம்>//

பதிவுகளுக்கு கருத்துரை வரவில்லை என்றாலும் எனக்கு நானே கருத்துரை போடுபவன் நான் இல்லை. உங்களைப்போல் பல பெயர்களில் கருத்துரை இடுவதுமில்லை. அப்படியான விளம்பரம் எனக்கு தேவையும் இல்லை. அனானியாக வந்தும் ஒருபோதும் கருத்துரை இடமாட்டேன்.

அப்படி அனானியாக வந்து கருத்துரையிட நான் உங்களைப்போல் முதுகெலும்பு இல்லாதவனுமல்ல.

கன்கொன் said...

டேய் சந்துரு. உன் பதிவுகளை ஹக் பண்ணுறன் பார்.

Post a Comment