Tuesday, 15 June 2010

தமிழர் நம் வரலாறு சொல்லும் கதைகள் பகுதி - 12

1956ஆம் ஆண்டு சிங்கள அரசகரும மொழிச்சட்டம்.

1920களில் இருந்து இலங்கையில் உருவான சுயபாஷைகளுக்கான இயக்கம் காலப்போக்கில் ஏற்பட்ட இன, மத, பொருளாதார, கலாச்சார நெருக்கடிகளினாலும், தேர்தல் அரசியலை நோக்கிய தமிழ் – சிங்கள அரசியல்வாதிகளின் குறுகிய நலன்களினாலும் உருமாறி சிங்கள அரசகருமமொழிச்சட்டம் ஆக குறுக்கப்பட்டு இறுதியில் (1956இல்) நிறைவேற்றப்பட்டது.
 இதனையே தனிச்சிங்களச்சட்டம் என திரிவுபடுத்தி சிங்கள பேரினவாதத்தின் செயற்பாடாக தமிழ் தலைமைகள் இன்றுவரை வர்ணித்து வருகின்றன. இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டமையை தமிழர்கள் எதிர்கொண்ட விதம் தொடர்ந்துவந்த இலங்கை அரசியலில் பாரிய விளைவுகளுக்கும் மாற்றங்களுக்கும் இட்டுச்சென்றது.

ஆரம்ப காலங்களில் யாழ்ப்பாணத்தில் இருந்த ஒருசில சிறிய அமைப்புகள் அதாவது வடமாகாண ஆசிரியர் சங்கம்இ யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸ் போன்றவை சிங்களப் பகுதியில் இருந்து வெளிப்பட்ட சுயபாஷைகளுக்கான இயக்கத்தினருடன் சேர்ந்து செயற்பட்டனர். மட்டக்களப்பின் அரசியல் பிரதிநிதிகளும்கூட இந்த இரண்டு மொழிகளையும் கொண்ட கோரிக்கைகளை வலுப்படுத்த தம்மாலான முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர். சிங்களப் பகுதியில் எல்லாவிதமான பாராளுமன்ற அரசியல் பிரதிநிதிகளும் இந்த இரட்டை தேசியமொழிக்கொள்கையினை ஏககாலத்தில் அங்கீகரிக்கும் நிலையும் காணப்பட்டது. முஸ்லிம் தலைவர்கள்கூட இந்த இருமொழிக்கொள்கையை வரவேற்றிருந்தனர். ஆனாலும் ஆங்கிலத்தில் பிடியை விட்டுவிடக்கூடாது என்பதற்காக கடுமையான போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் யாழ்ப்பாணத்தின் தமிழ் பெருந்தலைவர்களே. தமிழும் அரசகருமமொழியாக 1956 ஆம் ஆண்டுச் சட்டத்தில் நிறைவேற்றப்பட முடியாமல்போனமைக்கு அவ்வேளை கோலோச்சிய தமிழ் தலைமைகளே பொறுப்பேற்க வேண்டும்.

இறுதியில் இந்த சுயபாஷைகளுக்கான இயக்கம் (தமிழ் தலைவர்களை ஏகாதிபத்தியத்தின் அருவருடிகள் என்கின்ற முடிவுகளோடு) தமிழை விடுத்து சிங்;களத்தை அரசகருமமொழியாக்கும் செயற்பாடுகளில் இறங்கியது. யு.என்.பி அரசின் ஏகாதிபத்திய ஆதரவு போக்குடன் உடன்படாத எஸ்.டபிள்யு.ஆர்.டி. தலைமையிலான பிரிவினர் யு.என்.பி.யில் இருந்து வெளியேறினர். (இந்த பிரிவினரைக்கொண்ட சிங்கள மகாசபாவே 1951 ல் சிறிலங்கா சுதந்திரக்கட்சியாக வடிவம் பெறுகிறது). அதே வேளை ஏகாதிபத்திய அருவருடித் தனம் கொண்ட தமிழ் தலைமைகள் யு.என்.பி. யுடன் இணைந்து செயற்படத்தொடங்கினர். இதன்பின்னர் யு.என்.பி.யையும்இ தமிழ் தலைமைகளையும் ஒருமித்து எதிர்க்கும் செயற்பாடுகளில் சிங்கள மகாசபாவினரும்இ பௌத்த தேசிய வாதிகளும் ஒருமித்தனர்.

இந்த நிலைமைகளுடன் சேர்த்து அக்காலகட்டத்தில் இலங்கை அரசியல் சூழல் எதிர்கொண்ட சிக்கல் நிறைந்த பொருளாதாரப் பிரச்சனைகளின் பின்னணிகளை சற்றுப் பார்ப்போம். 1953 ஆம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட மாபெரும் (அரிசிபோராட்டம்) ஹர்த்தால் ஏகாதிபத்திய யு.என்.பி. ஆட்சியை விலக்கி “மக்கள் ஆட்சி” ஒன்றை கொண்டுவரவேண்டும் எனும் நிலைக்கு சிங்கள சமூகம் சார்ந்த கட்சிகள்இ தொழிலாளர்கள்இ பொதுமக்கள் எல்லோரையும் ஓரணியில் திரட்டியது.

நாட்டில் ஏற்பட்ட பாரிய பொருளாதார வீழ்ச்சியை சமாளிக்க முடியாமல் டட்லியின் யு.என்.பி. அரசு திண்டாடியது. மாணவர்களுக்கான மதியபோசனம் நிறுத்தப்பட்டதுஇ ரெயில்வேஇ தபால் கட்டணங்கள் உயர்த்தப்பட்டதுஇ ஏழைமக்களின் அத்தியாவசிய உணவுப்பொருட்களான சீனியினதும் அரிசியினதும் விலை உயர்த்தப்பட்டது. அதிலும் அரிசிவிலை இறாத்தல் 25 சதமாயிருந்து 70 சதமாக உயர்த்தப்பட்டது.

அரசாங்கத்தினுடைய இச்செய்கை பாமர மக்களை கடும் கோபத்துக்குள்ளாக்கியது. இதன்காரணமாக ஏற்பட்ட ஏழை மக்களின் எதிர்ப்புணர்வுகள் அரிசிப்போராட்டமாக மாபெரும் ஹர்த்தாலாக வெடித்தது. இந்த எழிச்சியினை அடக்க டட்லி ஆட்சி காவல்துறையினை ஏவிவிட்டது. இந்த அடக்கு முறையில் இருந்து தப்பிக்க பொலிசாரையும் பொலிஸ் நிலையங்களையும் தாக்குமளவிற்கு மக்கள் சென்றதனால் டட்லிசேனநாயக்கா தனது அமைச்சரவை கூட்டத்தை துறைமுகத்துக்குள் தரித்துநின்ற கப்பலொன்றில் வைத்து நடத்துமளவிற்கு நெருக்கடிக்குள்ளானார். பின்னர் அவர் தனது பதவியை ராஜினாமா செய்யுமளவிற்கு தள்ளப்பட்டார். இந்த மக்கள் எழிச்சியை நடத்துவதில் முன்நின்றவர்கள் இடதுசாரிகளேயாகும்.

டட்லி சேனநாயக்காவின் ராஜினாமாவைத் தொடர்ந்து 1953இல் பிரதமர் பதவியை ஏற்ற சேர்.ஜோன்.கொத்தலாவல அரச எதிர்ப்பு நடவடிக்கைகளில் முன்னின்ற கொமினிஸ்ட்டுகளை அடக்கி அழிப்பதில் கண்ணும் கருத்துமாக செயற்பட்டார். கொம்ய10னிச நு}ல்களுக்கு அவரால் தடைஉத்தரவுகளும் போடப்பட்டன. இந்தத் தடை உத்தரவுகள் இடதுசாரிகள் சார்ந்திருந்த உள் நாட்டின் மரபார்ந்த அமைப்புகளையும் பாதித்தது. ஜோன்.கொத்தலாவல அவரது தனிப்பட்ட வாழ்வுமுறையிலும் ஐரோப்பிய கலாசாரத்தில் மூழ்கி இருந்தகாரணத்தினால் தென்னிலங்கையில் மரபுசார்ந்த காப்பாளர்களாகத் திகழ்ந்த சுதேச அமைப்பினர் இவர் மீது இரட்டைக்கோபம் கொண்டனர். இலங்கையின் பாரம்பரிய பழக்கவழக்கத்தில் ஊறியிருந்த பொளத்த பீடங்களும் அதன் வழிபாட்டாளர்களும் இவருக்கெதிராக கிளர்ந்தெழத் தொடங்கினர்.

Post Comment


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "தமிழர் நம் வரலாறு சொல்லும் கதைகள் பகுதி - 12"

Post a Comment