Monday, 21 June 2010

எஸ்.ஜே.வி.செல்வநாயகமும் அவரது மறுபக்கமும்

தமிழர் நம் வரலாறு சொல்லும் கதைகள் பகுதி 16
எஸ்.ஜே.வி.செல்வநாயகமும் அவரது மறுபக்கமும்

“தந்தை செல்வா” என்று வடக்கில் மட்டும் அல்ல கிழக்கு மாகாண மக்களாலும் அன்பாகவும் மரியாதை உணர்வுடனும் அழைக்கப்படுபவர் இந்த செல்வநாயகம் ஆவார்.
 இவர் உருவாக்கிய தமிழரசுக் கட்சியின் தோற்றுவாய் பரந்துபட்ட வடக்கு, கிழக்கு, மலையக மக்களின் பிரச்சனைகளில் அக்கறைகொண்டிருந்தமையே இதற்கு ஒரு காரணமாகும். மெல்லிய உருவமும், அமைதியான தோற்றமும், வயது முதிர்ந்த காலத்தில அவர் முன்னெடுத்த தீவிர அரசியல் போராட்டமும் அவரை தமிழ் மக்களின் தந்தையாக எல்லோரும் மனதார விழிக்க காரணமாயிற்று.

ஜீ.ஜீ.பொன்னம்பலத்தின் “கொழும்பு” அரசியலை நிராகரித்து வடகிழக்கின் முலை முடுக்கு எங்கும் தமிழ் அரசியலை நுழைத்தவர் எனும் வகையில் 1956 ஆம் ஆண்டுத் தேர்தலில் அவர் பெரு பெற்றியைப் பெற்றுக்கொண்டு தமிழ் மக்களுக்கான தலைமையை ஏற்றார்.

ஆனால் 1956 ஆம் ஆண்டு வெற்றிக்குப் பின்னர் இந்த செல்வநாயகம் எனும் தலைமையும் சரி, தமிழரசுக் கட்சியும் சரி நடந்துகொண்ட விதம் கடுமையான விமர்சனத்துக்குரியது. அதாவது 1957 ஆண்டு கொண்டுவரப்பட்ட நெற்காணிச் சட்டத்தினை எதிர்த்தமை, 1957 இல் நிறைவேற்றப்பட்ட பண்டா – செல்வா ஒப்பந்தத்தில் மலையக மக்களை காட்டிக்கொடுத்து துரோகம் இழைத்தமை, 1965 ஆம் ஆண்டில் யு.என்.பி. அரசுடன் அமைச்சுப் பதவிகளுக்காக இணைந்து விலைபோனமை போன்ற வரலாற்றின் நிகழ்வுகள் இவர்களின் உண்மை முகத்தை அம்பலப்படுத்தப் போதுமானவை. ஆனபோதும் 1956 இன் பின்னர் இலங்கையில் உருவான இனத்தையும், மொழியையும் அடிப்படையாகக் கொண்ட இருதுருவ அரசியலின் போக்குகள் தமிழ் மக்களுக்கு தமது சொந்த தலைவர்களின் இந்தத் துரோகங்கள் குறித்து சிந்திக்கும் வாய்ப்புகளையோ விமர்சனம் செய்யும் சந்தர்ப்பங்களையோ கொடுக்கவில்லை. படிப்படியாக அதிகரித்து வந்த சிங்கள இனவாதப் போக்குகள் தமிழ் மக்களை தமது தலைவர்களை கண்மூடித்தனமாக நம்பவேண்டிய நிலைக்குத் தள்ளியது.

கிழக்கிலங்கை மக்கள் தொடர்ந்தும் தாம் ஏமாற முடியாது என்று கடந்த இரண்டு வருடங்களாக போராடி வருகின்ற இன்றைய நிலையில் இந்த தமிழரசுக் கட்சியினரின் துரோகத் தனங்களை தோண்டியெடுத்து வெளிப்படுத்த வேண்டிய தேவை அவசியமானதாகும். ஏனென்றால் இன்றைய அரசியலுக்குரிய விதையை ஊன்றியவர்களை கிழக்கிலங்கை மக்கள் கண்டுகொள்ளாமல் விட்டுவிட முடியாது. யாழ்ப்பாணத்து தலைமைகள் இன்று கிழக்கிலங்கை மக்களுக்கு நஞ்சை அறுவடையாகத் தந்துகொண்டிருக்கும் அரசியலையே விட்டுச் சென்றிருக்கின்றார்கள். அந்த நஞ்சுவிதை யாரால் எப்படி ஊன்றப்பட்டது? யாரால் எப்படி தண்ணீர் ஊற்றி வளர்க்கப்பட்டது என்பதைப் புரிந்து கொள்ளுதல் ஊடாக மட்டுமே தமது வாயில் நஞ்சைத் திணிக்கும் இன்றைய யாழ்ப்பாணத் தலைமைகளிடம் இருந்து தப்பிக்க கிழக்கிலங்கை மக்களால் இயலும். இன்று இன்னிலை உணரப்பட்டு வருகின்றது.

1957 இல் நெற்காணிச்சட்டம் கொண்டுவரப்பட்டபோது தந்தை செல்வா என் அழைக்கப்பட்ட இந்த மனிதர் எப்படி நடந்துகொண்டார்? சுருக்கமாகச் சொன்னால் இந்தச் சட்டமானது நிலமற்ற ஏழை மக்களின் காணிப்பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வினைத் தேடித்தரும் நன்நோக்கத்தினை மட்டுமே கொண்டிருந்தது.

ஆனால் அதையிட்டு மக்களுக்காக அரசியல் நடத்துவதாக சொல்லிக்கொண்டவர்கள் அக்கறைப்படவோஇ புரிந்துகொள்ளவோ மறுத்தார்கள். மக்களின் நலனைவிட தமது சொந்த வரவுசெலவு கணக்குப் பார்த்தே அரசியலை நடத்தினர். பெரும் நிலச் சொந்தக்காரராய் இருந்த இந்த யாழ்ப்பாணத் தலைமைகள் தம்முடையதும்இ தமது செல்வாக்குக்குரிய பெருவியாபாரிகளினதும்இ நிலவுடமையாளர்களினதும் காணிகளைக் காப்பாற்றிக் கொள்ளும் ஒரே நோக்கோடு நெற்காணிச் சட்டத்தை எதிர்த்தனர். எந்த ஜீ.ஜீ.பொன்னம்பலம் மக்களின் நலனை அக்கறை கொள்ளாதவர் என்றும்இ துரோகி என்றும் இந்த செல்வநாயகம் வெளியேறினாரோ அந்த பொன்னம்பலத்துடன் ஒற்றுமையாக நின்று செல்வநாயகமும் அவருடைய தமிழரசுக்கட்சியும் இந்த நெற்காணிச் சட்டத்தை எதிர்த்தனர்.

தொடரும்...

Post Comment


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "எஸ்.ஜே.வி.செல்வநாயகமும் அவரது மறுபக்கமும்"

Post a Comment