Friday 25 June 2010

யார் அந்த நல்லவர்கள்?

 தமிழர் நம் வரலாறு சொல்லும் கதைகள் பகுதி 19

1965 இன் பின்னர் தமது கண்துடைப்புக்காக டட்லி – செல்வா எனும் ஒரு ஒப்பந்தத்தை செய்துகொண்டனர். ஆனால் இந்த ஒப்பந்தமானது பண்டா – செல்வா ஒப்பந்தத்தில் இருந்து எவ்விதத்திலும் மேம்பட்டதொன்றல்ல.

அதன் பின்னர் 1965 – 1970 வரை யு.என்.பி., வடக்கு, கிழக்கு, மலையக மக்களின் சார்பில் எந்தவொரு போராட்டத்திலும் தமிழரசுக்கட்சியினர் தலைகாட்டவில்லை. ஆனால் டட்லி – செல்வா ஒப்பந்தம் செய்துகொண்டோம் என்று வரலாற்றை தமிழரசுக்கட்சி ஏமாற்றினாலும் அந்த ஒப்பந்தமானது கிடப்பிலே போடப்பட்டிருந்தது என்பதுதான் உண்மை.

யாராலும் கிழித்தெறியப்படாத அந்த ஒப்பந்தம் எப்போதுமே அமூல்படுத்தப்படாத காரணத்தினால் அது கிடப்பில்தான் போடப்பட்டிருக்க வேண்டும். மேற்குறிப்பிடப்பட்ட 5 வருட காலத்திலும் அந்த ஒப்பந்தத்தை அமுல்படுத்தக் கோரி தமிழரசுக்கட்சியினரிடமிருந்து ஒரு குரல்கூட எழுப்பப்படவில்லை என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும். 1957 இல் பண்டா – செல்வா ஒப்பந்தத்தை கிழிக்கக் காரணமான யு.என்.பி. உடன் இணைந்து அமைச்சுப் பதவிக்காக நடாத்திய அந்தக் கூட்டாட்சியை உண்மையிலேயே வடகிழக்கு மக்கள் வெறுத்தார்கள். அரசியல் தெளிவின்றி இனவுணர்ச்சி அலைகளிலேயே உருவாக்கப்பட்டு தக்கவைக்கப்பட்டிருந்த தமிழரசுக்கட்சியின் வாக்கு வங்கிகள் மேற்படி 5 வருட காலத்திலும் (இப்போராட்டங்கள் சோபை இழந்து போனதால்) தமிழரசுக் கட்சியை விட்டு கைமாறத் தொடங்கியது.

இதே காலப்பகுதியிலேயே யாழ்ப்பாணத்தின் கோலோட்சிய சாதிப்பிரச்சனைகளுக்கு தீர்வு கோரிய போராட்டங்களை இடதுசாரி அணியைச் சேர்ந்த முற்போக்காளர்கள் முன்னெடுத்து தாழ்த்தப்பட்ட மக்களின் நலனில் அக்கறை கொண்டு செயற்பட்டனர். இதன்காரணமாக பெருமளவிலான தாழ்த்தப்பட்ட மக்கள் இடதுசாரி அரசியல்வாதிகளை ஆதரிக்கத் தொடங்கினர். இதுபோன்ற இன்னபிற காரணங்களினாலும் 1970 ஆண்டு மே மாதம் 27 ஆம் திகதி நடாத்தப்பட்ட தேர்தலில் படுதோல்வியை தமிழரசுக்கட்சி சந்திக்க நேர்ந்தது. தமிழரசுக் கட்சியின் இரண்டாம் தலைமைகளான அமிர்தலிங்கம், சிவசிதம்பரம் போன்றோர் முறையே வட்டுக்கோட்டைத் தொகுதியிலும், உடுப்பிட்டித் தொகுதியிலும் படுதோல்வி அடைந்தனர்.

இத்தேர்தல் தோல்வியின் பின்னர்தான் தமிழ் உணர்ச்சிகளை கிண்டிவிடுகின்ற பிரச்சாரங்களை தீவிரவாதத் தன்மைக்குள் விசமத்தனமாக இறக்கிவிடுகின்ற அளவிற்கு தமிழ் தலைமைகள் களமிறங்க ஆரம்பித்தனர். அகிம்சைப் போராட்டங்களில் களைத்துப்போயிருந்த தமிழரசுக் கட்சியினர் இனரீதியான வன்முறைகளைத் து}ண்டிவிடுவதன் ஊடாக தமிழ் மக்களிடையே ஒரு உணர்ச்சிரீதியான அணிதிரட்டலை ஏற்படுத்தி அதனைத் தனது வாக்கு வங்கியாக மாற்றிவிடும் முயற்சியில் ஈடுபட்டனர். மீண்டும் தாம் இழந்திருந்த தமிழ் மக்களுக்கான தலைமைப் பொறுப்புகளை பெற்றுக்கொள்வதற்காக இத்தகைய வழியொன்றே அவர்களுக்கு கைகொடுக்கும் என்பதில் அவர்கள் உறுதியாகச் செயற்பட்டனர். அத்தோடு சேர்த்து தமிழ் இனத்தின் பெயரால் அரசியல் நடத்திவந்த போதிலும் தனித்தனியே இயங்கிவந்த எல்லாக் கட்சிகளும் ஒன்றிணைவதே தமிழ் மக்களிடையே உருவாகிவந்த மாற்று இடதுசாரித் தலைமைகளைத் தோற்கடிக்க சிறந்த வழியென அவர்கள் கண்டுபிடித்தனர். அதற்கு அப்பால் உண்மையான மக்களின் பிரச்சனைகளில் அக்கறை கொண்டு அதற்கான போராட்டங்களை முன்னெடுப்பதற்கு தமிழரசுக்கட்சியினர் விரும்பியிருக்கவில்லை.

அதுவரைகாலமும் இவர்கள் சொல்லிவந்த கிழக்குமாகாண விவசாயிகளது குடியேற்றப் பிரச்சனையும் கிடப்பிலே போட்டனர். இதற்கு அப்பால் கிழக்கில் வாழ்ந்த லட்சக்கணக்கான விவசாயிகளின் நீர்ப்பாசனப் பிரச்சனைகளையோ, நீண்ட கடல்பரப்பினைக் கொண்ட கிழக்கு மாகாண கடல் தொழிலாளிகளின் மீன்பிடித்துறைசார்ந்த பிரச்சனைகளையோ பின்தங்கிய நிலையில் இருந்த கிழக்கு மகாண தமிழ் முஸ்லிம் மக்களின் கல்விநிலை குறித்த அக்கறைகளையோ இவர்கள் தமது அரசியல் கட்சியின் கொள்கைகளுக்கான அடிப்படை விசயங்களாகக் கொள்ளவில்லை. மக்களின் தேவைகளை முன்னிறுத்தி அதற்காகப் போராடுவதினு}டாக தலைமை வகிக்கும் வாய்ப்பினை பெற்றுக்கொள்வதைவிட ஹர்த்தால், வன்முறை, கிளர்ச்சி போன்ற குறுக்கு வழியினு}டு தலைவர்கள் ஆவதிலேயே தமிழரசுக்கட்சியினர் முனைப்புக் காட்டினர்.

1965 – 1970 ஆம் ஆண்டுவரை எவ்வித சலனமும் இன்றி அமைதியாக யு.என்.பி. ஆட்சியில் பங்கெடுத்துவந்த தமிழரசுக்கட்சியினர் 1970 ஆண்டில் கிடைத்த தோல்வியைத் தொடர்ந்தே இந்த வன்முறை வழிகளைத் திட்டமிட்ட ரீதியில் அதிகரித்து வந்திருப்பதனைக் காணலாம். 1970 – 1977 வரையான காலகட்டத்தில் எண்ணில் அடங்காத கிளர்ச்சி நடவடிக்கைகளில் இவர்கள் இறங்கினர். தமிழ் இளைஞர்களிடையே வன்முறையைத் து}ண்டிவிட்டு தம்மையும் மக்களையும் அரசுக்கு எதிரான புரட்சியாளர்களாகக் காட்ட முற்பட்டனர். ஆனால் அவ்வேளை இவையனைத்து செயற்பாடுகளும் தேர்தலை எதிர்கொள்ளும் வாக்கு சேகரிப்புக்காகவே முடுக்கி விடப்பட்டதனை கிழக்கிலங்கை மக்கள் புரிந்துகொள்ளவில்லை. 1965 – 1970 ஆண்டுவரை தமிழரசுக்கட்சி காத்துவந்த அமைதியானது 1970 தோல்வியின் பின்னர் எப்படித் திடீரென மாற்றம் எடுத்து வன்முறைச் சூழலை படிப்படியாக அதிகரித்து வந்தனர் என்பதினை கீழ்வரும் சில குறிப்புகள் மூலம் அறிந்துகொள்ளலாம்.

தொடரும்...


Post Comment


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "யார் அந்த நல்லவர்கள்?"

Post a Comment