Sunday 6 June 2010

தமிழர் நம் வரலாறு சொல்லும் கதைகள் பகுதி - 9

ஒரு துரோக வரலாற்றின் தொடர்ச்சியில் இலங்கைத் தமிழ் காங்கிரஸ் வகித்த பங்கு.

தமிழீழம் என்கின்ற கிழக்கு மாகாண மக்களுக்கு முன்பின் சம்பந்தமற்ற நச்சுக்கொடியை அவர்கள் மீது ஆழமாகப் பதித்து படரவிட்டவர் ஜீ.ஜீ.பொன்னம்பலம் என்பவராவர்.


 இவர் சேர்.பொன்.அருணாசலம்இ சேர்.பொன்.இராமநாதன் என்கின்ற தம் முன்னோடிகளின் அரசியல் வாரிசாக திகழ்ந்தவர். இவர் ஆரம்பித்த இலங்கைத் தமிழ் காங்கிரஸ் எனும் அரசியல் கட்சியும்கூட பெரும் நிலவுடமையாளர்களையும்இ கல்வி அறிவுபெற்ற உயர்குழாத்தினரையும் கொண்டே நிரப்பப்பட்டிருந்தது. அத்தோடு சேர்த்து யாழ்ப்பாணத்து பெரு வியாபாரிகளும் இவரது அரசியலுக்கு பக்கபலமாக இருந்துவந்தனர்.


இது போன்ற தனவந்தர்களது செல்வாக்குகளே இலங்கை தமிழ் காங்கிரசில் அதிக பலம் பெற்றிருந்தமையால் ஜீ.ஜீ.பொன்னம்பலத்தின் அரசியலும் முற்றுமுழுதாக ஒரு யாழ்ப்பாண நலன்களை அடிப்படையாகக் கொண்டிருந்ததோடு ஏனைய மக்கள் மீதான விரோத நடவடிக்கைகளையே மேற்கொண்டிருந்தது.


இலங்கைத் தமிழ் காங்கிரஸ் பங்கெடுத்த 1934 ஆம் ஆண்டுத் தேர்தலில் யாழ்ப்பாணத்தில் போட்டியிட்ட அனைவரும் “பெரும்” குடும்பத்தைச் சேர்ந்தவர்களாகவே இருந்தனர். இந்த தேர்தலில் வெற்றிபெற்றவர்களான செல்லத்துரைஇ பொன்னம்பலம்இ மகாதேவாஇ நடேசன் என்கின்ற நால்வரிலும் மூவர் சேர்.பொன்.இராமநாதன் குடும்பத்தைச் சேர்ந்தவர்களே என்பதைக் கவனித்தால் இவர்களது குடும்ப ஆதிக்கம் புலப்படும். அந்தக் காலத்தில் ஆங்கிலக் கல்வித் தகமை என்பதே அரசியலுக்கான இவர்களது பெரும் மூலதனமாய் இருந்தது. இதனால் சிங்களத் தலைவர்கள் முன்வைத்த சுதேச மொழிகளுக்கு அரச அந்தஸ்து கொடுப்பதுஇ நாட்டின் எல்லாப் பிரசைகளுக்கும் இலவசக் கல்வியளிப்பது என்கின்ற திட்டங்களை இந்த தமிழ் காங்கிரசார் தமது முன்னோர்களைப் போலவே மிகக் கடுமையாக எதிர்த்தனர்.


1944 ஆண்டு கொண்டுவரப்பட்ட இலவசக் கல்வித்திட்ட மசோதாவை பாராளுமன்றத்தில் எதிர்ப்பதில் ஜீ.ஜீ.பொன்னம்பலம்இ மகாதேவாஇ சிறிபத்மநாதன் என்கின்ற தமிழ் பெரும் தலைவர்கள் ஒற்றுமையாக நின்று எதிர்த்தனர். மத்தியதர வர்க்கம் நிறைந்த யாழ்ப்பாணத்தைத் தவிர கிழக்கிலங்கை மக்களும்இ தென்னிலங்கை மக்களும் கல்வியறிவு பெறக்கூடாது என்பதில் இந்த யாழ்ப்பாணத் தலைமைகள் மிகக் கவனமாக செயற்பட்டனர். காரணம் இந்த இலவசக் கல்வித்திட்டம் கொண்டிருந்த நோக்கங்கள் இவர்களுக்கு உவப்பானதாய் இருக்கவில்லை. பணவசதி கொண்டவர்களுக்கு மட்டுமே கல்வியறிவைப் பெறும் வாய்ப்புகள் தொடரவேண்டும் என்பதில் இவர்கள் உறுதியாக இருந்தனர். உண்மையில் பணக்காரவர்க்கத்தின் வசம் மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டிருந்த கல்வியானது பாமர மக்களுக்கும் சென்றடைவதனை மக்கள் நலனில் அக்கறைகொண்டிருக்கும் எந்த அரசியல் கட்சியும் வரவேற்காமல் இருக்கமுடியாது. ஆனால் வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் விடுதலை விரும்பிகளாக தம்மைக் காட்டி அரசியல் பண்டிய தமிழ் காங்கிரசின் பிரதிநிதிகள் பாராளுமன்றத்தில் அதற்கு எதிரான செயற்பாடுகளையே மேற்கொண்டனர். பாமர மக்களுக்கு அறிவுப் பொக்கிசத்தைத் திறந்துவிட முனைந்த சிங்கள அரசியல்வாதியான டபிள்யு.டபிள்யு.கன்னங்கரா போன்றவர்களுடன் ஒப்பிடுகையில் நமது தலைமைகளே துரோகங்களின் பிறப்பிடமாய் இருந்திருக்கிறார்கள்.


கல்வியில் பின்தங்கியிருந்த கிழக்கிலங்கை தென்னிலங்கைப் பிரதேசங்களுக்கு அவ்வாய்ப்புகள் கிடைக்காது தடுக்க முயன்ற யாழ்ப்பாணத் தலைமைகளின் வஞ்சகத் தன்மையை நாம் புரிந்துகொள்ள வரலாறுகள் இதுவரை வாய்ப்பளிக்கவில்லை. பாடப்பபுத்தகங்களிலும் கூட இலவசக் கல்வியின் கதாநாயகன் டபிள்யு.டபிள்யு.கன்னங்கரா என்று காலம் காலமாகச் சொல்லித் தருபவர்கள் இந்த இலவசக் கல்வியின் வில்லன்களாக யார் யார் இருந்தார்கள் என்பதனையும் ஏன் சொல்லித்தரவில்லை? சிலவேளை பாடத்திட்ட குழுவிலும் நிறைந்திருப்பவர்கள்கூட யாழ்ப்பாணத்தவர்கள் என்பதும் அதற்கு காரணமாயிருக்கலாம்.


சுதேசமொழி விவாதங்களின் போதுகூட சிங்களமோஇ தமிழோ என்பது குறித்து இந்த பொன்னம்பலம் அக்கறை செலுத்தியிருக்கவில்லை. ஆங்கிலமே அரசகரும மொழியாக இருக்கவேண்டும் என்பதற்கான புழுத்துப்போன நியாயங்களையே அவர் முன்வைத்தார். இதிலிருந்து ஆங்கிலம் அகற்றப்பட்டுவிடக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்து வந்த இவர்களது நோக்கங்கள் அம்பலமாகின்றது. இவ்வளவு து}ரம் பாராளுமன்றத்தில் திட்டமிட்ட துரோகத்தனங்களை கிழக்கிலங்கை போன்ற பகுதிகளில் வாழும் தமிழ் மக்களுக்கு புரிந்தவர்கள் வடகிழக்கில் வந்து என்ன பேசினர்? கண்ணுக்குத் தெரியாத கற்பனைகளைக் காட்டி மக்களை உணர்ச்சிவசப்படுத்தும் பேச்சுகளையே நிகழ்த்தினர்.

1947 ஆம் ஆண்டு இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் எனும் புதியதொரு நாடு முகமட் ஜின்னா தலைமையில் உருவாகியிருந்த போது அதேபோன்று இலங்கை சுதந்திரமடைந்த பின்னர் அதிலிருந்து பிளந்து தமிழீழம் எனும் புதியதொரு நாட்டை பெற்றுத்தரப் போகின்ற ஜின்னா தானே என்று சும்மா கன்னாபின்னா என்று பொன்னா மேடைகளில் கத்தினார்.


இவையெல்லாம் எந்தவிதத்திலும் தமிழர்களின் அடிமட்டப் பிரச்சனைகளில் இருந்து எடுக்கப்பட்ட முடிவுகள் அல்ல அடிமட்ட மக்களில் எவ்வித அக்கறையும் இவர்கள் கொண்டிருக்கவில்லை. பாராளுமன்றத்தில் கிழக்கிலங்கை போன்ற பிற்படுத்தப்பட்ட பிரதேச மக்களுக்கு கல்விவாய்ப்பை தடுக்க முனைந்தவர்கள் வடகிழக்குக்கு வந்து தமிழீழம் பெற்றுத் தருகிறோம் எனக்கூறுவது எப்படிப்பட்ட அயோக்கியத்தனமாய் இருக்கமுடியும். கிழக்கிலங்கை மக்களுக்கு அவ்வேளைகளில் தேவையாய் இருந்தது கல்வி வாய்ப்பே தவிர கண்ணுக்குத் தெரியாத தமிழீழம் அல்ல.


இன்நிலையில் தமிழ் மக்களுக்கான பெரும் தலைவர்களாக பிரகடனப்படுத்திக் கொள்வதற்கான எளிய வழிமுறைகளாக மட்டுமே இ;வ்வித மயிர்க்கூச்செறியும் பேச்சுக்கள் அமைந்திருந்தன.
பாகிஸ்தான் பிரிவினைக்கு வழிசமைத்த சமூகஇ பொருளாதாரஇ இனஇ மதஇ மொழிச்சிக்கல்களுக்கும் இலங்கைத் தமிழர்கள் கொண்டிருந்த வாழ்க்கை முறைக்கும் எவ்விதப் பொருத்தப்பாடும் கிடையாது. அவ்வாறு இருக்க வெறும் உணர்ச்சி ததும்பும் பேச்சுகளில் மக்களை ஏமாற்றுவதன் ஊடாக கிழக்கிலங்கை மக்களை தொடர்ந்தும் மடையர்களாக வைத்திருப்பதே இவர்களின் நோக்கமாய் இருந்தது.


இன்றுபோல் அன்றி அந்தக்காலகட்டத்தில் கொம்ய10ட்டர்இ இன்ரர்நெட்இ தொலைக்காட்சி ஏன் வானொலிஇ பத்திரிகை கூட இருக்கவில்லை. ஏதுமே அறியாத மக்கள் கூட்டத்தினரிடை கொழும்பில் ஒன்றும் வடகிழக்கில் ஒன்றுமாக மாறி மாறி இவர்களால் பேச முடிந்தது. அதிலும் கிழக்கில் வாழ்ந்த மக்கள் தலைப்பாகை கட்டிய பெரும் அரசியல்வாதிகளின் போலி முகங்களிடம் மிகச்சாதாரணமாகவே ஏமாந்தனர். பெயர் பெற்ற ஆங்கில வித்துவான்களாகவும்இ புகழ் பெற்ற சட்டத்தரணிகளாகவும் இருந்த யாழ்பாண அரசியல்வாதிகளின் நிழலில் தாம் வாழ்வது குறித்து சிலவேளைகளில் பெருமித உணர்விலும் திளைத்தனர்.

சுமார் 50 வருடங்களுக்கு முன்பிருந்த கிழக்கு சமூகம் வெறும் நிலப்பிரபுத்துவ வழியில் இருந்து பெரிதும் வளர்ச்சியடையாத வாழ்க்கைமுறையில் சிக்கிக் கிடந்தது. பெருநிலவுடமையாளர்களான போடிமார்களின் குடியானவர்களாக சமூக ஒழுங்கின் வழிவந்த வாழ்க்கை முறையில் நிம்மதி காண்பவர்களாக இருந்த அவர்கள் எள்ளளவும் அரசியல் என்பது மீதான அக்கறை கொண்டிருக்கவில்லை. தம் அன்றாட நிலபுலம் சார்ந்த வேலைகளில் காலத்தை ஓட்டிவந்த பாமரமக்களுக்கு ஜீ.ஜீ.பொன்னம்பலம் போன்ற பெரும் மனிதர்கள் தலைவர்களாகக் கிடைத்தமையானது அவர்கள் வாழ்வில் கிடைத்த பெரும் பேறாகவே அவர்களால் கருதப்பட்டது.


ஐக்கியதேசியக் கட்சி அரசாங்கத்தில் அவ்வேளையில் அமைச்சராய் இருந்த அருணாசலம் மகாதேவா என்பவரை தமிழினத் துரோகி என்றும் தமிழ் பேசும் மக்களின் மீட்பர் தான் மட்டுமே என்றும் திரும்பத் திரும்ப பேசி 1947ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார் ஜீ.ஜீ.. ஆனால் அந்த தேர்தலில் வெற்றிபெற்ற கையோடு டி.எஸ்.சேனநாயக்காவின் இரு அமைச்சு பதவிகளுக்காக ஐக்கியதேசியக் கட்சி ஆட்சியில் பொன்னம்பலமும் பங்கெடுத்தார்.

1945 ஆம் ஆண்டு எல்லோருக்குமான இலவசக்கல்வி மசோதாவை இந்த ஜீ.ஜீ.பொன்னம்பலம் தடுக்க முயன்ற போது முரண்படாத தமிழ் காங்கிரஸின் ஒரு கூட்டத்தினர் 1947 ஆம் ஆண்டு அமைச்சு பதவிகளைப் பெற்றுக் கொள்ள ஜீ.ஜீ.பொன்னம்பலம் மேற்கொண்ட முடிவினில் கடுமையாக முரண்பட்டனர். இந்த ஐக்கிய தேசியக்கட்சியுடன் ஏற்படுத்திய உடன்பாடானது “தமிழ் மக்களின் நலன்களை கருத்தில் கொண்டு ஒரு ஒப்பந்த அடிப்படையில் செய்யப்பட்டிருக்கலாம்.”வெறுமனே “இரு அமைச்சுப் பதவிகளுக்காக நிபந்தனைகள் அற்ற முறையில் டி.எஸ்.செனநாயக்காவின் அரசமைக்கும் செயலுக்கு துணைபோவது துரோகமானதாகும்” எனக் கூறினர். ஜீ.ஜீ.பொன்னம்பலத்தின் தலைமை தமிழ் மக்களுக்கு துரோகம் செய்து விட்டது என தமிழ் காங்கிரசுக்குள் இருந்தே எஸ்.ஜே.வி.செல்வநாயகம் தலைமையிலான ஒரு பிரிவினர் குரலெழுப்பினர்.


இந்த அதிருப்தி குழுவினரில் செல்வநாயகம் தலைமையிலான வன்னியசிங்கம்இ நாகநாதன் போன்றோர் முக்கிய பாத்திரம் வகித்தனர். அதேபோன்று 1947 இல் சோல்பரித் திட்டத்தினபடி நடந்த முதலாவது தேர்தலில் மலையக மக்கள் சார்பில் ஏழுபிரதிநிதிகள் தெரிவாகியிருந்தனர். அவை கீழ்வருமாறு.

1) ஜி.ஆர்.மேத்தா
2) கே.ராசலிங்கம்
3) எஸ்.தொண்டமான்
4) கே.குமாரவேலு
5) பி.இராமானுஜம்
6) எஸ.எம்.சுப்பையா
7) சி.வி.வேலுப்பிள்ளை

95 ஆசனங்களைக் கொண்ட பாராளுமன்றத்தில் 7 இடங்களை மலையக மக்கள் கைப்பற்றியமையானது யு.என்.பியின்; தலைவராய் இருந்த டி.எஸ்.சேனநாயக்காவுக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது. அதுமட்டும் அன்றி சுமார் 20 வீதமான தொகுதிகளில் மலையக மக்கள் பிரதிநிதிகளைத் தீர்மானிக்கும் சக்திகளாகத் திகழ்ந்தனர். இதனு}டாக மலையக தொழிலாளர்களது எதிர்கால அரசியல் பலம் உணரப்பட்டது. இலங்கை அரசியலில் கூடிய அதிகாரம் செலுத்தும் வாய்ப்புகளை மலையக மக்களுக்கு இன்நிலைமை அளித்திருந்தது. இதனை உணர்ந்துகொண்ட அச்சம் காரணமாக யு.என்.பி அரசு அவர்களது பிரசா உரிமைகளை ரத்துச் செய்வதனு}டாக நாடற்றவர்கள் எனும் நிலைக்கு மலையக சமூகத்தை கொண்டுவந்து அவர்களின் வாக்குரிமைகளைப் பறிக்கும் கொடூரமான திட்டத்தை தீட்டியது.

இதன்படி 15-நவம்பர்-1948 அன்று பாராளுமன்றத்தில் யு.என்.பி. அரசு கொண்டுவந்த பிரஜாவுரிமைச் சட்த்தின்மீது தமிழ்காங்கிரஸின் பொன்னம்பலம் தலைமை ஆதரவைத் தெரிவித்தது. இதன்மூலம் 10 இலட்சம் தோட்டத்தொழிலாளர்களின் வாக்குரிமையை ஒரேநாளில் பறித்த யு.என்.பி முதலாளித்துவ அரசினது அநாகரிக செயலுக்கு பொன்னம்பலம் உடந்தையாயிருந்தார்.

இந்த செயற்பாட்டின்மீதும் எஸ்.ஜே.வி.செல்வநாயகம் தலைமையிலான ஒரு குழுவினர் தமிழ்காங்கிரசின் தலைமைமீது முரண்பட்டனர். இந்த முரண்பாடுகளின் தொடர்ச்சியாகவே இலங்கை தமிழ்காங்கிரசில் இருந்து செல்வநாயகம் வெளியேறி “தமிழரசுக்கட்சி” என்கின்ற ஒரு அரசியல் கட்சியைத் தோற்றுவித்தார்


தொடரும்...

Post Comment


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

2 comments: on "தமிழர் நம் வரலாறு சொல்லும் கதைகள் பகுதி - 9"

EKSAAR said...

இங்கே தரப்பட்டிருக்கும் தகவல்கள் இதுவரை தமிழில் எழுதப்படாதவை.. தகவல்கள் பெறப்பட்ட இடங்களையும் குறித்துக்காட்டுவதன்மூலம், தகவல்களின் உண்மைத்தன்மை பற்றிய நம்பிக்கையை ஏற்படுத்தலாமல்லவா?

தங்க முகுந்தன் said...

அருமையான தொடருக்கு முதலில் எனது வாழ்த்துக்கள்! எனது பதிவில் இட்ட அதே தொகுதி முடிவை இங்கு சேர்க்கின்றேன். இலங்கை இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியில் 7பேரும் ஒரு சுயேட்சை வேட்பாளரும் தெரிவாகிய அந்தத் தேர்தலில் மலையகத்திலிருந்து மொத்தம் எண்மர் தெரிவானார்கள்.

1947ஆம் ஆண்டுப் பாராளுமன்றப் பொதுத் தேர்தல்

நுவரெலியா தொகுதி

எஸ். தொண்டமான் 9,386
ரி. ரட்ணம் 3,251
லொரேயுஸ் பெரேரா 1,124

தலவாக்கல்லை தொகுதி

சி.வி. வேலுப்பிள்ளை 10,645
பி.எம் வேல்சாமி 935
எச்.வி. ராம் ஈஸ்வர 801
ரி. சந்தானம் 684

கொட்டகலை தொகுதி

கே. குமாரவேலு 6,722
யு பி. ஜெயசுந்தர 3,179
எல். எட்வேட்ஸ் 1,175
ஈ. வணிகசேகர 782
எஸ் செல்லையா 251

நாவலப்பிட்டி தொகுதி

கே. ராஜலிங்கம் 7,933
ஆர் ஈ ஜெயதிலக 6,491
ஏ எச் டி சில்வா 787
எஸ் என் பொன்னையா 336

மஸ்கெலியா தொகுதி

ஜி. ஆர். மோத்தா 9,086
பி.டி.டபிள்யூ குணபால 3,949
கே. நடேசஐயர் 918
ரி.எம். சோலமன் 598

அளுத்நுவர தொகுதி

டி. ராமானுஜம் 2,772
கே.டி.குணரட்ண 1,335
ரி.எம்.ஏ ரட்ணாயக்க 567
சி.ஈ. கும்பல்வெல 522
டபிள்யூ. எச். ரட்ணாயக்க 310
பி.பி.எம். பண்டாரநாயக்க 147

பதுளை தொகுதி (இரட்டைப் பாராளுமன்றத் தொகுதி)

எஸ்.எம். சுப்பையா 27,121
ஜே.சி.ரி. கொத்தலாவல 16,654
ஜி.பி. கட்டுகஹா 6,585
வி. ஞானபாண்டியன் 1,319

பண்டாரவளை தொகுதி

கே.வி. நடராஜா 5,092
எம்.பி. யாபா 2,897
கே.பி.எச். அதிகாரிதிலக 181

அப்புத்தளை தொகுதி

ஜே:ஏ. ரம்புக்வெல 2,124
ஏ.டி. செங்கமலை 1,753 (தோல்வி)
ஆர். ஏ. நடேசன் 1,337
ஏ. பச்சமுத்து 1,229
ஜி. ஜே. ராஜகுலேந்திரன் 327

Post a Comment