Thursday 10 June 2010

தமிழர் நம் வரலாறு சொல்லும் கதைகள் பகுதி - 10

தமிழரசுக் கட்சி
தமிழர் நெஞ்சங்களில் அழியாத இடம்பிடித்த பெருந்தலைவர் தந்தை செல்வா 1952 ஆம் ஆண்டுத் தேர்தலில் ஏன் தோற்கடிக்கப்பட்டார்?
இக்கட்சியானது ஆங்கிலத்தில் பெடரல் பாட்டி என பதிவு செய்யப்பட்டிருந்தாலும் (அதாவது சமஸ்டிக்கட்சி எனும் அர்த்தத்தில்) வடகிழக்கு பகுதிகளில் இது “தமிழரசுக்கட்சி”யெனும் பிரச்சார நோக்கிலான பெயர்கொண்டே இக்கட்சியினரால் அறிமுகப்படுத்தப்பட்டது.

 1947ஆம் ஆண்டு அகில இலங்கை தமிழ் காங்கிரசை யு.என்.பி. அரசுடன் இணைத்துக் கொண்ட செயலை “ஜீ.ஜீ.பொன்னம்பலம் தமிழர்களுக்குச் செய்த துரோகம்” என வர்ணித்தார் செல்வநாயகம். அதைத்தொடர்ந்து 1948இல் பத்து இலட்சம் தோட்டத்தொழிலாளர்களது வாக்குரிமையைப் பறித்து அவர்களை நாடற்றவர்களாக்கிய யு.என்.பி இற்கு துணைபோன பொன்னலம்பலத்திடம் இருந்து எஸ்ஜே.வி.செல்வநாயகம் கடுமையான முரண்பாடுகளோடு வெளியேறினார். அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் மீதான இந்த குற்றச்சாட்டுகளோடுதான் தமிழரசுக் கட்சி தோற்றம் பெற்றது.

இக்கட்சியின் தோற்றுவாயானது பரந்துபட்ட தமிழ் மக்களின் நன்மைகளைக் கருத்தில் கொண்டிருந்தமை வடக்குஇ கிழக்குஇ மலையகம் போன்ற பகுதிகளில் வாழ்ந்துவந்த தமிழ் மக்களுக்கு நம்பிக்கை தரத்தக்க ஒரு செய்தியாகவும் இருந்தது. அதேபோன்று திருகோணமலை மாவட்டத்தில் அமைந்துள்ள கந்தளாய்ப் பகுதியில் நடைபெற்று வந்த சிங்களக் குடியேற்றத்தையும் கடுமையாக எதிர்த்த தமிழரசுக் கட்சியினுடைய நடவடிக்கை குறிப்பாக கிழக்கு மாகாண மக்களிடத்தில் அக்கட்சி காலு}ன்றுவதற்கு நல்வாய்ப்பினை அளித்தது.

1951 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற தமிழரசுக்கட்சியின் ஆரம்பக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் ஒன்றில் “அரசாங்கத்தின் கந்தளாய் போன்ற நீர்பாசனத் திட்டங்கள் மூலம் சிங்களக் குடியேற்றத் திட்டங்களையும் தமிழ்ப் பிரதேசங்களில் சிங்கள மக்களை பலவந்தமாக குடியேற்றுவதையும் வன்மையாகக் கண்டிக்கின்றது.” என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுபோன்ற நேரடியான வேலைத்திட்டங்களில் தமிழரசுக்கட்சியானது முனைப்புக் கொண்டிருந்தமையால் கிழக்கிலங்கை மக்கள் தமக்கான சமூக பாதுகாப்பு அரண்களாக இக்கட்சியினரின் யாழ்பாணத்து தலைமைகளை பற்றிக்கொள்ளும் வாய்ப்புகள் அதிகரித்தது எனலாம்.

தமிழரசுக்கட்சி தொடங்கப்படுவதற்கு முன்பே பிரசாவுரிமைச் சட்டத்தையும் அதை ஆதரித்த தமிழ் காங்கிரஸ் தலைமையையும் விமர்சித்து மலையக மக்களுக்காக குரல்கொடுத்தவர் செல்வநாயகம் ஆவார். யாழ்ப்பாணத்தில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் 1947 ஆம் ஏப்ரல் மாதத்தில் “இலங்கையில் வாழும் தமிழர்கள் ஒரு தேசிய இனம் அவர்களை இலங்கைத் தமிழர்கள் என்றோஇ இந்தியத் தமிழர்கள் என்றோ பிரிக்கமுடியாது” என விளக்கினார். எஸ்.ஜே.வி.செல்வநாயகத்தினுடைய மேற்படி நடவடிக்கைகள் தமிழ் தலைமைகளின் வரிசையில் ஒரு நல்ல மாற்றம் ஏற்பட்டிருப்பது போன்றதொரு தோற்றத்தை அளித்தது.
1915 இல் இருந்த தலைமைகள் முஸ்லிம் மக்களுக்கு எதிரான சிங்களப் பேரினவாதச் செயற்பாடுகளை அனுமதித்து அதன் பாதிப்புகளை மறைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தன.
1931 இல் சர்வசன வாக்குரிமையை எதிர்த்து அதே தலைமைகள் செயற்பட்டன.
1945 இல் பரந்துபட்ட மக்களுக்கான இலவசக்கல்வி அமூலாக்கப்படுவதை எதிர்த்து தமிழ்த் தலைமைகள் கூக்குரலிட்டன.

1948 இல் மலையகத் தமிழர்களின் வாக்குகளைப் பறித்த யு.என்.பி இன் திட்டமிட்ட பேரினவாதஇ ஏகாதிபத்திய சதிக்கு தமிழ்த் தலைமைகளே துணைபோயின.
இந்த துரோக வரலாற்றுத் தொடர்ச்சியில் இருந்து மாறுபட்டு எழுந்த எஸ்.ஜே.வி.செல்வநாயகத்தினுடைய புதிய அரசியலினுடைய உருவாக்கம் தமிழரசுக்கட்சி எனும் பெயரில் அதிகமாற்றங்களைக் கொண்டுவரும் என எதிர்பார்க்கப்பட்டது. யாழ்ப்பாணத்து பணக்கார வர்க்கத்தினுடைய ஆசாபாசங்களை மட்டுமே கவனத்;தில் எடுத்து இதுவரை காலமும் செயற்பட்டுவந்த அரசியல்வாதிகளில் இருந்து செல்வநாயகம் வித்தியாசப்பட்டார். “தமிழ்த் தேசியம்” என்கின்ற ஒன்று நோக்கி முஸ்லிம்இ மலையகஇ கிழக்குவாழ் தமிழர்களை அணிதிரட்டும் பணியில் அவர் ஈடுபட்டார். மதஇ பிரதேச எல்லைகளைத் தாண்டிய தமிழ்பேசும் மக்களுக்கான ஒருமித்த “ஆன்மா” ஒன்றினை கட்டியமைக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டிருந்தார் என இதனைக் கொள்ளலாம். அவரது இந்த முயற்சி யாழ்பாணத்துக்கு வெளியே பலத்த வரவேற்பைப் பெற்றிருந்தது.

ஆனாலும் யாழ்ப்பாணத்து மக்கள் இந்த தமிழ்த் தேசிய ஒற்றுமைக்கான அவசியம் குறித்து நேர் எதிரான பார்வையையே கொண்டிருந்தனர் என்பதை 1952 ஆம் ஆண்டுத் தேர்தலின் பின்னரே செல்வநாயகம் அவர்களால் உணர்ந்துகொள்ள முடிந்தது.
மேற்படி கொள்கைகளைக் கொண்டு தமிழ் பேசும் மக்களுக்காக தேவைகளை முன்னிறுத்தி ஓர் சமஸ்டி அரசுக் கோரிக்கையைக் கொண்டு அவர் பிரச்சாரத்தில் இறங்கினார். இந்த சமஸ்டிக் கோரிக்கையோடு 1952 ஆம் ஆண்டில் முதன் முதலாக தமிழரசுக் கட்சி பொதுத்தேர்தல் ஒன்றைச் சந்தித்தது.

பரந்துபட்ட தமிழ் பேசும் மக்களுக்கான சமஸ்டிக் கோட்பாடுகளுடனும் மலையக மக்களின் அடிப்படை உரிமைகளுக்கான கோரிக்கைகளுடனும் மக்களைச் சந்தித்த தமிழரசுக்கட்சி 1952 ஆம் ஆண்டுத் தேர்தலில் கடுமையானதொரு தோல்விக்கு முகம் கொடுக்க நேரிட்டது.

யாழ்பாணத்தில் பாரிய தோல்வியைச் சந்தித்தது தமிழரசுக்கட்சி. மலையக மக்களின் வாக்குரிமைப் பிரச்சனைகள் மீதும் கிழக்கிலங்கை மக்களது குடியேற்றப் பிரச்சனை மீதும் எவ்வளவு து}ரத்திற்கு யாழ்ப்பாண சமூகம் அக்கறை காட்டியதென்கின்ற வேதனைக்குரிய செய்தியே இத்தோல்வி மூலம் வெளியானது. அரசியல் விழிப்புணர்வு கொண்ட சமூகமான போதும் தங்களது சுயநலன்களுக்கு அப்பால் வேறு எதனை இட்டும்இ யாரை இட்டும்? (அவர்கள் தமிழர்களாய் இருந்த போதிலும் கூட) அக்கறை கொள்ள மறுக்கின்ற அலட்சியப் போக்கினையுடைய யாழ்ப்பாணத்தின் சுயரூபம் இத்தேர்தலில் எஸ்.ஜே.வி. செல்வநாயகம் போன்ற பெரும்தலைவர்களையே தோற்கடித்த போது அப்பட்டமானது. இத்தேர்தலில் கோப்பாய் தொகுதியில் இருந்து கு.வன்னியசிங்கம் என்ற ஒரேஒரு வேட்பாளரைத் தவிர வடமாகாணத்தில் இருந்து போட்டியிட்ட அனைத்து தமிழரசுக்கட்சி வேட்பாளர்களும் முகத்தில் கரி ப10சப்பட்டனர். இதனை ஆராய்ந்து பார்க்கும் இடத்து இன ஐக்கியம்இ தமிழ்த் தேசியம்இ தமிழ் உணர்வு என்கின்ற இன ஒருமைப்பாட்டுக்கான அறைகூவல்களை யாழ்பாண சமூகம் மிக தௌ;ளத் தெளிவான முறையில் நிராகரித்தது என்பது புலனாகின்றது.

தமிழரசுக் கட்சி வடகிழக்கில் பிரசன்னமாக முன்னர் அகில இலங்கை தமிழ்த் தேசியக் காங்கிரஸ் காரணகாரியமின்றி முன்வைத்த தமிழீழம் எனும் வெற்றுக் கோசத்தை ஆதரித்த யாழ்ப்பாண மக்கள் ஏன் கிழக்கிலங்கையினதும்இ மலையக மக்களினதும் பிரச்சனைகளுடனும் அதற்கான தீர்வுகளுடனும் அரசியல் அரங்குக்கு வந்த தமிழரசுக்கட்சிக்கு தங்கள் ஆதரவை நல்கவில்லை?
பாகிஸ்தான் போன்ற பிரிவினை ஊடாக தமிழீழத்தை பெற்றுத் தருவேன் என்றும்இ தமிழர்களின் முகமட் ஜின்னா தானே என்றும் பொருத்தமற்ற வெற்றுக் கூச்சல்களை பரப்பிய அதுவரை காலம் இருந்த தலைமைகளை எப்படி வடமாகாண மக்கள் ஆதரித்தார்கள்? அந்த மாயையினு}டு சேர்.பொன்.இராமநாதனும்இ மகாதேவாவும் ஜீ.ஜீ.பொன்னம்பலமும் நிறைவேற்றி வந்த யாழ்பாணத்து மத்தியதர வர்க்கத்தினரது அபிலாசைகளை மட்டுமே காத்துக் கொள்ளும் அரசியல்தான் அவர்களது விருப்பமாயிருந்ததா? அதற்காக முஸ்லிம்களுக்கும் மலையக மக்களுக்கும்இ கிழக்கிலங்கை மக்களுக்கும் எதிராக யு.என்.பி போன்ற ஏகாதிபத்திய அருவருடிகளுக்கு துணை போகின்ற அந்த சூழ்ச்சி நிறைந்த அரசியலைத்தானா யாழ்ப்பாண மக்கள் விரும்பினர்? ஆக யாழ்பாண அடிப்படைவாதத்தைத் தக்கவைப்பது தான் 1952ஆம் ஆண்டு தமிழரசுக்கட்சியை யாழ்ப்பாண சமூகம் தோற்கடித்ததன் உள்நோக்கம் என்பது புலனாகின்றது.

தமிழரசுக்கட்சியினர் தாங்கள் முகம் கொடுத்த முதலாவது தேர்தலிலேயே படுதோல்வி கண்டமையானது அவர்களது கொள்கை கோட்பாடுகள் மாற்றம் காணவேண்டிய நிலைக்கு அல்லது வேறுவடிவம் எடுக்க வேண்டிய நிலைக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதை உணர்த்தியது. யாழ்ப்பாணத்து நலன்களில் மட்டுமே மையங்கொள்ள வேண்டிய பிரச்சினைகளும் கோரிக்கைகளும் முக்கியத்துவப்படுத்தப்பட வேண்டும்இ அளவுக்கு மிஞ்சிய வகையிலும் தீவிரத் தன்மையுடனும் இனஉணர்வுகளை கிளறிவிடக்கூடிய வெற்றுப்பேச்சுகளும் (பொன்னம்பலம் பாணியில்) தேர்தல் அரசியலுக்கு அவசியமானவை என்கின்ற பாடங்களை 1952இன் தேர்தல் தோல்வியானது தமிழரசுக்கட்சியினருக்கு சொல்லிக் கொடுத்தது.

இந்தப் பாடங்களோடு தான் 1956ஆம் ஆண்டுத் தேர்தலில் தமிழரசுக்கட்சி தனது இரண்டாவது தேர்தலை நோக்கி பயணிக்கத் தொடங்கியது. இதே காலப்பகுதியில் தென்னிலங்கையில் அதுவரை காலமும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து செயற்பட்டு வந்த சிங்கள மக்கள் சார்பான “சிங்கள மகாசபா” எனும் அமைப்பின் வெளியேற்றம் நிகழ்ந்தது. 1951ஆம் ஆண்டு நிகழ்ந்த இந்த வெளியேற்றம் சிறிலங்கா சுதந்திரக்கட்சியாக அரசியலில் பரிணமித்தது. இந்த சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் ஐ.தே.கட்சி என்கின்ற ஏகாதிபத்திய தரகுக் கட்சியின் துரோகங்களை விமர்சித்து வெளியேறியோரால் உதயமாக்கப்பட்டது. பொன்னம்பலத்தினுடைய துரோகங்களை விமர்சித்து தமிழ் காங்கிரசில் இருந்து வெளியேறிய எஸ்.ஜே.வி.செல்வநாயகம் போன்றே ஓரளவு வெகுசன மக்கள் சார்ந்த கருத்தியல் ரீதியிலும் தென்னிலங்கையில் புதிய கட்சியான சி.சு.கட்சியின் தோற்றத்தை அடையாளம் காணமுடியும்.

இவ்விரு பிளவுகளிலும் உருவான சி.சு.கட்சியும்இ தமிழரசுக்கட்சியும் முறையே தம்மிடம் வந்து சேர்ந்த சிங்கள இனவாதஇ யாழ்ப்பாண அடிப்படைவாத சிந்தனைகளைக் களைந்து ஒருமித்து செயற்படும் வாய்ப்புகள் காணப்பட்ட போதிலும் அவ்வாய்ப்புகள் கைநழுவி விடப்பட்டது. இது மிகப்பெரியதொரு துரதிஸ்டமான நிகழ்வாகும். ஆகவே காலப்போக்கில் யு.என்.பி இற்கு நிகரான அதே இனவாதத்துடன் எப்படி சிறிலங்கா சுதந்திரக்கட்சி நடைபோட்டதோ அதேபோன்றே தமிழரசுக்கட்சியும் தாம் கடந்து வந்த தமிழ் காங்கிரஸ் விட்டுச்சென்ற யாழ் அடிப்படைவாதச் சேற்றில் மீண்டும் காலுன்றியது.

இவ்விரு கட்சிகளின் தோற்றமும் அவற்றின் உருவாக்கத்தில் கொண்டிருந்த நல்ல பல அம்சங்களை சாத்தியப்படுத்த அக்கட்சிகளை வழிநடத்திய பின்புலங்கள் வாய்ப்பளிக்கவில்லை. எந்த பிற்போக்குத் தனங்களை எதிர்த்துஇ எவற்றில் அதிருப்தியுற்று தமிழரசுக் கட்சியும்இ சிறிலங்கா சுதந்திரக்கட்சியும் உருவாகியிருந்தனவோ அவற்றையே அடிப்படையாகக்கொண்டு அதே பிற்போக்குவாதிகளிடம் மீண்டும் மாட்டுப்பட்டனர். எனவே இவ்விரு கட்சிகளின் தோற்றமும் சிறந்ததொரு மாற்றத்தினை இலங்கை அரசியலில் ஏற்படுத்தும் சந்தர்ப்பங்களை தவறவிட்டன என்றே கூறலாம். இதன் காரணமாக சிங்கள மகாசபாவின் அடிப்படை நோக்கங்களில் ஒன்றான சுதேசமொழிக் கொள்கை தேய்ந்து தனிச்சிங்களச் சட்டமாக குறுகிப்போனது. அதேபோன்று தமிழரசுக்கட்சியின் தோற்றத்துக்கு காரணமான தமிழ் மக்களினது (மலையகம்) வாக்குரிமைப் பிரச்சனையும்இ திட்டமிட்ட குடியேற்ற (கிழக்கிலங்கை) எதிர்ப்புவாதமும்இ தமிழ் மொழியினது அந்தஸ்துக்கான போராட்டமும் தேய்ந்து சிங்கள மக்களுக்கு எதிரான தமிழ் இனவெறியாக எதிர்கால அரசியலில் பரிணமித்தன.

தெடரும்...

Post Comment


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

3 comments: on "தமிழர் நம் வரலாறு சொல்லும் கதைகள் பகுதி - 10"

தங்க முகுந்தன் said...

தமிழரசுக்கட்சி 1952 இல் நடந்த தேர்தலில் 2 பாராளுமன்ற ஆசனங்களைப் பெற்றது! கோப்பாய்த் தொகுதியில் வன்னியசிங்கம் அவர்களும் திருகோணமலையில் இராஜவரோதயம் அவர்களும் தெரிவாகியமை குறிப்பிடத்தக்கது.

Admin said...

//தங்க முகுந்தன் கூறியது...
தமிழரசுக்கட்சி 1952 இல் நடந்த தேர்தலில் 2 பாராளுமன்ற ஆசனங்களைப் பெற்றது! கோப்பாய்த் தொகுதியில் வன்னியசிங்கம் அவர்களும் திருகோணமலையில் இராஜவரோதயம் அவர்களும் தெரிவாகியமை குறிப்பிடத்தக்கது.//

கருத்துக்களுக்கும், தகவலுக்கும் நன்றிகள்.

Anonymous said...

ராசவரோஹயம் யாழ்ப்பானிதானே சந்ரு ஐய்யே

Post a Comment