Saturday 12 June 2010

தமிழர் நம் வரலாறு சொல்லும் கதைகள் பகுதி - 11

ஆங்கிலேய ஆட்சியாளர்கள் இலங்கையில் அதிகமான நிர்வாக உத்தியோகங்களை இலங்கையருக்கே கொடுத்த பின்னரும்கூட ஆங்கில அறிவுபெற்ற மத்தியதர வர்க்கத்தை சேர்ந்தவர்களிடம் மட்டுமே அவ்வுத்தியோகங்கள் முடக்கப்பட்டிருந்தது. இந்நிலை தொடரக்காரணம் ஆங்கிலமே அரசகரும மொழியாக தொடர்ந்தும் இருந்து வந்தமையாகும்.
இந்நிலைமையானது தமிழ்மொழி பேசும் பகுதிகளுக்கும், சிங்கள மொழிபேசும் பகுதிகளுக்கும் பொதுவானதொன்றாகவே காணப்பட்டது. எனவே சுயபாஷைகளான தமிழ்இ சிங்களம் போன்ற மொழிகளில் கல்விகற்ற மீன்பிடிஇ விவசாயஇ கூலித்தொழிலாளர்கள் எனப்படுகின்ற சமூகங்களின் எல்லாவகையான பிரிவினரையும் இவ்வுத்தியோகங்கள் சென்றடையும் வாய்ப்பு கிட்டியிருக்கவில்லை. ஆங்கிலமொழி மூலம் கல்வி கற்கக்கூடிய குடும்பப்பின்னணி கொண்டவர்களிடமே மீண்டும் மீண்டும் இவ்வுத்தியோகங்கள் சென்றடைந்து கொண்டிருந்தது.

இந்நிலைமையை மாற்றி அமைக்க சுயபாஷைகளுக்கு அரச அந்தஸ்து கோருகின்ற குரல்கள் சமூகத்தின் கீழ்தட்டு மக்களிடம் இருந்து ஒலிக்கத்தொடங்கின. “உண்மையில் ஆங்கிலத்தை அரசமொழி ஸ்தானத்தில் இருந்து நீக்கி சிங்கள-தமிழ் மொழிகளை அரசமொழிகளாக மாற்ற வேண்டும் என்கின்ற இயக்கம் 1920ஆம் ஆண்டிலேயே ஆரம்பித்து விட்டது.”

அடிமட்ட மக்களின் தேவைகளில் இருந்து உருவான இக்கோரிக்கையானது சிங்களப் பகுதிகளைப்போன்றே தமிழப்பகுதிகளுக்கும் பொதுவானதாய் இருந்தபோதும் அது தமிழ் மொழி பேசப்படுகின்ற வடகிழக்குப் பகுதிகளில் அதிக கவனம் பெறவில்லை என்பதே உண்மையாகும். காரணம் வடகிழக்கின் அதிகார சக்திகளாக அந்த மக்களின் பெயரில் அரசியல் ஆதிக்கத்தை தக்கவைத்திருந்த கூட்டம் இந்த சுயபாஷை கோரிக்கைகளை ஒரு இயக்கமாக வளர்ப்பதை விரும்பியிருக்கவில்லை. புறநடையாக மட்டக்களப்பு பிரதிநிதிகளாய் இருந்த ஒருசிலரும் யாழ்ப்பாணத்தில் இருந்த இளைஞர் காங்கிரஸ் எனப்பட்ட ஒரு சிறிய அமைப்புமே இந்த சுயபாஷை இயக்கத்தில் அக்கறை கொண்டு செயற்பட்டிருந்தனர். ஆனாலும் அரசியல் அதிகாரம் கொண்ட யாழ்ப்பாணத்தில் இருந்த மேல்தட்டு வர்க்கத்தினர் அதனை அனுமதிக்கவில்லை. இதன் காரணமாகவே சிங்களப் பகுதிகளில் உருவாகி வந்த சுயபாஷைக்குரிய இயக்கத்தினருடன் இணைந்து தமிழ் சிங்களம் ஆகிய மொழிகளுக்கான அரச அந்தஸ்துக் கோரும் தேசம் பரந்த ஒருமித்ததொரு திட்டத்தினை முன்வைக்கும் சாத்தியங்கள் அற்றுப்போயின. ஆனபோதும் சிங்களப்பகுதிகளில் மெது மெதுவாக கிளைவிட்ட இந்த சுயபாஷை இயக்கத்தினரின் செயற்பாடுகள் காலப்போக்கில் வளர்ச்சியுற்றன.

அரசசபையில் 1932 இல் ஜீ.கே.டபிள்யு.பெரேரா என்பவர் மூலம் அரசசபை விவாதங்கள் சிங்களம்இ தமிழ் மொழிகளில் இடம்பெறவேண்டும் எனும் பிரேரணை பலமானதொரு கோரிக்கையாக முன்வைக்கப்பட்டது. அதேபோன்று அரச அலுவலகங்களிலும் “சுயபாஷைகள்” (சிங்களம் மட்டும் அல்ல என்பதைக் கவனிக்க) உபயோகிக்கப்படவேண்டும் எனும் பிரேரணைகளும் இருவருடங்களின் பின்னர் அவராலேயே கொண்டுவரப்பட்டது. இந்த சுயபாஷைகளுக்கான இயக்கத்தின் அவசியத்தையும் அதனு}டாக இருஇனங்களிடையே பரஸ்பர ஒற்றுமையை வளர்க்கும் நோக்கிலும் மட்டக்களப்பு அங்கத்தவராய் இருந்த எஸ்.ஓ.கனகரெட்னம் அவர்கள் 1937 ஆம் ஆண்டில் “தமிழ் பாடசாலைகளில் சிங்களமும்இ சிங்களப் பாடசாலைகளில் தமிழும் கட்டாய பாடங்களாக கற்பிக்கப்பட வேண்டும்” என்கின்ற ஆலோசனையை முன்வைக்கும் பிரேரணை ஒன்றைக் கொண்டு வந்தார். இதனை யாழ்ப்பாண இளைஞர் சங்கமும்இ ஆசிரியர் சங்கமும் ஆதரவளித்து வரவேற்றன. ஆனால் கிறிஸ்தவப் பாதிரியான பீற்றர்பிள்ளை கடுமையாக இத்திட்டத்தை எதிர்த்து விளக்கமளித்தார். இதன்காரணமாக கனகரெட்ணம் அவர்களின் மொழிகளுக்கிடையே பரஸ்பர உறவைப் பேணும் நன்நோக்கம் கொண்ட இத்திட்டம் கைகூடாமல் போயிற்று.

1943ஆம் ஆண்டு அவ்வேளை புதிய அங்கத்தவராய் அரச சபைக்குள் நுழைந்த ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவும் கூட இந்த சுயபாஷை இயக்கத்தில் ஈடுபாடு கொண்டிருந்தார். அதன்காரணமாக “சிங்களம்” அரச கருமமொழியாக இருக்க வேண்டும் எனும் பிரேரணையை அரசசபையில் அவர் கொண்டு வந்தார். ஆனால் மட்டக்களப்பு பிரதிநிதியாய் இருந்த வி.நல்லையா “தமிழ்” குறித்த திருத்தத்தினை அவருக்கு சுட்டிக்காட்டினார். அதனை மிகச் சாதணமான சுயவிமர்சனத்துடன் ஜே.ஆர்.ஜெயவர்த்தனா ஏற்றுக்கொண்டார் என்பதையும் அதன்பின்னர் சிங்களம் மட்டும் என்று இல்லாமல் தமிழும் என பிரேரணை திருத்தப்பட்டது என்பதையும் நம்மில் பலர் கவனிக்கத்தவறிவந்துள்ளோம். வி.நல்லையாவுக்கு துணையாக எஸ.டபிள்யு.ஆர்.பண்டார நாயக்கா குரலெழுப்பினார். “சிங்களம் மட்டும் அரசகருமமொழியாய் இருக்கவேண்டும் என்பதன் நோக்கம் என்ன?” என்று ஜெயவர்த்தனாவை நோக்கி கேள்வி எழுப்பினார் பண்டாரநாயக்கா. தொடர்ந்து சிங்களமும் தமிழும் அரசகரும மொழிகளாக இருக்கவேண்டுமு; என்பதற்கு பல நியாயங்களை அவர் எடுத்துச் சொன்னார். இந்த செய்திகள் கூட தமிழ் மக்களிடையே மிகக் கவனமாக இருட்டடிப்புச் செய்யப்பட்டு வந்துள்ளது. ஆனால் இவற்றையெல்லாம் முழுமையாக எதிர்த்து யாழ்ப்பாண அடிப்படைவாதத்தின் பிரதிநிதியான ஜீ.ஜீ.பொன்னம்பலம் அரசசபையில் உரையாற்றினார் என்பதுதான் மிகக்கேவலமானது. “ஆங்கில மொழியையே இருசமூகங்களுக்கும் பொதுமொழியாக கொள்ளவேண்டும்” என தன்னலங்கருத்திய கோரிக்கையை முன்வைத்து அவர் வாதிட்டார்.

இந்த சுயபாஷைகளை அரசகரும மொழியாக்குவதில் தடையாக இருந்தவர்கள் யாரென்பதை இனவாத கூச்சல்களில் இருந்து வெளியேவந்து இனியாவது எமது மக்கள் புரிந்துகொள்ளவேண்டும். ஜீ.கே.டபிள்யு.பெரேராஇ ஜே.ஆர்.ஜெயவர்த்தனாஇ எஸ்.டபிள்யு.ஆர்.டீ.பண்டாரநாயக்கா போன்ற தலைவர் முன்வைத்த சுதேசமொழிக் கொள்கைகளுக்கு மேலும் பலரும் ஆதரவு தெரிவித்திருந்தனர். மட்டக்களப்பு நல்லையாஇ டபிள்யு.டபிள்யு.கன்னங்கரா. தஹாநாயக்காஇ டி.பி.ஜாயாஇ மட்டக்களப்பு எஸ்.ஓ.கனகரெட்னம் போன்ற மூவினத்தைச் சேர்ந்த தலைவர்களும் சுயபாசைகளை அரசகரும மொழியாக்குவதில் அக்கறை காட்டி உரையாற்றினர். இவர்கள் எல்லாம் ஒருமித்து ஆதரவு தருகையில் பெருந்தலைவர்இ தமிழ்காங்கிரஸ்இ தமிழீழம் என்று புரளிகளைக் கிளப்பி தமிழ் மக்களின் தலைவனாக வலம் வந்த ஜீ.ஜீ.பொன்னம்பலம் ஆங்கிலத்தைக் காப்பதற்காக சுயபாஷைகளை எதிர்த்தமை எப்படிப்பட்ட துரோகம்? இந்த துரோகத்தின் பின்னால் மறைந்திருந்த சக்திகள் யார்? யாழ்ப்பாண உயர்வர்க்கத்தினுடைய ஆங்கில ஆதிக்கம் இலங்கை எங்கும் தக்கவைக்கப்படுவதற்கேற்ப “ஆங்கிலம் மட்டும்” என்கின்ற மொழிக்கொள்கையில் விடாபிடியாய் நின்ற ஜீ.ஜீ.பொன்னம்பலம் போன்றவர்கள் எப்படி அடிமட்ட மக்களினதும்இ கிழக்கு மாகாண மக்களினதும் தலைவர்களாய் இருக்கமுடியும்?

இதுபோன்ற ஆங்கில பிடியில் இருந்து மாறவிரும்பாத தமிழ்காங்கிரஸ் போன்ற கட்சிகளின் வெகுஜன விரோதப் போக்குகளே காலப்போக்கில் தென்னிலங்கையில் சுடர்விட்ட சுயபாஷைகளுக்கான இயக்கத்தை தமிழை விடுத்து தனிச்சிங்களத்துக்கான இயக்கமாக குறுக்கிவிடும் வாய்ப்புகளை வழங்கியது.

1946 ஆம் ஆண்டு பண்டாரநாயக்காவினுடைய சிங்கள மகாசபா முன்வைத்த தீர்மானங்கள் பின்வருமாறு அமைந்திருந்தன.

“கல்விஇ சுகாதாரம்இ வீடுஇ தொழில் ஆகிய துறைகளில் தீர்திருத்தம் கொண்டுவரப்படவேண்டும்”

“நாட்டில் இரு தேசியமொழிகளுக்கும் அரச அந்தஸ்து அளிக்கப்படவேண்டும்.”

மேற்படி தீhமனங்களினு}டு சிங்கள மகாசபா மக்களின் நலனிலும் இரு மொழிகளின் தேவையிலும் இனவாதமற்ற மிகத்தெளிவான நோக்கினைக் கொண்டிருந்தமை புலப்படுகின்றது. இனவாதமற்ற பண்டார நாயக்கா போன்ற தேசியத் தலைமைகள் காலப்போக்கில் 1956ஆம் ஆண்டு சிங்களத்தை மட்டும் அரசகரும மொழியாக்கி நிறைவேற்ற முன்வந்தமைக்கு பொன்னபலம் போன்ற யாழ்ப்பாண அடிப்படைவாதிகளின் அன்னிய மொழி மீதான விசுவாசமும் தமிழ் குறித்த அக்கறையின்மையுமே காரணமாயிருந்தது. இவர்களது வஞ்சகத்தனமான ஆங்கிலத்தைக் காப்பாற்றும் மொழிக்கொள்கை சுதேச இனங்களிடையே உருவாகிவந்த இனமுரண்பாடுகளை ஊக்குவித்தது. அதேபோன்று 1952ஆண்டு தேர்தலில் படுதோல்வியடைந்த தமிழரசுக் கட்சியினரின் அர்த்தமற்றவகையிலான மொழிஉணர்வை; கிளறிவிடும் சிங்கள எதிர்ப்புப் பிரச்சாரங்கள் நிலைமைகளை இன்னும் மோசமாக்கின. தென்னிலங்கையிலும் பௌhத்த சிங்கள உணர்வு மேலோங்கிய சமூகசக்திகள் மெதுமெதுவாக சிறிலங்கை சுதந்திரக்கட்சியை ஆக்கிரமித்து அதன் சுயரூபத்தை அழிக்கத்தொடங்கின. இவை அனைத்தும் சேர்ந்தே சுயபாஷைகளுக்கான போராட்டத்தினை தனிச்சிங்கள மொழிக்கானதாக குறிகிய நோக்கில் சீரழித்துவிடும் வாய்ப்புகளை வழங்கின. இதுபோன்ற புறச்சூழ்நிலைகளுடன் ஒரு தேர்தல் நெருக்கடிக்கு முகங்கொடுக்க வேண்டிய யு.என்.பி யுடனான அதிகாரப் போட்டி என்பனவும் சேர்ந்து எஸ்.டபிள்யு.ஆர்.டீ.பண்டாரநாயக்காவை சிங்களம் மட்டும் என குரல் எழுப்பும் நிலைக்கு இட்டுச்சென்றன.

தொடரும்....

Post Comment


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

1 comments: on "தமிழர் நம் வரலாறு சொல்லும் கதைகள் பகுதி - 11"

AkashSankar said...

வேண்டிய தகவல்...என்னை போல தமீழத்தை நேசிப்பவர்களுக்கு...

Post a Comment