Sunday, 20 June 2010

ஏமாற்றப்பட்ட தமிழர்களும் ஏமாற்றும் துரோகிகளும்

தமிழர் நம் வரலாறு சொல்லும் கதைகள் பகுதி 15

பகுதி 14  பார்க்க கிளிக்கவும்.
இந்த குறுகிய நோக்கிலான மொழி வெறிப்பிரச்சாரமே சின்னத்தனமான சிங்கள எதிர்ப்பாகவும் சிறி எதிர்ப்பாகவும் மாறியது. இதனு}டாக தமிழரசுக் கட்சியினர் வடகிழக்கு எங்கும் பெரும் கலவர சூழ்நிலையொன்றை தோற்றுவித்தனர்.
 இந்தக் குழப்பங்களின் பின்னணியில் தமிழ்மொழி தேசியமொழியாக்கப்பட வேண்டும் என்கின்ற கோரிக்கை மறைந்து சிங்கள மொழிக்கு எதிரான ஒரு மனநிலையையே வடகிழக்கு எங்கும் தோற்றுவித்திருந்தது. ஆங்கிலம் அரசகரும அந்தஸ்தில் இருந்து அகற்றப்பட்டுவிடக் கூடாது என்கின்ற அக்கறையே தமிழ் அரசியல்வாதிகளின் உள்நோக்கமாக இருந்தது இதற்குக் காரணமாகும். ஆங்கிலம் அகற்றப்பட்டால் பெரும் சட்ட வல்லுணர்களாகவும் ஆங்கிலப் புலமையாளர்களாகவும் பிழைப்பு நடத்திவந்த தமிழரசுக்கட்சித் தலைமைகள் தமதும் தமது சகாக்களினதும் உத்தியோகங்கள் அர்த்தமற்றதாகிவிடும் என உணர்ந்தனர். இதுதான் இவர்களது சிங்கள எதிர்ப்புணர்வின் முக்கிய பின்னணியாகும்.

மட்டக்களப்பு பிரதேச எம்பிகளாக இருந்த நல்லையா, கனகரெத்தினம் போன்றோருக்கு தமிழ் மொழியையும் சிங்களத்தோடு சேர்த்து தேசியமொழியாக்க வேண்டும் என்கின்ற எண்ணம் இருந்திருந்தாலும் அதனை நிறைவேற்ற யாழப்பாணத்து பெரும் தலைமைகள் தடையாக இருந்தன. இன்னிலையில் மட்டக்களப்பு எம்பிகளும் மௌனமாகி தமது பெருந்தலைமைகளின் பின்னால் இழுபட நேர்ந்தது. சிறி எதிர்ப்பு போராட்டம், சத்தியாக்கிரகப் போராட்டம் போன்றவற்றின் பின்னால் கிழக்கிலங்கை மக்களும் கவரப்பட்டனர். இந்தப்போராட்டங்களில் காணப்பட்ட அர்த்தமற்ற சிங்கள எதிர்ப்பும், சிறி எழுத்தை தார்ப10சி அழிக்கும் வெறியும், சிங்கள மொழியை தாய்மொழியாகக் கொண்டவர்களின் மனவுணர்வுகளை தீண்டிவிட்டது. ஏற்கனவே சிங்களப் பகுதிகளில் தீவிர மொழி உணர்வாளர்களாக இருந்த கே.எம்.பி.ராஜரத்தினா போன்றவர்கள் சிங்கள எதிர்ப்புக் கோசத்தினால் தீண்டப்பட்டிருந்த சிங்களமக்களின் மனவுணர்வுகளை தமிழர்கள் மீதான வெறியாக மாற்றி இனக்கலவரங்களை ஏற்படுத்தினர்.

இந்தச் சிங்கள மொழிச்சட்ட மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேறப்பட்டதைத் தொடர்ந்து
05-06-1956 இல் காலிமுகத்திடலில் நடத்தப்பட்ட எதிர்ப்பு சத்தியாக்கிரகம் தமிழர் வரலாற்றில் மிக முக்கிய பங்கெடுத்து வந்திருக்கின்றது. இந்த “சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டவர்களின் மீது சிங்களக் காடையர்கள் மூர்க்கத்தனமாக தாக்குதல் நடத்தினார்கள்” என்றும் இது போன்ற அகிம்சைப் போராட்டங்கள் மறுக்கப்பட்டதினாலேயே தமிழர்கள் ஆயுதம் ஏந்தவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதென்றும் தமிழ் வரலாற்று ஆசிரியர்கள் இதுவரை கற்பித்து வந்திருக்கின்றனர். ஆனால் இந்தச் சத்தியாக்கிரகங்களின் பின்னணியில் தமிழர்களுக்கான பொதுநலன்கள் இருக்கவில்லையென்பதை இந்த சத்தியாக்கிரகிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல், நடந்தவிதங்கள் எமக்கு இன்றும் உணர்த்துகின்றன.

அதாவது தாக்குதலின்போது காடையர்கள் எனச் சொல்லப்பட்டவர்கள் எழுப்பிய கோசம் ஒன்றே இதுபற்றிய மர்மங்களைத் துலக்க போதுமானதாய் உள்ளது. “அன்னியர்களே வெளியேறு”, “ஏகாதிபத்திய தாசர்கள் ஒழிக” என்று சிங்களவர்கள் போட்ட கோசம் எதை உணர்த்துகிறது என்பதை நுணுகி ஆராய்கின்ற போது இந்த சத்தியாக்கிரகிகள் தமிழர்களின் நலன்களுக்காக போராடவில்லை என்பதையும் அவர்கள் தமிழர்களின் பிரதிநிதிகளாகவோ ஏன் தமிழர்களாகவோ கூட சிங்களவர்களால் நோக்கப்படவில்லை என்பதையும் அவதானிக்க முடியும். அதாவது ஆங்கிலத்தை காப்பாற்ற அன்னியர்களின் ஆட்சியை வேறுவடிவில் தொடர வழிதேடுகின்ற ஏகாதிபத்தியத்தின் அருவருடிகளாகவே சிங்களவர்கள் அவர்களை நோக்கினர்.

அது ஆங்கில காலனித்துவத்தின் புதிய பிரதிநிதிகளான (யாழ்ப்பாணத்) தலைமைகளுக்கு எதிராக சுதேச மொழியுணர்வு கொண்ட (சிங்கள) மக்களால் நடத்தப்பட்ட தாக்குதல் என்பதே இந்த சத்தியாக்கிரகிகள் மீதான தாக்குதலின் சூட்சுமம் ஆகும். ஆனால் இவற்றை தமிழ் மக்களுக்கு எதிரான தாக்குதலாகவும், தமிழ் மொழிக்கெதிரான தாக்குதலாகவும் யாழ்ப்பாணத்தின் அதிகார வர்க்கம் பிரச்சாரத்தை வெற்றிகரமாகச் செய்தனர் இதன்காரணமாக தமிழ்மொழி பேசுகின்ற கிழக்குமாகாண தமிழர்கள்இ முஸ்லிம்கள் போன்றோர் ஏமாறுவது இயல்பே.

இதன்பின்னர் 1958 இல் நடந்த இலங்கையின் முதலாவது இனக்கலவரம் என்று சொல்லப்பட்ட கலவரம் கூட சாராம்சத்தில் இனரீதியான ஒடுக்குமுறை உணர்வோடு இயங்கவில்லை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். 1956 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட சுதேச மொழிச்சட்டத்தை நேர்மையான முறையில் தமிழ் மக்களின் நலனிலிருந்து அணுக திராணியற்ற தமிழரசுக்கட்சி தலைமை ‘சிங்களம் படியாதே’ எனும் கோஷத்தைக் கிளப்பியது. அதேபோன்று 1957 ல் சிறி எதிர்ப்பு என்று தொடங்கி சிங்கள “சிறீ” எழுத்தின் மீது தார் ப10சும் கொச்சைத்தனமான அரசியல் நடவடிக்கைகளில் தமிழர்களை ஈடுபடுத்தியதன் மூலம் தமிழ் மக்களின் உண்மையான பிரச்சனைகளை சிங்கள மக்களிடையே புரிந்துகொள்ள வைப்பதில் தவறிழைத்தனர். அதுமட்டுமின்றி தமிழ் மக்கள் தமக்கு எதிரானவர்கள் எனும் உணர்வினை சிங்களவர்களிடையே பரப்பும் பணியையே இச்செயற்பாடுகளினு}டு தமிழரசுக்கட்சித் தலைமைகள் செய்தனர்.


இவ்வகையில் தமிழ் மக்கள் மீதான காழ்ப்புணர்ச்சிகளை சிங்களவரிடத்தில் ஏற்படுத்தியதில் கணிசமான பங்கு யாழ்ப்பாணத் தலைமைகளையே சாரும். இன்னிலையில் சிங்;கள மக்கள் மத்தியிலும் இருந்த சுயநலமான மூன்றாம் தர அரசியல்வாதிகள் இன் நிலமைகளை தமிழ் விரோத நடவடிக்கைகளைத் து}ண்ட பயன்படுத்தியதில் ஆச்சரியமில்லை. அப்படிப்பட்ட அரசியல்வாதிகளில் ஒருவரான கே.எம்.பி.ராஜரெட்ணா என்பவரின் தூண்டுதலினாலேயே 1958 ஆம் ஆண்டு சிங்கள மக்களிடத்தில் தமிழ் மக்கள் மீது தாக்குதல் ஒன்றைத் தொடுக்கவேண்டும் என்கின்ற வெறியுணர்ச்சி ஏற்படுத்தப்பட்டது. இதுவே இலங்கையில் ஏற்பட்ட முதலாவது தமிழ் சிங்கள கலவரமாகும்.


துரோகங்கள் தொடரும்...

Post Comment


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "ஏமாற்றப்பட்ட தமிழர்களும் ஏமாற்றும் துரோகிகளும்"

Post a Comment