Saturday 26 June 2010

முட்டாள் தனமாக முடிவெடுக்காதீர்கள்.

தமிழர் நம் வரலாறு சொல்லும் கதைகள் எனும் என்னுடைய தொடர் பதிவுக்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சில தெளிவு படுத்தல்களை நான் வழங்கவேண்டி இருக்கிறது.

நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வரலாறுகளை சொல்லிக் கொண்டு ஒவ்வொருவரும் ஒவ்வொருவரை குற்றம் சாட்டிக்கொண்டு இருக்கின்றோம். இதில் எது உண்மை எது பொய் என்று அறியவேண்டும், யாரில் தவறிருக்கின்றது என்று அறிய வேண்டும்.

அறிய வேண்டியதன்  தேவை என்ன என்று நீங்கள் கேட்கலாம் கட்டாய தேவை இருக்கின்றது. யாரோ ஒரு சிலர் தவறு செய்திருக்கலாம் அதற்காக ஒட்டு மொத்தத்தில் எல்லோரையும் குற்றம் சொல்லிவிட முடியாது.

மட்டக்களப்பான் துரோகி என்றும், மட்டகளப்பான் மடையன் என்றும் எல்லோருக்கும் மகுடம் சூட்டிவிட முடியாது. இதில் நான் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கிறேன். அனானியாக வந்து நான் மட்டக்களப்பான் என்பதால். தேவையற்ற வார்த்தைகளால் என்னை தாக்குவது எந்த வகையில் நியாயம். மடடக்களப்பானுக்கு தமிழ் பற்று இருக்க முடியாதா?

மட்டக்களப்பான் துரோகி போன்ற மகுடங்களை எதிர்கால சமூகமும் சூடிக் கொள்ளாமல் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். யாரில் தவறிருக்கிறது உண்மையான வரலாறு மக்களுக்கு தெரிய வேண்டும்.

என் எழுத்திலே தவறிருந்தால் ஆதாரங்களோடு சுட்டிக் காட்டுங்கள். திருத்திக் கொள்கிறேன்.
எஸ்.ஜே.வி.செல்வநாயகமும் அவரது மறுபக்கமும்

என்று பதிவிட்டபோது இங்கே http://loshan-loshan.blogspot.com/2010/06/aka.html

//இறுதியாக இலங்கையிலுள்ள அத்தனை தமிழ் பேசுவோராலும் மதிக்கப்படும் தந்தை செல்வாவையும் வம்புக்கு இழுத்துள்ளார்.//

இவ்வாறு குறிப்பிடப்பட்டு கருத்துரைகளிலும் நான் பொய்களை எழுதுகிறேன் என்று சொல்லப்பட்டிருக்கின்றது.

எஸ்.ஜே.வி.செல்வநாயகம் பற்றிய எனது அந்த பகுதியிலே நான் என்ன சொல்லி இருக்கிறேன் என்று அந்த பதிவை  http://shanthru.blogspot.com/2010/06/blog-post_21.html  சென்று ஒருதடவை பாருங்கள்.

எஸ்.ஜே.வி.செல்வநாயகம் அவர்களை பற்றி அறிமுகம் செய்துவிட்டு.

//1957 இல் நெற்காணிச்சட்டம் கொண்டுவரப்பட்டபோது தந்தை செல்வா என் அழைக்கப்பட்ட இந்த மனிதர் எப்படி நடந்துகொண்டார்? சுருக்கமாகச் சொன்னால் இந்தச் சட்டமானது நிலமற்ற ஏழை மக்களின் காணிப்பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வினைத் தேடித்தரும் நன்நோக்கத்தினை மட்டுமே கொண்டிருந்தது.//

என்று குறிப்பிட்டிருப்பதோடு நிலமற்ற ஏழை மக்களுக்காக கொண்டுவரப் பட்ட நெற்காணி சட்டத்தை  எஸ்.ஜே.வி.செல்வநாயகம் அவர்கள் ஜீ.ஜீ.பொன்னம்பலம் அவர்களுடன் சேர்ந்து எதிர்த்தார் என்றும் அவர்கள் எதிர்த்ததுக்கு காரணம் தாங்கள் பேரும் நிலை உடமையாளர்கள். அவர்களின் நிலங்கள் பறிபோகும் என்பதாலே எதிர்த்தார்கள் என்றும் குறிப்பிட்டிருக்கிறேன்.

இந்த பதிவிலே வேறு எதனை சொல்லி இருக்கிறேன். 1957 ல் நெற் காணி சட்டம் கொண்டு வரப்படவில்லையா?  இவர்கள் இருவரும் இந்த  சட்டத்தை எதிர்க்கவில்லையா?  அவர்கள் எதிர்த்ததன் நோக்கம் என்ன? நான் வம்புக்கா இழுத்திருக்கிறேன் நடந்த சம்பவங்களை சொல்லி இருக்கிறேன்.

இவர்கள் பெறு நிலங்களின் சொந்தக் காரர்கள் இல்லையா? அதற்கான ஆதாரங்களை அடுத்த பதிவிலே  சொல்லி இருக்கின்றேன்.

நான் எழுதுபவை தவறென்றால் சுட்டிக்காட்டுங்கள். வெறுமனே பொய் பொய் என்று மட்டும் சொல்ல வேண்டாம்.  என்னுடைய முந்திய பதிவுகளை ஆதாரங்களோடு அலச இருக்கின்றேன்.

கருத்துக்களை கருத்துக்களால் வெல்லுங்கள். நான் ஒருபோதும் மரணத்துக்கு பயந்தவனல்ல.

தொடரும்..

Post Comment


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "முட்டாள் தனமாக முடிவெடுக்காதீர்கள்."

Post a Comment