Monday, 31 May 2010

தமிழர் நம் வரலாறு சொல்லும் கதைகள் பகுதி -8

1920 ம் ஆண்டுவரை அரசியல் அதிகாரம் குறிப்பிட்ட ஒரு சிலரிடையே மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. எனினும் 1920 ன் பின்னர் ஏற்பட்ட மனிங் சீர்திருத்தம் கொண்டுவந்த மாற்றங்கள் இனவாரியான ஒதுக்கீட்டை மக்கள் பிரதிநிதித்துவத்திற்கு வழங்கியது. அதனு}டாக அரசியல் உரிமைகள் பொதுமக்களுக்கு விரிவுபடுத்தப்பட்டது.


இந்த அரசியல் மாற்றங்களில் ஆங்கிலேய ஆட்சியாளர்கள் காட்டிவந்த அக்கறைகள் அதிகார அந்தஸ்தில் அதுவரை திளைத்த யாழ்ப்பாணத் தலைமைகளுக்கு உவப்பளிக்கவில்லை என்பதை மேலே கண்டோம்.


ஆகவே அரசியல் விழிப்புணர்வுகள் பரந்துபட்ட மக்களுக்கு ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் கவனமாயிருந்தனர். அதற்காகவே வெள்ளையாட்சியாளர்களின் அரசியல் சீர்திருத்த நடவடிக்கைகளை கடுமையாக எதிர்க்கவும் துணிந்தனர். குறிப்பாக அரசியல் சீர்திருத்தத்திற்கான டொனமூர் ஆணைக்குழு முன் சாட்சியமளிக்கையில் எல்லா பிரசைகளுக்கும் தமது தலைமைகளை தெரிவுசெய்யும் வாய்ப்பை வழங்கும் “சர்வசனவாக்குரிமை” வழங்கப்படுவதை கடுமையாக எதிர்த்து விளக்கமளித்தனர்.


சர்வனவாக்குரிமை வழங்கப்பட்டால் அது “இந்து மத வாழ்க்கை முறைக்கு பழிகேடு விளைவிக்கும் என்றும் “கும்பலாட்சிக்கு வழிவகுக்கும்” என்றும் வாதிட்டார் சேர்.பொன்.இராமநாதன். அதாவது யாழ்ப்பாணத்திலுள்ள உயர்சாதிப்பிரிவை தவிர மற்றயோரும் கிழக்கிலிருக்கும் முஸ்லிம்கள்இ முக்குகர்கள்இ மற்றும் சூத்திரர்கள் அனைவருமே சமூகத்தின் கீழ்நிலையில் இருக்க வேண்டுமென்பதற்காக பகிரங்கமாக கீழ்தரமான கருத்துகளை தெரிவித்தார் இவர். கிழக்கிலங்கை மக்களெல்லோரும் அரசியலுக்கு வந்தால் அதுவே கும்பலாட்சிக்கு வழிவகுக்கும் என்பதே அவரது வாதமாயிருந்தது. ஆனபோதும் வெள்ளையர்களது நிர்வாகம் இவ்விதவாதங்களை கவனத்தில் கொள்ளாது சர்வனவாக்குரிமை வழங்குவதை உறுதிசெய்தது. சர்வசனவாக்குரிமை விரைவில் வழங்கப்படப் போகுதென்ற எதிர்பார்ப்புகள் உறுதியானதும் இதனால் தமது தலைமைகளை காப்பாற்றி கொள்வதற்காக தமிழ்மக்களை ஏமாற்றி தம்வசம் இழுக்கும் சூது விளையாட்டுக்களில் ஈடுபடத்தயாராகினர் யாழ்ப்பாணத் தலைமைகள்.

எதிர்காலங்களில் தமது அரசியல் தலைமைகளுக்கான இருப்புகளையும்இ அதிகார வாய்ப்புகளையும் உறுதிப்படுத்திக்கொள்வதாயின் பரந்துகிடந்த கிழக்கிலங்கை மக்களினதும்இ கீழ்தட்டு மக்களினதும் ஆதரவை பெறவேண்டிய நிலையை முன்னுணர்ந்தனர். இனரீதியான பிரதிநித்துவ ஒதுக்கீடும்இ பரந்துபட்ட மக்கள் எல்லோருக்கும் விரைவில் சர்வசன வாக்குரிமை வழங்கப்படபோகுதென்ற அறிவிப்புகளும் இந்த யாழ்பாண தலைமைகளை உலுப்பிவிட்டது. வயது வந்த எல்லோருக்கும் குறைந்தபட்ச அரசியல் உரிமையான வாக்களிக்கும் உரிமை வழங்கப்படுமானால் தம் அந்தஸ்துகளிற்கு ஆபத்தை கொண்டு வரலாம் என அவர்கள் அஞ்சினர். இவ்வித மாற்றங்கள் ஏற்படும் பட்சத்தில் அடித்தள வாழ்வினை ஆதாரமாக கொண்ட கிழக்கிலங்கை பொது ஜனத்திரளின் செல்வாக்குகள் அரசியலில் முக்கியத்துவம் பெறபோகுதென்ற அவர்களின் எதிர்பார்ப்புகள் மிக விரைவாகவே நிகழ ஆரம்பித்தது.

அதேவேளை இனவாரி பிரதிநிதித்துவம் காரணமாக பாமர சிங்கள மக்களும்இ கராவஇ சலாகம போன்ற கீழ்நிலை சாதியினர் என ஒதுக்கப்பட்ட பிரிவினரில் கல்வி கற்ற குழுவினரும் இலங்கை தேசிய காங்கிரசில் அதிகமாக சேர்ந்து செயற்பட ஆரம்பித்தனர். காங்கிரசினுள் ஆங்கில ஆதிக்கத்தை பகிரங்கமாகவே எதிர்த்த அவர்கள் சுதேச மொழி கொள்கைகளுடன் காங்கிரசை ஆக்கிரமித்தனர்.

சிங்கள மகாசனசபா எனும் இயக்கத்தை முழுமையாக இலங்கை தேசிய காங்கிரஸில் இணைத்த அவர்களது வரவு ஆங்கில தகமைகளுடன் காங்கிரசினுள் ஆதிக்கம் செலுத்திவந்த தலைமைகளுக்கு இக்கட்டான நிலைகளை ஏற்படுத்தியது. குறிப்பாக தமிழ் தலைமைகளுக்கு எதிர்காலம் குறித்து பாரிய அச்சுறுத்தலைத் தோற்றுவித்திருந்தது. நீண்டகாலமாக அரசியல் அதிகாரங்களை தம்வசம் வைத்திருந்த யாழ்ப்பாணத்தவர்கள் தொடர்ந்தும் தமது இருப்பைப் பேணுவதானால் சிங்கள உயர்தட்டு வர்க்கத்தினருடனான கூட்டை நம்பியிருப்பதில் பலன் ஏதும் இல்லையென்பதை புரிந்துகொண்டனர்.


இதன் காரணமாக இலங்கை தேசியகாங்கிரசை விடுத்து தமக்கான வேறு ஒரு அரசியல் துருப்புச் சீட்டை உருவாக்குவதற்கான வடக்கு கிழக்கு பொதுசனங்களை நோக்கிவர நிர்ப்பந்திக்கப்பட்டனர். அதுவரைகாலமும் தமது இனம் என்றோஇ தமது பிரதேசம் என்றோஇ ஏழைத் தொழிலாளர்இ தாழ்த்தப்பட்ட மக்களை ஏறெடுத்தும் பார்க்காதவர்கள் அதிலும் கிழக்கிலங்கையின் பக்கமே தம் பாதங்கள் பட்டறியாதவர்கள்இ தமிழின உணர்வு கொண்டவர்களாக தம்மைக்காட்டத் தலைப்பட்டனர். இதற்காகவே “இலங்கைத் தமிழ் லீக்” எனும் ஒரு அமைப்பை அவசர அவசரமாக உருவாக்கினர். இதுவே இலங்கைத் தமிழர்களின் பெயரில் ஆரம்பிக்கப்பட்ட முதலாவது அரசியல் இயக்கமாகும்.


இலங்கைத் தேசியகாங்கிரசில் தமிழருக்கு உரிய இடம் அளிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகளுடன் 1921 இல் அந்த அமைப்பை விட்டு வெளியேறினார் சேர்.பொன்.அருணாசலம். 1923 இல் இலங்கைத் தமிழ் லீக் எனும் அமைப்பைத் தொடங்கிய கையோடு தமிழீழம் பெறுவதே அதனது குறிக்கோள் என கடுமையான பிரச்சாரத்தில் இறங்கினார்.
மக்களுக்கான தேவைகளும்இ விருப்பங்களும் கொண்ட ஓர் அரசியல் வேலைத்திட்டத்தை முன்வைத்து அரசியல் நடத்திப் பழக்கமற்ற இவர்கள் மக்களின் மனதில் இனவாதத்தைக்கிளறி அரசியல் பண்ணத் தொடங்கினர். வெள்ளைக்காறனுக்கு சாமரம் வீசி பெற்றுக்கொண்ட கல்வித் திறமையெனும் ப10ச்சாண்டியை வைத்து சிங்களவரிடத்தில் நடத்தி வந்த பிழைப்பை தொடரமுடியாமல் போன வேளையில் தமிழ் இனவாதத்தைத் து}வி பிழைப்பைத்தொடர துணிந்தனர்.

ஆங்கிலம் அரசோற்றிய கொழும்பு அரசியலை நோக்கி சிங்கள பாமர மக்களுக்கான சுயபாசைக் கோரிக்கைகளுடன் உருவான சிங்கள மகாசனசபா போன்றவை அம்மக்களது பரந்துபட்ட சமூக பொருளாதார வாழ்வுகள் குறித்த திட்டங்களுடன் இலங்கைத் தேசிய காங்கிரசில் இணைவது என்பது மிகவும் வரவேற்கப்பட வேண்டிய நிகழ்வு. அதாவது மக்களது அபிலாசைகள் அரசியல் மயப்படுத்தப்படுவதற்கு முன்தள்ளுகின்ற ஒரு நடவடிக்கையாகவே இந்த இணைவுகளை கொள்ளுதல் வேண்டும். ஆனால் அப்படியானதொரு மாற்றத்திற்கு முகம்கொடுக்க முடியாத யாழ்ப்பாணத் தலைமைகள் அதனை சிங்கள இனவாதமாக திரிபுபடுத்திக் கூறினர். தமிழ் மக்கள் சார்பிலும் அப்படியொரு வேலைத்திட்டத்தை முன்வைக்க விருப்பின்றி வேறுவகையில் செயற்படத்துணிந்தனர்.


தமது தலைமை அந்தஸ்துக்களை தமிழர் தரப்பிலாவது காப்பாற்றிக் கொள்ளுதற்குரிய குறுக்குவழிகளை நாடினர். இதன்காரணமாகவே இலங்கைத் தேசியக் காங்கிரசில் இருந்து தமிழ்த் தலைமைகள் வெளியேறிஇ தமிழ் லீக் எனப்படும் இனவாத அரசியலின் தொடக்கப் புள்ளியை (யாழ்பாணத்தவர்கள்) தொடங்கி வைத்தனர்.


1923 இல் நடந்த இலங்கைத் தமிழ் லீக் கூட்டத்தில் “தமிழீழம் என்ற நம் குறிக்கோளை அடைய வேண்டுமானால் எம்மிடையே ஒற்றுமையை வளர்ப்பதோடுஇ எமது கொள்கைகளை நாம் என்றும் கடைப்பிடிக்கவேண்டும். எமது பாரம்பரியத்தை நினைவு கூருவதோடு எமது தனித்துவத்தை நாம் பாதுகாக்கவேண்டுமானால் ஒரு பலமுள்ள சமூதாயமாக எம்மை மாற்றிக்கொள்ளவேண்டும்” என சேர்.பொன்.அருணாசலம் முழங்கினார்.

தமிழர் ஒற்றுமைக்கோஇ தமிழர் பாரம்பரியத்திற்கோஇ தமிழர் தனித்துவத்துக்கோ அன்றைய நிலையில் (1920 களில்) சிங்களவர்களால் எந்தவித ஊறும் விளைவிக்கப்பட்டிருக்கவில்லை. மாறாக ஆங்கில மமதையில் ஆட்சி அதிகார பீடமாக உயர்ந்திருந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இந்தத் தலைமைகளே தமிழ்மக்களின் ஒற்றுமை குறித்து அக்கறைப்படாது இருந்தவர்கள். சொந்தமக்களின் உரிமைகளை மறுத்து சிங்கள அதிகார பீடத்துடன் அதிகாரத்தை பங்கிட்டுக்கொண்டிருந்தவர்கள். தமிழர் பாரம்பரியத்தை குழிதோண்டிப்புதைத்து தாய்மொழியை ஈனமொழியாக்கியவர்கள். அப்படியிருக்க அவர்களே இவற்றுக்காக அழுவது என்பது ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுவதற்கு ஒப்பாய் இருந்தது.


இவ்விடத்தில் இருந்துதான் நாம் யாழ்ப்பாணத் தலைமைகள் உச்சரித்த தமிழீழக் கோரிக்கை என்கின்ற ஒரு விசித்திரமான அரசியலின் உருவாக்கம் ஏற்பட்ட காரணங்களை சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும். யாழ்ப்பாணத்து அரசியல்வாதிகளின் அப்பழுக்கற்ற சுயலாபம் கருதிய வெற்று அரசியல் சூதில் இருந்தே இந்தத் தமிழீழம் பிறந்தது என்பதுவே அது. ஆனால் இன்று தமிழீழம் என்கின்ற ஒரு கோரிக்கை நோக்கி தமிழ் மக்களை தள்ளிவிட்ட காரணங்களாக முன்வைக்கப்படுபவை கீழ்வருமாறு.


1) தனிச்சிங்களச் சட்டம் (1956)
2) கல்விதரப்படுத்தல் சட்டம் (1971)
3) தமிழ் மக்கள் மீதான இனக்கலவரங்கள் (1958………)
4) சிங்கள குடியேற்றங்கள்.

மேற்படி காரணங்களே தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக்கூட்டணி, தமிழீழ விடுதலைப்புலிகள்இ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரை மீண்டும் மீண்டும் ஒப்புவிக்கப்படுபவையாகும். மிக இலகுவாக நோக்கும் இடத்து இக்காரணங்கள் எல்லாம் அப்பட்டமான பொய்யாகும் என்பது புலனாகின்றது. ஏனெனில் இவையனைத்தும் நடந்தேறுவதற்கு முன்பே இந்த தமிழீழம் எனும் பிரச்சாரத்தை யாழ்ப்பாணத் தமிழன் தொடங்கி விட்டான். இக்கோரிக்கையினை பலப்படுத்தும் நோக்குடன் கிழக்குவாழ் மக்களையும் சேர்த்து ஏமாற்ற மேற்படி சம்பவங்கள் அவ்வப்போது துணைபுரிந்தன என்பதுதான் உண்மை. அதுவும் எவ்வளவுது}ரம் அச்சம்பவங்கள் உண்மைநிலையில் இருந்து திரித்துக் கூறப்பட்டது?, உண்மையில் யார் நலங்களைப் பாதித்தது என்பதெல்லாம்கூட கூர்ந்து அவதானிக்கப்படக்கூடியதொன்று.

ஆகவே எந்தவொரு பாரிய அச்சுறுத்தலையும் தமிழ் சமூகம் எதிர்கொள்ளாத வேளையில் வெறும் யாழ்ப்பாணத்து மேல்தட்டினரின் நலங்களுக்கு பலம் சேர்ப்பதற்காகவே இந்த தமிழீழ கோரிக்கை 1923 இல் இருந்தே போலியானதாக எழுப்பப்பட்டிருக்கிறது. இந்த எவ்விதத்திலும் அர்த்தபுஷ்டியற்ற ஒரு போலிப் பிரச்சாரத்தினு}டு கிழக்கு மக்களையும் உள்வாங்கி ‘வாக்கு பொறுக்கி’ அரசியல் நடத்துவதற்காகவே இந்த தமிழீழத்தை முன்வைத்தனர் என்பதை இனியாவது தமிழர்களாகிய நாமும் கிழக்கு சமூகங்களும் புரிந்துகொள்ள வேண்டும். வெற்று இனவாதக் கூச்சலாகவும்இ விசமத்தனமானதொன்றாகவும் யாழ்ப்பாணத் தமிழனால் உருவாக்கப்பட்ட ஒரு நச்சுப்பிரச்சாரமே இந்த தமிழீழம் என்றால் அது மிகைப்படுத்தப்பட்ட கூற்றல்ல.

தொடரும்...

Post Comment


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

3 comments: on "தமிழர் நம் வரலாறு சொல்லும் கதைகள் பகுதி -8"

Anonymous said...

hahahahaha Joke?

ஜோதிஜி said...

மன்னிக்கவும் நண்பா.

சேனநாயகா சகோதரர் ஒருவர் இருப்பதைப் பற்றி தெரியுமா? அனாரிகா தர்மபாலாவுக்கு முன்னரே அவர் உருவாக்கிய இனவாதம் குறித்து படித்து உள்ளீர்களா? இவர் பொன்னம்பலம் அருணாச்சலம், இராமநாதன் போன்றோரை படுத்திய பாடுகள் உங்களுக்கு தெரிந்தால் நன்று.

நீங்கள் சொன்ன யாழ்பாண காரணங்கள் இலைமறை காயாக ஓரளவிற்கு உண்மை என்றாலும் தமீழீழம் என்ற வார்த்தை வர மேலாதிக்கம் மட்டும் முக்கியமல்ல, இன்னபல காரணங்களும் உண்டு.

நீண்டுவிடக்கூடாது என்பதற்காக உங்கள் பதில் எதிர்பார்த்து.

Arishthan Ramesh said...

வணக்கம் சந்த்ரு...
நான் உங்கள் தற்கால பதிவுகளை தொடர்ந்து வாசித்து வருகிறேன். அதிலும் இப்போது தொடராக வரும் பதிவுக்கு எனது வாழ்த்துக்கள். உண்மைகள் எப்போதும் கசக்கும், அதற்காக அது பொய் என்று வாதிட முடியாது. அது போலத்தான் யாழ்ப்பாணியமும்.... இந்த விடயம் எவராலும் மறுக்க முடியாத தவிர்க்க முடியாத உண்மை. ஆனால் எவரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஆனால் அவர்கள் மனசாட்சிக்கு தெரியும் இதன் உண்மை தன்மை. யாழ்பானத்தவர் பெரும்பாலும் ஏனைய பிரதேசத்தவர்களை தமக்கு கீழானவர்கள் என்ற கண்ணோட்டத்துடனே நோக்குவார்கள். வெளிநாடுகளில் ஒருவரை சந்திக்கும்போது அவர்களின் முதல் கேள்வி " அண்ணன் தமிழா...?" என்பது . அடுத்த கேள்வி " அண்ணே ஊரில் எவ்விடம்....? வடமரட்சியா..? கரவெட்டியா..? என நீளும். இல்லை நான் ற்றின்கோ அல்லது மட்டக்களப்பு என்றால் பார்வை மாறும். இது எனது அனுபவம். இதுவே பலரது அனுபவமும். ஏன் கொழும்பு வில் கூட இதை காண முடியும். இதை உண்மை இல்லை என்று எவராவது மறுக்கட்டும் பார்க்கலாம். தங்கள் பதிவின் முலம் நான் எமது வரலாற்று துரோகங்களை அறிய முடிகிறது. நான் ஒரு விடயம் அறிந்துள்ளேன், இலவச கல்வி முறை திரு. கன்னங்கரா அவர்களால் நடைமுறைக்கு கொண்டு வர முயட்சிக்கப்பட்டபோது அதை தீவிரமாக எதிர்த்தவர் பொன் ராமநாதன். காரணம் இலவச கல்வி முறை வந்தால் எல்லோரும் படித்து விடுவார்கள். கிழக்கு மக்கள் எல்லாம் முன்னேறி விடுவார்கள் என்றாம். இவ்விடயம் எல்லாம் இப்போது மறைக்கப்பட்டு விட்டது. ஆனால் அதற்காக அது உண்மை இல்லை என்றாகி விடுமா...?
நான் இதை கூறும் போது பிரதேசவாதம் பேசுகிறேன் என உங்கள் பதிவுலகில் சொல்லலாம். ஆனால் உண்மையை உண்மையாக இருப்பதை சொன்னால் தவறா...? இது பிரதேசவாதம் அல்ல... மக்களை தெளிவு படுத்தல். இப்போது வன்னி மக்களை பற்றி அன்றாடம் பல பதிவுகளை நாம் பார்க்கிறோம். பாவம் யார் பாதிக்கப்பட்டாலும் அதை பார்த்து இறக்கப் பாடவும் அவர்களுக்கு உதவவும் வேண்டும். அதுவே மனித தன்மை. ஆனால் யாழில் வன்னி மக்களை பொதுவாக காட்டார் என்றே குறிப்பிடுவார்கள். இதுவே வழமை. இதை இப்போது மறுக்கலாம் அனால் உண்மை...
பதிவுலகில் யாழ் பானியம் இல்லையா..? பதிவர் சந்திப்பு ஒன்றை உங்களால் கிழக்கில் நடாத்த முடியுமா..? நடந்தால் எல்லோரும் வருவார்களா..? இங்கு பெருன்பான்மை (யாழ்) இன கருத்து இதை ஏற்க மாட்டார்கள். கொழும்பில் அல்லது யாழில் மட்டும் நடாத்த முயல்வார்கள். இதை நான் சவாலாக சொல்கிறேன். ஏன் பிரபல பதிவராக தன்னை காட்டிக் கொள்ளும் லோஷன் அவர்கள் தனது வானொலி வெற்றிக்கு கிழக்கு மக்கள் தேவை. ஆனால் அவரது பதிவுகளில் கிழக்கு தொடர்பாக எதுவும் வராது. அண்மையில் தொடர்ந்து யாழ் பற்றி பதிவிட்டு வருகிறார். ஆனால் வேறு யாராவது சொன்னால் பிரதேசவாதம் கதைக்கிறீர்கள் என்பார் அவரது பதிவுகள் யாழ்ப்பாணியம் இல்லையா...? இது தொடர்பாக கருத்தரை இட்டால் வெளியிட மாட்டார்.
பதிவர்களே நான் பிரதேசவாதம் பேசவில்லை உண்மையை சொல்கிறேன். தமிழர் என்பது எங்கள் கிழக்கையும் உள்ளடக்கும். யாழ்மட்டும் தமிழர்கள் இல்லை... அவர்கள் மட்டும் மேலானவர்கள் இல்லை. இலங்கை தமிழ் என்பது யாழ்பாணிய தமிழ் அல்ல.....
இறுதியாக ஒரு விடயம் என்னிடம் முன்பு ஒருவர் வாதிடும் பொது சொன்னதை குறிப்பிட வேண்டும். யாழ் மக்களை பார்த்து கிழக்கு மக்கள் பொறமை படுவார்களாம் ஏன் என்றால் அவர்கள் உயர் பதவிகளில் இருப்பதும் நன்றாக படிப்பதும் காரணமாம் என்றார். நன்றாக படிப்பதை நான் வரவேற்கிறேன் ஆனால் தமது முன்னேற்றத்திற்கு ஏனைய மக்களை ஏமாற்றுவது சரியா..? பல்கலைக்கழக வெட்டுப்புள்ளி முறைமைக்காக யாழில் படித்து விட்டு கஷ்ட பிரதேச மாவட்டங்களில் உயர்தரம் எடுத்து குறைந்த வெட்டுப் புள்ளியால் டாக்டர் எஞ்சினியர் ஆவது நல்ல வேலையா.. இதனால் மன்னார் மட்டக்களப்பு வன்னி மாவட்ட மாணவர்களின் பல். அனுமதியை தட்டி பறித்து வந்தீர்கள் இப்போது மலையாக மக்களின் மடியிலும் கை வைக்க தொடக்கி விட்டீர்கள். இதை என்னால் ஆதாரபூர்வமாக நிரூபிக்க முடியம். இதை சொன்னால் நான் பிரதேசவாதி.... எப்போதும் உண்மையை ஏற்று கொள்ள முயற்சி செய்யுங்கள்...

வாழ்த்துக்கள் சந்த்ரு உங்கள் இடுகை தொடரட்டும்...

Post a Comment